"இம்சை அரசன் 23ம் புலிகேசி", "அறைஎண் 305ல் கடவுள்", "இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம்" உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிம்புதேவன்.
அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்மரமாக இறங்கியிருந்தார். இதில் தனுஷை வைத்து படம் பண்ணபோவதாக முன்பு கிசுகிசுக்கள் வந்தது.
இப்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. அந்தபடத்திற்கு "மாரீசன்" என்று பெயரிட்டுள்ளனர். யு.டி.வி., நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருக்கும் இப்படம் ரூ.30 கோடி செலவில் உருவாக இருக்கிறது.
கி.மு., 12ம் நூற்றாண்டை தழுவிய கதை என்பதால் படத்திற்கு இவ்வளவு பட்ஜெட்டாம். சிம்பு தேவனின் கதையைக் கேட்ட யுடிவியின் இப்போதைய உரிமையாளர்களான வால்ட் டிஸ்னி நிறுவனத்தினர், இந்தக் கதை ஆங்கிலப் படங்களின் பாணியில் கச்சிதமாக உள்ளது.
தாராளமாக படமெடுங்கள் என பாராட்டினார்களாம். டிசம்பரில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் மாரீசன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார், கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதுவரை தனுஷ் நடித்த படங்களிலே, மாரீசன் படம் தான் அதிக பொருட்ச்செலவில், அதாவது ரூ.30 கோடியில் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment