கேப்டன் மகனுக்கு வந்த விபரீத ஆசை

கேப்டனின் மகன் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக முன்னணி நாயகி ஒருவரை போடலாம் என முடிவெடுத்தவர் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளாராம்.

முதற்கட்டமாக, மயிலு நடிகையின் மகள் நடிக்க தயாராகி வருகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் அவரிடம் போய் கேட்டிருக்கிறார்கள். அண்டங்காக்கா குயிலுக்கு ஆசைப்படலாம். 

ஆனா மயிலுக்கு ஆசைப்படலாமா என்பதுபோல், கேட்டவுடனே நடிகையின் தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது. 

இருந்தாலும் சூசகமாக சொல்லவேண்டும் என்பதற்காக ரூ.1 கோடி கொடுத்தால் நடிக்க தயார் என்று கூறியிருக்கிறார்கள். 

இதைக் கேட்டவுடனே கேப்டன் தரப்பு பின்வாங்கிவிட்டது. தனக்கு ஜோடியாக அவரை போட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருந்த கேப்டன் மகன் இதனால் தற்போது விரக்தியில் உள்ளாராம்.

ஐ படத்தையடுத்து சரித்திரம் படம் இயக்குகிறாராம் ஷங்கர்


பேண்டஸியான கதைகளாக இயக்கி வந்தவர்கள்கூட சமீபகாலமாக சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ளனர். 

அந்த வகையில், நான் ஈ என்ற படத்தை இயக்கிய தெலுங்குப்பட இயக்குனர் ராஜமவுலி இப்போது பாகுபாலி என்ற 16 நூற்றாண்டில் நிகழ்ந்த சரித்திர கதையை படமாக்கி வருகிறார். பிரபாஸ்-அனுஷ்கா, தமன்னா நடிக்கிறார்கள்.

அவரைத் தொடர்ந்து இப்போது தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரும் ஒரு சரித்திர படத்தை இயக்குகிறாராம். 

தற்போது விக்ரம்-எமிஜாக்சனை வைத்து ஐ என்ற படத்தை இயக்கியுள்ள ஷங்கர், அடுத்து மலையாள நடிகர் மம்மூட்டியை பிரதான கதாபாத்திரமாக வைத்து அந்த படத்தை இயக்குகிறாராம்.

புராணக்கதைகளில் ஷங்கரை அதிகம் பாதித்த கதாபாத்திரம் கர்ணனாம். அதனால் கர்ணனை மையமாக வைத்து ஒரு சரித்திர கதையை தயார் பண்ணி விட்ட அவர், அதில் கர்ணனாக நடிக்க பொருத்தமான நடிகர் யார் என்று பரிசீலனை செய்தபோது மம்மூட்டிதான் மனக்கண்ணில் வந்து நின்றாராம். 

ஏற்கனவே பழஸிராஜாவில் மம்மூட்டியின் பிரமாதமான நடிப்பை பார்த்த ஷங்கர், இன்றைய நிலையில் கர்ணன் கதாபாத்திரத்திற்கு மம்மூட்டியை தவிர சிறந்த நடிகர் யாரும் இருக்க முடியாது என்றும் கருதி, அவரிடம் பேசி வைத்துள்ளாராம்.

ஆக, மோகன்லாலைத் தொடர்ந்து மம்மூட்டியும் தமிழில் அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாகி வருகிறார்.

மதயானைக் கூட்டம் - சினிமா விமர்சனம்


யானைக்கூட்டத்தில் ஒற்றை யானைக்கு மதம் பிடித்தது என்றால் அது கூட்டத்தை விட்டு வெளியில் வந்து எதிர்படும் எல்லாவற்றையும் எப்படி துவம்சம் செய்யும் என்பது எல்லோருக்கும் தெரியும். 

அப்படிப்பட்ட யானைகள் பல, ஒரே இடத்தில் ஒன்று கூடி ஒருத்தரை பழிவாங்க காத்திருந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட கதைதான் "மதயானைக்கூட்டம் மொத்தப்படமும்! 

"தேவர் மகன் டைப் பங்காளி பாகஸ்தன் பகைதான் படம் முழுக்க என்றாலும் கள்ளர், தேவர் இனத்து பெருமையை "மதயானைக்கூட்டம் பறைசாற்றுகிறதா? அல்லது அந்த இனத்தினரை சிறுமைப்படுத்தியிருக்கிறாரா? இயக்குநர்? என்பது கடைசிவரை புரியாத புதிர்!

ஊர் பெரிய மனிதர் ஜெயக்கொடித் தேவர் எனும் முருகன்ஜிக்கு, "செவனம்மா - விஜி சந்திரசேகர், "அம்மு - பிரேமா என இரண்டுதாரம். இரண்டுதாரம் என்று ஆனதும் செவனம்மா விஜி, ஜெயக்கொடி முருகன்ஜியுடன் பேசுவது கொள்வது கிடையாது. 

ஆனாலும் இரண்டாம்தார வாரிசுகள் மீது கொள்ளை கரிசனம். தங்கைக்கு துரோகம் செய்த ஜெயக்கொடிதேவர் மீது குரோதம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஜெயக்கொடி தேவருக்கு ஊர் தரும் மரியாதைக்கு கட்டுப்பட்டு அவரது இரண்டாம் தாரத்தையும், அவரது வாரிசுகளையும் பழிவாங்க காத்திருக்கிறார்கள் செவனம்மாவின் சகோதரர் வீரத்தேவர் வேல ராமமூர்த்தியும், அவரது வாரிசு மற்றும் கைக்கூலிகளும். 

இந்நிலையில் ஜெயக்கொடித்தேவர் எதிர்பாராமல் அகாலமரணமடைய வீரத்தேவர் விஸ்வரூபம் எடுக்கிறார். இரண்டாம் தாரத்தின் வாரிசு நாயகர் கதிருக்கும், வீரத்தேவருக்கும் ஜெயக்கொடி தேவரின் இறுதிசடங்கில் முட்டல், மோதல் ஏற்படுகிறது. 

அதில் வாரிசை இழக்கிறார் வீரத்தேவர். அதனால் ஊரைவிட்டு ஓடும் ஹீரோ கதிர், கேரளா சென்று தன் தங்கையின் தோழி ஓவியாவுடன் ஒன்றிரண்டு டூயட் பாடிவிட்டு ஊர் திரும்பினால், இவரது அம்மா இறந்த செய்தி வருகிறது. 

அம்மாவை அடக்கம் செய்துவிட்டு, அம்மாவை கொன்ற வீரத்தேவர் கோஷ்டியை பழிதீர்க்க பாயும் நாயகர் கதிர், பழிதீர்த்தாரா? பலிவாங்கப்பட்டாரா..? என்பது க்ளைமாக்ஸ்!

வித்தியாசமாக ஜெயக்கொடித்தேவரின் சாவு வீட்டில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமென ஆரம்பமாகும் "மதயானைக்கூட்டம் காதல், பாசம், வீரம், துரோகம், "சென்டிமெண்ட் என பயணித்து இறுதியில் நாயகரையும், அவரது காதலையும் காவு வாங்கி "புஸ் ஸென முடிவது தவிர ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறு என வித்தியாசமான களத்தில் பிரயாணிப்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு. க்ளைமாக்ஸில் செவனம்மா, அண்ணன் வீரத்தேவரை தீர்த்துகட்டி கதிரையும், அவரது அம்மா அம்மு - பிரேமாவையும் காபந்து செய்திருந்தார் என்றால் வித்தியாசமாக இருந்திருக்கும். அவ்வாறு இல்லாதது பலவீனம்!

நாயகன் பார்த்தியாக கண்களிலேயே நடிப்பை வழியவிடும் அறிமுகம் கதிர், மந்தஹாசப்புன்னகையுடன் "மப்பும் மந்தாரமாக ஓவியா, படத்தில் வரும் கேரளா மாதிரியே அம்மணியும் வனப்பு", செவனம்மாவாக கண்களிலேயே வீரத்தையும், பாசத்தையும் ஒருங்கே காண்பிக்கும் செவனம்மாவாக விஜி சந்திரசேகர், ஜெயக்கொடித்தேவராக கம்பீரமும், கனிவுமாக முருகன்ஜி, கூடி, குடிக்கும் கேரக்டரில் வீரத்தேவராக எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி என எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். வேல.ராமமூர்த்தி கடைசிவரை மதயானைக்கூட்டத்து குள்ளநரியை கண்டுபிடிக்காதது ஏமாற்றம்!

ரகுநந்தனின் உயிரோட்டமான இசை, ராகுல் தருமனின் ஓவியம் மாதிரியான ஒளிப்பதிவு எல்லாம் இருந்தும் படம் முழுக்க, அடி, உதையும் அருவாளும் ஆயுதமுமாக ஒரே இரத்தசகதியாக தெரிவது மதயானைக்கூட்டத்தின் ப்ளஸ்ஸா? மைனஸா? தெரியவில்லை! புரியவில்லை!!

ஆகமொத்தத்தில், விக்ரம் சுகுமாரனின் எழுத்து-இயக்கத்தில், "மதயானைக்கூட்டம் - ஒரு ஜாதிக்குள்ளேயே நடக்கும் "சதி வெறியாட்டம்!

2013ல் வெளியான திரைப்படங்களின் பட்டியல்


இந்தாண்டு 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. இந்தாண்டு வெளியான படங்களின் பட்டியல் இதோ...

1.அன்னக்கொடி
2.அலெக்ஸ் பாண்டியன்
3.அடுத்த கட்டம்
4.அறிந்தும் அறியாதவன்
5.அன்பா அழகா
6.அப்பாவுக்கு கல்யாணம்
7.ஆரம்பம்
8.ஆதி பகவன்
9.ஆண்டவ பெருமாள்
10.அழகன் அழகி
11.ஆதலால் காதல் செய்வீர்
12.ஆர்யா சூர்யா
13.அஞ்சல்துறை
14.ஆல் இன் ஆல் அழகுராஜா
15.ஆப்பிள் பெண்ணே
16.பட்டத்து யானை
17.புல்லுக்கட்டு முத்தம்மா
18.பீட்சா 2 வில்லா
19.பிரியாணி
20.சோக்காலி
21.சொன்னா புரியாது
22.சுட்டகதை
23.தீயா வேலை செய்யணும் குமாரு
24.தீக்குளிக்கும் பச்சை மரம்
25.தேசிங்கு ராஜா
26.தங்க மீன்கள்
27.தலைமுறைகள்
28.இசக்கி
29.இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
30.இங்கு காதல் கற்றுத் தரப்படும்
31.இரண்டாம் உலகம்
32.இவன் வேற மாதிரி
33.என்னாச்சு
34.கல்லாப்பெட்டி
35.குட்டிப்புலி
36.காதலே என்னை காதலி
37.கயவன்
38.கல்யாண சமையல் சாதம்
39.கோலாகலம்
40.மாசாணி
41.மெய்யழகி
42.மரியான்
43.முத்து நகரம்
44.நடிகையின் டயரி
45.நிலா மீது காதல்
46.நய்யாண்டி
47.நிர்ணயம்
48.நுகம்
49.நான்காம் தமிழன்
50.பொன்மாலைபொழுது
51.பேசாமல் பேசினால்
52.சுண்டாட்டம்
53.பதவி மதில்மேல் பூனை
54.கீரிப்புள்ள
55.பரதேசி
56.கருட பார்வை
57.கந்தா
58.நானும் என் ஜமுனாவும்
59.மறந்தேன் மன்னித்தேன்
60.கருப்பம்பட்டி
61.கண்பேசும் வார்த்தைகள்
62.மாடபுரம்
63.வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்
64.நேரம்
65.நாகராஜ சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ
66.எதிர்நீச்சல்
67.மூன்று பேர் மூன்று காதல்
68.மனிதனாக இரு
69.ஒருவர் மீது இருவர் சாய்ந்து
70.யாருடா மகேஷ
71.நான் ராஜாவாக போகிறேன்
72.ரெஜினா
73.இரு கில்லாடிகள்
74.உதயம் என்.எச் 4
75.திருமதி தமிழ்
76.சிக்கி முக்கி
77.உனக்கு 20 எனக்கு 40
78.நினைவுகள் அழிவதில்லை
79.மறு விசாரணை
80. 4
81.சேட்டை
82.சூதுகவ்வும்
83.மாமன் மச்சான்
84.கேடி பில்லா கில்லாடி ரங்கா
85.பிப்ரவரி 31
86.விஸ்வரூபம்
87.வனயுத்தம்
88.ஜில்லுனு ஒரு சந்திப்பு
89.மவுன விழிகள்
90.நேசம் நெசப்படுதே
91.ஹரிதாஸ்
92.நான்காம் பிறை
93.சுடச்சுட
94.வெள்ளச்சி
95.சந்தமாமா
96.ஒன்துல குரு
97.லொள்ளு தாதா பராக் பராக்
98.மயில்பாறை
99.புதுமுகங்கள் தேவை
100.நண்பர்கள் கவனத்திற்கு
101.கனவு காதலன்
102.குறும்புக்கார பசங்க
103.கள்ளத்துப்பாக்கி
104.சமர்
105.புத்தகம்
106.டேவிட்
107.கடல் 
108.காதல் வலி
109.பத்தாயிரம் கோடி
110.விஜயநகரம்
111.கண்ணா லட்டு தின்ன ஆசையா
112.யமுனா
113.சொல்ல மாட்டேன்
114.தில்லுமுல்லு
115.சிங்கம்&2
116.மரியான்
117.சத்திரம் பேருந்து நிலையம்
118.களியாட்டம்
119.நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்
120.ஞாபகங்கள் தாலாட்டும்
121.தலைவா
122. 555
123.சுவடுகள்
124.சும்மா நச்சுன்னு இருக்கு
125.ரகளபுரம்
126.சித்திரையில் நிலாச்சோறு
127.வணக்கம் சென்னை
128.நினைவுகள் உன்னோடு
129.ராஜாராணி
130.ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
131.யா யா
132. 6 மெழுகுவர்த்திகள்
133.மத்தாப்பூ
134.மூடர்கூடம்
135.உன்னோடு ஒரு நாள்
136.வருத்தப்படாத வாலிபர் சங்கம்
137.முத்து நகரம்
138.பாண்டியநாடு
139.ராவண தேசம்
140.விடியும் முன்
141.ஜன்னல் ஓரம்
142.நவீன சரஸ்வதி சபதம்
143.வெள்ளை
144.தகராறு
145.ஈகோ
146. 3டி
147.என்றென்றும் புன்னகை
148.விழா
149.மதயானைக்கூட்டம்
150.புவனக்காடு
151.சந்தித்ததும் சிந்தித்ததும்
152.சென்னையில் ஒரு நாள்

தென்னிந்திய ஹீரோக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமீர்கான்


சமீபகாலமாக இந்தி சினிமா, வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கும் தங்களது எல்லையை விரிவுபடுத்தத் தொடங்கியிருக்கிறது. 

குறிப்பாக, ராஒன், சென்னை எக்ஸ்பிரஸ் படங்களில் ஷாருக்கானின் தென்னிந்தியாவில் விசிட் அடித்து வசூலை வாரிக்குவித்ததையடுத்து, இப்போது பாலிவுட் சினிமாவில் இன்னொரு முக்கிய நடிகரான அமீர்கானும் தென்னிந்தியா பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார்.

