அதெல்லாம் ரஜினியாலதான் முடியும்

எந்திரன் மாதிரியான படங்களில் நடிக்க ரஜினியால்தான் முடியும்; என்னால் அப்படி நடிக்க முடியும் என தோன்றவில்லை, என்று நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் கூறியுள்ளார். 

எந்திரன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் விஞ்ஞானியாகவும், ரோபோவாகவும் வந்து கலக்கியிருந்தார். ரோபோ ரஜினி, ஐஸ்வர்யா மீது காதல் கொள்ளும் காட்சிகள் அனைவரையும் கவர்ந்தன. 

இந்நிலையில் எந்திரன் கதாபாத்திரம் போல் அமைந்தால் அதில் நடிப்பீர்களா என்று ரஜினிகாந்தின் மருமகனான தனுஷிடம் பேட்டியொன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தனுஷ், எந்திரன் போன்ற கதாபாத்திரம் எல்லாம் சூப்பர் ஸ்டாராக இருப்பவர்களால் தான் முடியும். 

ரஜினி தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர். அது போன்ற கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை, என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...