அஜித்தின் பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமையை ரூ.5 கோடியே 30 லட்சத்திற்கு ஒரு பிரபல நிறுவனம் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2007ம் ஆண்டில் அஜித்துக்கு மெகா ஹிட் படமாக அமைந்த படம் பில்லா. அதன் தொடர்ச்சியாக இப்போது பில்லா-2 படம் உருவாகி வருகிறது.
டைரக்டர் சக்ரி டோல்டி இயக்கி வரும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இன்எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஓய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக பில்லா 2 படத்தின் விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பில்லா 2 படம் பற்றிய புதிய செய்திகள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன.
இப்படத்துக்கான உள் நாட்டு வெளிநாட்டு வியாபாரம் ஜரூராக நடந்து வரும் நிலையில், இதன் வெளிநாட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை அஜித் படம் எதுவும் இவ்வளவு தொகைக்கு வெளிநாட்டில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment