நயன்தாரா ரிட்டன்ஸ் - எடுத்த எடுப்பிலேயே ரூ.1.5 கோடி சம்பளம்

காதல் கசந்துவிட்டதால் மீண்டும் நடிக்க ஆரம்பத்திருக்கும் நயன்தாராவுக்கு எடுத்த எடுப்பிலேயே ரூ1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா.

பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால், தெலுங்கில் ஸ்ரீராம்ராஜ்யம் படத்தோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டார்.

சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்பு வரை அவருடைய மார்க்கெட் ரேட்டிற்கு எந்த சரிவும் இல்லை. நல்ல நிலையிலேயே அவர் சினிமாவை விட்டு நீங்கினார்.

இந்நிலையில் பிரபுதேவா-நயன்தாரா காதலில் விரிசல் ஏற்பட்டு, இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் நயன்தாரா மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இப்போது தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ.1.5 கோ‌டியாம்.

நயன்தாராவின் இந்த சம்பள ரேட்டை கேட்டு முன்னணி நடிகைகள் பலர் வாயடைத்து போய் உள்ளனராம்.

நடிப்பிற்கு முழுக்கு போட்டு போன நடிகையை திருப்பி அழைத்து வந்து இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்களே என்று பலர் புலம்பி வருகின்றனர்.

முதல் படத்திற்கே இவ்வளவு என்றால் இனி நடிக்க போகும் படத்திற்கு...?! அப்ப இனிமேல் நயன்தாரா காட்டில் மழை தான்... போங்க!!

நண்பன் படத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்

நடிகர் விஜய் நடித்த "நண்பன் படத்தில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வசனங்கள் வருவதால், அவற்றை நீக்கக் கோரி விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்நாடு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.


திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சந்திரசேகர், இயக்குனர் ஷங்கர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு அக்கூட்டமைப்பின் தலைவர் சேம நாராயணன் அனுப்பியுள்ள கடிதம்:


மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்த ஆண்டி, பண்டார சமூகத்தினர்கள் தமிழகத்தில் பரவலாக உள்ளனர். அவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.


நண்பன் திரைப்படத்தில் சில காட்சிகளில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வரும் வசனங்கள் அச்சமுதாய மக்கள் மனம் புண்படும் அளவிற்கு அமைந்துள்ளது.


ஆண்டி என்றும், பண்டாரம் என்றும் வரும் அந்த வார்த்தைகளையும், பாரி, பூரி, கக்கூஸ் நாரி என்ற வார்த்தைகளையும் அப்படத்தில் இருந்து நீக்க வேண்டும்.


அந்த வசனத்தை நீக்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

ஊழலை கையில் எடுக்கிறார் கமல்ஹாசன்

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், ஊழலை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். தற்போது நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் படு பிஸியாக இருக்கிறார்.

ரூ.100 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியில் உருவாகி வரும் இப்படத்தில் கமல் ஜோடியாக பூஜா குமார் நடிக்கிறார்.

கமலே இயக்கி, நடித்து தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தன்னுடைய அடுத்தபடத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் கமல்.

விஸ்வரூபம் படத்திற்கு அடுத்தபடியாக தற்போது நாட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள ஊழலை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்கவுள்ளார் கமல்.

தமிழ் மற்றும் இந்தியில் உருவாக இருக்கும் இப்படத்தை கமலே இயக்கி, நடிக்க உள்ளார். இந்தியில் உருவாகும் படத்திற்கு "அமர் ஹெயின்" என்று பெயர் வைத்துள்ளார்.

இதுகுறித்து கமல் கூறுகையில், இந்தபடத்திற்கான கதையை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தயார் பண்ணிவிட்டேன்.

ஆனால் அப்போது அந்த படத்தை எடுக்க போதிய தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. இப்போது அதற்கான நேரம் கூடி வந்துள்ளது.

விஸ்வரூபம் படத்தை முடித்த பின்னர் இப்படத்தை எடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதனிடையே விஸ்வரூபம் படத்தின் பெரும்பகுதி சூட்டிங்கை கமல் முடித்துவிட்டாராம். இதனால் படத்தை மே மாதம் வெளியிட கமல் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பில்லா-2 திரைப்படம் ஒரு முன்னோட்டம்

அஜித் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பில்லா. அப்படத்தின் தொடர்ச்சியாக பில்லா-2 படம் உருவாகி வருகிறது.

தூத்துக்குடியில் சாதரண மனிதனாக, டேவிட்டாக இருந்தவர் எப்படி பில்லாவாக மாறுகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை.

இதில் டேவிட்டாக அஜித் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார்.

உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி ‌டோல்டி இயக்குகிறார்.

இன்‌எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஓய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.

விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

குள்ள நடிகரின் ராயல்டி ரவுசு

இதுநாள்வரை தமிழில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டதென்றால்., அதற்காக அதன் தயாரிப்பாளருக்கு வழங்கப்படும் டப்பிங் உரிமை பணத்தில் அந்த தமிழ்பட இயக்குநருக்கும், கதாசிரியருக்கும் ராயல்டி என ஒரு தொகை வழங்கப்படுவது தான் வழக்கமாக இருந்து வந்தது!

ஆனால் சமீபமாக வளர்ந்து வரும் அந்த குள்ள நடிகர் தான் நடிக்கும் ஒவ்வொரு தமிழ் படத்திற்கும் சம்பளமாக 18 கோடியையும், தெலுங்கில் தனக்கு நல்ல மார்கெட் இருப்பதால் அங்கும் படத்தை டப் செய்து வெளியிடுங்கள்... எனக்கூறி அதற்கு ராயல்டியாக 5 கோடியையும் கேட்டு கறாராக 23 கோடி ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக பெற்றுக் கொள்கிறாராம்! இதனால் கடுப்பில் இருக்கிறது இவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள்!

