இந்தி ரமணாவில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய்!

இந்தியில் உருவாகவிருக்கும் ரமணா படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2002ம் ஆண்டு தமிழில் ரீலிஸ் ஆகி சக்கை போடு போட்ட படம் ரமணா. டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.

இப்படம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது.

இந்நிலையில் ரமணா படத்தை பார்த்த நடிகர் ஷாரூக் கான், அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசே படத்தை இயக்கவுள்ளார்.

இந்தி ரமணாவில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க கூடும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

பிரசவத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் நடிக்கும் முதல் படம் இதுவாகும். விரைவில் இந்தி ரமணா சூட்டிங் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...