வதந்திகளை தடுக்க அமலாபால் புது ப்ளான்


தமிழைப்பொறுத்தவரை டைரக்டர் ஏ.எல்.விஜய்யுடன் மட்டுமே கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் அமலாபால். 

ஆனால் ஆந்திராவில் அங்குள்ள பிரபல நடிகர்கள் பலருடனும் அவரை இணைத்து தினம் தினம் கிசுகிசுக்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறதாம். 

ஆனால் எந்த நடிகர்களுடன் அதிகப்படியான நெருக்கத்தை வைத்துக்கொள்வதில்லையாம் அமலாபால். 

அதனால் இந்த மாதிரி செய்திகள் எப்படி வெளியாகிறது? என்பதை விசாரித்தபோது, அமலாவை பகைத்துக்கொண்டு சென்ற சில எடுபிடிகளே இந்த மாதிரியான செய்திகளை பரப்பி விட்டது தெரியவந்திருக்கிறது.

இதனால் உஷாராகி விட்டார் நடிகை, இப்போது தன்னைச்சுற்றி ஆந்திராவைச்சேர்ந்தவர்கள் இருப்பது தனக்கு ஆபத்து என்று நினைக்கிறார். 

அதன்காரணமாக, தனது மேனேஜர் தொடங்கி அனைத்து உதவியாளர்களையும் தனது சொந்த மாநிலமான கேரளாவிலிருந்து கொண்டு வந்து வேலை கொடுத்திருக்கிறார். 

அதில் சிலர் அமலாவின் உறவினர்களாம். இதையடுத்து, இனி தன்னைப்பற்றி தேவையில்லாத வதந்திகள் வெளியாக வாய்ப்பில்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் அமலாபால்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...