தனுஷின் வேங்கை - முன்னோட்டம்

இந்தியாவின் தலைசிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.நாகிரெட்டியின், விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பலவெற்றி படங்கள் வெளிவந்துள்ளன.


பி. நாகிரெட்டியின் நல்லாசியுடன், பி.பாரதி ரெட்டி தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் வேங்கை. ஹரியின் வழக்கமான அரிவாள் கலாச்சாரம் நிறைந்த ஆக்ஷன் படம் தான் வேங்கை.


காதல் பாங்கான கதைகளிலே நடித்து வந்த தனுஷ், இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுக்க உள்ளார். படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.


முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், கலாபவன்மணி ஆகியோர் நடிக்கின்றனர்.


இவர்களுடன் கஞ்சா கருப்பு, லிவிங்ஸ்டன், பொன்வண்ணன், ஒய்.ஜி.மகேந்திரன், சார்லி, ஊர்வசி, ஐஸ்வர்யா, ஜி.சீனிவாசன், பறவை முனியம்மா, பயில்வான் ரங்கநாதன், அழகு, ஜெயமணி, பெஞ்சமின் ஆகியோரும் நடிக்கின்றனர்.


தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நா.முத்துக்குமார், விவேகா பாடல்கள் எழுதுகின்றனர், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

நண்பன் ஆகிறது '3 இடியேட்ஸ்

எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்க என இரு மொழிகளில் உருவாகுகிறது. இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய்.

மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்திற்கு ஷங்கர் '3 இடியேட்ஸ்' பதிலாக நண்பன் என பெயர் சூட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நந்தலாலா - ஸ்பெஷல் ஹைலைட்ஸ்

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே போன்ற வெற்றி படங்களை இயக்கிய டைரக்டர் மிஷ்கின் அடுத்து நடிகராக அவதாரம் எடுத்துள்ள படம் நந்தலாலா. மிஷ்கினின் கனவுபடமான இப்படத்தை ஐயங்கரன் இண்டர்நெஷனல் தயாரித்துள்ளது.


அஞ்சாதே படத்தில் கத்தால கண்ணால குத்தாத என்ற பாடல் மூலம் பிரபலமான நடிகை ஸ்னிதா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், ரோகின மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பற்றிய ‌ஹைலைட்ஸ் வருமாறு:


* படத்தில் முக்கிய கதாபாத்திரமே 10வயது சிறுவனாக வரும் அஸ்வந்த்தானாம்.


* மிஷ்கின் இந்தபடத்தில் ஒருமனநோயாளி போல் நடித்திருக்கிறார். இதற்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் 15நாட்கள் சென்று நோயாளிகளை கவனித்து வந்திருக்கிறார்.


* நகரத்தில் தொடங்கி, கிராமத்தில் முடிய ஒரு குழந்தையும் ஒரு பெரியவரும், தங்களது தாயை தேடி போற ஒரு பயணத்தை படம் பிடித்து மக்களிடம் சமர்ப்பித்திருக்கிறார் மிஷ்கின்.


* படம்முழுக்க மிஷ்கின், ஸ்னிக்தா, அஸ்வந்த் ஆகி‌ய மூவரும் ஒரே காஸ்ட்யூமில் வருகின்றனர்.


* இளையராஜாவின் இசையில் படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள் மட்டும் அமைந்துள்ளன. இப்படத்தில் இளையராஜா, இசைக்கு ஹங்கேரி இசைக்குழுவை பயன்படுத்திருப்பது மேலும் வலு சேர்த்துள்ளது.


* படப்பிடிப்பு பெரும்பாலும் கோபிசெட்டிபாளையம், பொள்ளாச்சி, கோவையை சுற்றியே படமாக்கியுள்ளனர்.


* கிராமப்புறத்தை ஒரு அழகான கவிதையாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துச்சாமி.


* படம்முழுக்க ஒரு இசைப்பயணமாகவே பார்வையாளர்களை உட்காரவைத்திருக்குமாம் நந்தலாலா.

நந்தலாலா - விமர்சனம்

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகிய வித்தியாசமும், விறுவிறுப்பும் மிக்க வெற்றிப்படங்களை இயக்கிய மிஷ்கின், கதையின் நாயகராக நடித்து, இயக்கியும் இருக்கும் வித்தியாசமான படம்தான் நந்தலாலா.


அவர் இயக்கத்தில் வெளிவந்த மற்ற படங்களைப் போன்று விறுவிறுப்பு இல்லாமல் விருது படங்களைப் போன்று வித்தியாசமான கதையும், காட்சியமைப்புகளும்தான் நந்தலாலா படத்தின் பலமும் பலவீனமும். இப்படம் வெளிவராமல் எத்தனையோ நட்கள் தாமதமானதில் இருந்தே இது எத்தனை நல்ல படம் என புரிந்திருக்கும்.


பாட்டியின் அரவணைப்பில் வளரும் சிறுவன் ஒருவன் பள்ளி சுற்றுலாவிற்கு போவதாக பாட்டியிடமும், வேலைக்கார அம்மாவிடமும் சொல்லிவிட்டு சுற்றுலாவுக்குப் போகாமல் தன் தாயை தேடி தன் தாய் இருப்பதாக பாட்டி சொல்லி வரும் கிராமத்திற்கு கிளம்புகிறான்.


அதேநேரம், சின்ன வயதிலேயே தன் தாயால் மனநல காப்பகத்தில் விடப்படும் மனநோயாளியான கதையின் நாயகனும் தன் தாயை ‌தேடி காப்பக காவலாளி ஒருவரை அடித்துப் போட்டு விட்டு அவரது உடையில் தாயை தேடி கிளம்புகிறார். தாயைத் தேடி செல்லும் இந்த இருவரும் எதிர்பாராதவிதமாக ஒன்று சேர, இருவரும் சேர்ந்து தங்களது அம்மாக்களை தேடி கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் நந்தலாலா படத்தின் மொத்த கதையும்!


இத்துனோன்டு கதையை இயக்குனர் மிஷ்கின் காட்சிப் படுத்தியிருக்கும் விதம்தான் வித்தியாசமோ வித்தியாசம். அதிலும் இவரது கிராமத்து பெயர் தாய்வாசல் என்றும், அந்த சிறுவனின் பெயர் அன்னை வயல் என்றும் சென்டிமெண்ட்டால் பெயர் சூட்டியிருப்பதில் தொடங்கி, பரபரப்பான நெடுஞ்சாலைகளில் நடந்தே வரும் இருவரும் பண்ணும் சேட்டைகள் வரை சகலத்திற்கும் கோட்டை விடாமல் மிக அழகாக ஒரு படத்தை முயற்சித்திருக்கிறார் டைரக்டர் எனும் வகையில் மிஷ்கினுக்கு ஹேட்ஸ் ஆப் சொல்லத் தோன்றுகிறது.


கதையின் நாயகராக மிஷ்கின் கலக்கலாக நடித்திருக்கிறார். அதுவும் முட்ட முட்ட முழிக்கும் தனது விழிகளாலேயே தனது மன வியாதியை வெளிப்படுத்தும் இடங்கள் சூப்பர்ப். அதேநேரம் சிறுவனின் தாய் வேறு ஒருவருடன் வாழ்வதை சிறுவனிதம் மறைக்கும் அளவிற்கு விவரம் தெரிந்த மிஷ்கினுக்கு, பேண்ட்டை போட்டுக் கொள்ளத் தெரியாதது, சின்னதம்பி பிரபு மாதிரி நம்ப முடியாமல் இருக்கிறது.


