ஐ படத்தையடுத்து சரித்திரம் படம் இயக்குகிறாராம் ஷங்கர்


பேண்டஸியான கதைகளாக இயக்கி வந்தவர்கள்கூட சமீபகாலமாக சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ளனர். 

அந்த வகையில், நான் ஈ என்ற படத்தை இயக்கிய தெலுங்குப்பட இயக்குனர் ராஜமவுலி இப்போது பாகுபாலி என்ற 16 நூற்றாண்டில் நிகழ்ந்த சரித்திர கதையை படமாக்கி வருகிறார். பிரபாஸ்-அனுஷ்கா, தமன்னா நடிக்கிறார்கள்.

அவரைத் தொடர்ந்து இப்போது தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரும் ஒரு சரித்திர படத்தை இயக்குகிறாராம். 

தற்போது விக்ரம்-எமிஜாக்சனை வைத்து ஐ என்ற படத்தை இயக்கியுள்ள ஷங்கர், அடுத்து மலையாள நடிகர் மம்மூட்டியை பிரதான கதாபாத்திரமாக வைத்து அந்த படத்தை இயக்குகிறாராம்.

புராணக்கதைகளில் ஷங்கரை அதிகம் பாதித்த கதாபாத்திரம் கர்ணனாம். அதனால் கர்ணனை மையமாக வைத்து ஒரு சரித்திர கதையை தயார் பண்ணி விட்ட அவர், அதில் கர்ணனாக நடிக்க பொருத்தமான நடிகர் யார் என்று பரிசீலனை செய்தபோது மம்மூட்டிதான் மனக்கண்ணில் வந்து நின்றாராம். 

ஏற்கனவே பழஸிராஜாவில் மம்மூட்டியின் பிரமாதமான நடிப்பை பார்த்த ஷங்கர், இன்றைய நிலையில் கர்ணன் கதாபாத்திரத்திற்கு மம்மூட்டியை தவிர சிறந்த நடிகர் யாரும் இருக்க முடியாது என்றும் கருதி, அவரிடம் பேசி வைத்துள்ளாராம்.

ஆக, மோகன்லாலைத் தொடர்ந்து மம்மூட்டியும் தமிழில் அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாகி வருகிறார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...