இதுநாள் வரை எத்தனை தமிழ்படங்கள்...?

தமிழ் சினிமா ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இதுநாள் வரை எத்தனை தமிழ் படங்கள் உருவாகியுள்ளன என்பதை பற்றி புள்ளி விபரம் இதோ...

தமிழ் சினிமா தயாரிப்பு பணி தொடங்கிய 1931 முதல் 2001 வரை தயாரிக்கப்பட்ட நேரடி தமிழ்படங்கள் : 4002

2002 முதல் 2011 வரை தயாரிக்கப்பட்ட நேரடி தமிழ் படங்கள் : 1119

மொத்தத்தில் 1931 முதல் 2011 வரை வெளியாகி இருக்கும் நேரடிபடங்கள் படங்கள் : 5121

1931 முதல் 2010 வரை தணிக்கை செய்யப்பட்டு வெளிவராத படங்கள் : 210

2011ல் தணிக்கை செய்யப்பட்டு வெளிவர இருக்கும் படங்கள் : 57

மொத்தத்தில் 1931 - 2011 வரை தயாரிக்கப்பட்ட மொத்த படங்கள் : 5388 என்கிறார் தமிழ் திரைப்பட புள்ளி விபர தொகுப்பினை கடந்த 58 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியீட்டு வரும் பத்திரிக்கையாரும், மக்கள் தொடர்பாளருமான பிலிம் நியூஸ் ஆனந்தன்.

எல்லாம் சரி வெளிவந்த 5121 படங்களில் நிஜமான வெற்றி படங்கள் எத்தனை என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!

தனுஷின் டாப் 5 தேங்க்ஸ் லிஸ்ட்

இன்றளவில் தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களில் டாப் ஸ்டார் தனுஷ் தான், உபயம் "ஒய் திஸ் கொலவெறி". 2011ம் ஆண்டு தனுஷ் தனது திரையுலக வாழ்க்கையின் பொற்காலம் என்று கூட எழுதி வைக்கலாம்.


அந்த அளவுக்கு பாராட்டும், புகழும் கிடைத்துள்ளது அவருக்கு.


இந்நிலையில் தனுஷ், விடைபெறவிருக்கும் 2011ம் ஆண்டில் தனக்கு பல்வேறு வெற்றிகளைத் தேடி தந்தமைக்காக தான் நன்றிக்கடன் பட்டிருக்கும் டாப் 5 நபர்களை குறிப்பிட்டு, தேங்க்ஸ் லிஸ்ட்டை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு :


* தனுஷின் முதல் மரியாதை அவரது பெற்றோருக்குத் தானாம், அவர்களது அளப்பறிய அன்பு தான் மிகப்பெரிய உந்துதலாக இருந்ததாக ட்விட்டியிருக்கிறார்.


* 2வது இடம் ரசிக பெருமக்களுக்காம், வாஸ்தவம் தான்.


* மூன்றாவது நன்றி, இறைவனுக்கு உரித்தாகுக என கூறியிருக்கிறார்.


* நான்காவது இடம் பத்திரிகை, டி.வி., மீடியா மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்காம். ஆமா.. ஆமா... நியாயப்படி முதலிடம் கொடுத்திருக்க வேண்டும்.


* ஒகே... தி லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட் இஸ் யார் தெரியுமா, இயக்குனர்கள் செல்வராகவன் அண்டு வெற்றிமாறன்.


சரி பட்டியல் எல்லாம் ஓ.கே., உங்களுக்கு கொலவெறி பாடல் பாட வாய்ப்பு கொடுத்த உங்க மனைவி ஐஸ்வர்யாவை மறந்து விட்டீர்களே. ஒய் திஸ் கொலவெறி.....? தனுஷ்!

துப்பாக்கி படத்தில் கெட்டப் மாற்றுகிறார் விஜய்

துப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் தன்னை மாற்றிக் கொள்ளப் போகிறாராம் நடிகர் விஜய். எல்லா படத்திலும் ஒரே கெட்டப்பில் நடிக்கும் நடிகர் என்ற பெயர் விஜய்க்கு உண்டு.


விஜய்யும், கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர். வசீகரா படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார்.


காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டும் மாற்றியுள்ளார். மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.


இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் துப்பாக்கி படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளாராம் விஜய்.


இந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்கு கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறார்.


படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குனருக்கு ஒத்துழைத்து வருகிறாராம்.


மும்பையில் விறுவிறுப்பாக இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படம் முடிந்த கையோடு கவுதம் மேனன் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்.

முதன்முறையாக ஹாரிஸ் உடன் இணைகிறார் செல்வராகவன்

செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் முதன்முறையாக இசையமைக்க இருக்கிறார். டைரக்டர் செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர் யுவன் சங்கர் ராஜா.

இவர்களது கூட்டணியில் வெளிவந்த காதல் கொண்டேன், 7ஜி ரெயிண்போ காலணி, புதுப்பேட்டை போன்ற படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இடையில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட ஜீ.வி.பிரகாஷ் குமாரை இசையமைக்க வைத்தார் செல்வா.

இந்நிலையில் மயக்கம் என்ன படத்திற்கு பிறகு, இரண்டாம் உலகம் படத்தை கையில் எடுத்திருக்கிறார் செல்வா.

இதில் நாயகனாக ஆர்யாவும், நாயகியாக அனுஷ்காவும் நடிக்கின்றனர். பி.வி.பி.சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்தபடத்திற்கும் ஜீ.வி.தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹாரிஸை இசையமைக்க வைத்திருக்கிறார் செல்வா.

இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், இரண்டாம் உலகம் படத்திற்கு ஹாரிஸ் இசையமைப்பது உண்மைதான். அவருடன் இணையும் முதல்படம் இது.

சிறுவயதில் இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எங்களது இந்த கூட்டணி ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றார்.

மிஷ்கின் என்றால் அலறும் நட்சத்திரங்கள்

இயக்குனர் மிஷ்கின் என்றாலே அலறுகிறார்கள் கோலிவுட் ஹீரோயின், ஹீரோக்கள் பலரும்! அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்., தனது "அஞ்சாதே" படத்தில் ஹீரோ பிரசன்னாவை வில்லனாக்கியவர்., மற்றொரு படத்தில் இனியாவை சிஸ்டர் கேரக்டரில் இருட்டடிப்பு செய்திருந்தார்.

இப்பொழுது, தான் நாயகராக அறிமுகம் செய்த நரேனை "முகமூடி" படத்தில் ஹீரோ ஜீவாவுக்கு வில்லனாக்கி இருக்கிறார்!

நரேனும் நன்றிக்கடனுக்காக நடிக்க முடியாது என்று கூற முடியாது என, மிஷ்கனை மனதுக்குள் சபித்தபடி வில்லனாக நடித்த வருகிறாராம்.

இப்பொழுது சொல்லுங்கள் இயக்குனர் மிஷ்கின் என்றாலே ஏன்? நம்மூர் ஹீரோ - ஹீரோயின்கள் பயப்படமாட்டார்கள் பாவம்!

டி.ஆரின் ஒஸ்தி ஆசை நிராசை ஆன கதை

தன் மகன் எஸ்.டி.ஆர் அலைஸ் சிம்பு நடித்து சமீபத்தில் வெளிவந்த "ஒஸ்தி" படத்தை அடித்து பிடித்து., அடம் பிடித்து வாங்கி வெளியிட்டதன் மூலம் டி.ஆருக்கு சுமார் பத்து கோடி ரூபாய்க்கு மேலாக நஷ்டமாம்.

கிட்டத்தட்ட மிரட்டாத குறையாக ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.22 கோடிக்கு ஒஸ்தி படத்தை வாங்கி தனது குறள் டி.வி.,கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளியிட்டார் டி.ஆர்.

படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தாலும் கூட்டம் இல்லாமல் வாடிக் கொண்டிருப்பதால் வசூல் இல்லையாம்! இதனால் ரூ.பத்து கோடி நஷ்டத்தில் டி.ஆர்., தவிக்கிறாராம்.

