கமலுக்கு பதில் திப்பு சுல்தானாக ஆர்யா

நடிகர் கமல்ஹாசன் திப்பு சுல்தான் வேடத்தில் நடிப்பதாக இருந்த வாய்ப்பு இப்போது ஆர்யாவுக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

திப்பு சுல்தானின் வாழ்க்கையை மையமாக வைத்து மலையாள டைரக்டர் வயலார் மாதவன்குட்டி என்பவர் திப்புவும் உன்னிஅர்சையும் என்ற பெயரில் ஒரு படம் இயக்க இருக்கிறார்.

இப்படத்தை பழசிராஜா தயாரிப்பாளர் ‌கோகுல் கோபாலன் தயாரிக்கிறார்.

முன்னதாக இப்படத்தில் திப்பு சுல்தானாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கமலுக்கு பதில் ஆர்யா அந்த ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படத்தின் நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்றும் தெரிகிறது.

இதுகுறித்து இப்படத்தை இயக்க இருக்கும் வயலார் மாதவன்குட்டி கூறுகையில், இந்தபடத்தின் கதை ஆர்யாவுக்கு ரொம்ப பிடித்து போய் உள்ளது.

இதுகுறித்து அவரிடம் பேசி வருகிறோம். மேலும் படத்தில் நாயகியாக உன்னிஅர்சா ரோலில் நடிக்க இந்தியாவில் உள்ள டாப்-5 நடிகைகளை பரிசீலனை செய்தோம்.

அதில் அனுஷ்கா தான் இந்த ரோல்க்கு சரியாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்துள்‌‌ளோம்.

விரைவில் எல்லாம் முடிவானதுடம் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றார்.

கமல் முன் கமல் பாட்டுக்கு நடனம் ஆடும் ஷாகித் கபூர்

சிங்கப்பூரில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் கமல்ஹாசன் முன்பு அவருடைய பாட்டுக்கு நடனம் ஆட இருக்கிறார் இந்தி நடிகர் ஷாகித் கபூர்.

ஐ.ஐ.எப்.ஏ., எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெற இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

மேலும் ‌இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் பிரம்மாண்ட தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி இருக்கும் விஸ்வரூபம் படத்தின் முன்னோட்டமும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இதனிடையே இந்த விழாவில் பாலிவுட் முதல் ‌கோலிவுட் வரை பல்வேறு நட்சத்திரங்களும் பங்கேற்க‌ இருக்கின்றனர்.

மேலும் நிறைய கலை நிகழ்ச்சிகளும் நடை‌பெற இருக்கிறது. அதில் ஒருபகுதியாக பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கமல்ஹாசனின் பாட்டுக்கு நடனமாடுகிறார்.

கமல்ஹாசன் குள்ளமாகவும், மூன்று வித வேடங்களிலும் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அன்னத்தா ஆடுறாரு... பாட்டுக்குத்தான் ஷாகித் ஆட இருக்கிறார்.

இதற்காக தீவிர பயிற்சியிலும் ஷாகித் இறங்கியுள்ளார். மேலும் இது கமல் பாட்டு என்பதாலும், அதுவும் அவர் முன் ஆட இருப்பதால் கொஞ்சம் பயமாக இருப்பதாக ஷாகித் கூறியிருக்கிறார்.

இந்த விருது நிகழ்ச்சியில் நடைபெற இருக்கும் அனைத்து கலை நிகழ்ச்சிகளுக்கும் பிரபுதேவா தான் நடன அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன் வழியில் பிரியங்கா சோப்ரா

நடிகை நயன்தாரா தனது (முன்னாள்) காதலர் பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டு அதை அழிக்க முடியாமல் படாத பாடு பட்டுக் கொண்டிருக்க, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நயன் வழியில் கையில் பச்சை குத்திக் கொள்ள தயாராகி வருகிறாராம்.

ஆனால் அது அவரது பாய்பிரெண்ட் பெயர் இல்லை என்பது மட்டும் ஒரு நல்ல விஷயம். பிரியங்கா சோப்ராவுக்கு நடிப்பைத் தவிர இசையிலும் அதிக நாட்டம்.

