விஸ்வரூபத்தில் கதக் டான்சராக நடிக்கிறார் கமல்ஹாசன்

விஸ்வரூபம் படத்தில் ஒரு கெட்டப்பில் கதக் டான்சராக நடிகர் கமல்ஹாசன் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் படம் விஸ்வரூபம்.

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஆப்கன் தீவிரவாதியாக கமல் இப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இப்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாகப்பட்டது, இப்படத்தில் கதக் டான்ஸராக ஒரு கெட்டப்பில் கமல் நடிக்கிறாராம். இதற்காக பிரிஜ்ஜூ மகராஜ் என்பவரிடம் முறையாக கதக் நடனம் பயின்றிருக்கிறாராம்.

50 கதக் நடன கலைஞர்களுடன் கமல் ஆடும் ஒரு பாடலும் இப்படத்தில் இடம்பெறுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில், 75 பேர் கொண்ட படக்குழுவினரோடு வரும் 14ம் தேதி அமெரிக்காவிற்கு பயணமாகிறார் கமல்ஹாசன்.

இது முடிந்ததும் அதே குழுவினரோடு ஒரு மாத படப்பிடிப்பிற்காக லண்டன் செல்ல இருக்கிறாராம்.

ஆஸ்கர் விருதினை பெற்று தந்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில், இசைப்புயல்.ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றிய சங்கர் லதீஷ் ராய் என்பவர் இப்படத்தின் இசையமைப்பு பொறுப்பை ஏற்றிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...