டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக்கினார்கள். அது மிகப்பெரிய வெற்றியும் பெற்று விருதுகளையும் குவித்தது.
தமிழில் சில்க் சுமிதாவின் வாழ்க்கையை படமாக்க பலர் முயற்சித்து வருகிறார்கள். பலர் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் மலையாளத்தில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை க்ளைமாக்ஸ் என்ற பெயரில் படமெடுத்து முடித்து விட்டார்கள்.
சில்க்காக நடித்திருப்பவர் சனாகான். அனில் என்பவர் இயக்கி உள்ளார். சில்க்கின் தாடிக்கார நண்பராக சுரேஷ் கிருஷ்ணா நடித்திருக்கிறார்.
மற்ற படத்திற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்றால். இந்தப் படத்திற்கு கதை வசனம் எழுதியிருப்பவர் ஆண்டனி ஈஸ்ட்மேன் என்பவர். இவர்தான் முதன் முதலாக சில்க் ஸ்மிதாவை இணையைத் தேடி என்ற படத்தில் அறிமுகப்படுத்தியவர்.
விஜயமாலா என்ற பெயரை ஸ்மிதாவாக மாற்றினார். அப்புறம் வண்டிச்சக்கரம் படத்தில் வினு சக்ரவர்த்தி சில்க் என்ற அடைமொழி கொடுத்தார். ஆண்டனிதான் சில்க்கின் கடைசி காலம் வரை நண்பராக இருந்தவர்.
படத்தின் கதை இதுதான்...
புகழ் பெற்ற ஒரு நடிகைக்கு உதவியாளராக வந்து பின்பு பார்டிகாடாக மாறுபவர் அவருக்கு நெருங்கிய உறவினரான ஒரு டாக்டர். கடைசி வரை அவரை தாடிக்காரர் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். நடிகைக்கு நிறைய சொத்து சேர்ந்ததும்.
ஏற்கெனவே திருமணமான தாடிக்காரர் நடிகையை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஆனால் நடிகைக்கோ தன் தீவிர ரசிகன் ஒருவன் மீது காதல். அவனின் அன்பு, நேசிப்பில் மயங்குகிறார் நடிகை.
ரசிகனையே திருணம் செய்த கொள்ளவும் முடிவு செய்கிறார். இதனால் ஆத்திரமடையும் தாடிக்காரர் தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்று அவரை கொலை செய்து தூக்கில் மாட்டி தற்கொலை நாடகமாடிவிடுகிறார்.
படத்தில் எந்த இடத்திலும் சில்க் ஸ்மிதா என்ற வார்த்தைகூட வராது. படம் சம்பந்தப்பட்டவர்களும் இது சில்க் ஸ்மிதாவின் கதை என்று சொல்லிக் கொள்வதில்லை.
சில்க் இருந்தாலும் ஆயிரம் சர்ச்சை... இறந்தாலும் ஆயிரம் சர்ச்சை
0 comments:
Post a Comment