அந்த வகையில், இந்தியில் தான் நடித்த தூம்-3 படத்தை தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டார். 

இந்தியாவில் மட்டும் 4000 தியேட்டர்களில் வெளியான அப்படம் ஒரே நாளில் 36 கோடி வசூலித்து இதற்கு முந்தைய சாதனைகளை முறியடித்து விட்டது. குறிப்பாக தென்னகத்தில் மட்டும் 2.80 கோடி வசூலித்துள்ளதாம். 

இது இதற்கு முன்பு எந்த இந்தி படமும் வசூலிக்காத சாதனையாம். அதனால் இந்தி பட நிறுவனங்களுக்கு இப்போது தென்னிந்திய ரசிகர்கள் மீதான நம்பிக்கை அதிகரித்து விட்டதாம. 

அதனால் மேலும் சில முன்னணி ஹீரோக்களின் படங்களும் மொழிமாற்றம் செய்யப்பட்டு தென்னிந்தியாவில் அடுத்தடுத்து ரிலீசாக தயாராகிக்கொண்டிருக்கிறதாம்.

இதனால் கோலிவுட், டோலிவுட் ஹீரோக்கள் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர். 

அதிலும், சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் என்றென்றும் புன்னகை, பிரியாணி படங்களின் வரவினால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகாமல் தொடர்ந்து தூம்-3 ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருப்பது இங்குள்ள ஹீராக்கள் வயிற்றில் புளியை கரைத்து விட்டுள்ளது.

தளபதிக்கு வந்த தலைவலி


மூன்றெழுத்து படத்துக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு இனிமேல் எந்த பிரச்னையும் வேண்டாம் என்றுதான் உஷாராக செயல்பட்டு வருகிறார் தளபதி நடிகர். 

அதனால்தான் அடுத்து வெளியாகும் தனது மூன்றெழுத்து படம் சம்பந்தப்பட்ட விழாக்களைகூட சத்தமில்லாமல் நடத்தி வருகிறார். 

சமீபத்தில் சில நலிவுற்ற தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நிகழ்ச்சியைகூட ஆர்ப்பாட்டமில்லாமல்தான் நடத்தினார்.

ஆனால், அந்த விழாவில் பேசிய சிலர், புரட்சித்தலைவரும் இப்படித்தான் செய்தார் என்று அவருடன் ஒப்பிட்டு தளபதியை பேச, செம காண்டாகியிருக்கிறார்களாம் கட்சியின் அடிபொடிகள். 

யாரை யாருடன் ஒப்பிட்டு பேசுவது. இப்படி என்னைப்பற்றி பேசுங்கள் என்று அந்த நடிகர் சொல்லிக்கொடுத்ததைதான் மேடையில் பேசியிருக்கிறார்கள் என்று அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார்களாம்.

இதனால் சத்தமில்லாமல் செய்த காரியமும் இப்படி சலசலப்பை ஏற்படுத்தி விட்டதே என்று பெரும் தலைவலியில் இருக்கும் நடிகர், இதையே காரணம் காட்டி படம் தியேட்டருக்கு வரும்போது அடுத்த அதிரடியை தொடங்கி விடுவார்களோ என்று அச்சத்தில் இருக்கிறாராம்.

வெங்கட்பிரபுவுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை

கோவா படத்தை வெங்கட்பிரபு இயக்கி வந்த நேரம் அவரது தோழியானார் சோனா. 

அந்த நட்பு அடிப்படையில் தனது பேனருககு ஒரு படம் இயககித்தருமாறு வெங்கட்பிரபுவை கேட்டுக்கொண்ட சோனா, அதற்காக ஒரு கோடி ரூபாய் அவருக்கு அட்வான்சும் கொடுத்தாராம். 

ஆனால், அதன்பிறகு சில பெரிய கம்பெனி படங்களை இயக்கிய வெங்கட்பிரபு, சோனாவை கண்டுகொள்ளவேயில்லை.

இதற்கிடையில், மிட்நைட் பார்ட்டி ஒன்றில் எஸ்.பி.பி.சரணுடன் சோனா லடாயில் ஈடுபட்டதால், அதன்பிறகு வெங்கட்பிரபுவும் மெல்ல மெல்ல சோனாவை விட்டு விலகினார். 

அதையடுத்து அஜீத் நடித்த மங்காத்தா மற்றும் கார்த்தி நடித்த பிரியாணி படத்தை இயக்கிய அவர் அடுத்து, சூர்யாவைக் கொண்டு ஒரு படம் இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், வெங்கட்பிரபு அடுத்து அஜீத்தை இயக்குவாரோ அல்லது சூர்யாவை இயக்குவாரோ அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அந்த படம் நான் தயாரிக்கிற படமாக இருக்க வேண்டும என்று திடீர் போர்க்கொடி பிடித்துள்ளாராம். 

ஆனால் சூர்யாவை இயக்கும் படத்தை ஒரு பிரபல நிறுவனம் தயாரிப்பதற்காக பேசியுள்ள வெங்கட்பிரபு, சோனா போடும் இந்த முட்டுக்கட்டை காரணமாக தடுமாறிப்போய் நிற்கிறாராம்.

இதைப்பார்த்த சில அவரது அபிமானிகள், எதற்காக தடுமாற வேண்டும், நீங்கள் அடுத்து இயக்கும் படத்தில் ஒரு வில்லி வேடம் தருவதாக சோனாவுக்கு சொல்லி அவரை ஆப் பண்ணி விடுங்கள் என்று ஐடியா கொடுத்து வருகிறார்களாம். 

ஆனால், சோனாவின் சகவாசமே வேண்டாமென்று நினைக்கும் வெங்கட்பிரபு, அவரை வேறுவிதமாக ஆப் பண்ண புதிய யோசனையில் ஆழ்ந்திருக்கிறாராம்.

தனது பாடலை சச்சினுக்கு அர்ப்பணித்த நடிகர் தனுஷ்



இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் தெண்டுல்கர் திரையுலக நட்சத்திரங்கள் பங்குபெறும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் (சிசிஎல்) நான்காம் சீசனை கடந்த வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.

மும்பையின் புறநகர்ப்பகுதியின் உள்ள கிரான்ட் ஹயாத் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அவர் தனது மனைவியுடன் வந்திருந்தார். 

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மராத்தி, போஜ்புரி, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் இருந்து ஏராளமான திரையுலக நட்சத்திரங்களும் வந்திருந்தனர்.

தமிழ்த் திரையுலகிலிருந்து வந்திருந்த நடிகர் தனுஷ் சச்சினுக்காக ஒரு பாடலை சமர்ப்பித்து அவரை சிலிர்க்க வைத்தார். இதற்காக சச்சின் அவருக்கு நன்றி தெரிவித்தார். 

பிறரைக் கவரக்கூடிய வகையில் பாடல் வரிகளை எழுதும் திறமை கொண்ட நடிகர் தனுஷ் தனது 'ஒய் திஸ் கொலை வெறி' சூப்பர் ஹிட் பாடலுக்குப் பிறகு 'சச்சின் கீதம்' என்ற தலைப்பில் ஒரு மியூசிக் வீடியோவும் செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ், சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், போஜ்புரி டபாங்ஸ் மற்றும் வீர் மராத்தி ஆகிய எட்டு குழுவினர் இந்தப் போட்டியில் பங்கு பெறுகின்றனர். மும்பை ஹீரோசின் கேப்டனான சுனில் ஷெட்டி நாங்கள் அனைவரும் விளையாட்டு வீரர்கள் அல்ல.

இந்தப் போட்டியை அனுபவிக்கவே இங்கு வந்துள்ளோம் என்றார். இவர் தவிர ஜெனிலியா, ரிதேஷ் தேஷ்முக் மற்றும் போனிகபூர் போன்றோர் வந்திருந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

என்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்


நண்பன்' படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் நண்பர்கள். இந்தப்படத்தில் ஜீவா, சந்தானம், வினய் மூவரும் நண்பர்கள் கிட்டத்தட்ட இதுவும் நட்பை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம் தான்!

கதைப்படி, ஹீரோ ஜீவாவிற்கு பெண்கள் என்றாலே பிடிக்காது. காதல் என்றாலே கடுப்பு! காரணம், அவரது அப்பாவை விட்டு 'எஸ்' ஆன அவரது அம்மா! 

அதனால் காதல், கன்னியர் என்றாலே கடுப்பாகும் ஜீவாவுடன், சிறுவயது முதலே நட்பில் இருக்கும் சந்தானமும், வினய்யும், ஜீவாவுக்காக காதலிப்பது இல்லை, திருமணம் செய்து கொள்வதில்லை... எனும் உறுதியுடன் ஒரே படிப்பு, ஒரே 'குடி'ப்பு, ஒரே மாதிரி வேலை, ஒரே அலுவலகம், ஒரே படுக்கை... என நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றனர். 

ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கை சலித்துப்போய் நண்பர்கள் சந்தானம், வினய் இருவரும் தங்கள் பெற்றோர் சொல்படி கல்யாணம் கட்டிக்கொண்டு இல்வாழ்க்கையில் இறங்க, விளம்பர பட இயக்குநரான ஜீவா தனிமையில் தவிக்கிறார். 

அதேநேரம் அவரது அலுவலகத்திற்கு இவரது அஸிஸ்டண்டாக வரும் த்ரிஷா, இவரை ஒரு தலையாக காதலிக்கிறார். 

ஏற்கனவே விளம்பர மாடல் ஆண்ட்ரியா, ஜீவாவிடம் அவரது காதலை முத்தமாக வெளிப்படுத்தி மொத்தமாக வாங்கிகட்டிக் கொண்டது தெரியும் என்பதால் த்ரிஷா, தன் காதலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வளைய வருகிறார். ஜீவாவிற்கு, த்ரிஷாவின் காதல் தெரிந்ததா? ஜீவாவின் பெண்கள் மீதான கோபம் குறைந்ததா? த்ரிஷா மீது காதல் மலர்ந்ததா.? இல்லையா? என்பது மீதிக்கதை!

இந்தகதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும் படமாக்க முடியுமோ? அத்தனைக்கு அத்தனை காமெடியாகவும், கலர்புல்லாவும், அதேநேரம் கமர்ஷியலாகவும் படமாக்கி 'என்றென்றும் புன்னகை' படத்தை எக்குத்தப்பாக எகிற வைத்து இருக்கிறார் இயக்குநர் ஐ.அஹமத்!

கையில் மதுக்கோப்பை, கண்ணில் மதுபோதை, நக்கல் பேச்சு, 'நச்' என்ற கோபம்... என வழக்கம் போலவே தன் பாணி நடிப்பில் இந்தப்படத்தையும் தூக்கி நிறுத்த முற்பட்டிருக்கிறார் கெளதம் பாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகர் ஜீவா. 

இவரது அம்மா, அப்பா நாசரை விட்டு ஓடிப்போனவர்... என்று நண்பர்கள் கலாய்க்கும் போது அவர் படும் வேதனை, கோபம், ஏற்கும் சபதம் எல்லாம் அவரது முகத்தில் கலவையாக சேர்ந்து திரையில் எதிரொளிக்கும் சீன்கள் போதும், ஜீவாவின் நடிப்பிற்கு கட்டியம் கூற!

பேபி சந்தானத்தின் காமெடி சரவெடிகள் தான் 'என்றென்றும் புன்னகை' படத்தின் ஹைலைட்! குடித்துவிட்டு வந்து குடிக்கவில்லை... என கோணலாக சாய்ந்தபடி பொண்டாட்டி முன் அவர் அடிக்கும் லூட்டியிலாகட்டும், 'எங்க வீட்டு நாய் செத்து போனதை எங்கம்மாவால ஜீரணிக்கவே முடியலை...' என்று மனைவி சொல்லி முடிப்பதற்குள் உங்கம்மாவை யாரு? செத்துபோன நாயை சாப்பிட சொன்னது? எனக்கேட்டு கலாய்ப்பதிலாகட்டும், கல்யாணங்கறது பப்ளிக் டாய்லெட் மாதிரி, வெளியில இருக்கிறவனுக்கு எப்படா உள்ளே போகலாங்கற மாதிரி இருக்கும், உள்ளே இருக்கிறவனுக்கு எப்போ வெளியில வருவோம் என்பது மாதிரி இருக்கும்! அதுதான் கல்யாணம் என்று போகிற போக்கில் ஜோக்கடிபதில் ஆகட்டும், சந்தானத்தை அடித்துக் கொள்ள ஆளே இல்லை எனலாம்!

ஜீவா, சந்தானம் மாதிரி வினய்யும் மற்ற படங்களைக்காட்டிலும் இதில தன் பங்கை சரியாகவே செய்திருக்கிறார். த்ரிஷா, ஆண்ட்ரியா என இரண்டு நாயகிகள் எனினும் த்ரிஷாவின் நடிப்பும், ஜொளிப்பும் ஒரு சுத்து தூக்கல்!

ஜெகன், நாசர் உள்ளிட்டவர்களும் 'பலே' சொல்லுமளவிற்கு பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் எல்லோரையும் கலாய்க்கும் சந்தானத்திற்கே ஜெகன் 'கடுக்கன்' கொடுப்பதும், நியூசிலாந்து பார்ட்டியில் 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மென் அண்ட் சன்னி' என தங்கள் பாஸை கலாய்ப்பதிலும் ஜெகன் நிற்கிறார்.

ஹாரீஸ் ஜெயராஜின் இசை, ஆர்.மதியின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், ஐ.அஹமத்தின் எழுத்து, இயக்கத்தில் ஆரம்பகாட்சிகளில் இது ஏதோ ஆணுக்கு ஆண் எனும் கொச்சையான உறவை வலியுறுத்தும் 'ஹே' படமோ! எனும் மாயை உடைத்தெறிந்து எல்லாம் காமெடிக்குத்தான் எனும் எண்ணத்தை ஏற்படுத்துவது பலம்!

ஆகமொத்தத்தில் 'என்றென்றும் புன்னகை' - 'வெடிச்சிரிப்பு' - 'காதல் கவிதை'!

பிரியாணி - சினிமா விமர்சனம்


உடனடியாக சாப்பிட ஏதாவது தேவை என்றால் "உப்புமா கிண்டுவார்கள்... கார்த்திக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவை என்பதால் "பிரியாணி கிண்டி இருக்கிறார்கள். 

ஆனால் உஷாராக கார்த்தியும், அவரது உறவு தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவும் அதை வெங்கட்பிரபுவை விட்டு சமைத்து, கார்த்தியின், "பிரியாணி, வெங்கட்பிரபுவின், "டயட் என விளம்பரப்படுத்தி வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்கள். "பசி - ருசி அறியாது என்பது போல் படமும் அவர்களுக்கு "பீஸ் புல்லாக வந்திருக்கிறது! ரசிகர்களுக்கு.?!

கதைப்படி சுகன் - கார்த்தியும், பரசுராம் - பிரேம்ஜி அமரனும் நான்காம் வகுப்பு படிக்கும் காலந்தொட்டு நண்பர்கள். வகுப்பில் முதல் மாணவனாக தேறும் பிரேம்ஜி, கார்த்தியின் சகவாசத்திற்கு பின் தான் சகல துன்பங்களையும் அனுபவிக்க ஆரம்பித்ததாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார். 

அதுவும் எப்படி? முடியாத பாலத்தில் படுவேகமாக ஒரு காரில், பின்னால் போலீஸ் வாகனங்கள் துரத்த பறந்து வந்து கீழே விழும் நிலையில் பிரேம்ஜி கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

அதாகப்பட்டது, பிரேம்ஜி பார்த்து ஜொள் விடும் பெண்களை எல்லாம் இராத்திரி எந்நேரம் ஆனாலும் ஒரு பிளேட் பிரியாணி திண்ணாது, உறங்கபோகாத கார்த்தி உஷார் பண்ணி ஓரங்கட்டுவது ஒருபக்கம் என்றால், கதாநாயகி ஹன்சிகாவையும் சின்ஸியராக மற்றொருபக்கம் லவ்வுகிறார் கார்த்தி! 

நட்புக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கார்த்தியை சகித்து கொள்ளும் பிரேம்ஜியும், கார்த்தியும் ஒருநாள் தங்களது பிரியாணி மற்றும் பெண் சபல புத்தியால் பிரபல கிரானைட் தொழில் அதிபர் நாசர் கொலையில் வகையாக சிக்குகின்றனர். 

அப்புறம்? அப்புறமென்ன, தங்களது புத்தி சாதுர்யத்தால் தங்களை வலை வீசித்தேடும் போலீஸ்க்கும், நாசரின், ராம்கி உள்ளிட்ட உறவுகளுக்கும் தண்ணிகாட்டி உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கார்த்தி, பிரேம்ஜி இருவரும் தப்பித்து, ஹன்சிகா கழுத்தில் தாலி கட்டு(ஹீ, ஹீ... கார்த்தி மட்டும்தான்...)வது தான் "பிரியாணி படத்தின் மொத்தகதையும்!

சுகனாக, கார்த்தி ஒருசில இடங்களில் அண்ணன் சூர்யா சாயலில் தெரிவது மட்டுமின்றி, "சிங்கம் சூர்யா மாதிரி ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். ஹன்சிகாவுடனான காதலில் அவ்வளவு ஒட்டுதல் இல்லை! காரணம் வூட்வுக்காரம்மாவா? அல்லது படம் முழுக்க பீஸ்களாக (கார்த்தி - பிரேம்ஜி பாணியில்) பவனி வரும் பெண்களா? என்பது கார்த்திக்கே வெளிச்சம்!

ஹன்சிகா, நம் டிவி நிருபராக வந்து போகிறார். கார்த்தியுடன் கொள்ளும் ஊடலிலும், காதலிலும் அவ்வளவாக ஈர்ப்பு இல்லை! என்னாச்சு ஹன்ஸ்? சிம்புவுடனான நிஜ ஊடல், கூடல் தான் காரணமா..?!

பிரேம்ஜி அமரன் படம் முழுக்க காமெடி என்ற பெயரில் "வாவ் என வாயை பிளந்தபடி கலாய்க்கிறார். நல்லவேளை கடிக்கவில்லை! அதேநேரம் நான் உன் கேர்ள்ப்ரண்ட் அல்ல, ப்ரண்ட் என்று "பன்ச் டயலாக் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்!

பிரியாணி படத்தின் மொத்தத்திற்கு பெரிய "லெக்பீஸ் மாயவாக வரும் மாண்டி தக்கார் தான். வாவ்! அம்மணி ஆடி அசத்தும் அந்த ஒற்றை பாடல் போதும் மொத்த படத்திற்கும்! ஆனாலும் அநியாமாய் அவரை, உமா ரியாஸ் ரயிலில் தள்ளி விடுவது கொடுமை!

வில்லன் மாதிரி பூச்சாண்டி காட்டி நல்லவராகி விடும் ராம்கி, நாசர், சம்பத், உமா ரியாஸ், ஜெய்பிரகாஷ், சாட் ஆண்டர்சன் தொடங்கி கெஸ்ட் ரோலில் வரும் ஜெய், விஜய் வஸந்த், விஜயலட்சுமி எல்லோரும் "லெக்பீஸ் பிரியாணியில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும் துண்டங்கள் எனும் வகையில் ஆறுதல்!

யுவன்சங்கர்ராஜாவின் இசையில் ஆறேழு பாடல்கள். ஆனாலும், "மிசிசிபி... பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. காரணம் யுவன் மட்டுமல்ல, அதில் ஆடும் மாயாவும் தான்! ஹீ... ஹீ...!!

சக்திசரணவணனின் ஒளிப்பதிவு தான் வெங்கட்பிரபுவின் எழுத்து - இயக்கத்தில் "பிரியாணி படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்துகிறது. 

ஆனாலும் லாஜிக் இல்லாத கதை, தலையை சுற்றி மூக்கை தொட முயன்றிருக்கும் திரைக்கதை எல்லாம் சேர்ந்து "பிரியாணியை இன்னும் கொஞ்சம் வேகவைத்திருக்கலாமோ? என கேட்க வைத்து விடுகின்றன! 

மொத்தத்தில், "பிரியாணி, "பீஸ்கள் (அழகிய பெண்கள்) இருந்தும் இல்லாதது மாதிரி தெரியும் "குஸ்கா!

புறம்போக்கு - சினிமா முன்னோட்டம்


பேராண்மை படத்துக்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் டைரக்ட் செய்யும் படம் புறம்போக்கு. ஆர்யாவும், விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். 

யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் ஆர்யா பொருளாதரா நிபுணராகவும், விஜய் சேதுபதி ரெயில்வே கலாசியாகவும் நடிக்கிறார்கள். 

ஆர்யா பொருளாதரதுறையில சாதிச்ச ஒரு இளைஞரா நடிக்கிறார். விஜய்சேதுபதி ரெயில்வே கலாசியாக நடிக்கிறார். 

கலாசிங்ற வார்த்தைக்கு கைகளால் உழைப்பவன்னு அர்த்தம். ஆக ஆர்யா முளையால் வேலை செய்கிறவர். 

விஜய்சேதுபதி கைகளால் உழைப்பவர் இந்த முரண்பாட்டை சொல்கிற மாதிரியான படம்.

இதுபற்றி டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் கூறியிருப்பதாவது:

என்னால் புதுமுகங்களை வைத்துகூட படம் டைரக்ட் பண்ணமுடியும். ஆனால் என்னோட படத்தின் பட்ஜெட் பெருசா இருக்கும். அந்த வியாபாரத்தை தாங்குறதுக்கு பெரிய ஹீரோக்கள் தேவைப்படுறாங்க. 

அதனால தான் புறம்போக்குல ஆர்யா விஜய் சேதுபதி நடிக்கிறாங்க. ஆனாலும் இது ஜனநாதன் சினிமாதான். 

இரண்டு ஹீரோன்னாலும் படத்துல ஒரு ஹீரோயின்தான். டுயட் கிடையாது, கிளாமர் கிடையாது, ஹீரோயினும் கதையின் முக்கிய கேரக்டர் அவ்வளவுதான்.

ஜில்லாவில் ஜீவா - ஜித்தன் ரமேஷ்


விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் படம் ஜில்லா. பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீசாகிறது. 

இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பாக பொள்ளாச்சி அருகே உள்ள திருமூர்த்தி மலையில் திருவிழா பாடல் படமாக்கப்பட்டது. 

அதில் படத்தில் நடித்த அத்தனை பேரும் கலந்து கொண்டு ஆடினார்கள். (ஆல் ஆர்ட்டிஸ்ட் காமினேஷன்) மோகன்லால், காஜல் அகர்வால் இருவரும் விஜய்யுடன் ஆடினார்கள்.

இந்த பாடலின் திடீர் விருந்தினர்களாக வந்தார்கள் நடிகர் ஜீவாவும், ஜித்தன் ரமேசும். இருவரும் படத்தை தயாரிக்கும் சூப்பர்குட் ஆர்.பி.சவுத்திரியின் மகன்கள். 

இந்த பாடலில் அவர்கள் இருவரும் விஜய்யுடன் ஆடினால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் எஸ்.டி.நேசன் சொல்ல, சவுத்திரியும் அதனை செண்டிமெண்டாக கருதினார். 

இருவரையும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவழைத்து விஜய்யுடன் ஆட வைத்து படம்பிடித்தார்கள். 

பாடலில் சில விநாடிகளே இடம் பெறும் இந்த காட்சி தியேட்டரில் பரபரப்பு கிளப்பும் என்பது தயாரிப்பாளர், இயக்குனரின் நம்பிக்கை.

ஆளே மாறிட்டாரு சுமார் மூஞ்சி குமாரு

சம்பள விஷயத்துல தாராளமாக இருந்த வெற்றி மன்னர் பெயர் கொண்ட நடிகர் இப்போது ஆளே மாறிட்டாராம். அவரு சம்பளம் பேசுறதில்லையாம். அதுக்குன்னு ஆள் வச்சிருக்காராம். 

அந்த ஆட்களை அணுகினால் முன்று நான்கு விரல்களை காட்டி சம்பளம் கேக்குறாங்களாம். 2015 டிசம்பர் வரைக்கும் அண்ணனுக்கு கால்ஷீட் இல்லை. 

அங்க இங்க கேட்டு அட்ஜெஸ் பண்ணித் தர்றதக்குத்தான் இந்த ரேட்டுன்னு சொல்றாங்களாம். 

காற்றுள்ளபோதே தூத்திக்கணும்னு திக் பிரண்டுகள் போட்டுக் கொடுத்த பிறகு சொந்த படம் தயாரிக்க ஆரம்பிச்ச கம்பெனியைகூட இழுத்து மூடிட்டாராம். 

நடுவுல கொஞ்சம் சான்ஸ் காணாமே போயிட்டா என்ன பண்றதுங்றதாலதான் இந்த ஏற்பாடுகளாம்.

புறம்போக்கு நாயகியாக கார்த்திகா தேர்வு

இயற்கை’, ‘பேராண்மை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் ‘புறம்போக்கு’ என்ற தலைப்பில் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். 

இப்படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதனும் தயாரிக்கிறார். 

இரண்டு ஹீரோக்கள் உள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ‘கோ’ படத்தில் நடித்த நடிகை கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார். 

ஹீரோக்கள் இரண்டானாலும் படத்தின் ஹீரோயின் ஒருவர்தானாம். இதனால் கார்த்திகா மிகுந்த சந்தோஷத்தில் உள்ளாராம். 

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் குளுமணாலியில் தொடங்குகிறது. கார்த்திகா தற்போது அருண் விஜய்யுடன் இணைந்து ‘டீல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஜன்னலோர நடிகரை ஓரங்கட்டிய படக்குழு



சினி விழாக்களில் பிரபலங்களை வரவழைத்து படம் குறித்து மேடையில் பேசவைப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. 

அவ்வாறு மேடைக்கு அழைக்கும் போது சிலருக்கு உட்கார இடம் இல்லாமல் ஒரு ஓரத்தில் உட்கார வைக்கும் அவலமும் நடந்து வருகிறது. 

இதேபோல்தான் அந்த மூன்றெழுத்து களவாணி நடிகர் சமீபத்தில் ஒரு சினி விழாவில் கலந்து கொண்டார். 

அவரை மேடைக்கு வரவழைத்த படக்குழுவினர் மேடையில் உட்கார இடம் இல்லாததால் ஒரு ஓரத்தில் இருந்த இருக்கையில் அமர வைத்துள்ளனர். 

அவரும் வேறு வழியின்றி அங்கு போய் உட்கார்ந்துள்ளார். சில நேரம் கழித்து அவரை விழாக்குழுவினர் பேச அழைத்தனர். 

ஆனால், அங்கு அவர் அமர்ந்திருந்த இருக்கைதான் இருந்ததே தவிர, அவரைக் காணவில்லை. 

தன்னை மேடையின் ஓரத்தில் உட்கார வைத்ததாலேயே அங்கிருந்து நடிகர் கிளம்பிப் போய்விட்டதாக கூறப்படுகிறது. 

இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்

சட்டத்துறை அமைச்சர் சட்டக்கல்லூரியில் தனக்கு 30 சீட்டுகள் ஒதுக்கித் தரவேண்டும் என அக்கல்லூரி முதல்வரிடம் முறையிடுகிறார். ஆனால், கல்லூரி முதல்வரோ அவருக்கு சீட் ஒதுக்கித் தரமுடியாது. 

ஏற்கெனவே தங்களுக்கு ஒதுக்கித் தந்த சீட்டுகளில் சேர்ந்த மாணவர்கள் எல்லாம் ரவுடிகளாக இருக்கின்றனர். இதனால், அவ்வப்போது கல்லூரியில் கலவரம் வருகிறது. அதனால் இந்த முறை தங்களுக்கு சீட் ஒதுக்கித்தர முடியாது என கூறுகிறார். 

தனக்கு சீட் தராத முதல்வருக்கு பாடம் புகட்டும்விதமாக, தனது சிபாரிசில் அக்கல்லூரியில் சேர்ந்த ஒரு மாணவன் மூலமாக அக்கல்லூரியில் கலவரம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்கிறார். 

அந்த கலவரத்தில் அப்பாவி மாணவர்கள் 3 பேர் கொல்லப்படுகின்றனர். இதை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் நாயகன் விக்ரம் பிரபு இதற்கு காரணமானவர்களை பழிவாங்க வேண்டும் என துடிக்கிறான். 

இந்நிலையில், ஜெயிலில் இருக்கும் தனது தம்பி வம்சி கிருஷ்ணாவை சட்டத்துறை மந்திரி தனது பரிந்துரையின் பேரில் பரோலில் வெளிக்கொண்டு வருகிறார். வெளியில் வரும் வம்சி கிருஷ்ணாவை விக்ரம் பிரபு கடத்தி விடுகிறார். இதையடுத்து தன் தம்பியை கடத்தியவர்கள் யார் என்று மந்திரி தேடிக் கொண்டிருக்கிறார். 

இதற்கிடையில் பரோலில் வெளியே வந்த வம்சி கிருஷ்ணாவின் பரோல் முடிந்துவிட, அவரைத் தேடி போலீஸ் சட்டத்துறை மந்திரியிடம் செல்கிறது. வம்சி கிருஷ்ணா அங்கு இல்லாததால் மந்திரியை கைது செய்து ஜெயிலில் அடைக்கின்றனர். 

இதனால் மந்திரியின் பதவியும் போய்விடுகிறது. மந்திரியை பழிவாங்கும் தன்னுடைய எண்ணம் நிறைவேறிவிட, கடத்திய மந்திரியின் தம்பியை விடுவித்துவிடுகிறார் விக்ரம் பிரபு. 

இதற்கிடையில், பஸ்ஸில் நாயகி சுரபியிடம் விக்ரம் பிரபு செய்யும் சிறுசிறு குறும்புகள் சுரபியை அவர் மீது காதல்கொள்ள வைக்கிறது. ஆனாலும் தன் காதலை நாயகனிடம் வெளிப்படுத்தாமலேயே இருக்கிறார். 

இந்நிலையில் தன்னை யார் கடத்தியது என்பது தெரியாத வம்சி கிருஷ்ணா, கடத்தியவனை எப்படியாவது கண்டுபிடித்து கொன்றுவிட வேண்டும் என முடிவெடுக்கிறான். இதனால், விக்ரம் பிரபுவை தேடி அலைகிறான். 