அதேமாதிரி அவர் கையில் பிடித்துக் கொண்‌டே திரியும் பேண்ட்டை பாதி படத்திற்கு மேல் ஒரு நாடா மூலம் கட்டி விடும் பள்ளி மாணவி, சைக்கிளில் போய் டிராக்டரில் திரும்பி வரும் காட்சிகள், மிலிட்டரி கெட்-அப்பில் பைக்கில் இரண்டு குண்டு ஆசாமிகள் வரும் காட்சிகளும், டிரக் - லாரி உள்ளிட்டவைகளில் மிஷ்கினும், சிறுவனும் தப்பிக்கும் இடங்களும் வேறு ஏதோ அயல்நாட்டு மொழிப்படங்களில் பார்த்த ஞாபகம்.


விலைமாதுவாக வரும் ஸ்னிக்தா,னும் அவரை பழங்கால காரில் துரத்தும் கிழவரும், லாரியில் ஹாரனை பிடுங்கி வந்து அதனால் மிஷ்கின் அடிபடும் இடங்களும், இளநீர் காரரிடம் இளநீர் திருடி, பின் அவரது மயக்கம் தாகத்திற்கே இளநீர் தரும் இடங்களும் மிஷ்கினின் இயக்கத்திற்கு சான்று.


மிஷ்கின் மாதிரியே விலைமாதராக வரும் ஸ்னிக்தா, பள்ளி மாணவி, இளநீர் வியாபாரி, மனநோயாளியாக வரும் ரோஹினி, பள்ளி சிறுவன் என சகலரும் பளிச் என்று நடித்திருக்கிறார்கள்.


விருதை மட்டுமே குறிவைத்து படம் வேகமே இல்லாமல் பயணிக்கும் விதம் வெறுப்பை ஏற்படுத்தினாலும், ரசனை மிகுந்தவர்களுக்கு லாலா கடை இனிப்பு இந்த நந்தலாலா என்றால் மிகையல்ல..!

விஜய்யின் காவலனுக்கு கோர்ட் இடைக்கால தடை

நடிகர் விஜய், நடிகை அசின் நடித்த காவலன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


சென்னை ஐகோர்ட்டில் சிங்கப்பூரை சேர்ந்த தந்தாரா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பொது அதிகாரம் பெற்ற ஜெரோம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், காவலன் சினிமா படத்தின் வெளிநாட்டில் திரையிடும் உரிமையை அந்த படத்தின் தயாரிப்பாளரான `ஏகவீரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரோகேஷ் பாபுவிடம் ரூ.5.50 கோடிக்கு விலை பேசி 29-9-10 அன்று ஒப்பந்தம் செய்துள்ளோம்.


இதற்காக ரூ.1.50 கோடி முன்பணம் தரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் படத்தின் அனைத்து உரிமைகளையும் சினிமா பாரடைஸ் உரிமையாளரான சக்தி சிதம்பரத்திடம் விற்றுள்ளனர். இதுபற்றி தெரிந்ததும் தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்டேன்.


முறையான விளக்கம் தரப்படவில்லை. எனவே வெளிநாட்டில் திரையிடும் உரிமையை சம்பந்தப்பட்ட கலர் லேபிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டேன். ஆனால் ஒப்பந்ததை ரத்து செய்துவிடுவதாக தயாரிப்பாளர் தரப்பில் மிரட்டுகின்றனர்.


எனவே ஒப்பந்தத்தின் மீதி தொகையை நாங்கள் கொடுக்கும் பட்சத்தில் கலர் லேபில் இருந்து வெளிநாட்டில் திரையிடும் பிரிண்டுகளை தர உத்தரவிட வேண்டும். எங்கள் ஒப்பந்தத்தில் வேறுநபர்கள் தலையிட தடை விதிக்க வேண்டும். அதுவரை இந்தப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.


இந்த மனுவை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரித்தார். காவலன் படத்துக்கு 6 வாரத்துக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது

நடிகர் விஜயகாந்துக்கு டாக்டர் பட்டம்

அரசியல் தலைவர்கள், கல்விச்சேவை, மனிதநேய சேவை உள்ளிட்ட சேவைகளை செய்யும் சமூக சேவையாளர்கள், சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் கவுரவ டாக்டர் பட்டம் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கும் வழங்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள, "இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.சி.எம்.,) என்ற பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் படத்திற்கு நடிகர் விஜயகாந்தை தேர்வு செய்துள்ளது.

