அஜீத், விஜய் படங்களை கவுதம் மேனன் கைவிட்டது ஏன்?


இயக்குனர் கவுதம் மேனன் அஜீத் நடிப்பில் துப்பறியும் ஆனந்த் என்ற படத்தையும், விஜய் நடிப்பில் யோஹன் என்ற படத்தையும் இயக்குவதாக இருந்தது. 

இப்போது இந்த இரண்டு படத்தையும் கவுதம் மேனன் கைவிட்டுவிட்டார். அது ஏன் என்பது குறித்து அவர் அளித்துள்ள விளக்கம்:

துப்பறியும் ஆனந்த் பிரமாண்டமாக தயாரிக்க முடிவு செய்திருந்த படம். நான் பிளான் பண்ணி வைத்திருக்கும் பக்கா இன்வஸ்டிகேஷன் கதை. 

1920களில் நடப்பது மாதிரியான கதை. அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிக்கே ஒரு வருடம் தேவைப்படுகிறது. 

ஆனால் அதற்கான நேரம் இப்போது என்னிடம் இல்லை. அஜீத்தும் காத்திருக்க தயாராக இல்லை. அவர் விலகிக் கொண்டார். அதனால் நானும் அதை கைவிட்டுவிட்டேன்.

யோகன் பக்கா ஆக்ஷன் ஸ்கிரிப்ட். ஹாலிவுட் டைப்பிலான ஆக்ஷன் படம். என் கனவு படம்னும் சொல்லலாம். ஆனால் முழுக்க ஹாலிவுட் ஸ்டைல்ல பண்றது விஜய்க்கு பிடிக்கல. நமக்கு ஏத்தமாதிரி மாத்துங்கன்னு சொன்னார். 

அதுல எனக்கு உடன்பாடில்ல. அதனால அதுவும் டிராப் ஆச்சுது. இப்போ யோகன் கதையை மகேஷ்பாபுவை வைத்து தெலுங்குல பண்ணிக்கிட்டிருக்கேன்.

சூர்யாவை வைத்து  2013ல் ஒரு சூப்பர் லவ் ஸ்டோரி பண்ணப்போறேன். அவருக்காகவே எழுதின கதை. 

அவருக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கேன். சூர்யாவும் நானும் மீண்டும் இணைய போறது உறுதி. என்றார்.

1 comments:

தொழிற்களம் குழு said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...