2012-ல் தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வுகள்


* 2012-ல் ஜனவரி மாதத்தில் 1 1/2 கோடி கடன் பாக்கி பிரச்னையில் நடிகை புவனேஸ்வரி மீது வழக்குபதிவு- ஐகோர்ட் உத்தரவு, சேவை வரிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை, தானே புயல் நிவாரணப்போராட்டம் - தங்கர் பச்சான் கைது, விஜய்யின் நண்பன் படத்திற்கு இந்திய ஜனநாயக கட்சி எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம்.

* 2012-ல் பிப்ரவரி மாதம் நடிகர் கமல் முதல்வர் ஜெயலலிதாவிடம் ரூ.15 லட்சம் நிவாரணம், கேப்டன் விஜயகாந்தின் நண்பரும், பிரபல படஅதிபருமான இப்ராஹிம் ராவுத்தர் அதிமுக.வில் இணைந்தது, நயன்தாரா தானே புயல் நிவாரணமாக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியது. 

மத்திய அரசின் சேவை வரிவிதிப்புக்கு இந்தியா முழுவதும் திரையுலகினர் ஆர்ப்பாட்டம், தொழிலதிபர் ஆஞ்சநேயன் மீது நடிகை அனன்யாவின் தந்தை திருமண புகார் செய்தது உள்ளிட்டவை பிப்ரவரி ஹைலைட்!

* மார்ச் 2012-ல் தமி்ழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் மோதல், நடிகை அல்போன்சாவின் காதலர் வின‌ோத்குமார் தற்கொலை உள்ளிட்டவைகள் மார்ச் மாதத்தில் நடந்‌தவை.

* ஏப்ரல் 2012-ல் திரைப்பட தொழிலாளர்கள் - தயாரிப்பாளர்கள் பேச்சு, உயர்மட்டக்குழு அமைப்பு! பிலிம் சேம்பர் புதிய கட்டடம் முதல்வர் திறப்பு!

* மே - 2012-ல் காஞ்சி சங்கராச்சாரியர் மீது நித்தியானந்தா புகழ் நடிகை ரஞ்சிதா வழக்கு, நடிகர் சங்கதலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு!

ஜூன் - 2012-ல் பெப்சி தொழிலாளர் அமைப்பில் இயக்குனர் அமீர் தலைவரானார்.

ஜூலை - 2012-ல் நடிகர் சங்க இடக்குத்தகை தொடர்பாக அதன் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கு கோர்ட்ட நோட்டீஸ்! நடிகர் மகத் - மோகன் பாபுவின் வாரிசு மனோஜ் மஞ்சு மது விருந்தில் மோதல், நடிகை ஊர்வசியின் சகோதரியும், காமெடி நடிகையுமான கல்பனா விவாகரத்து மனு தாக்கல்!

* ஆகஸ்ட் - 2012-ல் தாண்டவம் தடை தள்ளுபடி! மோசடி வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது, நடிகை சுஜிபாலா தற்கொலை முய‌ற்சி!

* செப்டம்பர் - 2012-ல் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் மீது பணமோசடி வழக்கு மற்றும் கைது, வனயுத்தம் படத்தை வீரப்பன் மனைவி முத்துலெட்சுமிக்கு காட்ட கோர்ட் உத்தரவு!

* அக்டோபர் - 2012-ல் சம்பளபாக்கி திருத்தணி பட அதிபர் மீது நடிகர் ராஜ்கிரண் வழக்கு, நடிகர் கமல் தலைமையில் சென்னையில் 3நாட்கள் பிக்கி மாநாடு, நடிகர் சங்கத்திற்கு எதிராக சிவில் வழக்கு தொடர கோர்ட் அனுமதி.

* நவம்பர் - 2012-ல் மனஅழுத்த நோய் காரணமாக நடிகை பானுப்ரியா மருத்துவமனையில் அனுமதி, துப்பாக்கி பட விவகாரம், விஜய் வீட்டு முன்பு முஸ்லீம் அமைப்புகள் போராட்டம், துப்பாக்கி - இஸ்லாமிய சர்ச்சை காட்சிகள் நீக்கம், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு - வேலைக்காரி கைது, நடிகை ஸ்வேதா மேனன் பிரசவ காட்சி படப்பிடிப்பு - ஒளிப்பதிவாளர், இயக்குனர் மீது வழக்கு!

* டிசம்பர் - 2012-ல் விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழா மதுரை, கோவை, சென்னை நகரங்களில் ஒரே நாளில் கமல் ஆஜர், விஸ்வரூபம் டி.டி.எச்.-ல் திரையிட கமல் முடிவு, அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்புகள். சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.50 லட்சம் நிதியுதவி, சென்னை திரைப்பட விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப், பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் தற்கொலை, விஸ்வரூபம் டி.டி.எச்., விவகாரம் கமல்-உரிமைக்குரல், உறுதிக்குரல்!

விரைவில் விஸ்வரூபம் பார்ட்-2


விஸ்வரூபம் படம் இன்னும் 10நாட்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அடுத்தபடியாக விஸ்வரூபம் படத்தின் பார்ட்-2-வை எடுக்க போவதாக கமல் அறிவித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஆரோ 3டி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழிநுட்பங்களுடன் ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூம். 

பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

ஜனவரி 11ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கு முன்பாக உலகில் எந்த ஒரு சினிமா கலைஞரும் செய்திராத புதுமையாக இப்படத்தை டி.டி.எச்.,ல் திரையிட இருக்கிறார் கமல்ஹாசன். 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்‌பை கமலும் அறிவித்துவிட்டார். ஜனவரி 10ம் தேதி இரவு விஸ்வரூபம் படம் டி.டி.எச்-.ல் ஒளிப்பரப்பாக இருக்கிறது. 

இந்நிலையில் விஜய் டி.வியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் டுவென்டி-20 நிகழ்ச்சியில் கமல்ஹாசனும், பூஜா குமாரும் பங்கேற்றனர். 

அப்போது கமலிடன் விஸ்வரூபம் படம் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு கமலும் பதிலளித்தார். 

அப்போது விஸ்வரூபம் படத்தின் பார்ட்-2 பற்றிய பேச்சை படத்தின் ஆரம்பித்தார் நாயகி பூஜா குமார். உடனே கமல் நானே இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றி தனியாக பிரஸ்மீட் வைத்து சொல்லலாம் என்று நினைத்தேன். 

இப்போது விஜய் டி.வி. மூலமாகவே அதை தெரிவிக்க‌ிறேன்.  விஸ்வரூபம் பார்ட்-2 எடுக்கப் போகிறேன் என்றார். 

அது எப்போது என்ற கேள்விக்கு விஸ்வரூபம் முதலில் வெளியாகட்டும். பிறகு பார்ட்-2 பற்றி சொல்கிறேன் என்றார். 

ஜீவாவுக்கு கதை பண்ணி வைத்திருந்த இயக்குனர்கள் ஓட்டம்


விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் கால்சீட் கிடைக்காத இயக்குனர்கள், அதற்கடுத்தபடியாக இரண்டாம் தட்டு ஹீரோக்களைத்தான் அணுகுவார்கள். 

அந்த பட்டியலில் இருக்கும் ஆர்யா,விஷால், ஜீவா போன்ற நடிகர்களைத்தான் நாடுவார்கள். 

அந்த வகையில், கோ படத்துக்குப்பிறகு ஜீவாவின் மீது இயக்குனர்களுக்கு ஓரளவு நம்பிக்கை பிறந்தது. அதோடு, படாதிபதிகளுக்கும் இவரை நம்பி முதலீடு செய்யலாம் என்றும் துணிச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து, சில படாதிபதிகள் தொடர்ந்து கால்சீட் கேட்டு ஜீவாவை முற்றுகையிட்டனர். 

அவரோ, கோ படத்தையடுத்து நடித்த, முகமூடி வெளியான பிறகு புதிய படங்களில் கமிட்டானால் 3 கோடியாக இருக்கும் படக்கூலியை 5 கோடி ஆக்கலாம் என்ற கணக்கில் கமிட்டாகாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். ஆனால் முகமூடி பெரிய அளவில் சறுக்கிவிட, ஜீவா போட்டு வைத்திருந்த கணக்கெல்லாம் தப்பாகி விட்டது. 

அவர் திரும்பிப்பார்த்தபோது, கால்சீட்டுக்காக நின்று கொண்டிருந்த அத்தனை படாதிபதிகளை தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தனர். இருப்பினும் சோர்வடையவில்லை ஜீவா, நீதானே என் பொன்வசந்தம் என்னை காப்பாற்றும் என்னை தில்லாக நின்று கொண்டிருந்தார். 

ஆனால் வழக்கம்போல் அந்த படமும் ஜீவாவுக்கு பலத்த அடியை கொடுத்திருப்பதால், இப்போது யான் படத்தில் நடித்து வரும் அவரது சம்பளம் 3 கோடியில் இருந்தும் கடகடவென இறங்கி விட்டதாம். 

அதிகம் பேசினால் படத்திலிருந்தே கடாசி விடுவார்கள் என்று, நீங்களா பாத்து ஏதோ கொடுங்கள் நடித்துவிட்டுப்போகிறேன் என்கிற அளவுக்கு பேசி வருகிறாராம் ஜீவா.

வருங்கால மனைவிக்காக நடிப்பை கைவிட்ட இசையமைப்பாளர்

பிரகாஷமான அந்த இசை அமைப்பாளர் சினிமாவில் நடிப்பது அவரது வருங்கால பாடகி மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். 

நடிகராகிவிட்டால் பெண் சகவாசங்கள் அதிகமாகி அதனால் தன் காதலுக்கு பங்கம் வந்துவிடுமோ என்று பயப்படுகிறாராம். 

சினிமாவில் நடிக்கவே கூடாது என்று எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அதையும் மீறி நடித்து வருகிறாராம் இசை அமைப்பாளர். இதனால் கோபித்துக் கொண்டு சில மாதங்கள் பேசவே இல்லையாம். 

இப்போது ஒரு வழியாக இந்த ஒரு படம்தான் இனிமேல் நடிக்கவே மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்து வருங்கால மனைவியை சமாதானப்படுத்தியிருக்கிறராம். 

காதலன் கைவிட்டுப் போய்விடுவாரரோ என பயந்த பாடகி சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்ல ஆரம்பித்து விட்டாராம். அனேகமாக ஏப்ரல் மாதத்திற்குள் மங்கள இசை கேட்கலாம் என்கிறார்கள். 

விஸ்வரூபத்திற்கு ஆதரவு குவிகிறது

கமல் நாளை தனது விஸ்வரூபம் திரையிடுவது பற்றி முறைப்படி அறிவிப்பு வெளியிடுகிறார். 

சென்னை ஹயாட் ரெசிடென்சி ஹோட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ். ஏ. சி. சேம்பர் தலைவர் கல்யாண், பெப்சி தலைவர் அமீர், இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும்  கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை கமலுக்கு தெரிவிக்கிறார்கள். 

முன்னதாக இன்று ஏர்டெல் டிடிஎச் அதிகாரிகளுடன் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். 

கமலின் இந்த வேகமான நடவடிக்கைகள் திரையுலகில் குறிப்பாக தியேட்டர் அதிபர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு டாக்டர்


மதுரையில் பெரிய மருத்துவமனை கட்டி சேவை மனப்பான்மையுடன் மருத்துவம் பார்ப்பவர் டாக்டர் பி.சரவணன். இவர் நடித்து நாளை(28.12.12) உலகம் முழுவதும் வெளிவர இருக்கும் படம் "அகிலன்"! 

ஸ்பாட்லைட் சினி கிரியேஷன்ஸ் எனும் புதிய பேனரில் டாக்டர்.பி.சரவணனே தயாரிக்கவும் செய்திருக்கும் இப்படத்தை ஹென்றி ஜோசப் எனும் புதியவர் இயக்கி இருக்கிறார். 

"திருடா திருடி" முதல் "யோகி" வரை இயக்குனர் சுப்ரமணிய சிவாவிடம் உதவியாளராக இருந்த ஹென்றி இயக்கி இருக்கும் முதல்படம் தான் "அகிலன்".

இதுநாள் வரை வெளிவந்த போலீஸ் கதைகளில் வித்தியாசமானதாக உருவாகி இருக்கும் அகிலன் படத்தில் போலீஸ் அதிகாரி அகிலனாக நடித்திருக்கும் டாக்டர் பி.சரவணன் ஜோடியாக புதுமுகம் வித்யா நடித்திருக்கிறார். 

டாக்டர் பி.சரவணன் - விதயா ஜோடியுடன் இளம் ஜோடிகள் அம்ரித் - லீமா, கஞ்சா கருப்பு, ரவிபால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

கணேஷ் ராகவேந்திரா இசையமைப்பில் "மன்மத லீலையை வென்றார் உண்டோ..." ரீ-மிக்ஸ் பாடல் படத்தின் பெரும் ஹைலைட் என்கிறார் இயக்குனர் ஹென்றி ஜோசப்!

ஆக்ஷ்ன், காதல், காமெடி, சென்டிமென்ட் என்று ஜனரஞ்சகமாக உருவாகியிருக்கும் அகிலன் படத்தின் கதை பெரும்பாலும் இரவில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டிருப்பதால் தன் மருத்துவ சேவை தொழிலுக்கு எந்தவித மாசுமின்றி இரவு நேரங்களில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு டாக்டர் பொளந்து கட்டியிருக்கிறாராம்! 

நாளை(28.12.12) அதையும் பார்ப்போம்! ஆல் தி பெஸ்ட்!

பாவ மன்னிப்பு கோரிய நயன்தாரா


நடிகை நயன்தாரா பிறப்பால் ஒரு கிறிஸ்தவ பெண். அதனால் என்னதான் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் தேவாலயங்களுக்கு சென்று பிரேயர் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். 

இருப்பினும் பிரபுதேவாவுடனான காதலுக்குப்பிறகு, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு ஒரு இந்து பெண்ணாகவே மாறினார். 

திருப்பதி போன்ற முக்கிய கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார். 

இதையடுத்து சில கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தும், என் சொந்த விசயத்தில் தலையிட மதவாதிகளுக்கு அனுமதியில்லை என்று காரசாரமாக அறிவித்து அவர்களின் வாயடைத்தார்.

ஆனால் அந்த அளவுக்கு பிரபுதேவா விசயத்தில் தீவிரமாக இருந்த நயன்தாரா, பிரபுதேவாவுடனான உறவு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மீண்டும் தன்னை கிறிஸ்தவ மதத்திலேயே இணைத்துக்கொண்டார். 

இதற்காக அவர் கேரளாவில் உள்ள ஒரு சர்ச்சிக்கு சென்று சில மாதங்களுக்கு முன்பே பாவ மன்னிப்பு கோரியதாகவும கூறப்படுகிறது. 

மேலும், நேற்று கிறிஸ்மஸ் தினத்தையொட்டி வழக்கம்போல் தனது குடும்பத்தினருடன் இணைந்து துபாயில் கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் நயன்தாரா.

தமிழ் டேவிட்டில் தாதா கேரக்டர் நீக்கம்


மணிரத்தினத்தின் உதவியாளர் பிஜாய் நம்பியார் இயக்கும் படம் டேவிட். தமிழ் மற்றும் இந்தியில் தயாராகி வருகிறது. 

இதில் விக்ரம், ஜீவா, தபு, லாராதத்தா, நாசர் நடிக்கிறார்கள். கோவாவில் வாழும் மீனவர் டேவிட்டாக விக்ரமும், மும்பையில் வாழும் கிதாரிஸ்ட் டேவிட்டாக ஜீவாவும் நடித்துள்ளனர். 

வெவ்வேறு காலகட்டங்களில் வாழும் ஒரே பெயரைக் கொண்ட இவர்கள் கதை இணைவதுதான் படம். ஆனால் இது தமிழுக்குத்தான். இந்தியில் ஒரு தாதா டேவிட்டும் உண்டு. 

அந்த கேரக்டரில் நீல்நிதின் முகேஷ் நடித்துள்ளார். மூன்று டேவிட்டின் கதையும் ஒரே இடத்தில் இணைவது மாதிரியான கதை இந்தியில். தமிழில் தாதா டேவிட் இருக்க மாட்டார். 

அவர் போர்ஷனை அப்படியே தூக்கி விட்டார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. படத்தின் நீளம் 3 மணி நேரத்திற்கு மேல் இருக்கும், அதை தமிழ் ரசிகர்கள் தாங்க மாட்டார்கள் என்பது ஒன்று. 

அந்த போர்ஷன் இருந்தால் இந்திப் படம் பார்க்குற மாதிரியே இருக்குமாம். இது மற்றொன்னு. 

எது எப்படியோ படம் நல்லா இருந்தா சரிதான்.

அஜித் ரசிகர்களுக்கு டைரக்டர் விஷ்ணுவர்தன் வேண்டுகோள்


அஜித்தை நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்வோம்; யாரும் பயப்பட வேண்டாம் என்று அஜித் ரசிகர்களுக்கு டைரக்டர் விஷ்ணுவர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நடிகர் அஜித் விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது விபத்து ஏற்பட்டது. 

இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. இந்த விபத்து குறித்த வீடியோவை பலர் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த வீடியோ வெளியிடப்பட்ட அன்று ட்விட்டரில் அதிகமாக ஷேர் செய்யப்பட்ட வீடியோ இதுதான்.

இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் அளித்துள்ள பேட்டியில், அஜித்தின் ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். 

நீங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறீர்களோ நாங்கள் அவரை அந்த அளவு நேசிக்கிறோம். 

படப்பிடிப்பில் விபத்து எதுவும் ஏற்படாமல் இருக்கத் தேவையான நடிவடிக்கைகளை எடுத்துள்ளோம். 

யாரும் பயப்பட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இளவட்ட ஹீரோக்களை சுண்டியிழுத்த சமந்தா


தமிழில் பாணா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ படங்களில் நடித்த சமந்தா இப்போது கெளதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்த பிறகு கோலிவுட்டின் இளவட்ட ஹீரோக்களை சுண்டியிழுத்து விட்டார். 

படம் சரியில்லை என்று ரசிகர்கள் ஜட்ஜ்மெண்ட் கொடுக்க, சமந்தா சரியாகத்தான் நடித்திருக்கிறார். 

அவரது அழகு, நடிப்புக்காகவே படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். 

அத்தனை க்யூட்டாக இருக்கிறார் என்று சில இளவட்ட நடிகர்கள் சமந்தாவின் அழகை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

இன்னும் சிலர் ஒருபடிமேலே சென்று, சமந்தாவை தொடர்பு கொண்டே புகழுரைகளை அள்ளி விட்டு வருகிறார்களாம். 

இதனால் முதலில் படம் வெற்றி பெறாமல் ஏமாற்றி விட்டதே என்ற மனக்கவலையில் இருந்த சமந்தா, இபபோது மனசு நிறைய சந்தோசத்தில் இருக்கிறார். 

காரணம், அவரது பர்பாமென்ஸை புகழ்ந்த இளவட்ட நடிகர்கள், அடுத்தடுத்து தங்களது படங்களில் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டிருக்கிறார்களாம். 

அதனால் கடல், ஐ படங்களில் நடிக்க இயலாமல் போன இழப்பை ஈடுசெய்ய புதிய தமிழ் படங்களில் கமிட்டாக வேகமாக தயாராகி வருகிறார் சமந்தா.

இனி ஆஸ்கர் வாங்கும் எண்ணமில்லை - ஏ.ஆர்.ரஹ்மான்


ஏற்கனவே 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கிவிட்டேன், மீண்டும் ஒருமுறை ஆஸ்கர் விருது வாங்கும் எண்ணம் இல்லை என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். 

மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதரித்து இன்று ஆஸ்கர் நாயகனாக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 

தமது இசையால் உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டுள்ள ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழி படங்களை கடந்து ஹாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். 

1997ம் ஆண்டு தனது வந்தே மாதரம் ஆல்பத்தை வெளியிட்ட ரஹ்மான், கிட்டத்தட்ட 15வருடத்திற்கு பிறகு இரு தினங்களுக்கு முன்னர் "இன்பினிட் லவ்" என்ற தனது புதிய ஆல்பத்தை வெளியிட்டார். 

இந்த ஆல்பம் உலகம் முழுக்க சக்க போடு போட்டு கொண்டு இருக்கிறது. இப்போது இந்த ஆல்பத்தோடு சேர்த்து இன்னொரு இசை விருந்தையும் தர இருக்கிறார் ரஹ்மான். 

கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு பின்னர், சென்னையில் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். 

வருகிற டிசம்பர் 29ம் தேதி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் மாலை 6 மணியளவில் நடக்க இருக்கிறது.

கள்ளத்துப்பாக்கி படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்

கள்ளத்துப்பாக்கி படத்திற்கு தியேட்டர் தராமல் கைவிரிப்பு. படம் ரிலீஸில் சிக்கல். கே.எஸ்.ரவிதேவன் என்பவர் கமலிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவர் இயக்கியுள்ள படம் கள்ளத்துப்பாக்கி. 