இறுதியில், வில்லன் நாயகனை கண்டுபிடித்து அவனை பழிவாங்கினானா? நாயகி தன் காதலை விக்ரம் பிரபுவிடம் வெளிப்படுத்தி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை. 

நாயகன் விக்ரம் பிரபு, ‘கும்கி’ படத்தில் இருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இவர் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞனாக வருகிறார். லுங்கியில் பார்த்த இவரை மாடர்ன் உடையில் பார்க்கும்போது அழகாக இருக்கிறார். ஆனால், நடிப்பில்தான் மிளிரவில்லை. ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார். 

நாயகி சுரபி பாலிவுட்டில் இருந்து இறக்குமதியானாலும், நம்ம ஊர் பெண் போலவே இருக்கிறார். நாயகனிடம் வம்பு இழுக்கும் காட்சியில் அழகாக நடித்து இருக்கிறார். மற்றபடி நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற வேண்டும். 

கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் இயக்குனர் எம்.சரவணன் கோட்டைவிட்டிருக்கிறார். குறிப்பாக, நாயகியின் அம்மாவாக வருபவர் நாயகிக்கு அக்கா போன்று இருககிறார். 

இதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கணேஷ் வெங்கட்ராம் கதாபாத்திரத்தை வீணடித்திருக்கிறார்கள். அமைச்சர் கதாபாத்திரமும் சரியான தேர்வாக இல்லை. 

மாபெரும் வெற்றி கொடுத்த இயக்குனர் இயக்கிய படமாக இது தெரியவில்லை. கதைக்கு தேவையில்லாத காட்சிகளை ஆங்காங்கே நுழைத்து சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நாயகியைத் தேடி நாயகன் அலையும் போது ஏற்படும் விபத்து காட்சிகளை அழகாக எடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தவில்லை. 

சக்தியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் எடுத்த விதம் அருமை. விபத்து காட்சிகளை படமாக்கிய விதம் அழகு. கிளைமாக்ஸ் காட்சியை எடிட்டிங் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சத்யா இசையில் ஒன்றிரண்டு பாடல்கள்தான் கேட்கும்படி இருக்கிறது. மற்றவை சுமார் ரகம்தான். பின்னணி இசை பரவாயில்லை. 

மொத்தத்தில் ‘இவன் வேற மாதிரி’ ஒரு மாதிரிதான்.

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார்


கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த படம் ராணா. அதில் இந்தி நடிகை தீபிகா படுகோனேதான் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருந்தார். 

ஆனால், படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற சில தினங்களிலேயே ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர், தீவிர சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று மறுபிறவி எடுத்து வந்தார்.

அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடலுக்கு ஓய்வு தேவை. அதனால் ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்றெல்லாம் கண்டிசன் போட்டதால், அதையடுத்து மகள் செளந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார். இரண்டு ஆண்டுகளாக வேலைகள் நடந்த அப்படம் இப்போது திரைக்கு வர தயாராகி விட்டது.

இந்த நிலையில், வழக்கம்போல் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் கோலிவுட்டில் புகையத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு ரஜினியின் புதிய படத்தை ஷங்கர் அல்லது கே.வி.ஆனந்த் இயக்கலாம் என்று சொன்னவர்கள். இப்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கதான் அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

ஏற்கனவே ரஜினியை வைத்து முத்து, படையப்பா என ஹிட் படங்களை கொடுத்தவர் என்பதோடு, இப்போது ரஜினியை அடிக்கடி சென்று சந்தித்து வரும் நபர் அவர் மட்டுமே. அதோடு தற்போது அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. அதனால், கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகு ரஜினி நடிக்கும் படத்தை அவர் இயக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

மேலும், புதிய படம் பற்றி அவர்கள் முடிவெடுத்து விட்டபோதும், கோச்சடையான் வெளியாகயிருக்கும் இந்த நேரத்தில் புதிய படம் பற்றி செய்தி வெளியிட்டால், கோச்சடையானுக்கான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்பதற்காகவே தற்போதைக்கு அமைதி காத்து வருவதாகவும் செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.

தகராறு - சினிமா விமர்சனம்


வம்சம் , மெளனகுரு படங்களைத் தொடர்ந்து அருள்நிதி நடித்திருக்கும் திரைப்படம், அருள்நிதியின் பெரியப்பா மகன் தயாநிதி அழகிரி தயாரித்திருக்கும் திரைப்படம் என ஏகப்பட்ட பில்-டப்புகளுடன் வந்திருக்கும் படம் தான் தகராறு. 

அதுத்தவிர, 4-திருடர்கள் பற்றிய கதை என்பதால் முதலில் இப்படத்திற்கு பகல் கொள்ளை எனப் பெயர் சூட்டினோம்... எங்கள் குடும்பத்தயாரிப்பு என்பதால் அந்த தலைப்பு பலரது ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகும் என்று யோசித்து தகராறு என டைட்டிலை மாற்றினோம்... 

அதுவும் உங்கள் குடும்பத் தகராறா? என சிலரால் கேள்வியாக்கப்பட, இவர்களுக்கெல்லாம் யோசித்தோமென்றால், படம் பண்ணமுடியாது கதைக்கு ஏற்ற தலைப்பு வைக்க முடியாது... என கருதி தகராறு டைட்டிலையே இறுதியாக்கி உறுதி செய்தோம்... என்றெல்லாம் அருள்நிதி, இப்பட ஆடியோ வெளியீட்டை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுத்து... அதனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தகராறு

மதுரை பக்கத்து 4 பீரோ புல்லிங் கொள்ளையர்கள் பற்றிய கதை! ஆனாலும் அருள்நிதியின் காதலும், அதனால் எழும் மோதலும் தான் தகராறு மொத்தப்படமும்! சரவணன் - அருள்நிதி, செந்தில் - பவன்ஜி, பழனி - சுலில் குமார், ஆறுமுகம் - முருகதாஸ் ஆகிய நால்வரும் சின்ன வயது முதல் நண்பர்கள், அநாதைகள். சின்ன வயது முதல் சின்ன சின்ன திருட்டில் ஆரம்பித்து பீரோ புல்லிங் கொள்ளையர்களாக கொடி கட்டிப்பறக்கும் நால்வரும், பக்கெட் எனும் பாவா லட்சுமணனின் குடியிருப்பில் தங்கி, பெரிய பெரிய வீட்டு பீரோவில் எல்லாம் கை வைக்கின்றனர்.

ஒருநாள் கோயில் பரிவட்டத்திற்காக ஏங்கும் ஊர் பெரிய மனிதர் அருள்தாஸ் வீட்டு பீரோவில் கை வைக்கும் நால்வரும் வகையாக மாட்டிக் கொள்கின்றனர். அவர், நால்வருக்கும் ஒரு சிலை திருட்டு வேலையை கொடுக்கிறார். அது அவரது மதிப்பு மரியாதையை மீட்டெடுக்க உதவுகிறது. ஆனாலும் அருள்தாஸ்க்கும், அவர்களுக்குமிடையில் பண விவகாரத்தில் ஈகோ தகராறு.

என்றைக்கானாலும் உங்களை ஒரு கை பார்க்காது விடமாட்டேன்... என எச்சரித்து அனுப்புகிறார் அருள்தாஸ். மற்றொருபக்கம், மதுரையின் பிரபல கந்துவட்டி தாதா ஜெய்பிரகாஷின் மகள் பூர்ணாவை விபத்தொன்றில் யதார்த்தமாக காபந்து செய்து காதலிக்க தொடங்குகிறார் அருள்நிதி. 