விஜய்யை அடிக்க தயங்கிய ஸ்ரீகாந்த்

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்துள்ள நண்பன் படம் மூலம், நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு ஒரு பிரேக் கிடைத்திருக்கிறது என்றால் அதுமிகையல்ல.

விஜய், ஜீவா ஆகியோருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தும் நண்பன் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் நண்பன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய்யை, ஜீவாவும், ஸ்ரீகாந்தும் அடிப்பது போன்று ஒரு காட்சி. ஆனால் இந்த காட்சியில் நடிக்க தயங்கியதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ஜீவாவும், நானும் விஜய்யை அடிப்பது போன்று காட்சி. ஆனால் இதில் நடிக்க நான் தயங்கினேன். பிறகு விஜய்யே வந்து தயங்காதீர்கள், இந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்று உற்சாகப்படுத்தினார்.

அதன்பின்னர் அந்தகாட்சியில் நடித்தேன். விஜய் ‌சொன்னது போன்று பலரும் அந்தக்காட்சியை பாராட்டினார்கள். சூட்டிங்கில் மூவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்.

நண்பன் படம் மூன்று ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் மூவருக்கும் சமமான கேரக்டர் தான். இதனால் மூவரும் தங்களது நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது.

அப்படி ஒரு கேரக்டரை அமைத்து கொடுத்த டைரக்டர் ஷங்கர் சாருக்கு நன்றி. ஷங்கர் சார் டைரக்டர் மட்டுமல்ல, ஒரு சிறந்த நடிகரும் கூட.

அவர் எப்படி நடிக்க சொன்னாரோ, அதன்படி அப்படியே நடித்தேன் என்றார்.

மும்பை சர்வதேச படவிழாவில் 2 தமிழ்ப்படங்கள்

மும்பையில் அடுத்தமாதம் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் 2 தமிழ்ப்படங்கள் உள்பட 61 சிறந்த படங்கள் திரையிடப்படுகின்றன.

மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 12வது திரைப்பட விழா நடைபெற உள்ளது.

இதுபுற்றி மத்திய அரசின் திரைப்பட பிரிவு டைரக்டர் ஜெனரல் பங்கிம் அளித்துள்ள பேட்டியில், 12வது மும்பை திரைப்பட விழா மும்பை நாரிமண்ணில் உள்ள தேசிய கலை மையத்தில் பிப்ரவரி 3ம்தேதி தொடங்குகிறது.

தொடர்ந்து 9ம்தேதி வரை ஒருவாரகாலம் டைபெறும் இவ்விழாவில், குறும்படங்கள், ஆவண படங்கள், அனிமேஷன் படங்கள் ஆகியவை திரையிடப்படுகின்றன.

அவற்றுக்கான போட்டிகள் சர்வதேச அளவில் தனியாகவும், தேசிய அளவில் தனியாகவும் நடத்தப்படுகின்றன.

சர்வதேச போட்டியில் 40 படங்களும், இந்திய அளவிலான போட்டியில் 2 தமிழ் படங்கள் உள்பட 61 படங்களும் திரையிடப்படுகின்றன, என்று கூறியுள்ளார்.

கமல் வேடத்தில் நடிக்க சல்மான்-ஷாரூக் போட்டி

தமிழில் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படம் இந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் கமல் வேடத்தில் நடிக்க சல்மான் மற்றும் ஷாரூக் இடையே போட்டி நடக்கிறதாம்.

சமீபகாலமாக பாலிவுட் நட்சத்திரங்களின் பார்வை, கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கோலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பல படங்கள் பாலிவுட்டிலும் ரீ-மேக் செய்யப்பட்டு வசூலை வாரி குவிப்பது தான்.

அந்தவகையில் சல்மான் கான் நடித்த பாடிகார்ட் படம் (தமிழில் வெளியான காவலன்) முதல்நாளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.21 கோடி வசூலாகி சாதனை படைத்திருக்கிறது.

இதுதான் இந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிக வசூலை குவித்த படமாகும். இதனால் மற்ற பாலிவுட் நடிகர்களுக்கும் தமி்ழ் படங்கள் மீது அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கமல், ஜோதிகா, கமலின் முகர்ஜி, பிரகாஷ்ராஜ் ஆகியோரது நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வேட்டையாடு விளையாடு படத்தை இந்தியிலும் ரீ-மேக் செய்ய இருக்கிறார் கவுதம்.

இதில் கமல் வேடத்தில் நடிக்க சல்மான் கான் மற்றும் ஷாரூக்கான் பெயர் அடிபடுகிறது. இருவருமே இந்தபடத்தில் நடிக்க ‌ரொம் ஆர்வமாய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம் கவுதம் மனதில் யார் இருக்கிறார்களோ அவர்கள் இந்தபடத்தில் நடிப்பார்கள். இதனால் கமலின் வேடம் யாருக்கு என்பதை பொறுத்திருந்து தான் பார்க் வேண்டும்.

பில்லா 2 - ரூ.5.30 கோடிக்கு வெளிநாட்டு உரிமை

அஜித்தின் பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை ரூ.5 கோடியே 30 லட்சத்திற்கு ஒரு பிரபல நிறுவனம் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2007ம் ஆண்டில் அஜித்துக்கு மெகா ஹிட் படமாக அமைந்த படம் பில்லா. அதன் தொடர்ச்சியாக இப்போது பில்லா-2 படம் உருவாகி வருகிறது.

டைரக்டர் சக்ரி டோல்டி இயக்கி வரும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இன்‌எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஓய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக பில்லா 2 படத்தின் விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பில்லா 2 படம் பற்றிய புதிய செய்திகள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன.

இப்படத்துக்கான உள் நாட்டு வெளிநாட்டு வியாபாரம் ஜரூராக நடந்து வரும் நிலையில், இதன் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை அஜித் படம் எதுவும் இவ்வளவு தொகைக்கு வெளிநாட்டில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கியில் இருக்கும் புல்லட் விஜய்

ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன் என டாப் கியரில் சென்று கொண்டு இருக்கிறார் நடிகர் விஜய்.

நண்பன் படத்தை முடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தில் பிஸியாகிவிட்ட விஜய், துப்பாக்கி படம் பற்றியும், படத்தில் நடித்து வரும் அனுபவம் குறித்து கூறியுள்ளார்.

துப்பாக்கி படம் என்னை இன்னொரு விஜய்யாக ரசிகர்களுக்கு காட்டும். இந்தபடம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும்.

துப்பாக்கி தான் படத்தின் கதை என்றால் துப்பாக்கியில் இருக்கும் புல்லட் நான். படத்தின் கதையை அற்புதமாக கொண்டு வந்துள்ளார் முருகதாஸ்.

துப்பாக்கியில் நடிப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் நண்பன் படம் குறித்து அவர் கூறுகையில், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நண்பன் படம் பெரிய ஹிட்டாகும் என்று எங்களுக்கு தெரியும்.

முதல்வன் படத்திலேயே நான் நடிக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது.

அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசை இப்போது நண்பன் மூலம் நிறைவேறி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அஜித்தின் பில்லா-2 போஸ்டர்கள் வெளியீடு

அஜித் நடித்து வரும் பில்லா-2 படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் அஜித்திற்கு மாபெரும் ஹிட் படமாக அமைந்த படம் பில்லா.

அதன் தொடர்ச்சியாக இப்போது பில்லா-2 உருவாகி வருகிறது. சக்ரி டோல்டி இயக்கி வரும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்‌எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஓய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

தூத்துக்குடியில் சாதரண மனிதனாக டேவிட்டாக இருந்தவர் எப்படி பில்லாவாக மாறுகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை.

படத்தின் சூட்டிங் ‌பெரும்பகுதி முடிவடைந்துள்ள நிலையில் பில்லா-2 படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

கோவப்பார்வையோடும், கையில் துப்பாக்கியோடும் வெளியாகியுள்ள இந்த ஸ்டில்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கூடவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடந்தகாலம் உண்டு, அதேபோல் ஒவ்வொரு டானுக்கும் ஒரு வரலாறு உண்டு என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

மெரினா திரைப்படம் ஒரு முன்னோட்டம்

பசங்க, வம்சம் படத்திற்கு ‌டைரக்டர் பாண்டிராஜ் இயக்கி வரும் புதிய படம் மெரினா.

சென்னையில் உள்ள பட்டினபாக்கத்தில் தொடங்கி, காசிமேடு, ஹார்பர் என்று மெரினா கடற்கரையை மையப்படுத்தி, கடற்கரைவாழ் மக்களின் வாழ்வு மற்றும் அவர்களது உணர்வுகளை வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார்.

படத்தின் நாயகனாக விஜய் டி.வி. புகழ் சிவகார்த்திகேயன் இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

அவருக்கும் ஜோடியாக ஓவியா நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் 50 புதுமுகங்களையும் அறிமுகப்படுத்துகிறார் பாண்டிராஜ்.

இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

கமல் படத்தில் அஜித்

கோலிவுட்டின் இப்போதைய ஹாட்-டாக் கமல்-அஜித் பற்றிய செய்தி தான். அப்படி என்ன செய்தி என்று கேட்கிறீர்களா...?

விரைவில் கமல் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அஜித்தும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க போகிறாராம். கமலின் தசாவதாரம் படத்தை தயாரித்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

இப்படம் வெளியான நேரத்தில் கமலுக்கும், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் இடையே சிறு முட்டல் மோதல் இருந்தது.

இப்போது அந்த மோதல் சரியாகி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையபோகிறார்களாம்.

விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து கமல் அடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அஜித்தும் நடிக்க போகிறாராம்.

ஏற்கனவே அஜித்துக்கும், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு இப்போது சரியாகிவிட்டதாகவும், கமல் நடிக்கும் படத்தில் நீங்களும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அஜித்திடம் ஆஸ்கர் தரப்பு பேசியதாகவும், அதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இந்தி ரமணாவில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய்!

இந்தியில் உருவாகவிருக்கும் ரமணா படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2002ம் ஆண்டு தமிழில் ரீலிஸ் ஆகி சக்கை போடு போட்ட படம் ரமணா. டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.

இப்படம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது.

இந்நிலையில் ரமணா படத்தை பார்த்த நடிகர் ஷாரூக் கான், அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசே படத்தை இயக்கவுள்ளார்.

இந்தி ரமணாவில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க கூடும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

பிரசவத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் நடிக்கும் முதல் படம் இதுவாகும். விரைவில் இந்தி ரமணா சூட்டிங் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நண்பன் படத்திற்கு எதிர்ப்பு - தியேட்டர்கள் அடித்து நொறுக்கம்

"நண்பன்" படத்தில் ஐ.ஜே.கே., கட்சி தலைவர் பச்சமுத்துவை பற்றி இழிவான வசனம் இடம்பெற்றதாக கூறி, அந்த வசனத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக கட்சியினர், தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்த நண்பன் படம், கடந்த 12ம் தேதி, தமிழகம் முழுவதும் ரிலீசானது. சேலம் நகரில், 11 தியேட்டர்களில், "நண்பன் படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பச்சமுத்து பற்றி இழிவான வசனம் இடம் பெற்றுள்ளதாக கூறி, அந்த வசனத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள், ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் குவிந்தனர்.

"எங்கள் தலைவர் பற்றிய இழிவான வசனத்தை நீக்க வேண்டும் எனக்கூறி தியேட்டர் முன் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது; போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது ஏற்பட்ட சலசலப்பில், கட்சியினர் சிலர், ஆத்திரத்தில் தியேட்டர் கண்ணாடியை உடைத்தனர்.

இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் கட்சி தொண்டர்களை சமாதானப்படுத்தி வெளியே இழுத்து வந்தனர்.

போலீஸ் துணை கமிஷனர் ரவீந்திரன் தலைமையில், உதவி கமிஷனர் காமராஜ் மற்றும் போலீஸார், தியேட்டர் முன் குவிக்கப்பட்டனர். பதட்டம் அதிகரித்ததையடுத்து, "தியேட்டரில் மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் ரத்து செய்யப்படும் என, தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது.

இதனையடுத்து இந்திய ஜனநாயக கட்சியினர் கலைந்து சென்றனர். மேலும் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை தொடர்ந்து ‌போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் கூறினர்.

நண்பன் - சினிமா விமர்சனம்

த்ரி இடியட்ஸ் எனும் பெயரில் இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற இந்தி திரைப்படம் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்க நண்பன் ஆகியிருக்கிறது!


பெற்றவர்களின் ஆசையை பிள்ளைகள் மீது திணிக்காமல் படிப்பு விஷயத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி விட்டால், அவர்கள் விரும்பிய துறையில் அவரவர் முன்னுக்கு வரமுடியும் எனும் கருத்தை கதையாக்கி, அதை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும் கமர்ஷியலாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை அமர்க்களமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.


விஜய், பஞ்சவன்பாரி வேந்தனாக பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். இவராகத்தான் இருக்கமுடியும் "கொசக்சி பச புகழாகவும் என்பதை ஸ்ரீவத்சன் எனும் சைலன்சர் சத்யன் அடிக்கடி சொல்வதிலிருந்து ஆரம்பத்திலேயே யூகிக்க முடிவது விஜய்யின் பாத்திரத்தை என்னவோ விஜய் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நடித்து அதை சரிசெய்திருக்கிறார்.


பஞ்சவன் பாரிவேந்தன் கொசக்சி பசபுகழ் என எண்ணற்ற முகங்கள் விஜய்க்கு இப்படத்தில் இருந்தாலும் இலியானாவுடன் காதல் வயப்பட்டு டூயட் பாடும் விஜய்யின் இயல்பான முகமே இளமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. விஜய் பாத்திரத்தை பொறுத்தவரை ஆயிரம் நிறை, குறைகள் சொன்னாலும் ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காமல் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காமெடியிலேயே கலக்கி இருப்பது வரவேற்கத்தக்கது!


சேவற்கொடி செந்தில் - ஜீவாவுக்கும், வெங்கட் ராமகிருஷ்ணன் எனும் ஸ்ரீகாந்த்துக்கும் ஆல் இஸ் வெல் என நெஞ்சில் கைவைத்துக் கொண்டு கவலைகளை மறந்திருக்க சொல்லும் விஜய்யின் சொல்-செயல்தான் வேதவாக்கு என்றாலும் ஆங்காங்கே அதிலும் நடிப்பிலும் மிளிர்ந்து நிற்கிறார் ஜீவா. பலே...பலே!


கதாநாயதி இலியானா ரியா எனும் பாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் மட்டுமே அவருக்கு பில்-டப்புகள் பிரமாதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் இருக்காண்ணா, இல்லியண்ணா இடுப்பானா இலியானா... பாடலில் இலியானா பிரமாதம்ண்ணா!


அதேமாதிரி இக்கட்டான சூழ்நிலையில் அக்கா அனுயாவிற்கு பிரசவம் பார்க்கும் இன்ஜினியர் விஜய்க்கு இளம் டாக்டரான இலியானா வெப்காமிரா வீடியோவில் பிரசவ மருத்துவ குறிப்புகள் கொடுக்கும் இடங்களில் பிரமாதமாக நடித்தும் இருக்கிறார். பேஷ், பேஷ் கீப் இட் அப்!


இலியானாவின் அப்பாவாகவும் பொறியியல் கல்லூரியின் பிரின்ஸ்பாலாகவும் வில்லனாகவும் விருமாண்டி சந்தனம் கேரக்டரில் வரும் மூத்த நடிகரின் கெட்-அப்பும் செட்-அப்பும் ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு வேண்டுமானால் ஓகே. நண்பன் மாதிரி ஒரு தமிழ்படத்திற்கு பெரிய பலவீனமாகும் அவரும் அவரது பாத்திரமும் என்றால் மிகையல்ல!

ஸ்ரீவத்சன் எனும் சைலன்சராக சத்யன் கிறுக்குதனமாக செய்யும் காரியங்கள் சில இடங்களில் கடிக்கவும் பல இடங்களில் சிரிக்கவும் செய்கிறது. ஒரிஜினல் பஞ்சவன்பாரிவேந்தன் எஸ்.ஜே.சூர்யா, பன்னீர்செல்வமாக-வசந்த் விஜய், ரியாவின் மாப்பிள்ளை ராகேஷாக வரும் டி.எம். கார்த்திக், கல்வி அமைச்சர் ஷண்முகசுந்தரம், விஜய்யின் வளர்ப்பு தந்தை அஜய் ரத்னம், விஜய்யின் தந்தை ராமு, மில்லிமீட்டர் ரின்சன், ஜீவாவின் தந்தை கும்பகோணம் அம்பி, ரியாவின் அக்கா ஸ்வேதாவாக வரும் அனுயா, ஸ்ரீயின் அம்மா உமா பத்மநாபன், ஜீவாவின் அம்மா நிர்மலாவாகவரும் சந்திரா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு நண்பனுக்கு நயம் சேர்த்திருக்கின்றனர் என்றால் மிகையல்ல!


நம் காதோரம் இன்னமும் இழையோடும் ஹாரிஸ் ஜெயராஜின் இனிய இசையும், மனோஜ் பரமஹம்சாவின் காண்போர் கண்ணுக்குள்ளேயே எப்போதும் நிற்கும்படியான ஒளிப்பதிவும் நண்பனின் பெரும்பலம்!


ஆயிரம்மிருந்தும் வசதிகள் இருந்தும் பிரமாண்டத்திற்கு பெயர்போன ஷங்கர், இயற்கை உபாதைகள் வருவது, போவதையெல்லாம் பிரமாண்டபடுத்தியிருப்பது சைலன்ஸ் காமெடி என்றாலோ, இப்படத்தில் வரும் சைலன்ஸரி (சத்யன்)ன் காமெடி மட்டுமென்றாலோ ஓகே! ஜீவா, ஸ்ரீகாந்தை எல்லாம் பிரின்ஸிபால் வீட்டு வாசலில் ஒன்பாத்ரூம் போகவிடுவதையும், ஆ, ஊ என்றால் ஜட்டியோடு டான்ஸ் ஆட விடுவதையும் காலில் விழ செய்வதையும் எற்றுக் கொள்ளவே முடியவில்லை.


என்னதான் இளைஞர் பட்டாளம் காலேஜ் கேம்பஸ், ராகிங், ரவுசு, ரீமேக்கதை இத்யாதி, இத்யாதி என்றாலும் "உவ்வே என குமட்டல் வருவதை இயக்குநர் ஷங்கர் நினைத்திருந்தால் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்!


ஆக மொத்தத்தில் எல்லாவற்றையும் ரசிக்க தெரிந்தவர்களுக்கு "நண்பன் - நன்"ஃபன்

விஜய்யின் உழைப்பை பார்த்து வியந்து போன ஸ்ரீகாந்த்

பைக்ரேஸ் பிரியரான ஸ்ரீகாந்தை, "ரோஜாக்கூட்டம்" படம் மூலம் ஹீரோவாக்கி அழகு பார்த்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்த ஸ்ரீகாந்த், இடையில் சிறு சிறு சறுக்கல்களை கடந்து இப்போது டைரக்டர் ஷங்கரின் நண்பனில் விஜய், ஜீவாவோடு நடித்து ரொம்ப பரபரப்பாக காணப்படுகிறார்.

நண்பன் படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பற்றி ஸ்ரீகாந்த் சொல்லும் போது ரொம்பவே வியப்படைகிறார்.

அவர் கூறுகையில், எந்த பந்தாவும் இல்லாம ரொம்ப எளிமையானவர் தான் விஜய்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது. படத்தில் அவரோட டெடிகேஷன், அந்த கடின உழைப்பு என்னை பிரமிக்க வச்சிருக்கு.

நெருடல் இல்லாத நடிப்பு, சின்சியாரிட்டி தான் விஜய்யை இந்த அளவிற்கு கொண்டு போயிருக்குன்னு நினைக்கிறேன். நண்பன் படத்தில் அவருடன் நடித்தது நல்ல அனுபவத்தை தந்தது. "என் ப்ரெண்ட போல யாரு மச்சான்..." என்ற பாட்டை கிட்டத்தட்ட 25 வருஷ பழைய வாட்டர் டேங்கில் வைத்து சூட் பண்ணினோம்.

அங்கு சூட்டிங் நடந்த அனுபவத்தை இப்ப நினைச்சாலும் பயமா இருக்கு. படத்தோடு முதல் சாங்கும் அதுதான். கிட்டத்தட்ட 14நாட்கள் சூட்டிங் நடந்தது. சூட்டிங் ஆரம்பிக்கும் வரை ரொம்ப அமைதியா இருப்பார் விஜய்,

ஆனால் சூட்டிங் ஆரம்பிச்சுட்டா அந்தகாட்சியில் பின்னி எடுத்திடுவார். ரொம்ப ஹோம்வொர்க் பண்ணக்கூடியவர். அதனால் விஜய்யை பார்க்கும் போதெல்லாம் ரொம்ப வியந்து பார்ப்பேன் என்கிறார்.

டைரக்டர் ஷங்கரை பற்றி பேசிய ஸ்ரீகாந்த், கடும் உழைப்பாளி அவர். பாட்டையே படமா எடுக்க கூடியவர். ரொம்ப ப்ரெண்ட்லி டைப். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நண்பன் படம் எனக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்திருக்கு.

அகில், அஹானா என்று எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்காங்க. என் பெண் குழந்தைக்கு வரும் 28ம் தேதி முதல் பிறந்தநாள். அதை நல்லபடியாக கொண்டாடப்போறேன்.

இந்த 2012ம் வருஷம் எனக்கு நல்ல தொடக்கமாக இருக்கும், அதற்கு நண்பன் படமும் எனக்கு மேலும் உற்சாகத்தை அளித்திருக்கிறது என்றார்.

பிப்ரவரி 3-ல் கொலவெறி 3 ரிலீஸ்

உலகமெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் கொலவெறி பாடல் இடம்பெற்ற 3 திரைப்படம் பிப்ரவரி 3ம் தேதி முதல் ரிலீசாக உள்ளது. தனுஷ் நடிப்பில் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் முதல்படம் 3.

இப்படத்தில் தனுஷ் ஜோடியாக கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். 3 படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்த போதே, அப்படத்தில் இருந்து கொலவெறி எனும் பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்டது.

புதுமுகம் அனிருத் இசையமைப்பில் வெளிவந்த இப்பாடலை தனுஷே எழுதி, பாடியிருந்தார்.

இப்பாட்டு வெளியான முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பார்த்தும், கேட்டும் உள்ளனர்.

குழந்தை முதல் பெரியவர் வரை பலரையும் கவர்ந்த இந்தபாடல் தனுஷையும், இசையமைப்பாளர் அனிருத்தையும் உலகம் முழுக்க பிரபலமாக்கியது. தனுஷூக்கு பிரதமர் விருந்தில் பங்கேற்கும் அளவுக்கு கவுரம் கிடைத்தது இந்த கொலவெறி பாடல் மூலம்.

இந்நிலையில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ள 3 படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி முத‌ல் உலகமெங்கும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதுமட்டுமின்றி கொலவெறி பாட்டுக்காகவே இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிகளவிலான தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மேலும் இப்படத்தை மும்பையை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று வெளியிட போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே கொலவெறி பாடல் ஹிட்டான சந்தோஷத்தில், படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் விருந்து கொடுத்துள்ளனர் தனுஷூம் அவரது மனைவி ஐஸ்வர்யாவும்.

வெறும் 25நாளில் உருவான ஒரு படம்

ஒரு வருடம், இரண்டு வருடம் என்று ஒரு படத்தை எடுத்து வரும் இந்தக்கால இயக்குநர்களுக்கு மத்தியில், வெறும் 25 நாளில் ஒரு படத்தை எடுத்துள்ளனர். அந்த படத்தின் பெயர் கொண்டான் கொடுத்தான்.

ஐயப்பா ஆர்ட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், டைரக்டர் வீ.சேகரின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராஜேந்திரன் என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தின் நாயகனாக வெளுத்துக்கட்டு கதிரும், நாயகியாக அத்வைதாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இளவரசு, சுலோக்ஷ்னா, ராஜ்கபூர், மீரா கிருஷ்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் வீ.சேகர் போலவே, ராஜேந்திரனும் குடும்ப படமாக கொண்டான் கொடுத்தான் படத்தை இயக்கியுள்ளார்.

அதுவும் வெறும் 25நாட்களில். இது எப்படி சாத்தியம் என்று ராஜேந்திரனிடம் கேட்டால், சரியா திட்டமிட்டு எடுத்தால் 25 நாள் என்ன அதற்கும் கு‌றைந்தா நாளில் ஒரு தரமான தமிழ்ப் படத்தை எடுக்கலாம் என்கிறார்.

முன்னதாக இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. படத்தின் ஆடியோ சி.டி.யை தயாரிப்பாளர் சங்க தலைவரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட, இசையமைப்பாளர் தேவா பெற்றுக்கொண்டார்.

பின்னர் தேவா பேசுகையில், படத்தில் மொத்தம் 5 பாடல்களும் நன்றாக வந்துள்ளன. பாடல் மட்டுமல்ல படமும் நன்றாக வந்திருக்கிறது. ரீ-ரெக்கார்டிங் செய்வதற்காக இப்படத்தை முழுவதும் பார்த்தேன்.

கிளைமாக்ஸ் காட்சியில் என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அந்த அளவிற்கு படம் என்னை பாதித்தது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் டைரக்டர் ராஜேந்திரன் என்றார்.

இனி பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கள் படம் ரிலீஸ்

பெரும்பாலான தியேட்டர்களில் பெரிய நடிகர்களின் படங்கள் ஆக்கிரமிப்பதால், சிறு பட்ஜெட் படங்கள் முடங்கி வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, இனி பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய நடிகர்கரின் படங்களை ரிலீஸ் செய்வதென்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து இயக்குநரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தியேட்டர்‌களை பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் ஆக்கிரமித்து கொள்கிறது.

இதனால் சின்ன பட்ஜெட் படங்கள் பல முடங்கி போய் உள்ளன. கடந்த ஆண்டு தணி‌க்கை செய்யப்பட்டு கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகமால் முடங்கி போய் உள்ளன.

இதனால் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம்.

இந்த நிலைமையை சரிசெய்யும் பொருட்டு, பெரிய நடிகர்களின் படங்களை ஏப்ரல் 14, மே 1, ஆகஸ்ட் 15, தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய 5 தினங்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம்.

இதன் மூலம் சின்ன பட்ஜெட் படங்களுக்கும் போதிய தியேட்டர் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

ஸ்லிம்மாகும் கொழு கொழு ஹன்சிகா

இனிமேல் ஹன்சிகாவை யாரும் கொழு கொழு நடிகை என்று கூறமாட்டார்கள்...! ஆம் தனது உடம்பை குறைத்து டயட்டில் இருந்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி. கடந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு புதுவரவாக வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.


மாப்பிள்ளை, எங்கேயும் காதல், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் நடித்த வேலாயுதம் படத்தை தவிர மற்ற இரண்டு படங்கள் சரியா‌க போகவில்லை என்றாலும் அம்மணிக்கு கோலிவுட்டில் ஏகப்பட்ட வரவேற்பு. தற்போது உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் சிம்புவுடன் வேட்டை மன்னன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.


அம்சமான முகமும், அழகான சிரிப்பும் கொண்ட ஹன்சிகாவை பலரும் பப்ளி கேர்ள் என்று தான் அழைத்து வருகின்றனர். அதற்கு காரணம் அவருடைய கொழு கொழு உடம்பு தான்.


அதுமட்டுமல்ல இவருக்கு சின்ன குஷ்பூ என்று பட்டம் அளித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்திய சிலகாலத்தில் தனது உடல் பெருத்துவிட்டதால் சற்றே கவலை அடைந்த ஹன்சிகா, தனது உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை அதிநவீன சிகிச்சை மூலம் குறைத்துள்ளாராம்.


மேலும் உடம்பு மறுபடியும் ‌அதிகமாகல் இருக்க அம்மணி பார்த்து, பார்த்து உணவு வகைகளை சாப்பிடுகிறாராம்.


தீவிர டயட்டில் இருக்கும் ஹன்சிகாவை இனி யாரும் பார்த்தால் கொழு கொழு ஹன்சிகா என்று கூறமாட்டார்கள். அந்தளவிற்கு தனது உடம்பை குறைத்து ஸ்லிம்மாக்கி வருகிறார் ஹன்சிகா

ரீல் மம்மியாகிறார் ரியல் மம்மி

ரியல் லைஃபில் பெரிய ஹீரோயினனின் கிளாமர் மம்மியாக இருக்கும் நடிகை த்ரிஷாவின் அம்மா உமா விரைவில் ஒரு பெரிய பேனர் படத்தில், ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

த்ரிஷாவும் அவரது அம்மாவும் அண்மையில் பாஸ்மதி அரிசி விளம்பரத்தில் நடித்திருந்தனர். அந்த விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

அதற்குப் பின்னர் த்ரிஷா அம்மாவை பல்வேறு சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் அனுகி படத்தில் நடிக்குமாறு கேட்டு நச்சரித்து வந்ததாம்.