இசை ஆர்வ மிகுதியால் அமெரிக்க பாண்ட் குழு ஒன்றுடன் இணைந்து மியூசிக்கல் ஆல்பம் ஒன்று தயாரித்திருக்கிறார். அதற்கு அம்சமாக ஒரு பெயரும் சூ்ட்டிவிட்டாராம்.

ஆல்பம் வெளியான பிறகு தனது முதல் இசை ஆல்பத்தின் பெயரை பச்சை குத்திக் கொள்ள இருக்கிறாராம் பிரியங்கா சோப்ரா! சூப்பரா குத்திக்கோங்க அம்மணி....!

ஒரு நாளுக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் சந்தானம்

இது சரிப்பட்டு வருமா சந்தானம் என கேட்காமல் கேட்டு வருகிறது கோடம்பாக்கம்!

எஸ்.எம்.எஸ்., ஓ.கே.ஓ.கே., இஷ்டம் வரை தொடர்ந்து ஒரே மாதிரி நடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தி வர அவரோ அலட்டிக் கொள்ளாமல் இனி ஒரு படத்திற்கு இத்தனை லட்சம் என்றெல்லாம் சம்பளம் பேச முடியாது!

நாள் சம்பளம் தான் லாயக்கு. ஒரு நாளைக்கு என் சம்பளம் பத்து லட்சம் என மாஜி காமெடி நடிகர்கள் கவுண்டமணி, வடிவேலு பாணியில் ஆஃப் தி ரெக்கார்டாக அறிவித்து அதன்படியே நடந்து வருகிறாராம்!

கார்த்தியும் - வெங்கட்பிரபுவின் பிரியாணியும்

வெங்கட்பிரபு, கார்த்தியை வைத்து இயக்கும் படத்திற்கு பிரியாணி என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் டைரக்டர் வெங்கட்பிரபு.

படம் மட்டுமல்ல படத்திற்கான தலைப்பு மற்றும் தலைப்புடன் சேர்ந்து வரும் அடைமொழி‌யையும் ரொம்ப வித்தியாசமாக வைப்பவர் வெங்கட்பிரபு.

த‌ன்னுடைய முந்தைய படங்களான கோவா (ஏ வெங்கட்பிரபு ஹாலிடே), மங்காத்தா (ஏ வெங்கட்பிரபு கேம்) என்று தலைப்பு வைத்தவர் அடுத்து கார்த்தியுடன் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறார். இப்படத்திற்கும் வித்தியாசமாக தலைப்பு வைத்திருக்கிறாராம்.

படத்திற்கு பிரியாணி என்றும் அதன் கீழ் (ஏ வெங்கட்பிரபு டயட்) என்றும் பெயர் வைத்திருக்கிறாராம். தற்போது கார்த்தி சகுனி படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்தபடத்தை முடித்து பிறகு வெங்கட்பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தையும் ஞானவேல் ராஜாவே தயாரிக்க இருக்கிறார்.

வெங்கட்பிரபுவின் பிரியாணி கார்த்திக்கு ஜீரணிக்குமா...?

விஸ்வரூபம் பட பாடல் வரிகள்

ஹாலிவுட் தொழில்நுட்பத்துடன், கமல்ஹாசன் பிரமாண்டமாக தயாரிக்கும் விஸ்வரூபம் படத்தில் இடம்பெறும் பாடல் வரிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கதாநாயகனின் வீரத்தை மையப்படுத்தி படத்துக்கான தலைப்பு பாடல் எழுதப்பட்டுள்ளது. வைரமுத்து எழுதிய சுமார் 50 வரிகளில் இருந்து கமல்ஹாசன் தனக்குத் தேவையான வரிகளை படத்தில் பயன்படுத்தியுள்ளார். அதன் வரிகள் இ‌தோ...

எவன் என்று நினைத்தாய்
எதைக்கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்
நெருப்புக்குப் பிறந்தான்
நித்தம் நித்தம் வளர்ந்தான்
வேளை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம்
யாரென்று புரிகிறதா-இவன்
தீயென்று தெரிகிறதா
தடைகளை வென்று வென்று
சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா?
யாருக்கும் அடிமையில்லை-இவன்
யாருக்கும் அரசனில்லை
காடுகள் தாண்டிக் கடக்கின்ற பொழுதும்
காற்றுக்கு காயமில்லை...