மொத்தபடத்திலும் பதார்த்தமாக பவனி வரும் பூர்ணாவால் நண்பர்களுக்குள் பஞ்சாயத்து. பூர்ணாவின் தாதா அப்பா ஜெ.பி.யால் இவர்களது உயிருக்கு ஆபத்து. இவை ஒருபக்கமென்றால் மற்றொருபக்கம் அந்த ஏரியாவுக்கு பொறுப்பேற்று வரும் புது இன்ஸ்பெக்டர் பாண்டிரவி வீட்டிலேயே ஆட்டையை போடும் இந்த நால்வரும் அடுத்தடுத்து பண்ணும் கலாட்டாக்களால் அவருடனும் முட்டல், மோதல் தகராறு... 

இந்நிலையில் நால்வரில் ஒருவரான சுலில்குமார், பவன்ஜி கண் எதிரிலேயே கழுத்தறுத்து கொல்லப்பட, அவரைக் கொன்றது யார்? என கண்டுபிடித்து அவர்களை பழிவாங்க களமிறங்குகிறது மூவரணி! அதில் அவர்களுக்கு வெற்றியா? அல்லது வெட்டி சாய்க்கப்பட்டனரா...? என்பது க்ளைமாக்ஸ்!

முந்தைய படங்களைக்காட்டிலும் அருள்நிதி, இதில் வித்தியாசமான முகபாவங்களைக்காட்டி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றால் மிகையல்ல. அவரது பீரோ திருட்டு மதிநுட்பம், பூர்ணாவுடனான காதல் கண்ணாமூச்சி, எக்ஸ்கியூஸ்மி உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே... என பேசியபடி கலர்கலர் டிரஸ்ஸால் அவர் அடிக்கும் லூட்டி, தனக்கு சின்ன வயதில் அந்த நால்வரணியில் இடம் கொடுத்த நண்பன் சுலில்குமார் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும் தவிப்பு... அதனூடே கல்யாணத்திற்கு அவசரப்படும் பூர்ணாவுக்கு பண்ணும் அட்வைஸ் என எல்லாவற்றிலும் சிக்ஸர் அடித்து நடித்திருக்கிறார் அருள்நிதி. அதிலும் ஆக்ஷ்ன் காட்சிகளில் ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் ஆஜானுபாகுவாக அரிவாளும், கையுமாக வந்து எதிராளிகளை சிதறடிக்கும் சீன்களில் மனிதர் வெளுத்து கட்டியிருக்கிறார்.

பூர்ணா டிப்பிக்கல் மதுரை பெண்ணாக வீரமும், தீரமுமாக வந்தாலும் காதலில் கசிந்து உருகிறார். க்ளைமாக்ஸில் அம்மணியின் வில்லி அவதாரம் முன்கூட்டியே பூகிக்க முடிவதால், கொஞ்சம் பொசுக் கென்றாகி விடுகிறது. ஆனாலும் மதுரையை காபந்து செய்ய அந்த மீனாட்சி, இந்த சரவணனை காக்க இந்த மீனாட்சி என்று சுத்தியலும், கையுமாக எதிராளியை சாய்த்து கேரக்ட்ராகவே மாறிட அவர் பேசும் வீரதீர வசனங்கள், அந்த பொசுக்கை நசுக்கி பொசுக்கி விடுகிறது.

அருள்நிதியின் நண்பர்களாக வரும் பவன்ஜி, சுலில் குமார், முருகதாஸில் தொடங்கி கந்துவட்டி ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், இன்ஸ பாண்டிரவி, செந்தி, டாஸ்மாக் பாரை போதையில் வீட்டுக்கே தள்ளிப்போகும் மயில்சாமி வரை எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

தில்ராஜின் ஒளிப்பதிவு - வெல்டன் ராஜ்! என சொல்ல வைக்கிறது. தரண்குமாரின் பாடல்கள் இசையும், பிரவீன் சத்யாவின் பின்னணி இசையும் தகராறு படத்தை ராயல் தகராறு ஆக்கிவிடுகின்றன!

பொதுவாக திருடர்கள் ஒளிந்து மறைந்து வாழ்வார்கள்... இதில், போலீஸையே பொளந்து கட்டுவதும், டீக்கடை, மதுக்கடை என 4 திருடர்களும் சகஜமாக அலைந்து திரிவதும், ஊர் வம்பு வளர்ப்பதும் நம்பும் படியாக இல்லாததும், அரிவாள், சுத்தியள்... என்று இரத்தவாடை படம் முழுக்க வீசுவதும், இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு பார்த்தால் புதியவர் கணேஷ் விநாயக்கின் எழுத்து - இயக்கத்தில்தகராறு - வெகுஜோரு!

மானம் காக்க வீட்டைக் கொடுத்த இயக்குனர்



படித்த கருப்பு கண்ணாடி இயக்குனர் அவர். சித்திரத்தையும் பேச வைக்கிறவர் எதையும் அஞ்சாமல் செய்கிறவர். 

முகமூடி போட்டுக் கொள்ளத் தெரியாதவர். கடைசியாக சொந்தமாக விலங்குகள் பெயரை கொண்ட படத்தை எடுத்தார். 

படத்தை பற்றி நாலு பேர் நாலுவிதமா பாராட்டினாலும் நாலு காசு வந்த சேரவில்லை. 

படத்தை வாங்கிய நிறுவனம் பெரும் நஷ்டம் அடைய, நஷ்டத்துல பங்கு கொடுங்கன்னு டைரக்டரை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுது. 

டைரக்டர் மனம் வருந்தும்படி பேசியிருக்கிறார்கள். வெறுத்துப்போன டைரக்டர். 

தான் சம்பாதித்து வாங்கிய வீட்டு பத்திரத்தை எடுத்துக் கொடுத்து "இதை வித்து உங்க பணத்தை எடுத்துக்குங்க"ன்னு சொல்லிட்டு வந்துட்டாராம்.

தனக்குத்தானே ஆப்பு வைத்த பவர்


சென்னை நகரின் சுவர்களில் செய்து வந்த போஸ்டர் புரட்சியினால் தமிழ் சினிமாவிற்குள் வந்தவர் அந்த பவர் நடிகர். 

அதோடு தான் எங்கு சென்றாலும் அரசியல்வாதிகளைப்போன்று லாரியில் ஆட்களை கூட்டிச்சென்றும் பில்டப் கொடுத்து வந்த அவர், அந்த லட்டு படத்திற்கு பிறகு கோலிவுட்டின் பிரதான காமெடியன் ரேஞ்சுக்கு பேசப்பட்டார். 

ஆனால், அவரது வளர்ச்சி எக்குத்தப்பாக சென்று கொண்டிருந்தபோது அவர் செய்த மோசடி காரணமாக சிறைக் கம்பிகளை எண்ணச்சென்றுவிட்டார். இதனால் பவர் நடித்த சில படங்களுக்கு வேறு காமெடியன்கள் ஒப்பந்தமாகினர்.

இந்த நிலையில், பிரமாண்ட இயக்குனரின் படத்தில் ஒரு ரோபோ வேடத்தில் நடித்து வந்த பவர், அந்த வேடம் பற்றி வெளியில் மூச் விடக்கூடாது என்று இயக்குனர் வாய்ப்பூட்டு போட்டு வைத்திருந்தபோதும், தனது ஆர்வக்கோளாறினால் அதை உளறித்தள்ளி விட்டாராம். 

இதனால் டென்சனான பிரமாண்டம், பவரை வைத்து படமாக்கிய மொத்த காட்சிகளையும் கத்தரித்து எறிந்து விட்டாராம். 

இதனால் பிரமாண்டத்தின் படம் வந்தால் மறுபடியும் தனது மார்க்கெட் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்த்திருநத பவர், எனக்கு நானே ஆப்பு வைத்துக்கொண்டேனே என்று இப்போது தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறார்.
Related Posts Plugin for WordPress, Blogger...