படத்தை அவருக்கு விற்ற ரிலையன்ஸ் நிறுவனம் இப்படத்தின் சிட்டி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வினியோக உரிமையை 22 கோடிக்கு டி.ஆருக்கு கொடுத்து விட்டு. சேட்டிலைட் உரிமையை 6 கோடிக்கும், எஃப்.எம்.எஸ்., எனப்படும் வெளிநாட்டு உரிமையை 3 கோடிக்கும் வேறு வேறு பார்டிகளிடம் கொடுத்து சுமார் ஐந்தாறு கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளது.

ஒஸ்தி படத்தை முதலில் தயாரித்த பாலாஜி பில்ம் மீடியா ரமேஷூக்கு ஐந்து கோடி லாபம் இருக்கும் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாததால் டி.ஆரோ அம்மாடி, அய்யோடி, ஆத்தாடி... என புலம்பி வருகிறாராம் பாவம்! டி.ஆர்., பேராசைக்கு கிடைத்த நெத்தியடி., ரூ. 10 கோடி நஷ்டம்!

கடமையுணர்வு மிக்கவர் நடிகர் விஜய்

விஜய் ரொம்பவே கடமை உணர்வு மிக்க நடிகர் என்று நண்பன் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் டைரக்டர் ஷங்கர் பேசினார். இந்தியில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமான 3-இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்காக உருவாகியிருக்கும் படம் நண்பன்.

இப்படத்தின் நாயகர்களாக விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் நடிக்க, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சில தினங்களுக்கு முன்னர் கோவையில் பிரம்மாண்டமாக நடந்தது. படத்தின் ஆடியோ சி.டி.யை விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட, நடிகர் பிரபு பெற்று கொண்டார்.

விழாவில் பேசிய டைரக்டர் ஷங்கர், சூட்டிங் ஒன்றிற்காக மும்பை சென்றேன். அப்போது தான் 3-இடியட்ஸ் படத்தை பார்த்தேன். படத்தை பார்த்து வெளிவந்த அடுத்த நிமிடமே இதே ரீ-மேக் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

அதன் வெளிபாடு தான் நண்பன். 3-இடியட்ஸ் படம் போலவே, நண்பன் படமும் நன்றாக வந்துள்ளது. படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

அதிலும் விஜய்யின் நடிப்பும், ஈடுபாடும் பிரமாதம். ரொம்ப கடமையுணர்வு மிக்க நடிராக விஜய் இருக்கிறார். எல்லோருக்‌குமே விஜய்யை பிடிக்கும். அப்படியே பிடிக்காத சிலருக்கும், இந்த நண்பன் படத்தை பார்த்தால் விஜய்யை ரொம்ப பிடிக்கும்.

சிவாஜி, எந்திரன் படங்களை போல நினைத்துக் கொண்டு நண்பன் படத்தை பார்க்க வரவேண்டாம். எந்திரன் படம் போன்று கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. ஆனால் நண்பனில் நல்ல கதை உள்ளது என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசுகையில், ஷங்கரின் முதல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தாலும் என்னால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

தற்போது அவரது இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. படத்தில் என்னுடன் நடித்துள்ள ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் எனது நண்பர்கள். சூட்டிங் ஸ்பாட்டில் ஜீவா கலகலப்பூட்டுவார். சோகமான காட்சிகளை சீரியசாக நடித்துக் கொண்டிருப்போம்.

அப்போதும் அவர் கலகலப்பூட்டுவார். என்னால் எந்த நேரத்திலும் சிரிப்பை அடக்க முடியாது. ஜீவாவின் கலாட்டாவை சிரித்து ரசித்தேன் என்றார்.

விஜய் போட்ட கண்டிஷனும் ; கணக்கும்

இதுநாள் வரை எந்த ஒரு தமிழ்ப்படத்தின் இசை வெளியீடும் சென்னையில் தான் எனும் நிலையை "வேலாயுதம்" படத்தின் ஆடியோ வெளியீட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்தி காட்டினார் விஜய்.

தற்போது ஷங்கரின் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் "நண்பன்" படத்தின் ஆடியோ வெளியீட்டை கோவையில் இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நாளை (டிசம்பர் 23ம்) தேதி, மாலை 5 மணிக்கு மேலும் பிரமாண்டமாக நடத்தி கோலோச்ச இருக்கிறார்!

ஷங்கரின் இயக்கத்தில் "நண்பன்" திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுமே இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை கோவையில் நடத்த வேண்டும் என்பது தான் விஜய் போட்ட ஒரே கண்டிஷனாம்!

மதுரை, கோவை, அடுத்து திருச்சி, திருநெல்வேலி அப்புறம் இளையதளபதியின் அரசியல் பிரவேசம் தான் என குஷியில் இருக்கிறது விஜய் ரசிகர்கள் வட்டாரம்!

ஆடியோ ரிலீஸ் மூலம் அரசியல் பிரவேசம் கணக்குப் போடும் நடிகர் இவராகத்தான் இருக்கமுடியும் என சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறதாம்!! வெல்டன் விஜய்!!!

லிங்குசாமி தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம்

டைரக்டர் லிங்குசாமி தயாரிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பிரமாண்ட படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படம் முடிந்ததும் புதிய படத்துக்கான வேலைகளில் இறங்கப் போகிறாராம் கமல்ஹாசன்.


கமல் ஹாஸன் இப்போது தனது மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தில் பிஸியாக இருந்தாலும், அடுத்தடுத்த தனது படங்களுக்கான ஸ்கிரிப்ட்டுகளை கேட்டு வருகிறார்


கமலிடம் தற்போது இரு இயக்குனர்களின் ஸ்கிரிப்டுகள் உள்ளதாகவும், இவற்றில் எதை முதலில் அவர் ஓகே செய்வார் என இரு இயக்குனர்களும் காத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த இருவர் இயக்குனர் ஷங்கர் மற்றும் லிங்குசாமி.


லிங்குசாமியின் ஸ்கிரிப்டுக்கு கமலிடமிருந்து இதுவரை எந்த ரீயாக்ஷனும் இல்லையாம். ஆனால் ஷங்கரின் கதை பிடித்திருப்பதாக கமல் கூறியுள்ளாராம்.


எனவே லிங்குசாமி இப்போது வேட்டை முடிந்ததும், விஷாலை வைத்து படம் பண்ணப் போகிறாராம். அதே நேரம் கமல் படத்திலும் அவர் இருப்பாராம்.


எப்படி? ஒரு தயாரிப்பாளாராக. ஷங்கர் இயக்க, கமல் நடிக்க, லிங்குசாமி தயாரிக்கக் கூடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

இறுதிகட்டத்தில் அஜித்தின் பில்லா 2

அஜித்தின் பில்லா பார்ட் 2 படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அஜித் நடித்த பில்லா படம், கடந்த 2007ல் ரிலீசானது. இதில் நயன்தாரா, நமீதா ஆகியோர் அஜித் ஜோடியாக நடித்ததுடன், போட்டி போட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்தனர்.

டைரக்டர் விஷ்ணுவர்த்தன் இயக்கினார். இப்படம் பழைய பில்லா படத்தின் ரீமேக் ஆகும். இதன் இரண்டாம் பாகத்தை பில்லா 2 என்ற பெயரில் படமாக்க அஜித் விரும்பினார்.

அதன்படி இயக்குனர் சக்ரிடோலட்டி இதற்கான கதையை உருவாக்கினார். இவர் கமலஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தை இயக்கியவர்.

தூத்துக்குடி கடற்கரையோரம் பிறந்து வளர்ந்து ஒருவன் சர்வதேச கடத்தல் தாதா ஆவதுபோல் கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்தது. தற்‌போது கடைசி கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது.

மொத்தம் 93 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்து பாடல் மற்றும் டிரைலர் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.

இறுதிகட்டத்தில் இருக்கும் பணிகளை முடித்ததும், ஓரிரு மாதங்களில் படம் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் ஸ்டைலில் ஷாரூக் கான்

பரமசிவம் படத்தில் நடிகர் அஜித் தோன்றிய ஸ்டைலில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தோன்றவுள்ளார். தற்போது ஷாரூக், டான்-2 படத்தில் நடித்து வருகிறார்.

