கஞ்சா கருப்பு படத்தில் வெளிநாட்டு நட்சத்திரங்கள்

இன்றைய காமெடி நடிகர்கள் வரிசையில் தன் எதார்த்த நடிப்பாலும், எல்லாரையும் கவரும் சிரிப்பாலும் ரசிகர்களை சிரிக்க வைத்து கொண்டு இருப்பவர் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு.

டைரக்டர் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட கஞ்சா கருப்பு இன்று டாப்-5 காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுநாள்வரை காமெடி நடிகராக இருந்து வந்த இவரை, ஒருவர் ஹீரோவாக்கியுள்ளார்.

புதுமுக இயக்குநர் தனசேகர், "மன்னார் வளைகுடா" என்ற பெயரில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். அதில் கஞ்சா கருப்பு தான் ஹீரோ.

மனித உணர்வுகளை மையமாக வைத்து கடல்சார்ந்த கதையை தாங்கி, இதுவரை யாரும் சொல்லாத விஷயத்தை சொல்ல வருகிறார் புதுமுக இயக்குநர் தனசேகர். படத்தில் கஞ்சா கருப்புக்கு ஜோடியாக காவேரி என்பவர் நடிக்கிறார்.

சென்னை, ராமேஸ்வரம், பாண்டிச்சேரி போன்ற கடல்சார்ந்த இடங்களை தேர்ந்தெடுத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். படத்தின் சிறப்பு அம்சமாக வெளிநாட்டுக்காரர்களையும் நடிக்க வைத்துள்ளனர்.

இதற்காக ஜெர்மன் மாடல் சந்திரா ராமு, அமெரிக்காவை சேர்ந்த அமி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெஸி ஆட்ஸ் போலன் உள்ளிட்டவர்களையும் கஞ்சா கருப்போடு சேர்ந்து மன்னார் வளைகுடா படத்தில் நடிக்க வைத்துள்ளார் டைரக்டர்.

படத்தின் காட்சி அமைப்பு, அதற்காக அவர்கள் எந்தமாதிரி நடிக்க வேண்டும் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர் படக்குழுவினர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...