சந்தானம்-பவர்ஸ்டார் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். விஷாகா சிங் நாயகியாக நடித்துள்ளார்.
முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கு பெற்றிருக்கும் இந்தப் படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 9ம் தேதி ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது..
ஷங்கர் முதல் சிடி-யை வெளியிட சிம்பு பெற்றுக் கொள்கிறார். டிசம்பர் 21 பரதேசியுடன் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எண் 305-ல் கடவுள் படத்திற்கு பிறகு மீண்டும் நாயகன் வேடம் ஏற்றிருக்கும் சந்தானம் இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.
சந்தானம் ராம.நாராயணனுடன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன், அறிமுக நடிகர் சேது என்று மேலும் இரண்டு பேர் இருக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடியை எய்ம் செய்து எடுக்கப்பட்டு வரும் படம் இது.
0 comments:
Post a Comment