இந்தப்படம் இன்று 90 தியேட்டர்களில் வெளியாவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தியேட்டர் அதிபர்கள் திரையிட மறுத்ததால் 20 தியேட்டர்களில் மட்டுமே வெளியானது. 

பல தியேட்டர்களில் 3 காட்சிக்கு  ஒரு காட்சியாக குறைக்கப்பட்டது. 

விஜய் நடித்த துப்பாக்கி படத் தலைப்பிற்கு இவர்கள் வழக்கு போட்டதாலும் கமலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் சிலர் செய்யும் சதி இது என்று கூறப்படுகிறது. 

சிம்புவை டென்சன் பண்ணிய நடிகை


சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் போடா போடி. இந்த படத்தின் மீது அவர் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டம் வழக்கம்போல் இப்படமும் அவரை ஏமாற்றி விட்டது. 

சில நாட்களிலேயே பல தியேட்டர்களிருந்து படம் தூக்கப்பட்டதால் மனதளவில் நொந்து போனார் நடிகர். 

இருப்பினும் அடுத்தபடியாக வாலு படம் வந்து தனது நம்பிக்கைக்கு உயிர் கொடுக்கும் என்று அப்பட வேலைகளில் தற்போது தீவிரமடைந்திருக்கிறார்.

இந்தநிலையில், போடா போடி படத்தைப்பார்த்த சிம்புவின் திரையுலக நண்பர்கள் சிலர், அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த வரலட்சுமியின் நடிப்பை பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளுகிறர்களாம். 

முதல் படத்தில் நடித்தது மாதிரியே தெரியவில்லை. பல படங்களில் நடித்த அனுபவமிக்க நடிகை போல் நடித்திருக்கிறார் என்கிறார்களாம். 

அதில் சிலர், சில காட்சிகளில் நடிப்பில் உங்களையும் வரலட்சுமி மிஞ்சி விட்டார் என்றும் சொல்கிறார்களாம். 

இதனால் நான் வருங்கால சூப்பர் ஸ்டார் நடிகன். 

என்னைப்போய் அந்த புதுவரவு நடிகையிடன் ஒப்பிட்டு அசிஙக்ப்படுத்தி விட்டீர்களே என்று நண்பர்களிடம் டென்சன் காட்டி வருகிறாராம் சிம்பு.

மூன்று நாளில் கும்கி ரூ.8.50 கோடி வசூல்



திரையிடப்பட்ட மூன்று நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.8.50 கோடி வசூல் செய்துள்ளது பிரபுசாலமனின் கும்கி படம். 

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் சார்பில், டைரக்டர் பிரபுசாலமனின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் கும்கி. 

மைனா படத்திற்கு பிரபுசாலமன் இயக்கிய இப்படம் ரொம்பவே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். 

நடிகர் பிரபுவின் மகன் அறிமுக நாயகனாக வெளிவந்த இப்படத்தில் லட்சுமி மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். 

இவர்களுடன் தம்பி ராமையா, அஸ்வின் ராஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

கடந்தவாரம் டிசம்பர் 14ம் தேதி வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

உலகம் முழுக்க சுமார் 1000 தியேட்டரில் வெளியான இப்படம் முதல் மூன்று நாளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.8.50 கோடி வசூலாகியுள்ளது. 

அறிமுக நாயகன் ஒருவரது படம் இவ்வளவு வசூலாகி இருப்பது கும்கி படக்குழுவினரை உற்சாகம் அடைய செய்துள்ளது. 

கெளதம்மேனனை வெறுப்பேற்றிய இயக்குனர்கள்


சினிமாவைப்பொறுத்தவரை இயக்குனர்கள் என்றால் அவர் இயக்கும் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் வரை பிரச்சினை இல்லை. 

ஆனால் படங்கள் ஓடவில்லை என்றால் அவர்களைப்போன்ற இயக்குனர்களே அடுத்து ட்ராக் மாற வேண்டியதானே என்று சொல்வார்கள். 

அந்த நிலை தற்போது கெளதம்மேனனுக்கும் ஏற்பட்டுள்ளது. நடுநிசி நாய்களை அடுத்து தற்போது நீதானே என் பொன்வசந்தமும் ரசிகர்களின் ஆதரவினை பெறாததால், அடுத்து அவரை நடிப்பு என்ற ட்ராக்கிற்கு இழுக்கலாமா? என்று யோசித்த டைரக்டர் சமுத்திரகனி தான் இயக்கும் படத்தில் நடிக்க அழைத்தாராம்.

ஆனால், ஏற்கனவே வேட்டையாடு விளையாடு படத்தில் வெள்ளி நிலவே என்ற பாடலில் கமலுடன் நடனமாடியுள்ள கெளதம்மேனனோ, எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று மறுத்து விட்டாராம். 

சரி காமெடி ட்ராக்கிலாவது நடியுங்கள் என்று இன்னொரு டைரக்டர் அழைத்தபோது, என் பொழப்பு உங்களுக்கெல்லாம் காமெடியா இருக்குதா? என்று எரிச்சலை காட்டியிருக்கிறார் கெளதம். 

இதையடுத்து, உடனடியாக ஒரு மெகா ஹிட் கொடுத்து காலரை தூக்கி விட்டால்தான் தனக்கு மரியாதை என்று திரைக்குப்பின்னால் தீவிரம் காட்ட தொடங்கியிருக்கிறார் மனிதர்.

கூகுளை மிரள வைத்த சன்னி லியோன்

கூகுள் இணைய நிறுவனம், இந்தாண்டில், தங்கள் நிறுவன இணையத்தால், அதிகம் தேடுதலுக்கு ஆளான, சர்வதேச அளவிலான பிரபலங்களை பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. 

கூகுள் இணையம் மூலம், இந்தியர்களால், அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 

இதில், முதலிடத்தை பிடித்தவர், அன்னா ஹசாரே அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலாகத் தான் இருக்கும் என, நீங்கள் நினைத்தால், உங்களின் கணிப்பு தவறு. 

"ஜிஸ்ம்-2 என்ற இந்தி படத்தில் அறிமுகமான,  கனடா இறக்குமதியான, நடிகை சன்னி லியோனைத் தான், இந்திய ரசிகர்கள்,  கூகுளில் அதிகம் தேடியுள்ளனர். 

இத்தனைக்கும், இவர் நடித்த, ஒரே ஒரு படம் தான், வெளியாகியுள்ளது. தற்போது, ஏக்தா கபூரின்,  "ராகிணி எம்.எம்.எஸ்., என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

நிலைமை இப்படி இருக்க, இந்தி திரைப்பட ரசிகர்களுக்கு, லியோன் மீது, ஏன் கிறுக்கு பிடித்தது என்று தான் தெரியவில்லை.

கும்கி - சினிமா விமர்சனம்


கும்கி யானையை வைத்து பிழைக்கும் ஏழை இளைஞனை சுற்றி பின்னப்பட்ட ஜீவனுள்ள கதை...   

கேரள எல்லையில் வசிப்பவன் பொம்மன். சிறு வயதில் இருந்தே தன்னுடன் வளர்ந்த மாணிக்கம் என்ற யானையே அவன் உலகம். திருமணங்கள், கோவில்களுக்கு யானையை கொண்டு போய் சம்பாதித்து தனது வாழ்வை நகர்த்துகிறான். 

மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களை கொம்பன் என்ற காட்டு யானை கொன்று அழிக்கிறது. அவர்கள் பயிர்களையும் நாசம் செய்கிறது. வனத்துறையினர் வீடுகளை காலி செய்யும்படி நிர்ப்பந்திக்கின்றனர். முன்னோர் வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேற அவர்கள் மறுக்கின்றனர். 

காட்டு யானையை விரட்ட பழக்கப்பட்ட கும்கி யானையை கிராம மக்களே பணம் கொடுத்து வரவழைக்கின்றனர். பேசியபடி கும்கி யானையை வைத்திருப்பவனால் வர முடியவில்லை. அவன் வருவதுவரை பழங்குடி மக்களை ஏமாற்ற பொம்மன் யானையுடன் செல்கிறான். 

பழங்குடியினர் தங்களை காக்க வந்த தெய்வம் என்று பொம்மனையும், போலி ‘கும்கி’ யானையையும் கொண்டாடுகிறார்கள். பழங்குடியின தலைவனின் மகள் அல்லியின் அழகு பொம்மனை கிறங்க வைக்கிறது. அவளை பார்த்தவுடனேயே காதலில் வீழ்கிறான். 

ஒரிஜினல் ‘கும்கி’ யானையை வரவிடாமல் தடுத்து அல்லிக்காக அங்கேயே தங்குகிறான் பொம்மன். அல்லியும் அவனது காதலை ஏற்கிறாள். அவளுக்கு பெற்றோர் தங்கள் இனத்திலேயே மாப்பிள்ளை பார்க்கின்றனர். அப்போது காட்டு யானை கொம்பன் கிராமத்துக்குள் இறங்குகிறது. 

அதன்பிறகு நடப்பவை உயிரை உருக்கும் கிளைமாக்ஸ்... 


வித்தியாசமான கதை களத்தில் காட்சிகளை உயரோட்டமாக நகர்த்துகிறார் இயக்குனர் பிரபு சாலமன். பொம்மன் கேரக்டரில் விக்ரம் பிரபு வாழ்ந்திருக்கிறார். இவர் நடிகர் பிரபுவின் மகன். முதல் படத்திலேயே கனத்த கதைக்குள் கச்சிதமாய் பொருந்தி செஞ்சுரி அடிக்கிறார். 

தாய் மாமன் தூண்டுதலால் திருடிய யானையிடம் கோபிப்பது, வனத் துறையிடம் மன்றாடி யானையை மீட்பது என அழுத்தமான பதிவுகளாக மனதை நீங்காமல் இருக்கிறார். அல்லியுடன் காதல் வயப்படுவது கவித்துவம்... 

பழங்குடியினர் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையில் நெகிழ்ந்து காதலை உதறிவிட முடிவெடுத்து தனது மாமனிடம் பேசும் வசனங்களில் விழிகளில் நீர்முட்ட வைக்கிறார். கிளைமாக்சில் முதிர்ச்சியான நடிப்பில் முத்திரை பதிக்கிறார். 

அல்லியாக வரும் லட்சுமி மேனன் வனதேவதையாய் பளிச்சிடுகிறார். காட்டு யானையின் வெறியாட்டத்தில் தப்புவது திகில்... இன பழக்கத்தை மீற முடியாமலும், காதலை உதற முடியாமலும் தவித்து மனதில் கிறங்குகிறார். 

விக்ரம்பிரபுவின் தாய் மாமனாக வரும் தம்பி ராமையா கலகலப்பூட்டுகிறார். போலி கும்கி யானையை பழங்குடியினர் கண்டுபிடித்து விடுவார்களோ என உயிர் பயத்தில் இவர் நடுங்கும் சீன்கள் ரகளை. படம் முழுக்க ஒரே மாதிரியே பேசி திரிவது சலிப்பு. 

விக்ரம் பிரபுவின் உதவியாளராக உண்டியல் கேரக்டரில் வரும் அஸ்வின் சிரிக்க வைக்கிறார். பழங்குடியின தலைவராக வரும் ஜோய்மல்லூரி நேர்த்தி. காட்சிகளில் திருப்பங்கள், சஸ்பென்ஸ் வைத்து இருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும். 

இதையும் மீறி பழங்குடியினரின் வாழ்வியலும் மலையோர அழகியலும், காதலும் மனதை கட்டிப்போடுகிறது. இமான் இசையில் பாடல்கள் வருடுகின்றன. சுகுமாரின் கேமரா காட்டின் பசுமையை கண்களில் பதிக்கிறது.

நீதானே என் பொன்வசந்தம் - விமர்சனம்


‘மின்னலே’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ என கவுதம் மேனனின் காதல் படங்கள் வரிசையில் வந்த இன்னொரு படம்தான் ‘நீதானே என் பொன்வசந்தம்’. 

2-ம் வகுப்பு படிக்கும்போதே ஜீவாவும், சமந்தாவும் நண்பர்களாக இருக்கின்றனர். பிறகு சிறு பிரச்சினையில் இருவரும் சண்டைபோட்டு பிரிகிறார்கள். மீண்டும் 10-ம் வகுப்பு படிக்கும்போது ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். பழைய பகையை மறந்து மீண்டும் நட்பாக பழகுகின்றனர். இந்த நட்பு 11-ம் வகுப்பு வரை தொடர்கிறது. அதன்பின் மீண்டும் சண்டை போட்டு பிரிகின்றனர். 

அதன்பிறகு தொடர்பே இல்லாமல் இருக்கும் இவர்கள் இருவரும் பல கல்லூரிகள் பங்கேற்கும் விழாவில் நேரிடையாக சந்திக்கின்றனர். அப்போது, தங்களுடைய பகையை மறந்து நெருக்கமாக பழகுகின்றனர். இதனால் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. கல்லூரி முடிந்து வெளிவந்த பின்பும் தொடர்ந்து காதலிக்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுக்குள் மீண்டும் பிரச்சினை வர சண்டைபோட்டு பிரிகிறார்கள். 


பல வருடங்கள் கழித்து, தனது காதலியான சமந்தாவை பார்க்க ஒரு கடலோரக் கிராமத்திற்கு ஜீவா வருகிறார். அங்கு இருக்கும் சமந்தாவை சந்திப்பதற்காக 10 நாட்கள் அங்கேயே தங்கிவிடுகிறார். சமந்தாவை சந்தித்து பேசும்போது, அப்போதும் இருவருக்கும் சண்டை வருகிறது. அதனால், மறுபடியும் பிரிந்து செல்கிறார்கள். 


சில மாதங்கள் கழித்து சென்னையில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது தனக்கு அடுத்த மாதம் கல்யாணம் நடக்கப்போவதாக சமந்தாவிடம் ஜீவா சொல்கிறார். அதைக்கேட்டு சமந்தா பிரமிப்படைகிறார். 

இறுதியில் ஜீவாவுக்கு கல்யாணம் நடந்ததா? அல்லது ஜீவா-சமந்தா காதல் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை. 