அதற்கு எல்லாம் பிடி கொடுக்காத த்ரிஷா அம்மா இப்போது பெரிய பேனர் படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம்.

அந்தப் படத்தில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடிக்கும் உமாவின் கேரக்டருக்கும் அதிக வெயிட்டாம்.

எனவே விரைவில் வெள்ளித்திரையில் உமாவைக் காணலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

கமல்ஹாசன் நடித்த "மன்மதன் அம்பு" படத்தில் த்ரிஷா அம்மா நடிக்கப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகி, அது பின்னர் பொய்யானது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

உலக அமைதிக்காக சிம்பு பாடிய பாடல்

பிரபல பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக் கலைஞர் ரிஹானா ஆகியோருடன் கூட்டு சேர்ந்து உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் நடிகர் சிம்பு.


இதுவரை லூசுப்பெண்ணே... எவன்டி உன்ன பெத்தான் போன்ற பாடல்களை எழுதி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பும், பெண்கள் மத்தியில் அதிருப்தியையும் சம்பாதித்து கொண்ட சிம்பு, பெண்களையும் திருப்திபடுத்தும் விதமாக, சமீபத்தில் ஒஸ்தி படத்தில் பொண்டாட்டி பாடலை எழுதினார்.


இந்தபாடலை கேட்டு பலரும் தங்களுக்கு வரப்போகிற கணவர் இப்படி இருக்கமாட்டாரா...! என்று பெண்களை ஏங்க வைத்தார்.


இந்நிலையில் இப்போது எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபடி மேலே போய், உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். பிரபல அமெரிக்க பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக் கலைஞர் ரிஹானா ஆகியோருடன் சேர்ந்து இந்த பாடலை உருவாக்கிறார் சிம்பு.


96 மொழிகளில் காதல் என்று பொருள்படும் வார்த்தைகளை இப்பாடலில் பயன்படுத்தி இருக்கிறார் சிம்பு. 96 மொழிகளையும், பல கோடி மக்களையும் இணைக்க, தடைகளை உடைத்து, அனைவரும் உடையாத பந்தங்களாக.. இதோ.. உலக அமைதிக்காக ஒரு இந்தியனின் சிறு பங்களிப்பு " என்று சிம்பு சொல்லியிருக்கிறார்.


மேலும் அன்புக்கான பாடலாக, உலகத்தின் அன்பு கீதமாக இந்த பாடல் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.நேற்று வெளியான இப்பாடல், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


சமீபத்தில் தனுஷின் கொலவெறி பாடல், அவரை பிரதமர் விருந்தில் பங்கேற்கும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியுள்ளது.


இதனால் புகழின் உச்சியில் இருக்கிறார் தனுஷ். அதேபோல் சிம்புவும், தனுஷூக்கு நிகராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சி தான், இந்த உலக அமைதி பாடல் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

நண்பன் - முன்னோட்டம்

அமீர்கான் நடிப்பில் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 3-இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக் தான் நண்பன்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி இருக்கும் இப்படத்தின் ஹீரோக்களாக விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

நாயகியாக இலியானா நடித்துள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள இப்படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது.

கஞ்சா கருப்பு படத்தில் வெளிநாட்டு நட்சத்திரங்கள்

இன்றைய காமெடி நடிகர்கள் வரிசையில் தன் எதார்த்த நடிப்பாலும், எல்லாரையும் கவரும் சிரிப்பாலும் ரசிகர்களை சிரிக்க வைத்து கொண்டு இருப்பவர் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு.

டைரக்டர் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட கஞ்சா கருப்பு இன்று டாப்-5 காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுநாள்வரை காமெடி நடிகராக இருந்து வந்த இவரை, ஒருவர் ஹீரோவாக்கியுள்ளார்.

புதுமுக இயக்குநர் தனசேகர், "மன்னார் வளைகுடா" என்ற பெயரில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். அதில் கஞ்சா கருப்பு தான் ஹீரோ.

மனித உணர்வுகளை மையமாக வைத்து கடல்சார்ந்த கதையை தாங்கி, இதுவரை யாரும் சொல்லாத விஷயத்தை சொல்ல வருகிறார் புதுமுக இயக்குநர் தனசேகர். படத்தில் கஞ்சா கருப்புக்கு ஜோடியாக காவேரி என்பவர் நடிக்கிறார்.

சென்னை, ராமேஸ்வரம், பாண்டிச்சேரி போன்ற கடல்சார்ந்த இடங்களை தேர்ந்தெடுத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். படத்தின் சிறப்பு அம்சமாக வெளிநாட்டுக்காரர்களையும் நடிக்க வைத்துள்ளனர்.

இதற்காக ஜெர்மன் மாடல் சந்திரா ராமு, அமெரிக்காவை சேர்ந்த அமி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெஸி ஆட்ஸ் போலன் உள்ளிட்டவர்களையும் கஞ்சா கருப்போடு சேர்ந்து மன்னார் வளைகுடா படத்தில் நடிக்க வைத்துள்ளார் டைரக்டர்.

படத்தின் காட்சி அமைப்பு, அதற்காக அவர்கள் எந்தமாதிரி நடிக்க வேண்டும் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர் படக்குழுவினர்.

மெளன குரு - சினிமா விமர்சனம்

அதிகார வர்க்கம் நினைத்தால் ஒரு சாமான்யனை எப்படி, எப்படி எல்லாம் படுத்த முடியம் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்து காட்டியிருக்கும் கலக்கலான, கதையம்சம் உடைய படம் தான் "மெளன குரு" மொத்தமும்!


எந்த தப்புமே செய்யாதே ஹீரோ அருள்நிதி, போலீஸ் செய்யும் ‌‌தொடர் தவறுகளால் அதோகதி ஆகிறார்! அதற்காக ஆக்ஷன் அவதாரம் எடுத்து போலீஸை, அருள்நிதி அடித்து துவம்சம் பண்ணுகிறார்... இதுதானே மெளனகுரு கதை... என நீங்கள் யூகித்தால் அதுதான் இல்லை!


