முதன்முறையாக ஹாரிஸ் உடன் இணைகிறார் செல்வராகவன்

செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் முதன்முறையாக இசையமைக்க இருக்கிறார். டைரக்டர் செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர் யுவன் சங்கர் ராஜா.

இவர்களது கூட்டணியில் வெளிவந்த காதல் கொண்டேன், 7ஜி ரெயிண்போ காலணி, புதுப்பேட்டை போன்ற படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இடையில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட ஜீ.வி.பிரகாஷ் குமாரை இசையமைக்க வைத்தார் செல்வா.

இந்நிலையில் மயக்கம் என்ன படத்திற்கு பிறகு, இரண்டாம் உலகம் படத்தை கையில் எடுத்திருக்கிறார் செல்வா.

இதில் நாயகனாக ஆர்யாவும், நாயகியாக அனுஷ்காவும் நடிக்கின்றனர். பி.வி.பி.சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்தபடத்திற்கும் ஜீ.வி.தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹாரிஸை இசையமைக்க வைத்திருக்கிறார் செல்வா.

இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், இரண்டாம் உலகம் படத்திற்கு ஹாரிஸ் இசையமைப்பது உண்மைதான். அவருடன் இணையும் முதல்படம் இது.

சிறுவயதில் இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எங்களது இந்த கூட்டணி ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...