இந்த வரிகள்தான் விஸ்வரூபம் படத்தில் பலமுறை ஒலிக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய பாதை

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய பாதை படத்தை டைரக்டர் கம் நடிகர் பார்த்திபன் இயக்கப் போகிறார். புதிய பாதை படத்தில் ரவுடியாக பார்த்திபனும், அவருடன் வாழ்கிற துணிச்சல் மிகுந்த பெண்ணாக சீதாவும் நடித்து இருந்தார்கள்.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, பார்த்திபனே இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிக்கும்போதுதான் பார்த்திபன் - சீதா இடையே காதல் மலர்ந்தது.

படம் முடிந்ததும் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய பாதை படம் தயாராகிறது.

பார்த்திபனே நடித்து, தயாரித்து, இயக்கவுள்ளார். படத்துக்கு, மீண்டும் புதிய பாதை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி பார்த்திபன் அளித்துள்ள பேட்டியில், அந்தக்காலத்தில், பி.யு.சின்னப்பா நடித்த படங்கள் மீண்டும் தயாரானபோது எம்.ஜி.ஆர். நடித்தார். ரஜினிகாந்த் நடித்த படம் மீண்டும் தயாரானபோது அஜித், தனுஷ் போன்றவர்கள் நடித்தனர்.

ஆனால், 20 வருடங்களுக்கு முன்பு ஒரு நடிகர் நடித்த படம் மீண்டும் தயாராகிறபோது, அதே நடிகர் நடிப்பது, உலக சினிமா வரலாற்றில் இதுதான் முதல்முறை. அந்த வகையில், இது உலக சாதனை.

புதிய பாதை படத்தின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி மீண்டும் புதிய பாதை படத்தின் கதையை எழுதியிருக்கிறேன்.

கதாநாயகியாக நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.

ஜூன் 15ம்தேதி, சென்னையில் சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளோம், என்று கூறியுள்ளார்.

மீண்டும் கமலுடன் சிம்ரன்

கமலின் விஸ்வரூபம் ரிலீஸூக்கு ரெடியாகிவிட்ட நிலையில், அவரும் அடுத்த புராஜக்டுக்கு ரெடியாகி விட்டார் என்கிறது கோடம்பாக்க பட்சி.

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் தலைவன் இருக்கிறான் என்பது தான் அடுத்த புராஜக்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரமாண்ட இயக்குநரின் கால்ஷீட் தள்ளிப்போவதால், நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும் என ஒரு ஃபுல் லென்த் காமெடி ஃபில்முக்கு தயாராகி விட்டாராம் கமல்.

ஏற்கனவே கமலை வைத்து அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் ஆகிய படங்களை எடுத்த கே.எஸ்.ரவிக்குமார் தான் இந்தப் படத்தை இயக்குகிறார் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

மேலும் கிரேசி மோகன் வசனம் படத்திற்கு பிளஸாக அமையும் என்கிறது மற்றொரு தரப்பு.

இப்படி இருக்க படம் பஞ்சதந்திரத்தின் பார்ட் 2 என்றும், மீண்டும் இப்படத்தில் கமலுடன் சிம்ரன் ஜோடி சேர்வார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. எது நிஜமோ!?

விஸ்வரூபத்தில் ஹாலிவுட்டுக்கு இணையான கிராபிக்ஸ்

உலகநாயகன் கமல் நடித்து வரும் புதிய படம் விஸ்வரூபம். இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான மேற்பார்வையாளராக பணியாற்றுபவர் மது சூதனன்.

இவர் ஏற்கனவே கமலுடன் தெனாலி, ஆளவந்தான், உன்னைப் போல் ஒருவன் படங்களுடன் இணைந்து பணியாற்றிவர். தற்போது 4வது முறையாக விஸ்வரூபம் படத்தில் இருவரும் இணைகின்றனர்.

விஸ்வரூபம் படம் குறித்து கிராபிக் டிசைனர் மது சூதனன் அளித்துள்ள பேட்டியில், விஸ்வரூபத்தில் பல காட்சிகளில் சிறப்பு கிராபிக்ஸ் இணைக்கப்பட்டிருக்கிறது.

எந்த காட்சியில் கிராபிக்ஸ் செய்துள்ளார்கள் என்பதே தெரியாத அளவிற்கு இருக்கும். இதனால் படத்தின் கதையையோ, காட்சிகளின் இயல்புத் தன்மையையோ எந்த விதத்திலும் பாதிக்காது.

இப்படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். அதிகமான பணிகள் இருந்ததால் தான் இதன் வெளியீடு காலதாமதமானது.

இந்தபடம் நிச்சயமாக ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது, என்று கூறியுள்ளார்.

தனுஷ்-ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதி காரணம் அல்ல

இயக்குனராக ரஜினி மகள் ஐஸ்வர்யா அவதாரம் எடுத்தது அவரது குடும்பத்திற்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அந்த படத்தில் தனது கணவர் தனுஷ் ஜோடியாக ஸ்ருதி நடித்ததால் ஏற்பட்ட விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை.

இருவருக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியிருப்பதாகவும், இதனால் தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதாக ஒருபுறமும், மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் தனுஷ் தென் ஆப்ரிக்காவுக்குப் போயிருப்பதாக மற்றொருபுறமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரிராஜா அளித்துள்ள பேட்டியில், தனுஷ்- ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான்.

ஆனால் அது சாதாரணமாக கணவன் - மனைவி போட்டுக் கொள்ளும் சண்டைதான்.

தனுஷ்,- ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதியைக் காரணம் காட்டுவது சரியல்ல. ஸ்ருதியுடன் தனுஷ் ரொம்ப நெருக்கமாக நடிப்பதைப் பார்த்து மருமகள் கடும் கோபமடைந்தது உண்மைதான்.

எந்தப் பெண்தான் இது சரி என்று சொல்வார்? ஒரு டைரக்டராக அந்த சீன் சரியாக வந்தாலும், மனைவியாக அவங்க நெருக்கத்தைப் பார்த்து ஐஸ்வர்யா ரொம்ப கோபமானது உண்மைதான்.

காரணம், ஐஸ்வர்யாவின் அன்பு அப்படி. மருமகளுக்கும், மகனுக்கும் அவ்வப்போது இப்படி சிறுசிறு சண்டை வரும். ஆனா அவங்க பிரிந்து வாழ்கிறார்கள் என்று சொல்வது தவறு.

தனுஷ் இருக்கும் வீட்டில் அவரோடு ஐஸ்வர்யாவும் அவர்களது குழந்தைகள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் இருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் அன்பான குடும்பமாகத்தான் இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.

ஜூன் 8ம் தேதிக்கு தள்ளிபோகிறது நான் ஈ ரிலீஸ்

தெலுங்கில் மஹதீரா என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த ராஜமவுலி, அடுத்து நான் ஈ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நானி, சமந்தா, கன்னட நடிகர் சுதீப், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதைப்படி ஹீரோயின் சமந்தாவை ஹீரோ நானியும், வில்லன் சுதீப்பும் காதலிக்கின்றனர்.

சமந்தாவோ நானியை காதலிக்கிறார். இதை தாங்க முடியாத சுதீப், நானியை கொலை செய்கிறார். நானியோ ஈ வடிவில் வந்த வில்லன்களை பலிவாங்குகிறார்.

இப்படியொரு கதையை வித்தியாசமாகவும், கிராபிக்ஸ் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார் ராஜமவுலி. இப்படம் இம்மாதம் 30ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது.

இந்நிலையில் படத்தில் கிராபிக்ஸ் உள்ளிட்ட சில பணிகள் நிறைவடையாததால், இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோய் உள்ளது.

அடுத்த மாதம் ஜூன் 8ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

அஜித் படத்தில் அரவிந்த்சாமி

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமியும் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பில்லா-2 படத்திற்கு பிறகு நடிகர் அஜித் விஷ்ணுவர்தன் டைரக்ஷனில் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அஜித்துடன் ஆர்யாவும் நடிக்கிறார்.

இவர்களுக்கு ஜோடியாக நயன்தாராவும், டாப்சியும் நடிக்கின்றனர். இப்படத்தின் சூட்டிங் இம்மாத இறுதியில் மும்பையில் தொடங்க இருக்க நிலையில், இப்படத்தில் மணிரத்னத்தின் ஆஸ்தான ஹீரோவான அரவிந்த்சாமியும் நடிக்க போகிறாராம்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து இருக்கும் அரவிந்த்சாமி, இப்போது மணிரத்னத்தின் கடல் படத்தில் நடித்து வருகிறார்.

அதற்கு அடுத்து இப்போது அஜித் படத்திலும் நடிக்கவுள்ளார்.

அதுவும் வில்லனாக தோன்றபோகிறார் என்பது கூடுதல் தகவல்.

இதனிடையே இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்க இருக்கிறார்.

அஜித்-விஷ்ணுவர்தன்-யுவன் கூட்டணியில் உருவாகும் 2வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த அமலாபால்

"காதலில் சொதப்புவது எப்படி படம் வெற்றி பெற்றபோதும், அமலாபாலின் மார்க்கெட், இறங்கு முகத்தில் உள்ளது. இதனால், தெலுங்கிற்கு சென்று, கொடி நாட்டப் போவதாக சொன்னார்.

ஆனால், அங்கேயும் சொதப்பல் தான். அதனால், மீண்டும் கோடம்பாக்கம் வந்து, சமுத்திரக்கனி இயக்கும் படத்தில் கமிட்டாகி உள்ளார்.

தமிழில், ஜெயம் ரவி, தெலுங்கில் நானி நடிக்கும் இப்படத்தின் இரண்டு பதிப்பிலும், அமலாபால் தான் நாயகி. ஆக, ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்துவிட்டார், அமலா.

டைட்டில் வேட்டையில் சந்தானம்

டைட்டில் வேட்டை என்றவுடன் சந்தானம் ஏதோ படம் எடுக்கிறார் என்று நினைக்க வேண்டாம், எல்லாம் அவருக்கு ஒரு அடைமொழிக்கான வேட்டை தான் அது. சந்தானம் திரையில் தோன்றினால் திரையரங்கம் அதிரும் அளவிற்கு வரவேற்பு எழுகிறது. இது போதாதா அவருக்கு ஒரு டைட்டில் சேர்த்துக் கொள்ள.

எனவே, வைகைப் புயல் போன்ற அடைமொழி வரிசையில் சந்தானத்திற்கு என்ன டைட்டில் சேர்க்கலாம் என ரூம் போட்டு டிஸ்கஷனில் ஈடுபட்டுள்ளனராம் அவரது நண்பர்கள்.

எனவே விரைவில் சந்தானத்திற்கு முன் அடைமொழி தொற்றிக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம் என்கிறது விவரமறிந்த வட்டாரம்!

அமலா பாலை தொடர்ந்து த்ரிஷாவும் விலகல்!

தெலுங்கில் பிரபல நடிகரான ரவி தேஜா நடிக்கும் புதிய படமான சார் ஒஸ்தாரா, இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட இரு முன்னணி நடிகைகள் திடீரென அடுத்தடுத்து விலகிக் கொண்டதுதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

‘சார் ஒஸ்தாரா’ படத்தில் இரு கதாநாயகிகள். ஒருவர் அமலா பால். தமிழில் நல்ல வாய்ப்பு வந்துள்ளதாலும், கால்ஷீட் தர முடியாததாலும் இந்தப் படத்திலிருந்து விலகுவதாக முதலில் அவர் அறிவித்திருந்தார்.

மற்றொருவர் த்ரிஷா. இவர் படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் ரவி தேஜாவே விரும்பி இவரை சிபாரிசு செய்ததால் இயக்குநர் ஒப்பந்தம் செய்தாராம்.

ஆனால் த்ரிஷா தற்போது திடீரென்று அப்படத்தில் நடிக்க முடியாது என கூறி விலகிவிட்டார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரவி தேஜாவும் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டாராம். இதுபற்றி திரிஷா பேசுகையில், "ஏற்கனவே சில பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளளேன்.

அப்படங்களுக்கு ஒதுக்கிய தேதிகளில் ‘சார் ஒஸ்தாரா’ படத்தில் நடிக்க கேட்டனர்.

அது முடியாது என்பதால் படத்தில் இருந்து விலகிவிட்டேன்," என்றார்.

ரவிதேஜா படத்தில் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருந்ததால் தான் த்ரிஷா விலகிக் கொண்டதாகக் தகவல்கள் வெளிவருகின்றன.

ரஜினியின் அடுத்த படம் கே.வி.ஆனந்துடன்

ரஜினி தற்போது கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை முடித்த கையோடு கோ பட இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் ஏ.ஜி.எஸ்., இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. வழக்கமான, மாஸ் ரஜினிப்படமாக இந்தப் படம் இருக்கும் விவரமறிந்த வட்டாரம்.

ரஜினி ஏதாவது படத்தைப் பார்த்து இம்ப்ரஸ் ஆனால், உடனே அந்தப் படத்தின் டைரக்டரிடம் நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்று சொல்வது அவரது வழக்கமாம்!

கோ படத்தைப் பார்த்து விட்டு கே.வி.ஆனந்திடம் அப்படி சொன்னது வைத்து கிசுகிசுக்கள் எழுந்துள்ளனவா இல்லை நிஜமாகவே ரஜினி கே.வி., ஆனந்த் படத்தில் நடிக்கப்போகிறாரா என்பது தான் இப்போதைக்கு கோடம்பாக்கத்தின் ஹாட் டிஸ்கஷன்!

தமிழ்பேச வரும் 7ம் அறிவு டாங்லியின் ப்ளாக் டிராக

7ம் அறிவு படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர் ஹாலிவுட் நடிகர் டாங்லி. ஹாங்காங்கை சேர்ந்த இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

குங்பூ கலையில் தேர்ச்சி பெற்றவரான இவர் இப்போது முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம் பிளாக் டிராகன்.

இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் டாங்லி கடத்தல் கும்பலை அழிக்கும் கேரக்டரில் அசத்தி இருக்கிறார்.

இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு 7ம் அறிவு டாங்லியின் மிரட்டல் நடிப்பில் என்று போஸ்டர் ஒட்டப்பட்டு தமிழில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் வரும் சண்டை காட்சிகள் பார்ப்போரை பிரமிக்க வைக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளனவாம்.

நாக் ஸ்டூடியோ இப்படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகிறது. விரைவில் இப்படம் தமிழகமெங்கும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

பச்சனுக்கு ஓ.கே., சொல்வாரா நயன்தாரா?

பச்சனுக்கு ஓ.கே., சொல்வாரா என்றதும் ஏதோ அமிதாப் பச்சன் படத்தில் தான் நயன்தாரா நடிக்க போகிறார் என்று எண்ணிவிடாதீர்கள். கன்னடத்தில் பச்சன் என்ற பெயரில் ஒரு படம் உருவாக இருக்கிறது.

இந்தபடத்தில் தான் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸி நடிகையாகிவிட்டார் நயன்தாரா.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று எல்லா மொழி படங்களிலும் நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக ஏங்கி நிற்கின்றனர் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும். ஆனால் அம்மணியோ செலக்ட்டிவாக படங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.

இந்நிலையில் கன்னடத்தில் நடிகர் சுதீப்பை வைத்து டைரக்டர் சசாங் இயக்கும் பச்சன் படத்தில் நயன்தாராவை நடிக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

ஆனால் அவரோ தமிழில் அஜித் படம், தெலுங்கில் ‌கோபிசந்த் படம் என்று பிஸியாக இருப்பதால் கால்ஷீட் இல்லை என்று மறுத்து வருகிறார்.

இருந்தும் அவரது கால்ஷீட் கிடைக்கும் என்று நம்பி வருகிறார் படத்தின் டைரக்டர்.

டைரக்டரின் நம்பிக்கையை நயன்தாரா நிறைவேற்றுவாரா...? பொறுத்திருந்து பார்ப்போம்!!

கார்த்தி ஜோடியாக மீண்டும் காஜல் அகர்வால்

நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு நடித்த காஜல் அகர்வால், இப்போது மீண்டும் அவருடன் இணைந்து இன்னொரு படத்தில் நடிக்கவுள்ளார். சகுனி படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, அடுத்து சுராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு அடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இப்படத்திற்கு ஆளின்னால் அழகு ராஜா என்று பெயர் வைத்துள்ளனர்.

தற்போது இப்படத்திற்கான கதையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார் ராஜேஷ்.

இந்நிலையில் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து டைரக்டர் ராஜேஷ் கூறுகையில், எனது முந்தைய படங்களை ‌போன்று இந்தபடமும் காமெடி படமாக இருக்கும்.

தற்போது இப்படத்திற்கான கதை வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். இன்னும் ஹீரோயின் யார் என்று முடிவுசெய்யவில்லை. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, காஜல் அகர்வாலை நடிக்க வைக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே அவர் கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்தில் நடித்திருக்க‌ிறார். அதுமட்டும் அல்ல அவருக்கு இயல்பாகவே காமெடி நன்றாக வரும் எனவே அவரை நடிக்க வைக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

படத்தின் கதை வேலைகள் முடிந்தவுடன் இதுப்பற்றி காஜலிடம் பேசவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

நயன்தாரா பணத்துடன் சிக்கியதால் நடிகைகள் அதிர்ச்சி

நயன்தாரா வெளிநாடு சென்று விட்டு திரும்பிய போது விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினார். அவர் ரூ.20 லட்சத்தை வெளிநாட்டுக்கு எடுத்து சென்றதாகவும் அந்த பணத்தை எதற்காக கொண்டு சென்றீர்கள் என்று அதிகாரிகள் கேள்விகளால் துளைத்ததாகவும் செய்தி வெளியானது.

40 நிமிடம் நயன்தாராவிடம் விசாரணை நடந்ததாக கூறப்பட்டது. இது சக நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தை எடுத்துச் செல்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.

அத்துடன் தங்கள் கணக்குகளை ஆடிட்டர் வைத்து ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பான முறையில் எப்படி முதலீடு செய்வது என்றும் விசாரித்து அறிகின்றனர்.

நடிகை திரிஷா கூறும்போது எனது பண விவகாரங்களை என் அம்மா பார்த்துக் கொள்கிறார். எதில் முதலீடு செய்வது என்பதையும் கவனமாக முடிவு செய்கிறோம். சேமிப்பு என்பது முக்கியத்துவம் அப்போதுதான் வரும் காலத்தில் இதுபோன்று வாழ முடியும் என்றார்.

நடிகை சினேகா சமீபத்தில் தனது திருமண மண்டபத்தை விற்றார். திருமண செலவுக்காக அதை விற்றதாக கூறப்பட்டது. ஆனால் சினேகா அதை மறுத்தார்.

வேறு காரணத்துக்காக விற்றேன் என்றார். நமீதா சம்பாத்தியம் முழுவதையும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார். அடுக்குமாடி வீடுகள் கட்டியும் விற்கிறார். கணக்கு விவகாரங்களை ஆடிட்டர் வைத்து கவனித்து கொள்கிறார்.

பாட்ஷா ஸ்டைலில் இந்தியில் ஒரு படம் - பிரபுதேவா திட்டம்

ரஜினியின் பாட்ஷா பட ஸ்டைலில் இந்தியில் ஒரு படத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார் நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா.

நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பின்னர் தன்னுடைய இந்தி பட வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார் பிரபுதேவா.

இப்போது அக்ஷ்ய் குமார்-சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ரவுடி ரத்தோர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு அடுத்தும் இந்தி படமே இயக்க முடிவெடுத்திருக்கிறார் பிரபுதேவா.

இப்படம் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ப்ளாக்பஸ்டர் மூவியான பாட்ஷா படம் ரேஞ்சுக்கு இருக்குமாம்.

கிட்டத்தட்ட பாட்ஷா பட பாணியிலேயே, அதன் கதையைத் தழுவியே வேறு ஒரு வித்தியாசமான கதை அம்சத்துடம் இப்படம் உருவாக்கப்பட இருக்கிறதாம்.

இப்படத்தின் நாயகனாக அஜய் தேவ்கன் நடிப்பார் எனத் தெரிகிறது.