பில்லா படத்தின் தழுவல் என்று கூறப்படும் இந்த படத்தில் ஷாரூக், அஜித்தின் ஹேர் ஸ்டைலை வைத்திருக்கிறாராம்.

இந்த படத்தில் ஷாருக்கானின் ஸ்டில்களை பார்த்தவர்களுக்கு இந்த ஹேர் ஸ்டைலை எங்கேயோ பார்த்த மாதிரி தோன்றும்.

ஆனால் அஜித் ரசிகர்களுக்கு மட்டும் சட்டென்று விளங்கியிருக்கும்.

இந்த படத்தில் ஷாருக்கானின் கெட்டப்பும், ஹேர் செட்டப்பும் பரமசிவன் படத்தில் ஒரு அஜீத் வருவாரே, அவரை போலவேதான் இருக்கும்.

பரமசிவன் படத்தை யதேச்சையாக கவனித்த ஷாருக், தனது மேக்கப் மேன் அனில்பெம் கிரேக்கரை அழைத்து, அப்படியே அச்சு அசலாக அந்த ஹேர் ஸ்டைல் வேண்டும் என்று கேட்டாராம்.

ஷாரூக்கானின் ஆசைப்படி அதே ஹேர் ஸ்டைல் கொடுத்துள்ளார் மேக்கப் மேன்.

திருட்டுக் கதையில் குள்ள நடிகர்

கடந்த தீபாவளிக்கு ஜெயன்ட் நிறுவன தயாரிப்பில், முருக இயக்குனர் இயக்கத்தில், குள்ள நடிகர் நடித்து வெளிவந்து, தமிழினத்திற்கே பெருமை சேர்த்து விட்டதாக மிகப் பெரிய பில்ட் அப் கொடுத்து, பறைசாற்றப்பட்டு வரும் அந்த படத்தின் கதை முருக இயக்குனரின் அறிவில் உதித்த கதையில்லையாம்.

இந்தக் கதை கோலிவுட்டில் வறுமையில் வாடி இன்னமும் பொறுமை காக்கும் ஒரு உதவி இயக்குனரின் கதையாம்! இது பற்றிய தகவல்கள் தான் இப்போது கோலிவுட்டை குலுக்கியும் கலக்கியும் வருகிறது.


கதை திருடப்பட்டது எப்படி?

தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரிடம் ஒரு கதை சொல்லி பட வாய்ப்பு பெற போயிருகு்கிறார் தங்கர்பச்சானின் உதவியாளர் கோபி., அவரிடம் கதை கேட்ட தயாரிப்பாளர் சுந்தர், இந்தக் கதையை ஜெகனிடம் சொல்லுங்கள் என்றிருக்கிறார், மரிக்கொழுந்து படத்தை இயக்கிய ஜெகன் அப்பொழுது விஸ்வா சுந்தரின் கதை கேட்பாளர்.

( தற்போது முருக இயக்குனரின் கதை கேட்பாளர் கம் உதவி இயக்குனர்). உடனடியாக ஜெகனிடம் அந்த கதையைச் சொன்ன கோபியிடம் வேறு ஏதும் கதை இருக்கிறதா என விளையாட்டாக ஜெகன் கேட்க., கோபியும் பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணுவதென்றால் தன் வசம் இருந்த புத்த துறவி பற்றிய கதையை பிரமாண்டமாக எடுப்பதென்றால் எடுக்கலாம் எனக்கூறி டைட்டிலுடன் சொல்லி இருக்கிறார்.

கதையை ஊம்... கொட்டி கேட்ட ஜெகன் சரி தகவல் சொல்லி அனுப்புகிறேன் எனக்கூறி கோபியை அனுப்பி வைத்துள்ளார்.

இது நடந்த சில மாதங்களில், விஸ்வாஸ்சுந்தரின் படத்திட்டம் ஒரு சில காரணங்களால் அப்பொழுது கைவிடப்பட அங்கிருந்து வெளிவந்த ஜெகன் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பதால், முருக இயக்குனரின் ஆஸ்தான கம்பெனி கதை கேட்பாளர் ஆகிவிட்டார்.

ஜெகன் ஒருநாள் பேச்சுவாக்கில் முருக இயக்கனரிடம் அந்தத் துறவி கதையைச் சொல்ல, அந்த இயக்குனர் அதிகாலை 4 மணிக்கு கோபியிடம மொத்த கதையையும் கேட்டுவிட்டு அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் படமாக்கிவிட்டார்.

தனக்கு "பாக்ஸ் ஆபீஸ்-ல்" இருந்து படம் கிடைக்கும் என காத்திருந்த கோபி ஏமாந்துவிட்டார். இதை எல்லாம் காட்டிக்கொள்ளாமல் துறவி பற்றிய அந்தக் கதையை தானே கண்டுபிடித்தது போல பத்து கோடி சம்பளத்தில் படமாக்கி கோபிக்கு பட்டை நாமம் சாத்தி விட்டாராம் பாவம்!

திருட்டுக்கதை பற்றிய விஷயம் குள்ள நடிகருக்கும், ஜெயன்ட் தயாரிப்பாளருக்கும் தெரியுமா?!

விஜய்யை வம்புக்கு இழுக்கும் பாரதிராஜா

ஊழலுக்கு எதிராக டில்லி வரை சென்ற நடிகருக்கு, முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை பற்றி எதுவும் தெரியாதா...என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கியுள்ளார் டைரக்டர் பாரதிராஜா.

தமிழ்நாட்டிலோ அல்லது தமிழர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றாலோ உடனே தமிழ் திரையுலகத்தினரும் குரல் கொடுப்பார்.

அந்த வகையில் இப்போது தமிழ்நாட்டையை உலுக்கி கொண்டு இருக்கும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திரையுலகினர் யாரும் குரல் கொடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னணி ஹீரோ ஒருவரை பற்றி அதிரடியாக விமர்சனம் செய்து, ஒரு பெரும் புயலை கிளப்பியிருக்கிறார் டைரக்டர் பாரதிராஜா.

பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் பாரதிராஜா, ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே டில்லியில் போராட்டம் நடத்தியபோது, இங்கே தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு கலைஞன், விமானம் ஏறி டில்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஏன் சம்பந்தப்பட்ட அந்த கலைஞனுக்கு இங்கே தேனியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு துடிக்கும் தமிழன், அவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது அந்த நடிகருக்கு தேனிக்கு செல்லும் வழிதான் தெரியாதா? என்று கடுமையாக சாடியுள்ளார்.

பாரதிராஜா இப்படி கடுமையாக சாடியிருக்கும் அந்த நபர் வேறுயாரும் அல்ல, நடிகர் விஜய் தான். இதற்கு விஜய் என்ன பதில் சொல்ல போகிறாரோ...?

அமலா பாலை காப்பாற்றிய லிங்குசாமி

"வேட்டை" படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியை செம்புலி ஜெகனும், மாடல் ரம்யாவும் தொகுத்து வழங்கினர். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த "வேட்டை" பட ஹீரோயின் அமலா பாலை, மேடைக்கு வருமாறு ஜெகன் அழைத்தார். 


மேடைக்கு அமலா பால் வந்து கொண்டிருக்க... சந்தில் சிந்து பாடும் விதமாக ஜெகன் தன் வழக்கமான பாணியில் கிண்டலை அவிழ்த்து விட்டார். அமலா வரும் போது ஜெகன் " "கேரளாவில் இருந்து தண்ணி கேட்டா கொடுக்க மாட்டேங்குறாங்க, ஆனா அமலா பால் போன்ற நிறைய அழகான பொண்ணுங்கள மட்டும் அனுப்புறாங்க" அப்படின்னு கிண்டலாக சொல்ல, அதை கண்டும் காணாமல் இருந்து விட்டார் அமலா பால்.


அதோடு நிறுத்தினாரா ஜெகன் , மீண்டும் அமலாபாலை பார்த்து நாங்கள் எல்லாம் உங்களுக்கு தண்ணி கொடுத்து, டீக்கடைக்காரங்க டீ போட பால் கொடுத்து வியாபாரத்துக்கு உதவுகிறோம், ஆனால் நீங்கள் தண்ணீர் தர மாட்டேங்குறீங்க என்றார். 


