கோலி சோடா - சினிமா விமர்சனம்



தங்களுக்கென தனியாக அடையாளம் வேண்டுமென போராடும், வாலிபத்தை எட்டிப் பிடிக்கத் துடிக்கும் நான்கு சிறுவர்களுக்கும், அவர்களுக்கான அடையாளத்தையும் சிதைத்து அவர்களை அடக்கி ஆளவும் நினைக்கும் பணபலமும், படை பலமும் நிரம்பிய ஒரு பெரிய மனிதரது ஆட்களுக்குமிடையே நடக்கும் மோதலும், கிடைக்கும் நல்ல தீர்வும் தான் கோலி சோடா படத்தின் மொத்த கதையும்!

அதாகப்பட்டது ஆசியாவிலேயே பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு வணிகவளாகத்தில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துகின்றனர் புள்ளி - கிஷோர், சித்தப்பா - பாண்டி, குட்டிமணி - முருகேஷ், சேட்டு - ஸ்ரீராம் ஆகிய நான்கு அநாதை சிறுவர்கள். 

காலம் முழுவதும் இப்படியே மூட்டை தூக்கி அடுத்த வேளை சோற்றுக்கு பிறர் கையை எதிர்பார்த்தே வாழப் போகிறீர்களா? அல்லது உங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் ஏதாவது தொழில் செய்து பெரிய மனுஷர்களாக மாறப்போகிறீர்களா? என அவர்களை உசுப்பேற்றி விடுகின்றது சுற்றமும், சூழ்நிலையும். 

குறிப்பாக இந்த 4 சிறுவர்களின் முதலாளியம்மாவும், காய்கறி மொத்த விற்பனையாளருமான ஆச்சி - சுஜாதா. இவர்களை உசுப்பேற்றுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் 4 பேரையும் கோயம்பேடு மார்க்கெட்டின் பெரிய மனிதர் நாயுடு அண்ணாச்சி முன் கொண்டு நிறுத்தி, அவர்களுக்கென ஒரு கடையையும் பிடித்து, அதில் ஒரு உணவு விடுதியையும் ஆரம்பித்து கொடுக்கிறார். ஆரம்பத்தில் பிஸினஸூம் ஆஹா, ஓஹோ என அமர்க்களப்படுகிறது.

ஆச்சிமெஸ் பசங்க எனும் அடையாளத்தோடு வளைய வர ஆரம்பிக்கும் நால்வரும் மகிழ்வு நிலையில் இருக்கும்போது, அவர்களது கடையை நாயுடுவின் ஆட்கள் தங்களது செகண்ட் பிஸினஸூக்கும், குடி, குட்டி உள்ளிட்ட சின்ன புத்தி செயல்களுக்கும் யூஸ் பண்ணுவது கண்டு வெகுண்டெழும் நால்வரும், நாயுடுவின் ஆட்களுடன் மோதலில் இறங்குகின்றனர். 

இதனால் அவர்கள் படும்பாடும், கொடுக்கும் பதிலடியும்தான் கோலி சோடா. இந்த கதையினூடே புள்ளி-கிஷோர், யாமெனி-சாந்தினி மற்றும் சித்தப்பா-பாண்டி, ஏடிஎம்-ஸ்ரீநிதியின் இன்பாட்சுவேஷன் காதலையும் கலந்துகட்டி கலர்புலாக கதை சொல்லி இருக்கிறார் இப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான எஸ்.டி.விஜய் மில்டன்.

கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் உள்ளிட்ட நான்கு சிறுவர்களும் நச் என்று நடித்திருக்கின்றனர். மீசை முளைக்க ஆரம்பிக்காத வயதில் அவர்களுக்கு கிளம்பும் அடையாள ஆசையையும், ஆண்-பெண் ஆசையையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றனர் நால்வரும் பேஷ், பேஷ்!

சாந்தினி - யாமெனி, ஏடிஎம் - ஸ்ரீநிதி, ஆச்சி - சுஜாதா, நாயுடுவின் மனைவிகள் மீனாள் சகோதரிகள் உள்ளிட்ட அனைவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!

சிறுவர்களுக்கு உதவும் மந்திராவாதி(சும்மா பெயரில் மட்டும் தான்...) - இமான் அண்ணாச்சி, கோயம்போடு மார்க்கெட்டையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் நாயுடு - மது, அவரது மைத்துனர் மயிலாக வரும் ஆர்.கே., விஜய் முருகன் (இவர் இப்படத்தின் கலை இயக்குநராகவும் பட்டையை கிளப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது...) உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் கோயம்பேடு வாசிகளாகவே கோலோச்சி இருப்பது கோலி சோடாவின் பெரும் பலம்! 

அதிலும் ரவுண்டு ரவுண்டாக புகைவிட்டு போதையில் போலீஸ் ஸ்டேஷனில் ஆவின்பால் நஷ்டத்தில் ஓடுது, அதை வீடு வீடாக சப்ளை பண்றீங்க, டாஸ்மாக் லாபத்துல ஓடுது, அங்க குடிச்சுட்டு டூ-வீலர்ல வந்தா அவனை அரெஸ்ட் பண்றீங்க... என சகட்டு மேனிக்கு தத்துவமாக பொரிந்து தள்ளும் மந்திரவாதி - இமான் அண்ணாச்சி, தான் வரும் காட்சிகளில் தியேட்டரை அதிர வைக்கிறார். 

இமான் அண்ணாச்சி பேசும் இந்த வசனங்களில் தொடங்கி, திருப்பி அடிக்க நாங்க பெரிய பசங்களும் இல்லை... பயந்து ஓடுவதற்கு நாங்க சின்ன பசங்களும் இல்லை... என அந்த சிறுவர்கள் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் தியேட்டரில் கைதட்டலையும், விசில் சப்தங்களையும் அள்ளுகிறது. காரணம் வசனகர்த்தா இயக்குநர் பாண்டிராஜ்! வாவ்!!

4 சிறுவர்களும் பசங்க படத்தை ஞாபகப்படுத்துவது மாதிரி நடித்திருப்பது, யதார்த்தமான கதையை யதார்த்தமாக முடிக்காமல், டிராமாவாக, சினிமாவாக... முடித்திருப்பது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருந்தாலும் எஸ்.என்.அருணகிரியின் இசைபலம், பாண்டிராஜின் வசனபலம், ஆண்டனியின் படத்தொகுப்பு பலம் உள்ளிட்ட சிறப்புகளோடு விஜய் மில்டனின் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில், கோலி சோடா - பன்னீர் சோடாவாக இனிக்கிறது!!

நடிக்க வந்து விட்டார் ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஹைவே என்ற இந்தி படத்துக்குஇசையமைத்துள்ளார். 

அலியா பட்,ரந்தீப் ஹூடா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில், படகா கட்டி என்றஒரு பாடலையும் பாடியுள்ளார்.

இந்த படத்தின், பாடல் கம்போசிங்கை, வீடியோ எடுத்து, படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டு உள்ளார். 

இயக்குனர், இம்தியாஸ் அலி. இதில், ரகுமானை, பாடலுக்கு ஏற்ப, நடிக்க வைத்து உள்ளாராம். இதை, ரகுமானே, இணையதளத்தில் தெரிவித்துள்ளார். 

ஜெய்யின் செண்டிமென்டை நினைத்து அலறும் நடிகைகள்


சினிமா உலகைப்பொறுத்தவரை ஹிட் படங்களில் நடித்த ஜோடிகளை இணைத்து காதல் கிசுகிசுக்கள் கசிவது சகஜமாகி விட்டது. ஆனால், அதற்கு சிலர் மறுப்பு சொன்னாலும், பலர் அதை கண்டும் காணாததும் போலவே இருந்து விடுகிறார்கள். 

காரணம், இன்றைய நிலையில் கிசுகிசுக்கள்கூட சிறந்த பப்ளிசிட்டியாக கருதப்பட்டு வருகிறது. அப்படித்தான் சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்-ஸ்வாதி இருவரும் நடித்தபோதும் அவர்களைப்பற்றி கலர் கலராக காதல் கிசுகிசுக்கள் புகைந்தன. 

அதற்கு அவர்கள் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல், இப்படியெல்லாம்கூட இலவச விளம்பரம் கிடைக்கிறதே என்று ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

அதையடுத்து, எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோதும் ஜெய்யுடன், அஞ்சலியை இணைத்து காதல் செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து திருமணம் என்னும் நிக்கா படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த மலையாள நடிகை நஸ்ரியாவையும் அவருடன் இணைத்து வழக்கம்போல் காதல் செய்திகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்தன. இதற்கு நஸ்ரியா மறுப்பு சொன்னபோதும், ஜெய் மட்டும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்த சூழ்நிலையில், ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் முதலில் சிக்கிய ஸ்வாதி, சுப்ரமணியபுரம் மெகா ஹிட்டானபோதும் அதன்பிறகு படமில்லாமல் ஆந்திராவுக்கு திரும்பி விட்டார். 

அதையடுத்து, படுவேகமாக வளர்ந்து கொண்டிருந்த அஞ்சலியோ, எங்கேயும் எப்போதும் படத்தையடுத்து சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் கோடம்பாக்கத்தையே காலி பண்ணி விட்டு ஓட்டம் பிடித்து விட்டார். 

அவர்களைத் தொடர்ந்து நஸ்ரியாவோ, வேகமாக படங்களில் புக்காகி வந்தவர், இப்போது பகத்பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிக்கொண்டு நடிப்புக்கே குட்பை சொல்லி விட்டார். ஆக, ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அத்தனை நடிககளுமே காணாமல் போய் விட்டார்கள்.

இந்த சேதி, தற்போது ஜெய்யுடன் நடித்து வரும் புதுமுக நடிகைகளுக்கு தெரியவர, கலவரமான மனநிலையுடனேயே இருக்கிறார்களாம். ஜெய்யுடன் சிரித்து பேசினால்கூட அது காதல் செய்தியாகி இந்த ஒரு படத்தோடு தாங்கள் சினிமாவை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அவர் தங்களைப்பார்த்து சிரித்து பேசினால்கூட முகத்தை வெறப்பாக வைத்துக்கொண்டே நிறகிறார்களாம் நடிகைகள். 

மேலும் அடுத்தடுத்து ஜெய்யுடன் நடிப்பதற்கு கால்சீட் கேட்டு எந்த நடிகையிடம் சென்றாலும், ஆளை விடுங்க சாமி என்று அலறிக்கொண்டு ஓடுகிறார்களாம்.

மில்க் நடிகையின் மேரேஜ் அவசரம்

மார்க்கெட்டும், மவுசும் குறைந்து விட்டதால் அடுத்து திருமணம்தான் என்று முடிவு செய்துவிட்டாராம் பால் நடிகை. 

வெற்றி இயக்குனரை கல்யாணத்துக்கு நாள் குறிக்கச் சொல்லி டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சிட்டாராம். 

அடுத்து ஒரு கமர்ஷியல் ஹிட் படத்தை கொடுத்துவிட்டுத்தான் கல்யாணத்தை பற்றி யோசிக்கணுன்னு வெற்றி இயக்குனர் கறாராக சொல்லிட்டாராம். 

போன வருஷம் வரைக்கும் கல்யாணத்துக்கு அவர் அவசரப்படுத்தினார். 

இந்த வருஷம் இவரே இறங்கி வந்தும் வெற்றி இயக்குனர் பேக் அடிக்கிறாராம்.

மணிரத்னம் படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஐஸ்வர்யாராய்


1997-ல் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் தமிழுக்கு வந்தவர் ஐஸ்வர்யாராய். 

அதன்பிறகு ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். 

அதேபோல் இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யாராய், அங்குள்ள முன்னணி ஹீரோக்களுடன் ஒரு பெரிய ரவுண்டே வந்து கொண்டிருந்தார்.

மேலும், அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்ட பிறகும் நடிப்பை தொடர்ந்து வந்தார். 

ஆனால், 2010-ல் ஹீரோயின் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது கர்ப்பமானதால், அதன்பிறகு நடிப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மகள் ஆரத்யாவை பெற்றெடுத்தார். 

இப்போது மகளுக்கு இரண்டரை வயதாகும் நிலையில், இந்தியில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் ரீ-என்ட்ரி ஆவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், பின்னர் அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டார் ஐஸ்.

ஆனால், இப்போது அவரை அறிமுகம் செய்த மணிரத்னம் அடுத்த தமிழ், தெலுங்கில் நாகார்ஜூனா-மகேஷ்பாபுவைக் கொண்டு இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

குழந்தை பெற்றெடுத்த பிறகு உடல் பெருத்து விட்டதால், இப்போது மீண்டும் தன்னை ஸ்லிம்மாக்கும் முயற்சியில் ஐஸ்வர்யாராய் இறங்கியிருக்கிறாராம். 

இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, நாகார்ஜூன்னாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாராவை டென்சனாக்கிய கேள்வி


சிம்புவுடன் நயன்தாராவுக்கு ஏற்பட்ட காதலாவது அதோடு முறிந்து போனது. ஆனால், பிரபுதேவாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதல்தான் அடுத்த கட்டமான கல்யாணம் வரை சென்றது. 

அதனால், மும்பையில் வீடு எடுத்து தங்கியிருந்த பிரபுதேவாவுடன் அவ்வப்போது சென்று காதல் வளர்த்து வந்த நயன்தாரா, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவுக்கும் மாறினார்.

ஆனபோதும், கடைசி நேரத்தில் சிம்புவுடனான காதல் வெடித்து சிதறியது போன்று, கல்யாண தேதி அறிவிக்கயிருந்த நேரத்தில் பிரபுதேவாவுடனான உறவையும் முறித்துக்கொண்டு வெளியேறினார் நயன்தாரா. 

அதையடுத்து பிரமச்சார்யத்தை கடைபிடித்தவரை இப்போது திரையுலகம் மீண்டும் அரவணைத்துள்ளது. அதனால் புது எனர்ஜியுடன் நடித்துக்கெணர்டிருக்கிறார் நயன்.

இந்த நேரத்தில் இனி யாருடன் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கவே மாட்டார் என்று நினைத்தார்களோ அதே சிம்புவுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கும இந்த படத்தில், சிம்புவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சிகளும் உள்ளதாம். 

அதோடு, இப்படத்தில் கிறிஸ்தவ பெண்ணாகவே நடிக்கிறாராம் நயன்தாரா. சிம்பு இந்துவாம். அதனால், அவர்கள் இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்து கொள்வது போன்று காட்சிகள் உள்ளதாம். 

ஆக, அவர்கள் காதலர்களாக இருந்தபோது கண்ட கனவு நனவாகும் வகையில் இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். அதனால் சிம்பு-நயனதாரா இருவருமே அந்த காட்சியில் அரிதாரம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்களாம்.

இந்த நேரத்தில், முதல் காதலரான சிம்புவுடன் மீண்டும் நடித்து வரும் நீங்கள், உங்களது இரண்டாவது காதலரான பிரபுதேவாவின் படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்று சில ரசிகர்களை அவரிடம் கேட்டும் டென்சன் செய்து வருகின்றனர்.

அதற்கு, எனது முதல் காதலரை மன்னிக்கலாம. ஆனால் இரண்டாவது காதலரை மன்னிக்க முடியாது. அதனால் எந்த சந்தர்ப்பத்திலும் அவரது படத்தில் நான் நடிக்க வாய்ப்பே இல்லை என்று நறுக்கென்று சொல்லி முடித்துக்கொண்டாராம் நயன்தாரா.

காதல் நடிகரை ரகசியமாக சந்திக்கும் ச நடிகை


காதலில் சொதப்பிய அந்த ஹீரோவை சில வருடங்களாகவே லவ்வி வரும் அந்த நான்கெழுத்து ச நடிகை, அவருடன் கோயிலில் பூஜைகளில் ஈடுபட்டபோதிலும், அது திருமணத்துக்கான பூஜை அல்ல, கிரக நிவர்த்திக்கான பூஜை என்று சொல்லி விசயத்தை ஆப் பண்ணினார். 

அதோடு, தொடர்ந்து இருவரும் சந்தித்துக்கொண்டால், இதுபோன்ற கிசுகிசுக்களை தவிர்க்க முடியாது என்பதால், சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகள, பொது இடங்களுக்கு ஜாலி டூர் அடிப்பதையே அவர்கள் நிறுத்தி விட்டனர்.

ஆனால், இப்போதும் அவர்களது சந்திப்பு வழக்கம்போல் அரங்கேற்றமாகி கொண்டுதான் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், முன்பு போன்று வெளிப்படையாக இல்லாமல் அடக்கி வாசிக்கிறார்களாம். 

ஐதராபாத்திலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அடிக்கடி ரகசியமாக சந்தித்து கொள்கிறார்களாம். இந்த சந்திப்பு ஒரு மணி, இரண்டு மணி நேரமல்ல, விடிய விடிய நடக்கிறதாம். இந்த செய்தி ஆந்திர சினிமா வட்டாரங்களில் தற்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இரண்டெழுத்து நடிகரை வாரிவிடும் இயக்குனர்


ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படங்கள் தயாரித்து வரும் அந்த ஐந்தெழுத்து இயக்குனர், தயாரித்த நான்கெழுத்து படத்தில் சேட்டை நாயகனும், சுப்பிரமணியபுரம் நடிகரும் இணைந்து நடித்தனர். 

ஆனால், சேட்டை நடிகருக்கே படத்தில் முக்கியத்துவம் கொடுத்ததோடு, விளம்பரங்களிலும் அவரையே முன் நிறுத்தினர். இதனால் அப்படத்தின் இரண்டெழுத்து நாயகன் செம டென்சனாகி விட்டார். 

ஏன் நமக்கு மட்டும் இப்படி ஓரவஞ்சணை செய்கிறார்கள் என்று கோபித்துக்கொண்டு படப்பிடிப்பு நடைபெற்றபோது, அடிக்கடி டேக்கா கொடுத்து வந்தார். 

இதனால் சில நாட்களில் அவரால் படப்பிடிப்பும் பேக்கப் ஆகியிருக்கிறது. இதையடுத்து, படத்தை தயாரித்த இயக்குனருக்கும், நடிகருக்குமிடையே வாக்குவாத மோதலும் நடந்திருக்கிறது.

அதனால், இப்போதும் தான் எந்த சினிமா மேடைகளில் தோன்றினாலும் நடிகரின் ஞாபகம் வந்தால், சினிமாவில் நாம வளர்த்து விட்டவர்களே நன்றி மறந்து விடுகிறார்கள் என்று நடிகரை குறி வைத்து தாக்கிப்பேசுகிறார் இயக்குனர். 

இப்படி சிலகாலம் பேசி வந்த அவர், இப்போது யாராவது தனக்கு வேண்டப்பட்டவர்கள் அந்த நடிகரை வைத்து படம் பண்ணும் விசயம் காதுக்கு வந்தால் உடனே அவர்களுக்கு போன்போட்டு அந்த நடிகரை வைத்தா படம் பண்ணுகிறீர்கள். 

வேண்டாம், வேறு யாராவது நல்ல நடிகரை வைத்து பண்ணுங்கள் என்று கேட்டுக்கொள்கிறாராம். இதனால் நடிகருக்கு சில படங்கள்கூட கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிருக்கிறதாம்.

இதெல்லாம் இயக்குனர் செய்யும் வேலைதான் என்பதை எப்படியோ தெரிந்து கொண்ட நடிகர், எந்த படம் ஓடும், எந்த படம் ஓடாதுன்னு எப்படி யாராலும் சொல்ல முடியாதோ. 

அதே மாதிரி, இந்த சினிமாவுல யாரோட வளர்ச்சியையும், யாராலும் தடுக்க முடியாது. இவரு என்னை வெட்ட வெட்ட நான் தழைச்சிக்கிட்டேதான் இருப்பேன் என்று நெஞ்சை நிமிர்த்தி பேசி வருகிறாராம்.

அஜீத்தின் பிறந்த நாளில் சிம்புவின் வாலு


தல அஜீத்தின் தீவிரமான ரசிகர் சிம்பு. தானும் நடிகர் என்றபோதும், ஒரு சாதாரண ரசிகராட்டம் அஜீத் நடிக்கும் படங்களை முதல் நாளிலேயே பார்த்து ரசித்து விடுவார் சிம்பு. 

அதோடு, படத்தை பார்த்து விட்டு, அஜீத்தின் ஒவ்வொரு அசைவுகள் குறித்தும் தான் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களில் சொல்லிச்சொல்லி புழகாங்கிதம் கொள்வார்.

இந்நிலையில், வீரம் படத்தையடுத்து கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கும் அஜீத், தனது ரசிகரான சிம்புவுக்கும் ஒரு நல்ல கேரக்டர் கொடுக்குமாறு சொல்ல, அந்த கதையில் சில திருத்தம் செய்து சிம்புவுக்காக கேரக்டரை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார் கெளதம். 

ஆக, தலயோடு முதன்முறையாக இணைந்து நடிக்கப்போகும் பரவசத்தில் இருக்கிறார் ரசிகர் சிம்பு.

இந்த சந்தோசத்தை கொண்டாடி வரும் சிம்பு, முன்னதாக, தான் நடித்து வரும் வாலு படத்தை அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளாராம். 

இந்த சேதி அஜீத்துக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்கள் வட்டாரத்தையும் மகிழ்ச்சி கடலில் தத்தளிக்க வைத்திருககிறது.

வெந்தவன், வேகாதவன், அர வேக்காடு


தலைப்பை படிச்சிட்டு உங்களை திட்டுறா நினைச்சுக்காதீங்க. இது ஒரு தமிழ் சினிமாவோட தலைப்புதான். 

டிஜிட்டல் சினிமா வந்துட்டதால 50 லட்சத்துக்குள்ள யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்ங்ற நிலமை. வாரத்துக்கு பத்து படத்துக்கு பூஜை போடுறாங்க. 

அதுல ஒரு படம்தான் இது. இதுலேயும் மூணு ஹீரோயின் நடிக்கிறாங்க (எங்கேருந்துதான் கிளம்பி வருவாய்ங்களோ). 

மூன்று ஹீரோயின் இருக்குறப்போ மூன்று ஹீரோ இருந்தாகணுமே இருக்காங்க. ஜி.ஸ்ரீதர் என்பவர் டைரக்ட் செய்கிறார். ஜெயபிரகாஷ் என்பவர் மியூசிக் பண்றார். 

பிரண்ட்ஸ் புரொடக்ஷன் என்ற புது நிறுவனம் தயாரிக்கிறது.

மூன்று விதமான குணத்தை கொண்ட மனிதர்களின் காமெடி படமாம். அந்த குணத்தைத்தான் டைட்டில் குறிப்பிடுகிறதாம்.

ரசிகர்கள் கேள்வியால் திக்குமுக்காடும் நடிகை

வல்லவ நடிகருடன் ஓகே நாயகி காதல் ஏற்பட்டத்துக்குப் பிறகு, சில நாட்களாக சமூக இணைய தளத்தை பயன்படுத்தி வந்தாராம். 

அதில் தன் காதல் ரகசியத்தையும் வெளியிட்டாராம். அதன்பின் வல்லவ நடிகர் நயன நடிகையுடன் நடிக்க ஒப்பந்தம் ஆனதால், இதைப் பற்றி ஓகே நாயகியிடம் ரசிகர்கள் இணைய தளத்தில் பல்வேறு கேள்விகளை கேட்கின்றனராம். 

சில கேள்விக்கு பதில் அளித்தும் பார்த்தாராம். ஒரு கட்டத்திற்குப் பிறகு ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லையாம். இதனால் திக்குமுக்காடி நிற்கிறாராம் ஓகே நாயகி

வீரம் படத்தில் இடம்பெற்ற அஜீத்தின் சொந்த டயலாக்


குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும்படி ஒரு கதை பண்ணுங்க என்று சிறுத்தை சிவாவிடம் அஜீத் சொன்னதையடுத்து, அவர் உருவாக்கிய கதைதான் வீரம். 

காதல், செண்டிமென்ட், காமெடி என ஒரு ஜனரஞ்சகமான கதையை தயார் செய்த டைரக்டர் சிவா, சிறுத்தையைத் தொடர்ந்து தமிழில் இரண்டாவது ஹிட் கொடுத்துள்ளார்.

வீரம் படத்தில் அஜீத்துக்கு பெரிதாக ஒன்றும் பஞ்ச் டயலாக் கிடையாது. என்ன நான் சொல்றது என்பார். அந்த வார்த்தையில் பெரிதாக எதுவுமே இல்லை. என்றபோதும், அஜீத் சாதாரணமாக பேசிய அந்த டயலாக்கூட அவரது ரசிகர்களால் பஞ்ச் டயலாக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.

இதையடுத்து ஒரு காட்சியில், தனது வீட்டில் சமையல்காரராக வேலை செய்யும், அப்புக்குட்டிக்கு திருமணம் நடைபெறும்போது, மார்க்கெட்டில் உள்ள தனது கடை ஒன்றை அவர் பெயருக்கு எழுதிய பத்திரத்தை அவரிடம் கொடுப்பார் அஜீத். 

அப்போது, அனைவருமே ஆச்சர்யத்துடன் அவரை பார்க்க, ''நம்மகூட இருக்கிறவங்களை நாம பாத்துக்கிட்டா கடவுள் நம்மளை பாத்துக்கிடுவார்'' என்று ஒரு டயலாக் பேசுவார் அஜீத்.

இந்த டயலாக்கை முதலில் படத்தில் எழுதவில்லையாம் டைரக்டர் சிவா. ஒருநாள் ஸ்பாட்டில் இதை அஜீத் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தாராம். 

அப்போது இது ரொம்ப நல்லாயிருக்கு படத்தில் ஒரு காட்சியில் வைத்துக்கொள்ளட்டுமா? என்று கேட்க, ஓகே சொல்லிவிட்டாராம் அஜீத். 

அதையடுத்துதான் சரியான இடத்தில் அந்த டயலாக்கை வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்து, அப்புக்குட்டிக்கு உதவி செய்துவிட்டு பேச வேண்டிய இடத்தில் அந்த டயலாக் இணைத்து விட்டாராம் சிவா.

ஆக, இதேபோல் அஜீத்தின் நிஜ கேரக்டரின் பிரதிபலிப்பும் வீரம் படத்தில் ஆங்காங்கே பல இடங்களில் இடம்பெற்றிருக்கிறதாம்.

ஜில்லா - சினிமா விமர்சனம்




தயாரிப்பாளர் சூப்பர் குட் ஆர்.பி. சௌத்ரியின் 25 ஆண்டு கால திரைப்பட தயாரிப்புபணியில் 85வதாக தயாராகி வெளிவந்திருக்கும் திரைப்படம், காவலன், நண்பன், துப்பாக்கி ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து தலைவா தோல்விக்குப்பின் வெளிவந்திருக்கும் விஜய்யின் 56வது திரைப்படம், 

புதியவர் ஆர்.டி. நேசனின் இயக்கத்தில் முதல் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் பொங்கல் திருநாளை முன்னிட்டு சில நாட்கள் முன்னதாகவே திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் ஜில்லா!

சிவன் எனும் மோகன்லாலின் வளர்ப்பு மகன் சக்தி எனும் விஜய். மதுரையையே ஆட்டிப்படைக்கும் தாதா சிவனுக்காக போலீசிடம் போராடி சக்தி விஜய்யின் கண் எதிரேயே உயிரை விடுகிறார் அவரது அப்பா. 

அப்பாவை பறிகொடுத்தாலும் அந்த ஸ்பாட்டிலேயே லாலின் நிறைமாத கர்ப்பவதி மனைவி பூர்ணிமா பாக்யராஜையும், அவர் பிரசவிக்கும் குழந்தையையும் வில்லன்களிடமிருந்து காபந்து செய்கிறார் சிறுவயது விஜய்! 

அப்புறம்? அப்புறமென்ன...? அப்பாவை இழந்ததால் அநாதையாகும் விஜய், லாலின் மூத்த மகனாக வளர்ந்து ஆளாகி, லால் எள் என்றால் எண்ணெய்யாக நிற்கிறார். தன்வசம் எத்தனையோ ஆட்கள் இருந்தும் முக்கிய தாதாபணிகளுக்கு ஒற்றை ஆளாக சக்தி - விஜய்யை அனுப்பி காரியம் பல சாதிக்கிறார் சிவன் - லால்!

தன் தந்தையை சிறுவயதில் போலீஸ்காரர் ஒருவர் அநியாயமாக சுட்டுக்கொன்றதால் காக்கி உடுப்பைக் கண்டாலே வெறுக்கும் விஜய், எதிர்பாராமல் காக்கி உடுப்புக்கு சொந்தக்காரரான காஜல் அகர்வாலை உடுப்பு (காக்கி உடுப்பு) இல்லாத நேரத்தில் காதலிக்க தொடங்குகிறார். 

அவர் போலீஸ் என தெரிந்ததும் காக்கி உடுப்பின் மீது இருக்கும் வெறுப்பில் காதலையே தூக்கி எறிகிறார். அப்படிப்பட்ட விஜய்யே ஒரு கட்டத்தில் அப்பா மோகன் லாலின் விருப்பம் மற்றும் மதுரையை ஏப்பம் விடும் முயற்சிக்காக காக்கி உடுப்பை மாட்டிக்கொண்டு போலீஸாக பணிபுரிய வேண்டிய சூழல்! 

தாதா போலீசாகும் விஜய் மேலும் ஒரு கட்டத்தில் வளர்ப்பு அப்பா மோகன் லாலுக்கு எதிராகவே திரும்புகிறார். காஜலுடன் மீண்டும் காதலில் விழுகிறார். அதுமட்டுமன்றி அப்பா சிவனை நல்லவராக்கும் முயற்சியில் நல்ல போலீசாகும் சக்தி - விஜய், சிவன் - லாலின் கோபப்பார்வைக்கு ஆளாக அதை சாதகமாக்கிக் கொள்ளும் சிவனின் அடிவருடி அமைச்சர் சம்பத், தன் வஞ்சத்திற்கு அப்பா மகன் இருவரையும் தீர்த்து கட்டும் ஆசையில் இருவரையும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறார். வென்றது சம்பத்தா? விஜய்யா? மோகன் லாலா..? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் ஜில்லா வின் மீதிக்கதை!

இளைய தளபதி விஜய், தனக்கே உரிய ஸ்டைலில் சக்தியாக சக்தி காட்டியிருக்கிறார். மோகன்லால் - பூர்ணிமா மீதான அப்பா அம்மா பாசத்திலாகட்டும், மகா - நிவேதா, விக்வேஷ் - மகத் மீதான சகோதர பாசத்திலாகட்டும், வில்லன்களை அடித்து நொறுக்கும் அதிரடியிலாகட்டும், காஜல் அகர்வாலுடனான காதலில் ஆகட்டும் அனைத்திலும் ஸோ குட் சக்தி - விஜய்!

விளையாட்டுல மோதுறவனை பார்த்திருப்ப... விளையாட விட்டு மோதுறவனை பார்த்திருக்கியா... என பஞ்ச் வசனம் பேசுவதிலாகட்டும், பரோட்டா சூரியை விட்டு போலீஸ் பரேடில் ஓவர் பெர்பார்மென்ஸ் காட்டும் போலீஸ்காரரைப் பார்த்து, ஆமாம் இவரு பெரிய துரைசிங்கம் என போட்டி நடிகர் சூர்யாவுக்கு சொக் வைப்பதிலாகட்டும், உங்க பக்கம் நின்னு பார்க்கறப்போ நாம பண்றது எல்லாம் ரைட்டா தெரிஞ்சுது, இந்த பக்கம் வந்து பார்க்கறப்போ அதுவே தப்பா தெரியுது... 

நியாயத்தின் பக்கம் நின்று கொண்டு மோகன்லாலுக்கு எதிராக வசனம் பேசும் போதிலாகட்டும் விஜய்யை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது எனலாம்! வாவ்! இன்னும் நடை, உடை, பாவனைகளில் எத்தனை குறும்பு. ஆனால் அது சில இடங்களில் டூ மச்சாக தெரிவதை விஜய்யும், இயக்குநரும் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!

மோகன்லால் கிட்டத்தட்ட விஜய்யின் காவலன் படத்தில் ராஜ்கிரண் ஏற்றிருந்த பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் என்றாலும்.. விஜய் மாதிரியே இந்த சிவன் பக்கத்தில் நின்னு பார்த்திருப்ப.. எதிர்த்து நின்னு பார்க்குறியா.. என்றும், இந்த சிவன் கால் படுற இடம் மட்டுமல்ல, நிழல் படுற இடம் கூட எனக்கே சொந்தமாயிரும் என்றும் அடிக்கிற டயலாக்குகளில் தியேட்டர் அதிர்கிறது. அவர் விஜய்யுடன் போடும் ஆட்டங்களும் சூப்பர்ப்!

காஜல் அகர்வால் போலீஸ் யூனிபார்மில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் கவர்ச்சி அகர்வால்! அதிலும் டூயட்களில் மனதை கொள்ளையடிக்கிறார். பரோட்டா சூரி காமெடியில் தேறியிருக்கிறார். பூர்ணிமா, மகத், தம்பி ராமையா, சம்பத், சரண், ஆர்.கே. ரவி மரியா, பிரதீப் ராவத், பிளாக் பாண்டி, ஜோ மல்லூரி, நிவேதா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்களும் கச்சிதம்.

கணேஷ் ராஜவேலின் ஒளிப்பதிவை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். டி. இமானின் இசையில் பாடல்கள் எட்டு ( கரோக்கி டிராக்குகள் உட்பட) அத்தனையும் குட்டு! ஆர்.டி. நேசனின் எழுத்து, இயக்கத்தில் முன்பாதி சற்றே ஜவ் வாக இழுத்தாலும், பின்பாதி பரபரப்பாக பட்டையை கிளப்பி இருக்கிறது. 

விஜய் அ.தி.மு.க., பார்டர் போட்ட டி. சர்ட்டுடன் ஒரு பாடலில் ஆடுவது, லாஜிக் இல்லாமல் போலீஸ் ஆவது... உள்ளிட்ட காமெடிகள் இருந்தாலும், ஜில்லா - நல்லாவே இருக்கிறது. ஆனாலும் இயக்குநர் பார்ட் 2 பில்டப்புடன் படத்தை முடித்திருப்பது கொஞ்சம் ஓவர்!

ஜில்லா கட்டும் கல்லா!

வீரம் - சினிமா விமர்சனம்


ஆரம்பம் முதல் அஜீத்தின் அதிரடி ஆரம்பம்! என்று சொன்ன அஜீத் தரப்பு அதை மெய்பிக்கும் விதமாக "ஆரம்பம் வெளிவந்த இரண்டே மாதங்களில் "வீரம் படத்தை வெளியிட்டு, தன் பலத்தை காட்டியிருக்கிறது! 

இதுநாள் வரை "சிட்டிலுக்கில் வந்த "அல்டிமேட் ஸ்டார் இந்தப்படத்தில் வேஷ்டி சட்டையில், முரட்டு கிராமத்து இளைஞனாக, பாசமுள்ள அண்ணனாக பட்டையை கிளப்பி இருக்கிறார்! பலே, பலே!!

கதைப்படி, அஜீத்குமார் ஒட்டன்சத்திரம் விநாயகமாக, விதார்த், "அன்பு பாலா உள்ளிட்ட 4 தம்பிகளுக்கு அண்ணனாக, அந்த ஊரில் அடிதடி, வம்பு, வழக்குகளில் ஈடுபடுவர்களை கூட்டிவந்து வீட்டில் விருந்து வைத்து, அதன்பின் வாயிற் கதவை மூடி அவர்களை நையப்புடைத்து அனுப்பும் நல்லவர்! 

சிறுவயதில் பெற்றோரை இழந்து 4 தம்பிகளுடன், டீ கிளாஸ் கழுவுவதில் வாழ்க்கையை தொடங்கியவர் விநாயகம் அஜீத், என்றாலும் பல லாரிகளுக்கு முதலாளி, ரைஸ்மில் ஓனர், விவசாயம், வெள்ளாமை, காய்கறி வியாபாரம் என தன் உழைப்பால் தன் குடும்பத்தை தூக்கி நிறுத்தி, ஊரில் பெரும் புள்ளியாக வலம் வரும் அஜீத்தும், அவரது 4 சகோதரர்களும் திருமணம் செய்து கொள்வதில்லை எனும் உறுதியுடன் வாழ்கின்றனர். 

காரணம், பொண்டாட்டி வந்தால் ஒற்றுமையான சகோதரர்களான தங்களை பிரித்து விடுவார்கள் எனும் நியாயமான பயம்தான்! ஆனாலும், விதார்த்துக்கும், பாலாவுக்கும் அண்ணன் அஜீத்துக்கு தெரியாமல் தலா ஆளுக்கு ஒரு காதல் கண்ணாமூச்சி காட்டுகிறது. 

இவர்களின் அடிதடி வழக்குகளுக்கு ஜாமின் வாங்கிதரும் பெரிய வக்கீலா(!)ன "பெயில் பெருமாள் சந்தானம், தன் காதலையும் உதறிவிட்டு இவர்களது சகோதர ஒற்றுமை கண்டு மெய்சிலிர்த்து அஜீத்தின் 5-வது தம்பியாக ஐயக்கியமாகிறார்.

சந்தானம் கோர்ட்டில் இருப்பதை விட இவர்களுடன் சுற்றும் நேரம் ஜாஸ்தி என்பதால் அவருக்கு விதார்த், பாலாவின் அஜீத்துக்கு தெரியா காதல் தெரிய வருகிறது. அதுமுதல் தன் காதலையும் புதுப்பித்துக் கொள்ளும் "பெயில் சந்தானம், 4 சகோதரர்களுடனும் சேர்ந்து தங்கள் காதலுக்கு அஜீத் சம்மதிக்க வேண்டுமென்றால், அஜீத்தையும் ஒரு பெண்ணின் காதலில் தள்ள வேண்டுமென களம் இறங்குகிறார். 

அதற்கு ஏதுவாக அஜீத்தின் சிறுவயது நண்பரும், கலெக்டருமான ரமேஷ் கண்ணாவின் ஐடியாபடி, அஜீத்துக்கு பள்ளி பருவத்தில் பிடித்த பெண்ணின் பெயரான 'கோப்பெருந்தேவி' எனும் பெயரில் ஒரு அழகிய இளம் பெண்ணை அஜீத்முன் நிறுத்தினால் எல்லாம் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும், அஜீத்துக்கும் காதல் பிறக்கும் எனும் யோசனை வருகிறது. 

அதன்படி புராதான கோயில் சிற்பங்களை அழகுப்படுத்தும் புனிதப்பணி செய்யும் கோப்பெருந்தேவி தமன்னா, அந்த ஊர் கோயில் சிற்பங்களை சீரமைக்க தன் அழகிய இளம் பெண்கள் நிரம்பியகுழுவோடு அங்கு வரவழைக்கப்படுகிறார். 

ஊர் பெரும்புள்ளி அஜீத்தின் மைனஸ் பாயிண்ட்டுகளை எல்லாம் ப்ளஸ் பாயிண்ட்டாக காட்டி அஜீத் மீது தமன்னாவுக்கு காதல் வர வைக்க முயற்சிக்கின்றனர் சந்தானம் சகோதரர்கள். 

தமன்னாவுக்கு அஜீத் மீதும், அஜீத்துக்கு தமன்னா மீது ஒரே நேரத்தில் காதல் வருகிறது. ஆனால் அந்த காதலுக்கு, அஜீத் அது வரை சம்பாதித்து வைத்திருக்கும் வில்லன் கோஷ்டியும், தமன்னாவின் அப்பாவும் அகிம்சாவாதியுமான நாசரின் விரோதிகளும் சேர்ந்து உலை வைக்க பார்ப்பதுடன், அஜீத்-தமன்னா ஜோடியையும் அவர்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டவும் களம் இறங்குகின்றனர். 

அவர்களது சதியில் இருந்து அஜீத்-தமன்னா ஜோடியும், அவர்களது காதலும் தப்பித்து கரை சேர்ந்ததா? கரம் சேர்ந்தனரா.? என்பது வித்தியாசமும், விறுவிறுப்புமான திக், திக் க்ளைமாக்ஸ்!

"அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார், ஒட்டன்சத்திரம் விநாயகமாக ஆக்ஷன், காமெடி, காதல், சென்டிமெண்ட் என்று வழக்கம் போலவே அடி தூள் பரத்தியிருக்கிறார். 

அதிலும் அந்த டிரையின் பைட் சூப்பர்ப்! "எல்லோரும் சந்தோஷமா திருப்தியா சாப்பிட்டு போங்க... என அஜீத் என்ட்ரியாகும் ஷாட்டில் பேசும் "பன்ச் வசனத்தில் தொடங்கி, "நம்ம கூட இருக்கிறவங்களை நாம் ஒழுங்காபார்த்துக்கிட்ட நம்மளை நமக்கு மேல இருப்பவன் நல்லா பார்த்துப்பான்... என்றும், "எவ்ளோ பேரு இருக்காங்கறது முக்கியமல்ல... யாரு இருக்காங்ககிறது தான் முக்கியம்... என்றும், "யாருடா அந்த 5வது ஆளு... யாருக்கும் அஞ்சாத ஆளு... என்றும் இடையிடையே அஜீத்தும், அவரை சார்ந்தவர்களும் பேசும் வசனங்களில் எல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. 

அதிலும் க்ளைமாக்ஸில் இந்த குடும்பம் உனக்கு என்ன செய்தது? என அஜீத்தை அடித்துபோட்டு வில்லன் அதுல் குல்கர்னி கேட்கும்போதும், இந்த குடும்பம் என்ன செய்யல்ல...?! "அம்மாவா சோறு போட்டாங்க, அப்பாவா சொல்லி கொடுத்தாங்க... என மேலும் பேசும்போது தியேட்டரில் தல, நன்றிகாட்ட, நல்லது செய்ய உனக்கு ஈடு இல்ல தல என ரசிகர்கள் கூக்குரலிடுகின்றனர். 

"பில்லா, "மங்காத்தா, "ஆரம்பம் மாதிரி டான் கேரக்டர்களுக்கு அஜீத்தின் "சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி ஸ்டைல் ஓ.கே., கிராமத்து இளைஞராக தமன்னாவை காதலிக்கும் பாத்திரங்களிலும் சால்ட் பெப்பர் லுக்கா என ரசிகர்கள் சில இடங்களில் சலிப்படையவும் செய்கின்றனர்.

தமன்னா, கோப்பெருந்தேவியாக அவர் புனரமைக்கும் சிலைகள் மாதிரியே சிலிர்க்க வைக்கிறார். 

சந்தானம் 'பீடீ ஊதுன வாய்க்கும், பீப்பி ஊதுன வாய்க்கும் எங்களுக்கும் வித்தியாசம் தெரியாதா?' என்று சீனுக்கு சீன் அஜீத்துக்கு ஈக்குவலாக "பன்ச், அதுவும் காமெடி பன்ச் அடித்து தியேட்டரில் மேலும் விசில் சப்தத்தை கிளப்புகிறார். 

அதிலும், க்ளைமாக்ஸில் அஜீத்-தமன்னா திருமணத்தை சந்தானம் நடத்தி வைத்து ""எவ்வளவு தான் "முரட்டுகாளையா இருந்தாலும், பொண்டாட்டி முந்தியை பிடித்ததும் அப்படியே மாறிடுவிங்களே... என அஜீத்தையும், "வீரம் - முரட்டுகாளை என்பதையும் தெரிந்தோ தெரியாமலோ குத்திக்காட்டும் இடத்தில் தியேட்டர் அதிர்கிறது.(அதிர்ச்சியிலா, சிரிப்பிலா?)

விதார்த், பாலா உள்ளிட்ட அஜீத் சகோதரர்கள், அதுல்குல்கர்னி உள்ளிட்ட வில்லன்கள், நாசர், சுமித்ரா, ஒரே காட்சியில் வரும் மறைந்த பெரியார்தாசன், அஜீத்வீட்டு எடுபிடி அப்புக்குட்டி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் பரவாயில்லை, ஆனாலும் மனதில் நிற்கவில்லை என்பது மைனஸ்! 

வெற்றியின் ஒளிப்பதிவு வீரத்திற்கு கிடைத்த வெற்றி. 

சிவாவின் இயக்கத்தில் ஒட்டன்சத்திரம் பெரும்புள்ளி விநாயகம் அஜீத், தமன்னாவின் அப்பாவிடம் காதல் சம்மதம் பெற, குடும்பத்துடன் 7 நாட்கள் அங்கேயே ஹால்ட் அடிப்பதும், அவர்களது எதிரிகளை பந்தாடுவதும், ஒட்டன்சத்திரத்தில் அஜீத்துக்கு வேலை இல்லாதது மாதிரி சற்றே லாஜிக்காக இடிக்கிறது!

மற்றபடி, அஜீத்தின், "வீரம் - ஈரம் - சூரம் - தரம்!

ஜில்லா படத்தில் 10 நிமிடம் குறைப்பு



விஜய் நடித்த ஜில்லா படத்தில் 10 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி கூறியுள்ளா. 

ஜில்லா படம் 3 மணிநேரம் 5 நிமிடம் கொண்டது; இதில் தற்போது 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது; படத்தின் நீளம் கருதி இந்த முடிவு எடக்கப்பட்டுள்ளது; 

பொதுவாக எல்லா வருடமும் பொங்கலுக்கு நிறைய படங்கள் ரிலீஸ் ஆகும்; ஆனால் இந்த முறை 2 படம் மட்டுமே ரிலீஸ் ஆகி உள்ளது; 

அதனால் 2 படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது; ஜில்லா படம் ஓப்பனிங் ஷோவிலேயே நல்ல கலெக்ஷன் பெற்றுள்ளது; 

இவ்வாறு பிரஸ் மீட்டின் போது தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியும், ஜில்லா படத்தின் இயக்குனர் நேசனும் தெரிவித்துள்ளனர்.

ஜெயிக்கப்போவது ஜில்லாவா? வீரமா? - கவுண்டவுன் ஸ்டார்ட்


எம்.கே.டி.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா ரசிகர்களின் மோதலில் தொடங்கியது கருப்பு வெள்ளை பொங்கல். எம்.ஜி.ஆர், சிவாஜியில் தொடர்ந்தது ஹாட் பொங்கல். 

சினிமா கலர் பூசிக்கொண்ட பிறகு ரஜினி, கமல் என அந்த பொங்கல் கொஞ்சம் காரசாரமாகவே பொங்கியது. இப்போது விஜய், அஜீத் பொங்கல். அந்த கவுண்டவுன் நாளை முதல் ஸ்டார்ட். போட்டிக்கு முன்னால் சின்ன ட்ரைய்லர் ஓட்டிப்பார்க்கலாமா...

* "விஜய்" மூன்றெழுத்து, "அஜீத்" மூன்றெழுத்து, "ஜில்லா" மூன்றெழுத்து, "வீரம்" மூன்றெழுத்து, இருவரும் எதிர் பார்க்கும் "வெற்றி" மூன்றெழுத்து. எப்பூடி.

* விஜய், மோகன்லால் என்ற கேரளத்து களரி வீரனோடு களம் இறங்குகிறார். அஜீத் விதார்த், பாலா, முகிஷ், சுஹைல் என்ற சகோதரர்களின் துணையோடு களம் இறங்குகிறார்.

* விஜய்க்கு கள்ளசிரிப்பழகி காஜல் அகர்வால் ஜோடி. அஜீத்துக்கு தகதக தக்காளி தமன்னா ஜோடி. இரண்டு பேருமே நடிப்பிலும், அழகிலும் "சபாஷ் சரியான போட்டி" என களத்தில் ஆடிக் கொண்டிருப்பவர்கள்.

* விஜய்யை இயக்கி இருப்பவர் முருகா என்ற ஒரு சுமாரான படத்தை இயக்கிய நேசன். அஜீத்தை இயக்கியவர் தெலுங்கில் இரண்டு ஹிட் படங்களையும், தமிழில் சிறுத்தை என்ற ஹிட் படத்தையும் இயக்கிய சிவா.

* இரண்டு பேரையுமே சண்டை போட வைத்திருப்பவர் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா. "இரண்டு பேருமே டூப் போடாமல் சண்டை போட்டிருக்கிறார்கள். விஜய்யும், மோகன்லாலும் போடும் சண்டையில் இருவரின் இமேஜையும் காப்பாற்றி இருக்கிறேன்" என்றும், "அஜீத் போடும் சண்டையில் அனல் பறக்கும், காலில் இருக்கும் பிரச்னையை பொருட்படுத்தாமல் புகுந்து விளையாடி இருக்கிறார்" என்று பேட்டிகளை தட்டிவிட்டு சேம் சைட் கோல் போட்டிருக்கிறார் சில்வா.

* இரண்டு கதைகளுமே இந்த நிமிடம் வரைக்கும் படு சீக்ரெட். கசிந்த வரையில் கதை இதுதான். மோகன்லாலின் வளர்ப்பு மகன் விஜய், வளர்ப்பு மகன் என்று தெரியாமல் அப்பா மீது உயிரையே வைத்திருப்பார். 

மதுரையில் பெரும் புள்ளியான மோகன்லாலுக்கு எந்த பிரச்னை என்றாலும் அவருக்கே தெரியாமல் மகன் விஜய் முன்னால் நின்று முடித்து வைப்பார். மகனின் அசுர வளர்ச்சியும், செல்வாக்கும் அப்பா மோகன்லாலுக்கு பிடிக்காது. ஏன் பிடிக்காது என்றால். 

தனது அடுத்த வாரிசாக அவர் தன் சொந்த மகன் மகத்தை கொண்டு வர நினைக்கிறார். அதற்கு விஜய் தடையாக இருப்பாரோ என்று கருதி தனது அஸ்திரங்களை விஜய்க்கு எதிராக திருப்புவார். 

அது தெரிந்தும் விஜய் கடைசி வரை அப்பாவுக்காகவே உழைப்பார். அதை கடைசியில் உணர்ந்து சொந்த மகனை விட வளர்ப்பு மகன் விஜய்யே சிறந்தவன் என்பதை மோகன்லால் உணர்வார். இது ஜில்லாவோட கதை. 

* கிராமத்து அஜீத்துக்கு நான்கைந்து தம்பிகள். இவர்கள் பண்ணாத பஞ்சாயத்து கிடையாது. அடிக்காத ஆள் கிடையாது. அண்ணனுக்கு ஏதாவது ஒன்று என்றால் தலைகொடுக்கவும், தலை எடுக்கவும் தயங்க மாட்டார்கள் தம்பிகள். 

தம்பிகள் சிலருக்கு காதல் வர... அண்ணனுக்கு கல்யாணம் நடந்தால்தானே தங்களுக்கும் நடக்கும் என்று கருதும் தம்பிகள், அண்ணனுக்கு தமன்னாவை பெண் பார்க்கப்போன இடத்தில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். 

அந்த பிரச்னையை தீர்க்க அண்ணன் போராட. அண்ணனுடன் அண்ணி தமன்னாவை சேர்த்து வைக்க தம்பிகள் போராட கமகம கிராமத்து விருந்து வீரத்தோட கதை.

* ஜில்லாவுக்கு மெலடி கிங் இமான் இசை. வீரத்துக்கு குத்துப்பாட்டு கிங் தேவிஸ்ரீபிரசாத் இசை. பாட்டுல ரெண்டு பேருமே பட்டைய கிளப்பிட்டாங்க. பின்னணி இசையில என்ன பண்ணியிருக்காங்கன்னு படத்துலதான் பார்க்கணும்.

* விஜய்யின் கேரக்டர் பெயர் சக்தி, அஜீதின் கேரக்டர் பெயர் விநாயகம். புராணத்தில் சக்தியின் மூத்த மகன்தான் விநாயகம். ஆனால் சக்தியை விட அதிக சக்தி கொண்டவர் விநாயகம்.

* விஜய்க்கு கிருதாவுடன் இணைந்த சின்ன தாடி கெட்அப். அஜீத் மங்காத்தா, ஆரம்பம் படங்களின் தொடர்ச்சியாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் கெட்-அப். விதவிதமான மார்டன் டிரஸ் விஜய் காஸ்ட்யூம். வெள்ளை வேட்டி சட்டை அஜீத் காஸ்ட்யூம். பாடல்களில் மட்டும் கோட் சூட்.

* விஜய்யுடன் காமெடியில் கலக்குவது சூரி, அஜீத்துடன் காமெடியில் கலக்குவது சந்தானம். எனவே சந்தானம், சூரி போட்டியும் பொங்கலில் பொங்குகிறது.

* இரண்டு படத்திலுமே பாட்டு, பைட்டு, ஆக்ஷன், செண்டிமெண்ட், ரொமான்ஸ், காமெடி என கமர்ஷியல் அயிட்டங்கள் பக்காவாக இருக்கும். இல்லாத ஒரே விஷயம் லாஜிக்.

* ஜில்லாவை தயாரித்திருப்பது வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ். வீரத்தை தயாரித்திருப்பது பாரம்பரியமிக்க நிறுவனமான விஜயா புரொடக்ஷன்.

* இரண்டு படங்களுமே எல்லா ஏரியாவும் விற்று தீர்ந்துவிட்டது. சேட்டிலைட் ரைட்சும் பல கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த நிமிடம் புரட்யூசர்கள் இருவருமே வெரி ஹேப்பி. படத்தை வாங்கியவர்களும், பார்க்கும் ரசிகனும் ஹேப்பியா என்பது இன்னும் 24 மணிநேரத்தில் தெரிந்து விடும்.

* ஜில்லா உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் ரிலீஸ். கேரளாவில் மட்டும் 300 தியேட்டர். வீரம் உலகம் முழுவதும் 1300 தியேட்டர்களில் ரிலீஸ். கேரளாவில் 150 தியேட்டர். இரண்டு படங்களுமே ஜனவரி 19 வரை அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் புக்கிங்.

* எட்டு வருடங்களுக்கு முன்பு வந்த போக்கிரி-ஆழ்வார் மோதலில் ஜெயித்தது போக்கிரி. இப்போது ஜில்லா-வீரம். ஜெயிக்கப்போவது யார்? அல்லது இருவருமா? நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தெரிந்து விடும். 

கவுண்டவுன் ஸ்டார்ட்....!!

மோகன்லாலின் வளர்ப்பு மகனான விஜய்


தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக காலூன்றி 85வது படமாக ஜில்லாவை தயாரித்திருக்கிறார் ஆர்.பி.செளத்ரி. எந்தவொரு படத்தையும் அத்தனை சுலபத்தில் ஓ.கே பண்ண மாட்டார். 

அவரிடம் கதை சொல்லச்சென்றாலே டைரக்டர்களை பிழிந்து எடுத்து விடுவார். அந்த அளவுக்கு ஒரு பவர்புல்லான தயாரிப்பாளர் செளத்ரி.

அப்படிப்பட்டவர் மோகன்லால்-விஜய்யை இணைத்து தயாரித்திருக்கும் படத்திற்காக எத்தனை மெனக்கெட்டிருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா? 

அதோடு இந்த படத்தில் நடித்துள்ள விஜய், தலைவா தோல்விக்குப்பிறகு நடிக்கும் படம் என்பதால் கதை விசயத்தில் அதிக கவனம் செலுத்தினார். 

அதேபோல், மோகன்லால் ஒரு படத்தில் கமிட்டாகிறார் என்றால், அந்த கதையில் வலுவில்லாமல் என்ட்ரி கொடுக்கவே மாட்டார். ஆக, பல ஜாம்பவான்களில் ஆளுமையோடு நேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ஜில்லா.

சூப்பர் குட் பிலிம்சின் பூவே உனக்காக படத்தில் நடித்த விஜய்க்கு ஜில்லா 6-வது படமாகும். மதுரை மண்வாசனையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மோகன்லாலின் வளர்ப்பு மகனாக நடித்திருக்கிறார் விஜய். 

இப்படம் செளத்ரி இதுவரை தயாரித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகியிருக்கிறது. மேலும், பொங்கலுக்கு வெளியாகும் ஜில்லாவை 1000 தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டிருப்பவர்கள், கேரளாவில் மட்டும் 300 தியேட்டர்களில் வெளியிடுகிறார்களாம்.

இப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் மோகன்லால், ஜில்லாவில் நடித்ததற்காக சம்பளமே பெற்றுக்கொள்ளாமல் கேரளா உரிமையை வாங்கியிருக்கிறார். 

மேலும் இதுவரை தனது படங்களுக்கு இல்லாத அளவுக்கு பெரிய பப்ளிசிட்டி செய்து படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். 

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் கேரளாவில் வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதால், ஜில்லா இன்னும் பெரிய அளவில் ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கிறாராம் மோகன்லால்.

தூம் 3 - சினிமா விமர்சனம்



லாஜிக் பார்க்காத மேஜிக் ஆக்ஷ்ன், அமீர்கானின் அற்புத நடிப்பு, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யாவின் விறுவிறு இயக்கம், எச்சில் ஊற வைக்கும் கத்ரீனா கைப்... சப்புக் கொட்ட வைக்கும் பாதாம் பாலாக... தூம் 3

1990... சிகாகோவில் 'தி கிரேட் இண்டியன் சர்க்கஸ்' கம்பெனி நடத்தும் இக்பால் கான் (ஜாக்கி ஷெரப்). அவருடைய அனைத்து கலைகளையும் அறிந்த மகன் ஜாகீர் (அமீர்கான்). 'வெஸ்டர்ன் பாங்க் ஆப் சிகாகோவில் வாங்கிய கடனுக்காக, நெருக்கும் வங்கி அதிகாரி. 

தான் நேசிக்கும் சர்க்கஸ் கம்பெனி மூடப்படப் போவதைக் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் இக்பால். 2013... இளைஞனான ஜாகிர், வெஸ்டர்ன் வங்கியின் ஒவ்வொரு கிளையாக கொள்ளை அடிக்கிறான். 

அதனால் வங்கி திவாலாகிறது. இந்தியாவிலிருந்து வரும் காவல் அதிகாரி ஜெய் தீக்ஷித் (அபிஷேக் பச்சன்), தன் உதவியாளன் அக்பர் அலியுடன் (உதய் சோப்ரா) ஜாகிரை வளைத்து பிடிக்க எடுக்கும் முயற்சிகள் மொத்த கதை. ஜாகிர் பிடிபட்டானா? ஜெய் வெற்றி பெற்றாரா? என்பது க்ளைமாக்ஸ்.

வீரன் ஜாகிராகவும், பலவீன சமராகவும் பட்டையை கிளப்பியிருக்கிறார் அமீர். அம்சமான வளைவுகளுடன் கத்ரீனா வரும்போதெல்லாம், திறந்த வாயை மூட முடியவில்லை ரசிகனால்! 

அபிஷேக்பச்சன், தான் அமிதாப்பின் வாரிசு என்பதை அமர்க்களமாய் நிரூபித்திருக்கிறார். பலே! உதய் சோப்ரா... 'இந்தி' சந்தானம் என்றாலும்... முதல் மார்க் 'ஸ்டண்ட்' மாஸ்டர்களுக்குத்தான். 

ஆரம்ப மோட்டார் சைக்கிள் துரத்தல், அபிஷேக்கின் ஆட்டோ சண்டை, செங்குத்தான வானுயரக் கட்டிடச் சுவர்களின் மேல் அமீர் அசத்தலாக ஓடி வரும் காட்சி என... திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். சபாஷ்!

150 கோடிகளை செலவு செய்திருக்கிறதாம் தூம் 3, 1000 கோடி வசூலானால் ஆச்சர்யமில்லை.

மொத்தத்தில், 'தூம்-3' - 'தூள்'

மூன்று கட்டுகளுடன் ஜில்லாவுக்கு யு சான்றிதழ்


விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா வருகிற 10ந் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் 3 இடத்தில் படத்துக்கு கட் கொடுத்தனர். அந்த கட்டை ஏற்றுக் கொண்டால் யு தவருவதாகவும் இல்லாவிட்டால் யு/ஏ தருவதாகவும் சொன்னார்கள்.

தயாரிப்பாளரும், இயக்குனரும் கட்டுக்கு ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து படத்துக்கு யு சான்றிதழை வழங்கினர். 

படம் ஜாலியா இருந்ததாகவும், இது ஒரு மாஸ் எண்டர்டயிண்மெண்ட் என்றும் படம் பார்த்த தணிக்கை குழுவினர் கருத்து தெரிவித்தனர். 

மூன்று கட்டில் இரண்டு ஆக்ஷன் காட்சியில் வரும் வன்முறையும், ஒரு கட் மதுரை பக்கம் சொல்லப்படும் ஒரு கெட்ட வார்த்தை என்றும் கூறுகிறார்கள்.

யு சான்றிதழ் கிடைத்திருப்பதால் வரிவிலக்கு கமிட்டிக்கு விண்ணப்பித்துள்ளனர். 

நாளை (ஜனவரி 3)வரிவிலக்கு குழுவினர் படத்தை பார்க்கிறார்கள். தமிழ் நாட்டில் சுமார் 600 தியேட்டர்களிலும் கேரளாவில் 300 தியேட்டர்களிலும் வெளியிட இருக்கிறார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...