ஊழலை கையில் எடுக்கிறார் கமல்ஹாசன்

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், ஊழலை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார். தற்போது நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் படு பிஸியாக இருக்கிறார்.

ரூ.100 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியில் உருவாகி வரும் இப்படத்தில் கமல் ஜோடியாக பூஜா குமார் நடிக்கிறார்.

கமலே இயக்கி, நடித்து தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தன்னுடைய அடுத்தபடத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் கமல்.

விஸ்வரூபம் படத்திற்கு அடுத்தபடியாக தற்போது நாட்டில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள ஊழலை மையப்படுத்தி ஒரு படத்தை எடுக்கவுள்ளார் கமல்.

தமிழ் மற்றும் இந்தியில் உருவாக இருக்கும் இப்படத்தை கமலே இயக்கி, நடிக்க உள்ளார். இந்தியில் உருவாகும் படத்திற்கு "அமர் ஹெயின்" என்று பெயர் வைத்துள்ளார்.

இதுகுறித்து கமல் கூறுகையில், இந்தபடத்திற்கான கதையை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தயார் பண்ணிவிட்டேன்.

ஆனால் அப்போது அந்த படத்தை எடுக்க போதிய தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. இப்போது அதற்கான நேரம் கூடி வந்துள்ளது.

விஸ்வரூபம் படத்தை முடித்த பின்னர் இப்படத்தை எடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதனிடையே விஸ்வரூபம் படத்தின் பெரும்பகுதி சூட்டிங்கை கமல் முடித்துவிட்டாராம். இதனால் படத்தை மே மாதம் வெளியிட கமல் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...