அதுவரை அமைதியாகவே மேடையில் அமர்ந்திருந்த அமலா பால், நான் இந்த படத்தில் நடித்திருக்கிற செலபிரிட்டி, அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன், நீங்கள் பிரஸ் மீட்டில் கேள்வி கேட்கிற மாதிரி கேட்கிறீர்களே என்றார். 


அவருக்கு சப்போர்ட்டாக பேசிய ரம்யா : "ஜெகன் அவுங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களா இல்லையா என்றார்".  பின்னர் ஒரு வழியாக நிகழ்ச்சியும் நடந்தது.இதனைத் தொடர்ந்து மறுநாள் காலையில் பிரஸ்மீட் நடந்தது. பிரஸ் மீட்டில் அமலாபால், சமீரா ரெட்டி, இயக்குனர் லிங்குசாமி, நடிகர்கள் மாதவன். ஆர்யா என எல்லோரும் கலந்து கொண்டனர். 


லிங்குசாமி வழக்கம் போலவே வளவளவென பேசிக்கொண்டிருக்க பிளைட்டுக்கு நேரம் ஆகி விட்டது எனக் கூறி மாதவனும், ஆர்யாவும் எஸ்கேப் ஆக மாட்டிக் கொண்டார் அமலாபால். ஒரு வழியாக லிங்கு சாமி அவரது லெக்சரை முடித்து அமர்ந்தவுடன் அமலா பாலிடம் கேள்வி கேட்க முயன்றனர் பத்திரிகையாளர்கள், உடனே அமலா பாலுக்கு ஆதரவாக எழுந்து நின்ற லிங்குசாமி, நீங்கள் அனைவரும் என்ன கேள்வி கேட்கப் போறீங்க என்று தெரியும், தயவு செய்து கேள்விகள் வேண்டாம் என்று தடுத்து நிறுத்தி அமலாபாலை காப்பாற்றி அனுப்பி வைத்தார். தொகுப்பாளர் ஜெகன் கேள்வி கேட்ட அளவுக்குக் கூட பத்திரிகையாளர்களுக்கு பிரஸ் மீட்டில் ஒரு நடிகையிடம் கேள்வி கேட்க முடியாமல் போனது.

ஒஸ்தி வெளிவந்த கதை! வெளிவராத தகவல்கள்

கடந்த வாரம் இதே நாளில் ரிலீஸானது எஸ்.டி.ஆர்., அலைஸ் சிம்பு - ரிச்சா கங்கோபாத்யாயா ஜோடி நடத்த "ஒஸ்தி" திரைப்படம்! பல்வேறு தடைகளை கடந்து படம் ரிலீஸான கதை., இப்பொழுது வெளிவந்திருக்கிறது! அதாகப்பட்டது ஒஸ்தி திரைப்படத்தை தயாரித்திருப்பவர் பாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிமிடெட் ரமேஷ்.

இவர்., ஒரு கட்டத்தில் மொத்த படத்தையும் முடித்ததும் ரிலையன்ஸ் குரூப்பிற்கு விற்று விட்டு ஒதுங்கிக் கொண்டார்! ஒஸ்தி படத்திற்ககு கிடைத்தவரவேற்ப்பையும், பரபரப்பையும் பார்த்த சிம்புவின் அப்பா, நடிகர் டி.ஆருக்கு திடீரென்று பையன் நடித்த படத்தை நாமே ரிலீஸ் செய்து அதிக லாபம் பார்த்தால் என்ன? என்ற ஐடியா தோன்றி இருக்கிறது!

அதன் விளைவு 2 கோடி அட்வான்ஸை ரிலையன்ஸ் நிறுவனத்தின் கைகளில் கொடுத்து, இப்படத்தை வேறுமாதிரி பப்ளிசிட்டி செய்து,ரிலீஸ் செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் பட ரிலீஸீக்கு முன் உங்களுக்கு முழு பணத்தையும் செட்டில் செய்து, ஓஸ்தியை நானே ரிலீஸ் செய்து கொள்கிறேன், நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்றிருக்கிறார் டி.ஆர்!

டி.ஆரின் தமிழ்நாட்டு செல்வாக்கையும், சொல்வாக்கையும் பார்த்த ரிலையன்ஸ் 2 கோடி அட்வான்சை வாங்கிக் கொண்டு டீலுக்கு ஓகே சொல்லி இருக்கிறது.

இதனிடையே டி.ஆரி.,ன் சிம்பு சினி ஆர்ட்ஸ் எங்களுக்கு பழைய படங்கள் சிலவற்றின் நஷ்டத்திற்கு ஈடு தர வேண்டி இருக்கிறது, அதை செட்டில் செய்து விட்டு ஒஸ்தியை ரிலீஸ் செய்யட்டும் என்று சில திரையரங்கு உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் கோர்ட் படி ஏறினர்.

அது சிம்பு சினி ஆர்ட்ஸ், ஒஸ்தியை ரிலீஸ் செய்வது குறள் டி.வி., என கோர்ட்டில் குரல் கொடுத்து ஐதராபாத் பாலாஜீ ஸ்டுடியோவில் ஒஸ்தி பிரிண்ட்களை டி.ஆர்., எடுக்க பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லையாம்.

இத்தனை முஸ்தீபுகளுக்கு பிறகும் ஓஸ்தி ஒரு ஷோ தாமதமாக ரிலீஸ் ஆனது. இதனால் திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ரசிகர்கள் அடவாடியில் இறங்கியது தனிக்கதை. ஒஸ்தின்னா சும்மாவா........

எல்லாமே கொஞ்சம் ஜாஸ்தி தானுங்கோ....!!

சினிமாவை விட்டு விலகுகிறார் சினேகா

நயன்தாராவை போல் சினிமாவை விட்டு விலக நடிகை சினேகாவும் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாரா கடைசியாக ஸ்ரீ ராமராஜ்ஜியம் என்ற பக்தி படத்தில் சீதை வேடத்தில் நடித்தார்.

அப்படத்துக்கு பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. அதுபோல் சினேகாவும் திருமணத்துக்கு தயாராகிறார். நடிகர் பிரசன்னாவுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது.

அவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என தெரிகிறது.

இந்த நிலையில் நயன்தாராவைபோல் கடைசியாக ஒரு பக்தி படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு ஒதுங்க சினேகா திட்டமிட்டிருப்பதாக தெலுங்கு திரையுலகில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி தெலுங்கில் தயாராகும் ராஜன்னா என்ற புராண படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நாயகனாக நாகார்ஜுனா நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

சினேகா தலையில் புனித கலசம் சுமந்து கடவுளை வழிபட பக்தி பரவசத்துடன் நடந்து செல்வது போன்ற காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

சினேகா இந்த படத்தை விரும்பி தேர்ந்தெடுத்து நடிப்பது திரையுலகை விட்டு விலகுவதற்காகத்தான் என்று கூறுகிறார்கள் தெலுங்கு ரசிகர்கள்.

வேட்டை இயக்குனரின் சேட்டை

இயக்குனர்-தயாரிப்பாளர் லிங்குசாமி சமீபத்திய தன் படத்திற்கு "வேட்டை" எனப் பெயர் வைத்து விட்டு கோடம்பாக்கத்தில் பண்ணுகிற சேட்டைகள் கொஞ்ச நஞ்சம் இல்லையாம்...... லேட்டஸ்டாக லிங்கு தன் பங்கிற்கு செய்த சேட்டையில் சாம்பிளுக்கு இதோ ஒன்று...

2000 கோடி முதலீட்டில் கோலிவுட்டில் தமிழ்ப்படங்கள் தயாரித்து வரும் பெரிய நிறுவனம் ஏ.ஜி.எஸ். "மதராசப்பட்டினம்" உள்ளிட்ப எண்ணற்ற மெகா பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்துள்ளது.

இந்நிறுவனத்ததின் தயாரிப்பில், இயக்குனர் கே.எஸ்.ஆனந்த் இயக்கத்தில், 50-60 கோடி ரூபாய் செலவில் தற்போது உருவாகி வரும் படம் "மாற்றான்". இப்படத்தினை தனக்கு விற்று விடும்படி மொத்த குத்தகைக்கு பேசி இருக்கிறார் லிங்கு!

தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படம் மட்டுமல்லாது பிறரது படங்களையும் வாங்கி வினியோகம் செய்து வரும் ஏ.ஜி.எஸ்., தாங்கள் மாற்றானை மாற்றானுக்கு விற்கப்போவதாக சொல்லாமலே லிங்குசாமி பிசினஸ் பேச வந்ததற்‌கான காரணத்தை அறிந்து கொள்ள ஆவலாய் களம் இறங்கி இருக்கிறது!

அதன் ரிசல்ட் இவ்வாறாக இருந்திருக்கிறது. அதாகப்பட்டது, திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியாஸ் லிமிடட் தயாரிப்பில் தான் இப்பொழுது இயக்கி வரும் வேட்டை படத்தை யு.டி.வி.,க்கு நல்ல லாபத்திற்கு விற்று விட்டார் லிங்குசாமி.

ருசி கண்ட பூனையாகியுள்ள லிங்கு, அதே மாதிரி பிற பெரிய பட்ஜெட் படங்களையும் யு.டி.,விக்கும் தனக்கும் உள்ள அண்டர்ஸ்டாண்டிங்கில் வாங்கி விற்றால் உட்கார்ந்த இடத்தில் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கலாமே என மனக்கோட்டை கட்டியிருக்கிறார்.

இந்த நப்பாசையில் தான் மேற்படி மாற்றானை கைமாற்றி விட சொல்லி, லிங்கு ஏ.ஜி.எஸ்.,நிறுவனத்தினை கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார் என்ற ரகசியம் தெரியவந்திருக்கிறது ஏ.ஜி.எஸ்., க்கு. விஷயத்தை தெரிந்து கொண்டு விழுந்து, விழுந்து சிரித்த ஏ.ஜி.எஸ்., "ரிலீஸ் ஆக முடியாமல் எத்தனையோ படங்கள் சிக்கி தவிக்கிறது!

அவற்றின் ரிலீஸூக்கு அக்கறை காட்டாத நீங்கள் 2000 கோடி முதலீட்டில் தமிழ்படங்களை எடுக்கும் என்னைச் சீண்டுவது நல்லதல்ல..." என லிங்குசாமியை எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.

இது மாதிரி சேட்டைய விடுங்க..வேட்டை பட வேலைகளை பாருங்க லிங்கு!

விஸ்வரூபத்தில் கதக் டான்சராக நடிக்கிறார் கமல்ஹாசன்

விஸ்வரூபம் படத்தில் ஒரு கெட்டப்பில் கதக் டான்சராக நடிகர் கமல்ஹாசன் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் படம் விஸ்வரூபம்.

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஆப்கன் தீவிரவாதியாக கமல் இப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இப்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாகப்பட்டது, இப்படத்தில் கதக் டான்ஸராக ஒரு கெட்டப்பில் கமல் நடிக்கிறாராம். இதற்காக பிரிஜ்ஜூ மகராஜ் என்பவரிடம் முறையாக கதக் நடனம் பயின்றிருக்கிறாராம்.

50 கதக் நடன கலைஞர்களுடன் கமல் ஆடும் ஒரு பாடலும் இப்படத்தில் இடம்பெறுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில், 75 பேர் கொண்ட படக்குழுவினரோடு வரும் 14ம் தேதி அமெரிக்காவிற்கு பயணமாகிறார் கமல்ஹாசன்.

இது முடிந்ததும் அதே குழுவினரோடு ஒரு மாத படப்பிடிப்பிற்காக லண்டன் செல்ல இருக்கிறாராம்.

ஆஸ்கர் விருதினை பெற்று தந்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில், இசைப்புயல்.ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றிய சங்கர் லதீஷ் ராய் என்பவர் இப்படத்தின் இசையமைப்பு பொறுப்பை ஏற்றிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

மீண்டும் கவுதம்மேனன், ஹாரீஸ் ஜெயராஜ் கூட்டணி

டைரக்டர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கப் போகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்தான் என்று விளம்பரங்களில் அறிவித்து வந்த கவுதம், சிறிது நாட்களாக கப்சிப்பாக இருக்கிறார்.

ஏனாம்?! கவுதமுக்கு ரஹ்மான் அனுப்பிய மெயிலில் ‘தன்னால் இந்த படத்தில் பணியாற்ற முடியாது, என்று செய்தி கூறிவிட்டாராம்.

ரஹ்மானை மிக சரியாக நிரப்பக்கூடிய இடத்தில் இருக்கிற ஒரே இசையமைப்பாளர் இன்றைய தேதிக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் என்பதால் தனது பழைய கோபத்தையெல்லாம் விட்டு விட்டு ஹாரீசையே தன் படத்திற்கு இசையமைப்பாளர் ஆக்கியிருக்கிறார் கவுதம் மேனன்.

இருவரும் இணைந்து காதுக்கு தேன் வசந்தம் தருவார்கள் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.

கணவன் கைவிட்டதால் தனிமையில் தவிக்கும் நடிகை

இன்னமும் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி வரும் ஒரு நடிகை, ஏற்கனவே கணவனால் கைவிடப்பட்டவர்தான் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

`டிராவல்ஸ் படத்தில் நடித்த இரண்டெழுத்து நாயகி தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், அது உண்மை அல்ல. அவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தையும் இருக்கிறதாம்.

ரகசியமாக மணமுடித்த கணவர், இப்போது `டிராவல்ஸ் நாயகியை தனியே தவிக்க விட்டுவிட்டு தலைமறைவாகி விட்டாராம்.

காணாமல் போன கணவர் மீது புகார் கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம் நடிகை! ஐயோ பாவம்!!

சிம்புவுடன் ஜோடி போடும் ஹன்சிகா

மாப்பிள்ளை, எங்கேயும் காதல், வேலாயுதம் படங்களில் நடித்த ஹன்சிகா உதய நிதி ஸ்டாலினின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை முடித்த கையோடு சிம்புவுடன் ஜோடி போட உள்ளார். ஒஸ்தி படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் படம் வேட்டை மன்னன்.

இந்தபடத்தில் விஜய் டி.வி யில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி நடத்திய நெல்சன் என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

எஸ் எஸ் சக்ரவர்த்தி படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளார்.

சிம்புவுடன் நடிப்பது பற்றி ஹன்சிகாவிடம் கேட்டால் உற்சாகமாக பதில் சொல்கிறார். நான் சின்ன வயசிலே நடிக்க வந்திட்டேன். ஹிந்தியில் ஹிரித்திக் கூட ஒரு படத்தில் நடிச்சிருக்கேன்.

தெலுகுலயும் நடிக்கிறேன். சோ எனக்கு பயம் அப்படின்னு ஏதும் இல்ல, பொலிடிகல் சயின்ஸ் இப்பதான் லண்டன் யுனிவர்சிட்டில முடிச்சேன். என் அம்மா பம்பாய்ல ஸ்கின் டாக்டார இருகாங்க. நான் நடிக்க வந்ததே ஆசை பட்டு தான்.

ஆனா தமிழ் இவ்ளோ சீக்கிரம் பெரிய நடிகர்கள் கூட நடிச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு. எல்லாரும் நான் ரொம்ப கிளாமரா நடிகிறேனு சொல்றாங்க, என் ரசிகர்கள் விரும்பும் வரை கிளாமர நடிப்பேன்.

இப்ப கூட சிம்பு கூட ஜோடிய நடிக்கிறேன், நான் ரொம்ப கம்பார்டபுளா இருக்கேன், என் தமிழ கேட்டு சிம்பு ரொம்ப சிரிப்பார்.

எனக்கு இப்ப கொஞ்சம் தமிழ் வார்த்தைகள் தெரியும், சீக்கிரம் தமிழ் பேசுறேன் பாருங்க என்றவர் சிம்புவுடன் டான்ஸ் பண்ண தான் கொஞ்சம் பயப்படுகிறார்.

ராஜபாட்டை பாடல்கள் ஒரு பார்வை

விக்ரம் தீக்ஷா நடிப்பில் சுசிந்திரன் இயக்கத்தில், யுவன் இசையில், யுகபாரதி வரிகளில் ராஜ பாட்டை படத்தின் பாடல்களை பற்றிய சிறு தொகுப்பு இங்கே,

* பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே - இந்த பாடலை ஹரிசரண் பாடியுள்ளார், சென்னை பீச்சில் படமாக்கி உள்ளனர்

* லட்டு லட்டு ரெண்டு லட்டு சேர்ந்து கிடைச்சா லக்கு லக்கு -இந்த பாடல் இத்தாலியில் படமாக்கி உள்ளனர் ,ஸ்ரேயா ,ரீமாவுடன் விக்ரம் அதிரடி ஆட்டம் போட்டுள்ளார், இந்த பாடலை விக்ரம், சுசித்ரா, பிரியதர்ஷினி பாடி உள்ளனர் ,

* வில்லாதி வில்லன்கள் எல்லாரும் என்னை விலை பேச வந்தார்கள் -இந்த பாடலை 1985 களில் உள்ள கிளப் மாடலை, ஏவிஎம் இல் செட் போட்டு படமாக்கி உள்ளனர் , தெலுகு நடிகை சலோனி விக்ரமுடன் ஆட்டம் போட்டு அசத்தி உள்ளாராம்.

இந்த பாடலில் மட்டும் விக்ரம் 7 கெட்டப்புகளில் வராராம், மனோ, மாலதி பாடி உள்ளனர்,

* பனியே பனிபூவே மனம் ஏனோ பறக்குதே தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே -இந்த பாடல் இத்தாலியில் படமாக்கி வந்துள்ளனர். ஜாவத் அலி .ரேணு பாடி உள்ளனர், விக்ரம் தீக்ஷா டூயட் பாட்டு இது, நான் மகான் அல்ல படத்தில் இடம் பெற்ற இறகை போலே என்ற பாடல் வரிசையில் பனித்துளி பாட்டு இருக்கும் என்கிறார் இயக்குனர்,


ராஜ பாட்டை படம் நில அபகரிப்பு பிரச்னையை சொல்ல போகும் படமாகவும் ,தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே உள்ள உறவையும் உணர்வையும் எல்லாம் கலந்த கலவையாக்கி கொடுக்க முயற்சி செய்துள்ளார் சுசி , டிசம்பர் 23ம் தேதி படம் திரைக்கு வர உள்ளது,

மீண்டும் வருகிறார் வடிவேலு...!

தவளை தன் வாயால் கெடுவது போல, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக சொல்லி எக்கு தப்பா பேசி, சினிமா வாய்பே இல்லாத அளவுக்கு தள்ளப்பட்டார் நடிகர் வடிவேலு.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் திரையில் வரப்போகிறார் வடிவேலு. நடிகர் பிரசாந்த் நடிப்பில், அவரது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மம்பட்டியான் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவேலு.

படம் முழுக்க பிரசாந்த் உடன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் வருகிறார் வடிவேலு.

வடிவேலுவின் இந்தவேடம், ஒரிஜினல் படமான மலையூர் மம்பட்டியானில் கவுண்டமணி செய்த மைனர் வேடமாகும்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எந்த ஒரு டைரக்டரும் வடிவேலுவை வைத்து இயக்க முன்வராத நிலையில், தியாகராஜன் மட்டும் வடிவேலுவை வைத்து தைரியமாக படத்தை இயக்கியுள்ளார்.

ஏற்கனவே வின்னர் படத்தில் பிரசாந்த் உடன் வடிவேலு நடித்த காமெடி மிக பிரபலம். அதன்படியே இந்தபடத்திலும் வடிவேலுவை நடிக்க வைத்திருக்கிறார் தியாகராஜன்.

இப்படம் வருகிற 16ம் தேதி முதல் உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே வடிவேலுவை திரையில் பார்க்காமல் ஏங்கி தவித்த ரசிகர்களுக்கு, இந்த படம் பழைய சரவெடி வடிவேலுவை நிச்சயம் பிரதிபலிக்கும் என நம்பலாம்.

டிச. 16ல் வேட்டை படத்தின் சிங்கிள் ஆடி‌யோ ரிலீஸ்

பையா படத்தை தொடர்ந்து டைரக்டர் லிங்குசாமி, ஆர்யா, மாதவன், சமீரா, அமலாபால் ஆகியோரை வைத்து உருவாக்கி வரும் வேட்டை படத்தின் சிங்கள் ஆடியோ டிராக்கை வருகிற டிசம்.16ம் தேதி வெளியிட உள்ளனர்.

சமீபத்திய தமிழ் சினிமாவில், சிங்கிள் டிராக் ஆடியோ ரிலீஸ் கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. சிம்புவின் வானம் படத்தில் தொடங்கிய இந்த கலாச்சாரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான தனுஷின் 3 படத்தில், கொலைவெறி பாடல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டது. அந்தவகையில் இப்போது வேட்டை படத்திலும் சிங்கிள் ஆடியோ டிராக்கை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் லிங்குசாமியிடம் கேட்டபோது, இசைவெளியீடு இம்மாதம் 16ம் தேதி இருக்கும். படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய,

பத்திகிச்சு பம்பரம் என்ன செஞ்ச மந்திரம்
ராசாத்தி ரோசாப்பு என்ன சொல்ல
என் ரா தூக்கம் தூக்கிட்டு போறபுள்ள...

என்ற பாடலை, யுவன் இசையில் சும்மா பத்திக்கிற மாதிரி வந்திருக்கு. இந்தபாடலுக்கு ஆர்யாவும், அமாலாபாலும் செம ஆட்டம் ஆடியிருக்காங்க.

நிச்சயமா இந்த பாட்டு எல்லோருக்கும் பிடிக்கும். படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறோம் என்று கூறினார்.

கொலைவெறி பாடல் உருவான விதம்

தனுஷ் நடிப்பில், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநராக அவதரித்து இருக்கும் படம் 3. தனுஷ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். புதுமுகம் அனிருத் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் சூட்டிங் நடந்து வரும் வேளையில், சில வாரத்திற்கு முன்னர் இப்படத்தில் இருந்து சிங்கள் டிராக் ஆடியோவை ரிலீஸ் செய்தனர். வொய் திஸ் கொலைவெறி, கொலைவெறி... என ஆரம்பிக்கும் இப்பாடலை ஆங்கிலம் கலந்த தமிழில் தனுஷே எழுதி பாடியிருக்கிறார்.

ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 10லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தபாடலை கேட்டு ரசித்துள்ளனர். மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட சிலர் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை பலரையும் இந்த பாடல் ரொம்பவே கவர்ந்துள்ளது.

லட்சக்கணக்கான பேர் விரும்பி, ரசித்து பார்த்த கொலைவெறி பாடலுக்கு பின்னால் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அது என்னவென்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தே கூறியுள்ளார். இதோ...

21வயது நிரம்பிய அனிருத்தின் கனவு, ஏக்கம் எல்லாமே இசை தானாம். சென்னை லயோலா கல்லூரியில் இந்தாண்டு தான் பி.காம் முடித்துள்ளார். இந்த இளம்வயதில் எப்படி உங்களுக்குள் இசை, ஆர்வமும், ரசிகர்களின் ரசனையும் புரிந்தது என்று கேட்டால், சிறு வயது முதலே எனக்கு இசை ஆர்வம் அதிகம்.

சந்தியா என்ற டீச்சரிடம் வெஸ்டன் மியூசிக் கற்றுக்கொள்ள தொடங்கினேன். அப்படியே தொடர்ந்து பியானோ உள்ளிட்ட பல்வேறு இசை கருவிகளையும் கற்றுக்கொண்டேன். படித்து கொண்டு இருக்கும்போதே பல விளம்பர படங்களுக்கு இசை சேர்ப்பு செய்திருக்கிறேன். இது எனக்குள் உள்ள இசை ஆர்வத்தை மேலும் தூண்டியது.

சரி, ஐஸ்வர்யா தனுஷின் முதல்படமான 3 படத்தில் எப்படி உங்களுக்கு வாய்ப்பு வந்தது என்று கேட்டால், நான், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் மூவருமே நன்கு அறிமுகமானவர்கள் தான். அவர்களுடன் நிறைய குறும்படங்களில் வேலை பார்த்துள்ளேன்.

அதன் அடிப்படையில் என்னை இந்தபடத்திற்கு இசையமைக்க தேர்வு செய்தனர். அது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. எங்க மூவரின் கூட்டணி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஜாலியான மூடில் தான் எப்பவும் ‌ஒர்க் பண்ணுவோம் என்றவரிடம், கொலைவெறி பாட்டு எப்படி கம்போஸ் பண்ணினுங்கே, தனுஷ் எப்படி டியூன் கேட்டு பாடல் வரிகள் எழுதி பாடினார் என்று கேட்டதற்கு, சொன்னா நம்பமாட்டிங்க சும்மா மியூசிக் கம்போஸ் பண்ணிகிட்டு இருந்தேன்.

அப்போ தனுஷ் திடீர்னு மைக் முன்னாடி வந்து நின்று பாடல் வரி கூட எதுவும் எழுதாமல் மியூசிக் கேட்டு பாட ஆரம்பச்சுட்டாரு. எல்லாமே தனுஷ் போட்ட வரிகள் தான். அதில் தமிழ், ஆங்கிலம் மிக்ஸ் பண்ணி எழுதி, பாடி இருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கும் இந்தபாட்டு ரொம்ப பிடிச்சுபோக இந்தபாட்டை உருவாக்கினோம். ஆனா அப்போ எங்களுக்கு தெரியாது.

இந்தபாட்டு இவ்வளோ பெரிய ஹிட்டாகும் என்று. இளைஞர்கள் விரும்பி கேட்பாங்கனு நினைச்சோம். ஆனா எல்லா வயசுக்காறங்களும் இந்தபாட்டு ரசிக்கிறாங்க. தமிழ்நாட்டுல மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இந்தபாடல் ஹிட்டாகியுள்ளது. இதனால் எங்க டீமே ரொம்ப சந்தோஷமா இருக்கோம் என்றார்.

3 படத்தில் மொத்தம் 10 பாட்டு இருக்காம். அதில் ஒரு பாடல் ரீ-மிக்ஸ் பாடலாம். முதல்முறையாக தனுஷ், ஸ்ருதியுடன் சேர்ந்து ஒரு டூயட் பாட்டு பாடியிருக்கிறாரம். இதுதவிர கிளப் சாங்கை அனிருத்தும், மற்றொரு பாடலை முன்னணி பிரபல பாடகர்களும் பாடியிருக்கிறார்களாம்.

அதுமட்டுமல்ல ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற இருவருக்கு இந்த படத்தில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார்களாம். இளம் நடிகர், நடிகை, டைரக்டர், இசையமைப்பாளர், பாடகர்கள் என படம்முழுக்க மொத்தமும் சிறு வயது ஆட்‌களே.

முதல்படத்தின் பாடல்களே வெளிவராத நிலையில் படத்தில் உள்ள ஒரு பாடல் மட்டும் சூப்பர் ஹிட்டாகியிருப்பது அனிருத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரைத்தேடி பாலிவுட் அழைப்புகளும் வந்துள்ளன.

பாலிவுட்டின் பெரிய சினிமா கம்பெனிகள் இரண்டு தங்களின் படத்திற்கு இசையமைக்க இவரை அணுகியுள்ளது. ஆனால் இப்போது 3 படத்தில் அனிருத் பிஸியாக இருப்பதால், அதை முடித்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.

கொலைவெறியின் வெற்றி, அனிருத்துக்கு உலக அளவில் ஒரு பெரிய திருப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்றால் அது மிகையல்ல!!

விஜய்யின் நண்பன் பட ஆடியோவை அமீர்கான் வெளியிடுகிறார்

விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் நண்பன் படத்தின் ஆடியோ சி.டி.யை, பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்தியில் சூப்பர் ஹிட்டாகி, வசூலை வாரி குவித்த படம் 3 இடியட்ஸ். அமீர்கான், மாதவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் தமிழில், நண்பன் என்ற பெயரில் உருவாகியுள்ளது.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ ரிலீசை வருகிற 15ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நடிகர், நடிகைகளின் நடனம், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த விழாவுக்கு நடிகர் அமீர்கானை அழைக்க முடிவெடுத்துள்ளனர். அவரை அழைத்து வரும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டுள்ளார்.

சமீபகாலமாக தமிழ் படங்களின் ஆடியோவை, பாலிவுட் பிரபலங்களை வைத்து ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே பெப்சி விஜயன் தன்னுடைய மார்க்கண்டேயன் படத்தின் ஆடியோ ரிலீசுக்கு சல்மான் கானை அழைத்து வந்தார்.

அதேபோல் தமிழ் ரா-1 படத்தின் ஆடியோவை, படத்தின் நாயகன் ஷாரூக்கானை வைத்து ரிலீஸ் செய்தனர். அந்தவரிசையில் இப்போது நண்பன் படத்தின் ஆடியோவையும் அமீர்கானை வைத்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ரஜினியின் புதிய 3 டி படம் "கோச்சடையான்'

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய 3 டி திரைப்படத்துக்கு "கோச்சடையான்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அவரது இளைய மகள் செüந்தர்யா அஸ்வின் இயக்குகிறார்.

"எந்திரன்' படத்தையடுத்து ரஜினி "ராணா' என்ற புதிய படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் மார்ச் மாதம் தொடங்கியது. "ராணா' படப்பிடிப்பு நடந்த முதல் நாளே ரஜினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் ரஜினிக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக ரஜினி சிங்கப்பூர் சென்று சிறப்பு சிகிச்சை மேற்கொண்டார். அதன் பிறகு அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது

நீண்ட நாள் ஓய்வில் இருந்த ரஜினியும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். அதனால் 'ராணா' படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் "ராணா' படப்பிடிப்பை ஒத்திவைத்துவிட்டு திடீரென "கோச்சடையான்' என்ற 3 டி படத்தில் ரஜினி நடிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ஈராஸ் நிறுவனமும் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான "அவதார்', ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "த அட்வென்ட்ச்சர்ஸ் ஆஃப் டின் டின்' போன்ற ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தில் "கோச்சடையான்' படம் உருவாக்கப்படுகிறது.

கே.எஸ். ரவிகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பட இயக்கத்தின் மேற்பார்வைக்கும் பொறுப்பேற்றிருக்கிறார். ரஜினியின் இளைய மகள் செüந்தர்யா அஸ்வின் படத்தை இயக்குகிறார். படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படம் வெளிவரும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கி.பி. 710-ம் ஆண்டைச் சேர்ந்த மதுரையின் அரிகேசரி மாறவர்மன் என்ற பாண்டிய மன்னனின் வழித்தோன்றலான கோச்சடையான் ரணதீரன் என்ற மன்னன் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களின் பின்னணியில் கற்பனை கலந்து "கோச்சடையான்' கதை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்றும், மதுரையில் உள்ள ஒரு பகுதி "கோச்சடை' என்று அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


"சுல்தான்'தான் "கோச்சடையான்'?

ரஜினியின் மகள் செüந்தர்யா தயாரிப்பிலும் இயக்கத்திலும் "சுல்தான் - த வாரியர்' என்ற அனிமேஷன் படம் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சரித்திரப் பின்னணியில் பெரும் பொருள்செலவில் உருவாக்கப்பட்ட அந்தப் படத்தின் பெரும்பாலான பகுதிகள் நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வந்தது. அதன் பிறகு இந்த அனிமேஷன் படத்துக்கு "தீரா' எனப் பெயர் மாற்றம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின.

அந்தப் படம்தான் புதிய தொழில்நுட்பத்துடன் 3 டி வடிவில் "கோச்சடையான்' என்ற பெயரில் உருவாகிறது எனத் திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஒஸ்தி படத்துக்கு சிக்கல் - தியேட்டர் அதிபர்கள் திரையிட மறுப்பு

இந்தியில் சல்மான்கான் நடித்து ஹிட்டான “டபாங்” படம் தமிழில் சிம்பு நடிக்க “ஒஸ்தி” என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. தரணி இயக்கியுள்ளார்.

