விஜயமான பாடலாசிரியர் சில வருடங்களுக்கு முன்பு தான் எழுதிக்கொண்டிருந்த பேனாவைத் தூக்கிப்போட்டு விட்டு கதாநாயகனாகும் ஆசையில் சினிமாவில் குதித்தார்.
ஆனால், இவர் நடித்த இரண்டு படங்களும் தோல்வியைத் தழுவியது. இதனால், மீண்டும் பாடல் எழுதலாம் என்று திரும்பி வந்தவருக்கு முன்பிருந்த வரவேற்பு இல்லாததால் தற்போது மீண்டும் கதாநாயகனாகும் முடிவில் களமிறங்கியிருக்கிறாராம்.
இந்த முறை முன்னணி கதாநாயகி ஒருவரை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறாராம்.
பல முன்னணி நாயகிகள் இவர் படத்தில் நடிப்பதும் பாழும் கிணற்றில் விழுவதும் ஒன்றுதான் என்பதை தெரிந்துகொண்டு ஓட்டம் பிடிக்கிறார்களாம்.
ஆனாலும், பாடலாசிரியர் அவர்களை விடாமல் விரட்டிக் கொண்டிருக்கிறாராம்.
இவருடன் நடிக்க முடியாது என்று சொல்லியும் இப்படி பாடாய் படுத்துகிறாரே என நடிகைகள் புலம்பி வருகிறார்களாம்.
0 comments:
Post a Comment