விஜய்யின் ஜில்லா - முதல் முன்னோட்டம்

மதுரை பகுதியில் தெனாவெட்டா திரியுற இளைஞனை ஜில்லா என்று செல்லமாக அழைப்பார்கள். அப்படியரு கேரக்டரில் விஜய் நடிப்பதால் படத்துக்கும் ஜில்லா என்று பெயர்.


* திருப்பாச்சி வெற்றிக்கு பிறகு சூப்பர் குட் பிலிம்சும், விஜய்யும் இணைந்துள்ள படம்.



* ஜில்லாவை டைரக்ட் செய்யும் எஸ்.டி.நேசன் சில வருடங்களுக்கு முன்பு அசோக், விசாகா நடித்த பிடிச்சிருக்கு படத்தை டைரக்ட் செய்திருந்தார். அந்த படம் சரியாக போகாததால் டைரக்டர் விஜய்யிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட்டார். வேலாயுதம் ஷூட்டிங்கின்போது விஜய்யிடம் நேசன் ஜில்லா கதையை சொல்ல அப்போதே ஓகே சொல்லிவிட்டார் விஜய்.



* தளபதி படத்தில் ரஜினி-மம்முட்டி கூட்டணி மாதிரி. இதில் விஜய்-மோகன்லால் கூட்டணி அமைந்திருக்கிறது. இரண்டு பேருக்குமே மாஸ் ஓப்பனிங், தனித்தனி காட்சிகள் என சம முக்கியத்துவம் இருக்கிறது. இருவரும் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளில் அனல் பறக்கும்.



* வழக்கமாக விஜய்யின் படங்களில் அவருக்குத்தான் ஓப்பனிங் சாங் இருக்கும் இதில் மோகன்லாலுடன் இணைந்து ஓப்பனிங் சாங் இருக்கிறது. இருவருமே ஆடியிருக்கிறார்கள். விஜய்க்கு சங்கர் மகாதேவனும், மோகன்லாலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடியிருக்கிறார்கள்.



* மோகன்லால் விஜய்யின் தந்தையாக நடிக்கிறார் கேரக்டர் பெயர் சிவா. (காட்பாதராக நடிக்கிறார் என்ற தகவலும் உண்டு) விஜய் கேரக்டரின் பெயர் சக்தி. சிவசக்தி இணைந்து அரக்கனை அழிக்கிற மாதிரி தீயவர்களை அழிக்கிற கதை. விஜய் மார்டன் உடைகளில் வருவார். மோகன்லால் வெள்ளை வேட்டை சட்டை அணிந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பார்.



* அரசியல் வசனங்களோ, காட்சிகளோ கிடையாது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலைகளை சுட்டிக்காட்டும் வகையிலான டைமிங் டயலாக் உண்டு.



* 6 பாடல்கள் அதில் ஒன்று விஜய்யின் ஓப்பனிங் சாங். ஒன்று திருவிழா சாங். ஒன்று குத்துசாங். குத்துசாங்கில் விஜய்யுடன் ஹாலிவுட் நடிகை செக்ரலட் வில்சன் ஆடியிருக்கிறார். 

ஆடிவிட்டு "விஜய் மாதிரி ஒரு டான்சரை பார்த்ததே இல்லை" என்று புகழ்ந்து விட்டு போய்விட்டார். ஒரு டூயட் பாடல் ஜப்பான் நாட்டின் ஓசாகா பகுதியில் இதுவரை யாரும் படமே எடுத்திராத லொக்கேஷனில் படமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பனிமலைகள் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.



* விஜய்யின் காமெடி ஏரியா பிரண்ட் சூரி. இருவரும் இணைந்து செய்திருக்கும் மதுரை ஏரியா லோக்கல் காமெடி தூள் கிளப்பும்.



* விஜய், இதில் சில கெட்-அப்கள் போடுகிறார். அதில் ஒரு கெட்அப் முஸ்லிம் இளைஞன்.



* விஜய் - காஜல் அகர்வால் ஜோடி துப்பாக்கி படத்துக்கு பிறகு மீண்டும் இணைகிறது.



* படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஐதராபாத் விமான நிலையம் அருகிலும், சென்னை பின்னி மில்லிலும் படமாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்சில் படத்தில் நடித்துள்ள முக்கிய கேரக்டர்கள் அனைவருமே ஒன்றாக நடித்திருக்கிறார்கள். விஜய் மோகன்லால் இணைந்து கலக்கும் இந்த கிளைமாக்ஸ் பேசப்படுவதாக இருக்கும்.



* ஊருக்கு நல்லது செய்ற பெரிய மனுஷன் மோகன்லால். அவருக்கு எதிரிகள் நிறைய. அவருக்கு வரும் ஆபத்துகளை அவருக்கே தெரியாமல் விஜய் முறியடிப்பதுதான் கதை. ஒரு காரியத்தை மோகன்லால் திட்டமிடும்போதே விஜய் முடித்துவிட்டு வந்து நிப்பாராம். இதுதான் கதை பற்றி இப்போதைக்கு கசிந்திருக்கும் தகவல்.



* தமிழ் நாடு கேரளாவில் படத்தின் அத்தனை ஏரியாக்களும் விற்று விட்டது. சேனல் ரைட்ஸ் மட்டும் 18 கோடிக்கு விற்றிருப்பதாக சொல்கிறார்கள். உலகம் முழுவதும் 2 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.



வருகிற 15ந் தேதி ஆடியோ மற்றும் டிரைய்லர் ரிலீஸ். பொங்கலுக்கு படம் ரிலீஸ்.

1 comments:

Unknown said...

definitely hit..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...