ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம்–2’ படங்கள் தள்ளிப்போகிறது. ‘கோச்சடையான்’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதே பண்டிகையில் விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’ படங்களும் வருகின்றன. மூன்றும் பெரிய படங்கள் என்பதால் தியேட்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ‘கோச்சடையான்’ ரிலீசை தள்ளி வைக்கும்படி ரஜினி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன் படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடியாமல் இருக்கிறது. எனவே ஜனவரி கடைசி வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதுபோல் ‘விஸ்வரூபம்–2’ படமும் தள்ளிப்போகிறது. இப்படத்துக்கான டப்பிங், ரீக்கார்டிங், கிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த படம் இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படவேலைகள் முடியாததால் ரிலீசை காதலர் தினமான பிப்ரவரி 14–ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
0 comments:
Post a Comment