இப்படம் வருகிற 8-ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

இந்த படத்தின் “சாட்டி லைட்” உரிமை பெற்றுள்ள டி.வி. நிறுவனம் தங்களுக்கு தர வேண்டிய டெபாசிட் தொகையை திருப்பி தர வேண்டும் என்றும் பணத்தை தராவிட்டால் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

இது குறித்து ஒஸ்தி பட தயாரிப்பாளருக்கும் தியேட்டர் அதிபர் சங்கத்துக்கும் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்தும் முடிவு ஏற்படவில்லை.

இன்னும் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் மாலை முடிவு தெரியும் என்றும் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அஜித் வீட்டுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

மங்காத்தா 100வது நாள் விழாவை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், நடிகர் அஜித்தின் வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். தன்னை அரசியலுக்கு அழைத்த ரசிகர்களை கடிந்து கொண்ட அஜித், ஒரு கட்டத்தில் ரசிகர் மன்றங்களையே கலைத்து விட்டார்.

இப்போது மங்காத்தா பட வெற்றியால் மீண்டும் ரசிகர்கள் தங்களது ஆவலை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் மங்காத்தா பட தயாரிப்பாளர் துரை.தயாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை எழுதியிருக்கிறார். அதில், அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை.

படத்தின் நாயகன் இல்லாமல் மங்காத்தா படத்தின் 100வது நாள் விழாவை கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை. அஜித் சார் நடித்து வெளிவந்த படங்களில் மங்காத்தா படம்தான் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது.

அப்படத்தினை எனது நிறுவனம் தயாரித்ததில் பெருமை கொள்கிறேன். தல ரசிகர்கள் அவரை மங்காத்தா படத்தின் 100வது நாள் விழாவிற்கு அழைத்து வருவதாக இருந்தால், 100வது நாள் விழாவை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ய காத்திருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்துதான் மீண்டும் அஜித்தின் வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம் ரசிகர்கள்.

ராஜபாட்டை - முன்னோட்டம்

தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ராஜபாட்டை. வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன் இப்படத்தை இயக்குகிறார்.

தில், தூள், சாமி படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்க பக்கா கமர்ஷியல் படம் இது. படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை தீக்ஷா செத் தமிழில் அறிமுகமாகிறார்.

டைரக்டர் கே.விஸ்வநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சிறுத்தை புகழ் அவினாஷ், நான் மகான் அல்ல வில்லன் அருள்தாஸ், ப்ரதீப் ரவாத், தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நிலமோசடி தொடர்பாகவும் அவற்றுக்கு பின்னே இருக்கும் மோசடி கும்பல் பற்றிய கதைதான் ராஜபாட்டை. படத்தில் விக்ரம் வில்லனிடம் இருக்கும் அடியாளாக ஜிம்பாயாக நடிக்கிறார்.

பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தை பி.வி.பி.சினிமா புரெடக்ஷன்ஸ் சார்பில் பிரசாத் வி.பொட்லாரி தயாரிக்கிறார்.

இவர் தயாரிக்கும் முதல்படம் இது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார், மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னை, பாண்டிச்சேரி, ஹைதரபாத், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலும், பாடல் காட்சிகள் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் படமாக்கியுள்ளனர்.

படத்தின் 75 சதவீத சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. மீதி படப்பிடிப்பு வேகமாகவும், விறுவிறுப்பாகவும் வளர்ந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விக்ரமிற்கு பக்கா கமர்ஷியல் படமாக ராஜபாட்டை இருக்கும்.

அரசியல் வாரிசுகளின் பத்தாயிரம் கோடி

மதுரையில் ஆடியோ வெளியிடுவது, மலேசியாவில் ஒற்றை பாடல் வெளியிடுவது... என கோலிவுட்டின் இசை வெளியீட்டு வைபவங்கள், கோடம்பாக்கத்துக்கு வெளியேயும் சமீபகாலமாக அரங்கேறி வரும் வேளையில், தன் இயக்கத்தில் உருவாகும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் படத்தொடக்க விழாவையே, தனது சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லிநகரத்தில் ஆர்ப்பாட்டமாக நடத்தி முடித்தார் இயக்குநர் பாரதிராஜா.

அவரைத்தொடர்ந்து பழம் பெரும் அரசியல்வாதியும், படஅதிபரும், இயக்குநருமான முக்தா சீனிவாசனின் வாரிசும், திரைப்பட இயக்குநருமான வி.சீனிவாசன் சுந்தர் புதிதாக இயக்க இருக்கும் பத்தாயிரம்கோடி எனும் திரைப்படத்தின் தொடக்க விழாவை, பாண்டிச்சேரியில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாளை(30.11.11) 9 மணிக்கு நடத்த இருக்கிறார்.

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தலைமையில் நடைபெறும் இப்படத்தின் தொடக்க விழாவில், காமிராவை முடுக்கி வைக்க இருப்பவர் புதுவை சட்டசபை உறுப்பினர் அஷோக் ஆனந்தன். மாயா கிரியேஷன் எனும் பேனரில் பத்தாயிரம் கோடி படத்தை என்.ஆர்.சீனிவாசன் தயாரிக்கிறார்.

அரசியல்வாதிகளின் வாரிசுகள், அரசியல் பிரபலங்கள் புடைசூழ படத்தின் தலைப்பு "பத்தாயிரம்கோடி" என்றிருப்பது தான், புதுவையில் இதன் தொடக்கவிழா இருப்பதைகாட்டிலும் கோடம்பாக்கத்தில் பலரது புருவங்ளை உயர செய்திருக்கும் சமாச்சாரமாகும்!

நயன்தாராவுக்கு தூண்டில் போடும் பிரபல நடிகர்

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம், ஆந்திராவில் சக்கபோடு போட்டுக் கொண்டிருப்பதால், தன்னுடைய படத்திலும் நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டும் என்று கூறி வருகிறார் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர்.

ஒருபக்கம் திருமணத்திற்கு நாள் பார்த்து கொண்டிருக்கின்றனர் நயன்தாராவும்-பிரபுதேவாவும். மற்றொருபுறம் என்னடான்னா...? நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

திருமணத்திற்கு பின்னர் நடிக்க மாட்டேன் என்ற முடிவில் இருக்கிறார் நயன்தாரா. இந்தநேரம் பார்த்து அவரது மனசை கலைக்கும் வகையில், மீண்டும் நடிப்பதற்கு நிறைய ஆஃபர்கள் வந்து கொண்டு இருக்கிறதாம்.

கடைசியாக இவர் நடித்து வெளியான ஸ்ரீராம ராஜ்யம் படம் ஆந்திராவில் சக்கபோடு போட்டு கொண்டு இருக்கிறது. நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக, சீதை வே‌டத்தில் நடித்திருந்தார் நயன்தாரா.

இந்தபடம் ஹிட்டாக நயன்தாராவின் நடிப்பும் ஒரு முக்கிய காரணமாம். படத்தில் சீதையாகவே வாழ்ந்திருந்தார் நயன்தாரா. நயன்தாராவின் நடிப்பை பார்த்து, தன்னுடைய படத்திலும் அவரைத்தான் நடிக்க வேண்டும் என்று கூறி வருகிறார் பிரபல நடிகர் நாகர்ஜூனா.

இவருக்கும் பல சரித்திர படங்கள் சில்வர் ஜூப்ளி கொண்டாடி இருக்கிறது. இப்போது பாலகிருஷ்ணாவின் படம் ஹிட் என்றதும், தானும் அதுபோலவே ஒரு படத்தில் நடிக்க வேண்டும். அதுவும் தனக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வேண்டும் என்று நினைக்கிறாராம்.

ராம்கோபால் வர்மா, அடுத்து ராவணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இதில்தான் சீதையாக நடிக்க வைக்க நயன்தாராவை தேடிக் கொண்டிருக்கிறார் நாகார்ஜூனா.


சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நயன்தாரா, நடிப்பேன் என்றும், நடிக்கமாட்டேன் என்றும் உறுதியாக சொல்லவில்லை.

இதனால் மீண்டும் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படிதான் நயன்தாராவுக்கு இப்போது தூண்டில் போட்டிருக்கிறாராம் நாகர்ஜூனா.
Related Posts Plugin for WordPress, Blogger...