கமலிடம் பி.ஆர்.ஓ.,ஆக பணிபுரிந்த கிளாமர் கிருஷ்ணமூர்த்தி, மரணம் அடைந்த செய்தியை கேள்விப்பட்டு, அவரது இறுதிசடங்கில் கலந்து கொண்டார் நடிகர் கமல்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல், எனது குருநாதர் பாலசந்தருக்கு பி.ஆர்.ஓ., ஆக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள், எனக்கும் பி.ஆர்.ஓ., வாக இருந்ததை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது.
உண்மையில் நல்ல மனிதர். அவருடைய இறந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தார் உட்பட யாரையும் படுத்தாமல் நல்ல சாவு ஏற்பட்டு இருக்கிறது.
என்னதான் நல்ல சாவு என்றாலும், அவருடைய இறப்பு இழப்பு தான். நேற்று இரவுவரை கூட என்னைபற்றிய செய்திகள், பத்திரிக்கைகளில் வந்ததை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
நேற்று வரைகூட, அவர் என்னுடைய பி.ஆர்.ஓ., ஆக இருந்து இருக்கிறார். தன்னிலை உணர்ந்த மனிதர். அவருடைய இழப்பை ஈடுசெய்ய முடியாது.
அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கமல் தவிர, டைரக்டர்கள் ராமநாரயணன், சிலந்தி ஆதிராஜ், கலைப்புலி சேகரன், ருக்மங்காதன் உள்ளிட்ட பல்வேறு திரைநட்சத்திரங்களும் கிளாமர் கிருஷ்ணமூர்த்திக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
0 comments:
Post a Comment