கதையே இல்லாமல் ஒரு படம் எவ்வாறு எடுப்பது என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், உத்யோகம் பார்க்கும் இளைஞன் என மூன்றுவித கெட்டப்புகளில் வலம் வருகிறார் ஜீவா. 

இளைஞனாக கவர்ந்த ஜீவா மாணவ பருவத்தில் நம்மை ஈர்க்கவில்லை. 14 வயதில் எப்படி இருந்தாரோ அதுபோலவே 26 வயதிலும் இருக்கிறார். எப்போதும் ஒருவித டல்லாகவே இருக்கிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். 


நித்யாவாக சமந்தா நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். அழகின் மொத்த உருவமாய் பளிச்சிடுகிறார். பள்ளி மாணவியாக குறும்பு செய்வதிலும், கல்லூரி மாணவியாக காதல் கொள்வதிலும், இளைஞியாக காதலில் பிரிந்த சோகத்தை வெளிப்படுத்துவதிலும் நவரசங்களை தன்னுடைய நடிப்பால் பிழிந்தெடுத்திருக்கிறார். சமந்தாவிடம் எதிர்பார்க்காத நடிப்பை ரொம்பவும் அசாத்தியமாய் செய்திருக்கிறார். 

முதல் பாதியில் பின்னணி இசை இல்லாமல் தொய்வில் போகும் திரைக்கதையை தூக்கி நிறுத்துகிறார் சந்தானம். இவர் அடிக்கும் கமெண்டுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. குறிப்பாக ‘பொண்ணுங்களும் கியாஸ் பலூனும் ஒண்ணு, விட்டா பறந்துருவாங்க’ என்று இவர் சொல்லும்போது கைதட்டல்கள் காதை பிளக்கிறது. இவருக்கு ஜோடியாக வரும் அந்த குண்டுப் பெண்ணும் நம்மை கவனிக்க வைக்கிறார். 

இயக்குனர் கவுதம்மேனனுக்கு காதல், பிரிவு என இரண்டையும் பிரதானமாக வைத்து திரைக்கதையை நகர்த்துவதில் வெற்றிகரமான அனுபவம் இருப்பதால் அதை எளிதாக கையாண்டிருக்கிறார். வருண்-நித்யா கதாபாத்திரங்களை நம்முடன் உலவவிட்டிருக்கிறார். படத்தில் முதல் 10 நிமிடங்கள் டப்பிங்படம் போல் கதையை நகர்த்தியிருக்கிறார். 


எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான உணர்வை கொடுத்திருக்கிறது. இசைஞானியின் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாகிவிட்டது. அதை எப்படி படம் பிடித்திருப்பார்கள் என்ற ஆவலோடு வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அனைத்து பாடல்களும் மாண்டேஜூகளாக கொடுத்து ஏமாற்றம் அளித்திருக்கிறார். பின்னணி இசையும் பெரிதாக சொல்வதற்கில்லை. 

கவுதம் மேனனின் படங்களில் வசனம்தான் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். அதுமட்டுமே இந்த படத்தில் இருப்பது இப்படத்திற்கு பலவீனமாக உள்ளது. வசனங்களுக்கேற்ற ஆழமான காட்சிகள் இல்லை. காட்சிகள் அனைத்தும் செயற்கையாகவும், நாடகத்தனமாகவும் இருக்கின்றன. இவையெல்லாம் படம் முழுக்க இருப்பதால் படத்தை ரசிக்கமுடியாமல் போய்விட்டது. 

மொத்தத்தில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ வசந்தமில்லை.

தொடர்கிறது வைரமுத்து - இளையராஜா மோதல்

பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவுக்கும், இளையராஜாவுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு பிரிந்தார்கள். 

அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வது கூட கிடையாது. வைரமுத்துவின் மகன்கள் திருமணத்துக்கு அவர் இளையராஜா வீட்டுக்கே சென்று பத்திரிக்கை கொடுத்தும் இளையராஜா வரவில்லை. 

அவர் மனைவியே பத்திரிகை வாங்கினார். அவரே திருமணத்துக்கு வந்தார். இளையராஜாவின் மனைவி மறைந்தபோது வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் ஒரே விழாவில்கூட இதுவரை கலந்து கொண்டதில்லை.


சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசியும், எழுதியும் வருகிறார்கள். தற்போது இளையராஜாவும், வைரமுத்துவும் முன்னணியில் இருக்கும் இரு வார இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். 

அதில் இருவருமே ஒருவரை ஒரு காரசாரமாக தாக்கி எழுதி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு "சினிமா பாடகராக என்ற செய்ய வேண்டும்?" என்ற கேள்விக்கு இளையராஜா அளித்த பதில் "இசை அமைப்பாளருக்கு உதவியாளர் போல எடுபிடி வேலை செய்ய வேண்டும், யாரும் கேட்டால் இசை அமைப்பாளர் என் நண்பர் என்று சொல்ல வேண்டும். 

தன் பெயரில் மன்றம் வைத்துக் கொண்டு தெருவுக்கு தெரு விளம்பரம் வைக்க வேண்டும். அடிக்கடி புத்தகம் வெளியீட்டு விழா நடத்தி மற்றவர்கள் புகழ்வதை கேட்டு மகிழ வேண்டும். பணம் செலவு செய்து நிறைய விருதுகளை வாங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இது மறைமுகமாக வைரமுத்துவை தாக்கி எழுதப்பட்டதாகும். 



சமீபத்தில் வைரமுத்துவிடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த வைரமுத்து "ஒரு முறை ஜெயகாந்தன் தன் மகன் திருமணத்தை என் திருமண மண்டபத்தில் நடத்தினார். அந்த திருமண அழைப்பிதழை ஒரு இசை அமைப்பாளரிடம் கொடுத்திருக்கிறார். 

பத்திரிகையில் மண்டபத்தின் பெயரை படித்த இசை அமைப்பாளர் நான் அந்த மண்டபதுக்கு எப்படி வருவது என்று கேட்டிருக்கிறார். உடனே வராதவருக்கு எதற்கு அழைப்பு என்று அந்த பத்திரிகையை பிடுங்கி வந்து விட்டார் ஜெயகாந்தன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். 

வைரமுத்து குறிப்பிடும் இசை அமைப்பாளர் இளையராஜாதான் என்பது அனைவருக்கும் தெரியும்.  "சிலர் மறைமுகமாக உங்களை தாக்கி வருகிறார்களே?" என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள வைரமுத்து "கர்வத்தின் உச்சத்தை தொட்ட சில பேர் இறங்கி வராமல் அதே இடத்தில் நின்றே என்னை ஏசுகிறார்கள். 

அது குறைபாடுதானே தவிர குற்றமன்று. குற்றம் தண்டிக்கப்பட வேண்டியது, குறைபாடு நிவர்த்தி செய்யப்பட வேண்டியது. அவர்களுக்கு நான் பதில் தருவதை விட சிகிச்சை தருவதே சிறந்தது" என்று கூறியிருக்கிறார். அதோடு என்னை மறைமுகமாக தாக்குபவர்களுக்கு சைகோசிஸ் என்ற மனநோய் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.