பொல்லாத போலீஸை பொறுப்புள்ள பெண் போலீஸ் ஒருவரே பார்த்து கொள்கிறார். அருள்நிதி, காதல், கல்லூரி, என மவுனமாக தன் கடமையை செய்வதோடு சரி! இதுதான் காட்சிக்கு காட்சி அடுத்து என்ன நடக்குமோ? என எதிர்பார்ப்பை கூட்டி விடும் மெளன குரு படத்தின் பெரிய ப்ளஸ்!


பன்ச் டயலாக், வாயில் சதா சர்வ காலமும் புகையும் சிகரெட், சரக்கு, சைடீஸ், சப்போர்ட்டுக்கு சுற்றிலும் நான்கு காமெடி பீஸ் என ஹீரோயிசம் காட்டும் ஹீரோக்களுக்கு மத்தியில் இது எதுவுமே இல்லாமல் மெளனமாகவே படம் முழுக்க நடித்து ஹீரோவாகவே வாழ்ந்திருக்கிறார் அருள்நிதி!


ஹீரோயின் இனியாவும், தன் பங்கிற்கு இயல்பாக நடித்து சபாஷ் வாங்கிவிடுகிறார். ஆனாலும் மருத்துவக்கல்லூரி மாணவி தன் வருங்கால மணாளனுக்கு என்ன விதமான இன்ஜக்ஷ்ன் ‌போடப்படுகிறது? எதுமாதிரி ட்ரீட்மெண்ட் தரப்படுகிறது? என்று கூட காலி இன்ஜக்ஷன் குப்பியை எடுத்து பார்க்காமலும், திடீரென மனநோயாளியாக மாற்றப்படும் ஹீரோ அருள்நிதிக்கு தரப்படும் சிகிச்சைகளை ஏரெடுத்துப் பார்க்காமலும் இருப்பது சுத்த போர்! இதை யதார்த்தமாக கதை சொன்ன இயக்குநர், நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!


ஃபோர்ஜரி போலீஸ்கள் ஜான் விஜய், பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி மூவரும் மிரட்டலாக நடித்திருக்கின்றனர் என்றால், வாயும் வயிறுமாக நேர்மையான பிள்ளைதாச்சி பெண் போலீஸாக வரும் உமா ரியாஸ்கான் அவர்களைக் காட்டிலும் மிரட்டலாக நடித்து படத்தை பக்காவாக தூக்கி நிறுத்தி இருக்கிறார்.


அம்மா சுஜாதா, மது, மென்ட்டல் ஆஸ்பத்திரியில் வரும் நண்பன் முருகதாஸ், ஹரிஷ் உள்ளிட்டவர்களும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு!


எஸ்.தமனின் இனிய இசை, மகேஷ் முத்துச்சாமியின் யதார்த்த ஒளிப்பதிவு உள்ளிட்ட இன்னும் பல ப்ளஸ் பாயிண்டுகளுடன் சாந்தகுமாரின் சறுக்காத எழுத்து இயக்கத்தில் "மெளனகுரு"விற்கு சுத்தமான, சத்தமான வெற்றி நிச்சயம்! மெளனகுரு - "மிரட்டல் குரு"

ராவணன் மனைவியாக நடிக்க நயன்தாரா மறுப்பு

ராவணனின் மனைவி மண்டோதரி வேடத்தில் நடிக்க நடிகை நயன்தாரா மறுத்து விட்டாராம். நயன்தாரா ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்தார்.

நடிகர் பிரபுதேவா, அவரது காதல் மனைவியை பிரிவதற்கு காரணமாக இருந்த நயன்தாரா சீதை வேடத்தில் நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அந்த படத்திற்கு பிறகு புதுப்படங்களில் நயன்தாரா ஒப்பந்தமாகவில்லை.

சினிமாவுக்கு முழுக்குப்போட்டு விட்டதாகவும், விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்து குடும்பம் நடத்தப் போவதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் பாலிவுட் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, தனது படத்தில் நடிக்க நயன்தாராவை அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் ராவணன் கதையை கருவாக வைத்து ராவணன் என்ற பெயரில் புதிய படமொன்று இயக்கவுள்ளார்.

இதில் ராவணனின் மனைவி மண்டோதரி வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் கேட்டுள்ளார் ராம்கோபால் வர்மா. ஆனால் நயன்தாரா அந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம்.

2011ல் அதிகம் பேர் தேடிய படம்

இந்தியாவில், 2011-ல் அதிகம் பேர் தேடப்பட்ட படங்களில் சல்மான் கானின் பாடிகார்ட் முதலிடத்தை பிடித்துள்ளது. 2011ம் ஆண்டுக்கான அதிகம் பேர் தேடிய படங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் சல்மான் கான், கரீனா கபூர் நடிப்பில் வெளிவந்து, சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, வசூலிலும் வாரி குவித்த பாடிகார்ட் படம் முதலிடத்தை பெற்றுள்ளது.

இதற்கு அடுத்த‌ப்படியாக இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவான, பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட ஷாரூக்கானின் ரா-ஒன் படம் 2வது இடத்தை பிடித்தது.

ஹாரிபாட்டர் 3வது இடத்தையும், டில்லி பெல்லி, சிங்கம்(இந்தி) 4 மற்றும் 5வது இடத்தை பிடித்தனர். அஜித்தின் மங்காத்தா


கூகுளில் அதிகம் பேர் தேடிய டாப்-10 படங்களின் பட்டியல்


1. பாடிகார்ட்
2. ரா-ஒன்
3. ஹாரிபாட்டர்
4. டில்லி பெல்லி
5. சிங்கம்(இந்தி)
6. ரெடி
7. மங்காத்தா
8. டிரான்ஃபார்மர்
9. துக்குடு
10. ஜிந்தகி நா மிலேகி துபாரா
Related Posts Plugin for WordPress, Blogger...