உலக அளவில் வசூல் சாதனை படைத்த 3டி அனிமேஷன் படம்


பெரிய நட்சத்திரங்கள் இல்லை, மாறுபட்ட லொக்கேஷன்கள் இல்லை, பறந்து பறந்து படப்பிடிப்புகள் இல்லை. 

இப்படி பல இல்லைகள் கொண்டு ஒரு படம் உருவாகி பெரிய ஸ்டார் பட்ஜெட் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிக் சாப்பிட்டு விட்டது என்றால் நம்பத்தான் முடியவில்லை. ஆனால் இது நிஜம். 

அந்தப்படம் தான் ஹோட்டல் ட்ரான்சில்வேனியா இது ஒரு 3டி அனிமேஷன் படம். முழுக்க சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் கற்பனையில் வடிவமைப்பில் உருவான படம். இயக்கியுள்ளவர் கெண்டி தார்த்தா கோவ்ஸ்கி.

ட்ராகுலா என்றால் ரத்தம்,பீதி மனிதர்களை கொல்வது என்று இதுவரை பயமுறுத்தியே வந்திருக்கிறார்கள். டிராகுலாவை வைத்து வயிறு வலிக்க சிரிக்க வைக்க முடியும் அதுவும் குழந்தைகளை கவர முடியும் நிரூபித்துள்ள படம்தான் ஹோட்டல் ட்ரான்சில்வேனியா அனிமேஷன் பாத்திரங்களுக்கு ஆடம் சாண்ட்லர்,ஆன்டி சம்பெர்க்,ஜெயின் ஜெம்ஸ் போன்ற நட்சத்திரங்கள் குரல் கொடுத்துள்ளனர். 

85 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் செப்டம்பர் 28-ல் வெளியானது. முதல் இரண்டாடு நாட்களிலேயே 4,25,22,194 டாலர்களை வசூல் செய்தது. 

இந்த வசூல் வீச்சு பிற படங்களை பின்னுக்குத் தள்ளி விட்டது. நவம்பர் 25 வரையிலான வசூல் 291 455 525 டாலர்கள். அதாவது குறுகிய காலத்தில் 291 மில்லியன் டாலர்களை அள்ளியிருக்கிறது. 

இதில் உள்நாட்டு வசூல் 49.3% என்றால் சில வெளிநாட்டு வசூல் 50.7% இன்னும் ஏராளமான வெளிநாடுகளில் வெளியாக வேண்டியும் உள்ளது. நம் நாட்டில் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது இப்படம். 

இந்த அதிரடி வசூலையடுத்து இதன் அடுத்த பாகம் உருவாக்கி 2015ல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...