அரசியல் தலைவர்கள், கல்விச்சேவை, மனிதநேய சேவை உள்ளிட்ட சேவைகளை செய்யும் சமூக சேவையாளர்கள், சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் கவுரவ டாக்டர் பட்டம் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கும் வழங்கப்பட இருக்கிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள, "இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.சி.எம்.,) என்ற பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் படத்திற்கு நடிகர் விஜயகாந்தை தேர்வு செய்துள்ளது.
சிறப்பான முறையில் சமூக சேவையாற்றி வருவதற்காக இந்த பட்டம் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வரும் டிசம்பர் 3ம்தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான அழைப்பிதழ் அச்சடிப்பு, நிகழ்ச்சி ஏற்பாடு உள்ளிட்ட பணிகளில் தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
அப்போ இனிமே கேப்டர் விஜயகாந்த் இல்ல... டாக்டர் விஜயகாந்த்னு சொல்லுங்க!
0 comments:
Post a Comment