மோதல் முற்றி வருகிறது. அடுத்து வரும் நாட்களில் இருவரும் ஒருவரை ஒருவர் எப்படித் தாக்கிக் கொள்வார்களோ தெரியவில்லை.



இந்த பங்காளிச் சண்டைக்கு முடிவே இல்லையா?

கொலை செய்யப்பட்டார் சில்க் ஸ்மிதா


டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக்கினார்கள். அது மிகப்பெரிய வெற்றியும் பெற்று விருதுகளையும் குவித்தது. 

தமிழில் சில்க் சுமிதாவின் வாழ்க்கையை படமாக்க பலர் முயற்சித்து வருகிறார்கள். பலர் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் மலையாளத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை க்ளைமாக்ஸ் என்ற பெயரில் படமெடுத்து முடித்து விட்டார்கள். 

சில்க்காக நடித்திருப்பவர் சனாகான். அனில் என்பவர் இயக்கி உள்ளார். சில்க்கின் தாடிக்கார நண்பராக சுரேஷ் கிருஷ்ணா நடித்திருக்கிறார்.

மற்ற படத்திற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்றால். இந்தப் படத்திற்கு கதை வசனம் எழுதியிருப்பவர் ஆண்டனி ஈஸ்ட்மேன் என்பவர். இவர்தான் முதன் முதலாக சில்க் ஸ்மிதாவை இணையைத் தேடி என்ற படத்தில் அறிமுகப்படுத்தியவர். 

விஜயமாலா என்ற பெயரை ஸ்மிதாவாக மாற்றினார். அப்புறம் வண்டிச்சக்கரம் படத்தில் வினு சக்ரவர்த்தி சில்க் என்ற அடைமொழி கொடுத்தார். ஆண்டனிதான் சில்க்கின் கடைசி காலம் வரை நண்பராக இருந்தவர்.

படத்தின் கதை இதுதான்... 

புகழ் பெற்ற ஒரு நடிகைக்கு உதவியாளராக வந்து பின்பு பார்டிகாடாக மாறுபவர் அவருக்கு நெருங்கிய உறவினரான ஒரு டாக்டர். கடைசி வரை அவரை தாடிக்காரர் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். நடிகைக்கு நிறைய சொத்து சேர்ந்ததும். 

ஏற்கெனவே திருமணமான தாடிக்காரர் நடிகையை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஆனால் நடிகைக்கோ தன் தீவிர ரசிகன் ஒருவன் மீது காதல். அவனின் அன்பு, நேசிப்பில் மயங்குகிறார் நடிகை. 

ரசிகனையே திருணம் செய்த கொள்ளவும் முடிவு செய்கிறார். இதனால் ஆத்திரமடையும் தாடிக்காரர் தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்று அவரை கொலை செய்து தூக்கில் மாட்டி தற்கொலை நாடகமாடிவிடுகிறார்.


படத்தில் எந்த இடத்திலும் சில்க் ஸ்மிதா என்ற வார்த்தைகூட வராது. படம் சம்பந்தப்பட்டவர்களும் இது சில்க் ஸ்மிதாவின் கதை என்று சொல்லிக் கொள்வதில்லை.

சில்க் இருந்தாலும் ஆயிரம் சர்ச்சை... இறந்தாலும் ஆயிரம் சர்ச்சை 

சிவாஜி 3டி - விமர்சனம்


ரஜினியின் 63-வது பிறந்தநாளில் அவரது பிறந்தநாள் பரிசாக ஏ.வி.எம்., நிறுவனம் தந்திருக்கும் படம்தான் "சிவாஜி 3டி". கதை என்னவோ சில வருடங்களுக்கு முன் வெளிவந்த அதே சிவாஜி படத்தின் கதை தான்! 

காட்சிகளும் அதேதான் என்றாலும் எடிட்டிங்கில் எக்கச்சக்கமாய் கத்தரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு "நச்" என்று மேலும் பிரமாண்டமாய் ரசிகர்களை "டச்" செய்கிறது "சிவாஜி 3டி". என்பது தான் ஹைலைட்!

"சஹானா..." பாடல் காட்சியில் ரஜினி ஆப்பிளை தூக்கி எறிவதும், அது ரசிகர்களை நோக்கி வருவதும் தியேட்டரில் கைதட்டல் ஓசையும், விசில் சப்தமும் காதை பிளக்கிறது. 

அதேமாதிரி படத்தின் க்ளைமாக்ஸ்க்கு முன்பு வில்லன் சுமன் மற்றும் அவரது அடியாட்களுடன் ரஜினி மோதும் காட்சியில், மொட்டை மாடியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான பணம், காற்றில் பறந்து வந்து ரசிகர்கள் மீது பணமழை பொழிவது போன்ற உணர்வு ஏற்படுவதும் பிரமாதம்.

3டி எபெக்ட், டால்பிஅட்மாஸ் சவுண்ட் என்று நவீன தொழில்நுட்பங்களால் ரஜினியின் உடலும், குரலும் ரசிகர்களின் மிக அருகில் மேலும் அருகில் வருவது போன்ற பிரம்மை படத்தின் வெற்றிக்கு மேலும் வித்திடும்! ரஜினியின் ஸ்டைலையும், வேகத்தையும் மேற்படி 3டி உள்ளிட்ட நவீன வசதிகளில் கண்டுகளிப்பதே அலாதியான அனுபவம் என்றால் மிகையல்ல!

பாடல்காட்சிகளில் ஸ்ரேயாவின் கவர்ச்சி பிரம்மாண்டங்களும், கண்களுக்கும், மனதிற்கும் மிக அருகில் வருவதும் சிவாஜி 3டி சிறப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்!

சண்டைகாட்சிகளில் ரஜினி அடிக்கும் ஒவ்வொரு அடியும் இடியாக இறங்குகிறது. அதே நேரம் 3டி எபெக்ட் செலவுகளை கருத்தில் கொண்டு ஒரு சில சண்டைகள் நீக்கப்பட்டிருப்பது சண்டை பிரியர்களுக்கு சற்றே ஏமாற்றத்தை தந்தாலும், 2007ம் வருடம் வெளிவந்த சிவாஜியை காட்டிலும் பல மடங்கு பளபளப்பாகவும், சிலிர்ப்பாகவும் இருக்கிறது "சிவாஜி 3டி" என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட டெக்னீஷியன்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பே இப்படம் பின்நாளில் 3டியில் வெளிவரும், டால்பி அட்மாஸ் சவுண்டில் சக்கைபோடும் என திட்டமிட்டே பணிபுரிந்து இருப்பார்கள் போலும்... அத்தனை அழகாக, மேற்படி நவீன தொழில்நுட்பங்களால் மிரட்டுகிறது "சிவாஜி 3டி" என்றால் அது எள்ளவும் பொய்யில்லை எனலாம்!

மொத்தத்தில், "சிவாஜி 3டி", உலகளாவிய ரஜினி ரசிகர்களின் "உள்ளத்திருடி!"

12.12.12-ல் துவங்கியது விஷாலின் பட்டத்து யானை

உலகமே வியக்கும் 12.12.12-ம் நாளில் விஷாலின் புதிய படமான பட்டத்து யானை படப்பிடிப்பு துவங்கியது. சமர், மத கஜ ராஜா படங்களுக்கு பிறகு விஷால் நடிக்கும் புதியபடம் பட்டத்து யானை. 

இப்படத்தில் விஷால் ஜோடியாக நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக களம் இறங்குகிறார். 

விஷாலை வைத்து மலைக்கோட்டை படத்தை இயக்கிய பூபதி பாண்டியன் இப்படத்தை இயக்குகிறார். 

நாடோடிகள் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். 

இப்படத்தின் பட பூஜை இன்று 12.12.12-ல் தொடங்கப்பட்டு முதல் காட்சியும் படமாக்கப்பட்டது.

அஜீத்தை கடுப்பேத்திய அனுஷ்கா


பெரும்பாலும் அஜீத் படமென்றால் அப்படத்தில் நடிப்பதற்கு நடிகைகள் மத்தியில் போட்டிதான் நிலவும். ஆனால் அப்படிப்பட்ட அஜீத் படத்தில் நடிப்பதற்கு அனுஷ்காவை சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அணுகியபோது, எந்த மாதிரி கதை. 

அதில் எனக்கு எந்த மாதிரி வேடம் என்று எதைப்பற்றியும் கேட்காமல், சம்பள விசயத்திலேயே குறியாக இருந்தாராம். 

அதிலும் ஏற்கனவே ஒரு கோடியை எப்போதோ தாண்டி விட்ட அனுஷ்கா, அஜீத் படத்தில் நடிப்பதற்கு 2 கோடி ரவுண்டாக கேட்டாராம். 

ஆனால் அந்த அளவுக்கு படத்தில் உங்களுக்கு வேலையும் இல்லை. படத்தின் பட்ஜெட்டும் இல்லை என்று படாதிபதி சார்பில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அனுஷ்கா அசையவில்லையாம். 

தொடர்ந்து சம்பள பேரம் பேசியிருக்கிறார். இந்த சேதி அஜீத்தின் காதுக்கு சென்றபோது, ஓவராக பேசினால் அவரை படத்திலிருந்து தூக்கி விடுங்கள் என்று சொல்லிவிட்டு, தமன்னாவுக்கு போன் போட்டு பேசியிருக்கிறார். 

அவரோ, உங்களுடன் நடிக்க வேண்டுமென்றால் சம்பளமே இல்லையென்று சொன்னாலும் நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்று ஸ்பாட்டிலேயே ஒப்புதல் கொடுத்திருக்கிறார். 

இந்த செய்தியை உடனே பட நிறுவனத்துக்கு சொல்லி தமன்னாவை புக் பண்ணியிருக்கிறார் அஜீத். ஆனால் இப்படி நேரடியாக அஜீத்தே தன்னை கடாசி விட்டு தமன்னாவை கமிட் பண்ணியிருக்கிற சேதி அறிந்து கடும் குழப்பத்தில் இருந்து வருகிறார் அனுஷ்கா. 

மேலும், இந்த சம்பவத்தினால் தனது மார்க்கெட் வீழ்ந்து விடாமலிருக்க சில அபிமான ஹீரோக்களின் அரவணைப்பையும் நாடியுள்ளார் அம்மணி.

சிவகார்த்திகேயனுக்கு பிடித்த நடிகை


தனுஷ் நடித்த 3 படத்தில் அவரது நண்பராக நடித்தவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர், அதையடுத்து பாண்டிராஜ் இயக்கிய மெரினா படம் மூலம் கதாநாயகனாக மாறினார். 

பிறகு எழில் இயக்கிய மனம் கொத்திப்பறவை படத்தில் நடித்தவர் இப்போது, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தனுஷ் தயாரிக்கும் எதிர்நீச்சல் படங்களில் நடித்து வருகிறார்.

இதுவரை அவர் நடித்த படங்களில் ஸ்ருதி ஹாசன், ஓவியா, பிந்து மாதவி, ப்ரியா ஆனந்த், நந்திதா உள்ளிட்ட சில வளர்ந்து வரும் நடிகைகள் நடித்துள்ளனர். 

இவர்களில் யார் உங்களுக்கு பிடித்தமான நடிகை என்று சிவகார்த்திகேயனைக் கேட்டால், இந்த நடிகைகள் எல்லோருமே நல்ல நடிககைள்தான். 

ஆனால் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இப்போது எதிர்நீச்சல் படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்கும் ப்ரியா ஆனந்த் சூப்பர். 

நடிப்பிலும் சரி, அழகிலும் சரி ரொம்ப க்யூட். 

இந்த மாதிரி அழகான நடிகைகளுடன் நடிக்கும்போது உடன் நடிக்கும் நமக்கும் நடிப்பில் அதிக இன்வால்வ்மெண்ட் ஏற்படும். 

அதை எதிர்நீச்சல் படத்தில் ப்ரியா ஆனந்துடன் நடித்தபோது நான் உணர்ந்தேன் என்கிறார்.

விஷாலின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய த்ரிஷா


லேட்டஸ்ட் ஹீரோயினிகளில் த்ரிஷாவின் தீவிர ரசிகராம் விஷால். அவர் நடித்த படங்களென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். 

எடுத்துக்கொள்ளும் கதாபாத்திரமாகவே மாறி விடும் த்ரிஷா ரொம்ப க்யூட் என்றும் அவரது அழகுக்கு பஞ்ச் வைக்கிறார் நடிகர். 

மேலும், த்ரிஷாவுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. அதற்காக இதற்கு முன்பு நான் நடித்த படங்களுக்கு ஹீரோயினி இன்னும் ஓ.கே ஆகவில்லை என்று டைரக்டர் சொல்லும்போதெல்லாம் த்ரிஷாவுக்கு போன் பண்ணி கேட்பேன். 

ஆனால் என் துரதிஷ்டம் அவர் அந்த நேரத்தில் வேறு வேறு படங்களில் லாக்காகியிருப்பார். அப்படி இதுவரை அவரிடம் நான்கு முறை கேட்டிருக்கிறேன்.

ஆனால் இந்த சமர் படத்திற்கான கதையே அவன் இவன் படத்தில் நடித்தபோது கேட்டநான், அப்போதே அவரிடம் இந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டுவிட்டேன். 

அவரும் இந்த முறை நாம் டூயட் பாடுவது உறுதி என்று வாக்குறுதி அளித்து இப்போது நடித்தும் கொடுத்து விட்டார். 

ஏற்கனவே பரிட்சயமான நடிகை என்பதால், மற்ற நடிகைகளுடன் நடித்ததை விட இந்த படத்தில் த்ரிஷாவுடன் ஓரளவு நெருக்கம் காட்டியே நடித்தேன். 

அதேபோல் அவரும் தயக்கம் இன்றி நெருங்கி நடித்ததால் காதல் காட்சிகள் ரொம்ப தத்ரூபமாக வந்திருக்கிறது என்று சொல்லும் விஷால், சமர் படத்தில் நடித்த பிறகுதான் த்ரிஷா ரொம்ப நல்ல நடிகை என்பதை கண்கூடாக உணர்ந்தேன் என்கிறார்.
Related Posts Plugin for WordPress, Blogger...