சிறப்பான முறையில் சமூக சேவையாற்றி வருவதற்காக இந்த பட்டம் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வரும் டிசம்பர் 3ம்தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான அழைப்பிதழ் அச்சடிப்பு, நிகழ்ச்சி ஏற்பாடு உள்ளிட்ட பணிகளில் தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

அப்போ இனிமே கேப்டர் விஜயகாந்த் இல்ல... டாக்டர் விஜயகாந்த்னு சொல்லுங்க!

மீண்டும் கோர்ட்டுக்கு டிமிக்கி கொடுத்த பிரபு - நயன் ஜோடி

காதல் மனைவி ரமலத் தொடர்ந்த வழக்கில் (கள்ளக்)காதல் ஜோடிகளான நடிகர் பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் இன்றும் கோர்ட்டில் ஆஜராகவில்லை.


தனது கணவர் பிரபுதேவாவை, நயன்தாராவிடம் இருந்து மீட்டுத் தரும்படி பிரபுதேவாவின் காதல் மனைவி ரமலத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கில் ஆஜராகும்படி முதலில் நடிகர் பிரபுதேவாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கோர்ட்டுக்கு வரவில்லை. பின்னர் ரமலத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரபுதேவாவும், நயன்தாராவும் ஒன்றாக ஜோடி சேர்ந்து பொது ‌நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தடை விதிக்கும்படி கோரப்பட்டது.


இதையடுத்து நயன்தாரா மற்றும் பிரபுதேவாவுக்கு நடிகர் சங்கம் மூலமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து இன்று (23ம்தேதி) நயன்தாராவும், பிரபுதேவாவும் கோர்ட்டில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறையும் கள்ளக்காதல் ஜோடி கோர்ட்டுக்கு டிமிக்கி கொடுத்து விட்டார்கள். வழக்கு தொடர்ந்த ரமலத்தும் இன்று கோர்ட்டுக்கு வரவில்லை.


அதேநேரம் ரமலத் சார்பில் அவரது வக்கீல் மருத்துவ சான்றிதழ் ஒன்றை கோர்ட்டில் சமர்ப்பித்தார். அதில் ரமலத்துக்கு உடல்நிலை சரியில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அ‌ன்றையதினம் பிரபுதேவாவும், நயன்தாராவும் கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

விஜய் டி.வி.,யில் மன்மதன் அம்பு இசை

மன்மதன் அம்பு படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை விஜய் டி.வி. பெரும் விலைக்கு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்துக்கு சொந்தமாக கலைஞர் டி.வி. உள்ளிட்ட சேனல்கள் இருக்க, மன்மதன் அம்பு நிகழ்ச்சி உரிமையை விஜய் டிவிக்குக்கு கொடுத்துள்ளது கோலிவுட்டில் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.


சிங்கப்பூர் எக்ஸ்போவில், மிகப்பெரிய சொகுசு கப்பலில் 2 தினங்கள் நடக்கும் மன்மதன் அம்பு இசை வெளியீட்டு விழாவை விஜய் டிவி ஒளிபரப்புகிறது விழாவில் கமல்ஹாஸன், த்ரிஷா, மாதவன், சங்கீதா, கேஎஸ் ரவிக்குமார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்றனர்.


நவம்பர் 20-ம் தேதி இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடக்கிறது. ஆனால் விஜய் டிவியோ, 18 மற்றும் 19-ம் தேதிகளில் இதற்கான முன்னோட்டக் காட்சிகளை ஒளிபரப்புகிறது. இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 அழைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.


7000 பார்வையாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், கமல்ஹாஸன் - தேவி ஸ்ரீ பிரசாத் இருவரும், ஏராளமான பிரேசில் மற்றும் சீன கலைஞர்களுடன் இணைந்து பாடுகின்றனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...