பரபரப்பான ஐதராபாத் ரயில் நிலையத்தின் வெளியே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த இவரை யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா உங்களால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
இவர் பிச்சை எடுப்பதை தூரத்தில் இருந்து படம் எடுத்துக் கொண்டிருந்தது "பாபி ஐஸூஸ்" என்ற இந்திப் படக்குழு. வருகிற போவோர் அவருக்கு பிச்சை போட்டுச் சென்றார்கள்.
சில பெண்கள் "நல்லாத்தானே இருக்காரு உழைச்சி சாப்பிட்டா என்னவாம்-?" என்று திட்டிக் கொண்டே சென்றார்கள்.
15 நிமிடம் பிச்சை எடுத்தவர் அதன் பிறகு கேமரா சைடிலிருந்து சிக்னல் வரவே நேராக ஓடிச்சென்று அருகில் இருந்த கேரவனில் ஏறிக் கொண்டார்.
அவர் நடிகை வித்யாபாலன். நீண்ட தலைமுடி, தாடி வைத்து ஆண்வேடமிட்டு நிஜமாகவே பிச்சை எடுத்து நடித்தது வித்யாபாலனேதான்.
பாபி ஐஸூஸ் என்ற இந்திப் படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். ஒரு வழக்கில் துப்பறிவதற்காக இப்படி பிச்சைக்கார வேஷம்போட்டு ஐதராபாத் வந்திருப்பதாக கதை. அந்த காட்சியைத்தான் எடுத்தார்கள்.
தமிழ் நாட்டில் 6 படத்திற்காக ஷாமும், ஆரோகரணம் படத்திற்காக விஜியும் நிஜமாகவே பிச்சையெடுத்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment