ஏற்கனவே 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கிவிட்டேன், மீண்டும் ஒருமுறை ஆஸ்கர் விருது வாங்கும் எண்ணம் இல்லை என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதரித்து இன்று ஆஸ்கர் நாயகனாக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
தமது இசையால் உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டுள்ள ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழி படங்களை கடந்து ஹாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர்.
1997ம் ஆண்டு தனது வந்தே மாதரம் ஆல்பத்தை வெளியிட்ட ரஹ்மான், கிட்டத்தட்ட 15வருடத்திற்கு பிறகு இரு தினங்களுக்கு முன்னர் "இன்பினிட் லவ்" என்ற தனது புதிய ஆல்பத்தை வெளியிட்டார்.
இந்த ஆல்பம் உலகம் முழுக்க சக்க போடு போட்டு கொண்டு இருக்கிறது. இப்போது இந்த ஆல்பத்தோடு சேர்த்து இன்னொரு இசை விருந்தையும் தர இருக்கிறார் ரஹ்மான்.
கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு பின்னர், சென்னையில் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார்.
வருகிற டிசம்பர் 29ம் தேதி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் மாலை 6 மணியளவில் நடக்க இருக்கிறது.
0 comments:
Post a Comment