பையா படத்தை தொடர்ந்து டைரக்டர் லிங்குசாமி, ஆர்யா, மாதவன், சமீரா, அமலாபால் ஆகியோரை வைத்து உருவாக்கி வரும் வேட்டை படத்தின் சிங்கள் ஆடியோ டிராக்கை வருகிற டிசம்.16ம் தேதி வெளியிட உள்ளனர்.
சமீபத்திய தமிழ் சினிமாவில், சிங்கிள் டிராக் ஆடியோ ரிலீஸ் கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. சிம்புவின் வானம் படத்தில் தொடங்கிய இந்த கலாச்சாரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான தனுஷின் 3 படத்தில், கொலைவெறி பாடல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டது. அந்தவகையில் இப்போது வேட்டை படத்திலும் சிங்கிள் ஆடியோ டிராக்கை ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் லிங்குசாமியிடம் கேட்டபோது, இசைவெளியீடு இம்மாதம் 16ம் தேதி இருக்கும். படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய,
பத்திகிச்சு பம்பரம் என்ன செஞ்ச மந்திரம்
ராசாத்தி ரோசாப்பு என்ன சொல்ல
என் ரா தூக்கம் தூக்கிட்டு போறபுள்ள...
என்ற பாடலை, யுவன் இசையில் சும்மா பத்திக்கிற மாதிரி வந்திருக்கு. இந்தபாடலுக்கு ஆர்யாவும், அமாலாபாலும் செம ஆட்டம் ஆடியிருக்காங்க.
நிச்சயமா இந்த பாட்டு எல்லோருக்கும் பிடிக்கும். படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறோம் என்று கூறினார்.
0 comments:
Post a Comment