ராஜேஷ் இயக்கத்தில் மீண்டும் சந்தானம்

இயக்குனர் ராஜேசும்- சந்தானமும் இணைந்த முதல் படம் சிவா மனசுல சக்தி. இந்த படத்தில் காமெடி அதிகளவு பேசப்பட்டது.

அத்துடன் படமும் ஹிட் ஆனதால், ராஜேஷ் தனது அடுத்தடுத்த படங்களிலும் சந்தானத்திற்கு வாய்ப்பு அளித்தார்.

அதன்படி பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திலும், அடுத்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலும் ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நடித்து பெயர் வாங்கினார்.

தற்போது நான்காவது முறையாக இருவரும் இணையவுள்ளனர். கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு அழகு ராஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே கார்த்தியுடன் சிறுத்தையில் காமெடியில் கலக்கியவர் சந்தானம்.

எனவே இந்த மூன்று பேரும் சேர்ந்து பணியாற்றவுள்ளதால் மறுபடியும் ஒரு காமெடி கலக்கலாக இது அமையும் என்று நம்பலாம்.

ஆனால் படப்பிடிப்பு இப்போதைக்கு இல்லையாம், இன்னும் கொஞ்ச மாசமாகுமாம் என்பது புதிய தகவலாகும்.

விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவன்

துப்பாக்கியில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக கவுதம் மேனனுடன் யோஹன் படத்தில் நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தலைவன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தை பிரபல சினிமா பைனான்ஸியர் சந்திரப் பிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார்.

இந்த ஆண்டு இறுதியில், நவம்பர் அல்லது டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக இயக்குனர் விஜய்யும், நடிகர் விஜய்யும் இணைய உள்ளது இப்போதே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சித்தார்த் - பவர்ஸ்டார் மோதல்

படத்‌ தலைப்பு தொடர்பாக நடிகர் ‌சி்த்தார்த்துக்கும், பவர் ஸ்டார் என்று சொல்லும் டாக்டர் சீனிவாசனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. டைரக்டர் வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த மணிகண்டன் என்பவர் சித்தார்த்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு தேசிய நெடுஞ்சாலை என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இது என்னுடைய படத்தலைப்பு என்று போர்கொடி தூக்கியுள்ளார் டாக்டர் சீனிவாசன்.

இதுகுறித்து புதுமுகம் மணிகண்டன் கூறுகையில், நான் சித்தார்த்தை வைத்து தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தை பெங்களூரில் வைத்து சூட்டிங் நடத்தி வருகிறேன்.

கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து, முழுநீள பொழுதுபோக்கு படமாக இப்படத்தை இயக்கி வருகிறேன்.

இதுஒரு ரோடு சப்ஜெக்ட் என்பதால் படத்துக்கு தேசிய நெடுஞ்சாலை என்று பெயர் வைத்துள்ளோம்.

ஆனால் இது என்னுடைய படத்தலைப்பு என்று சீனிவாசன் கூறி வருகிறார். நாங்கள் அவரை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் ஆனால் அவர் முடியாது என்று மறுத்து வருகிறார்.

இதனால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். படத்திற்கு வேறு ஒரு நல்ல தலைப்பை தேடி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

பவர் ஸ்டார் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை படத்தில் நானும், சங்கவியும் நடித்து வருகிறோம். இப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

விரைவில் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளேன். ஆனால் இப்போது சித்தார்த் படத்துக்கு இதே தலைப்பை வைத்துள்ளனர். நான் என் படத்தின் தலைப்பை மாற்ற மாட்டேன். இது என் பட டைட்டில் என்று கூறியுள்ளார்.

சமீபகாலமாக படத்தலைப்பு பஞ்சாய்த்து பெரும் பிரச்னையாக உள்ளது. கடந்த வாரம் விஷாலின் சமர் படமும் இதே பிரச்னையால் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கோடை விடுமுறையில் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் இல்லை

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிக்கை காலங்களை விட கோடை காலம்தான் தமிழ் சினிமாவுக்கு மிக முக்கிய சீசன் காலமாகும். இதனால் கோடையை குறி வைத்து முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகும்.

இந்த ஆண்டு கோடை ரிலீஸில் முக்கியப் படமாக எதிர்ப்பார்க்கப்பட்டது கமல் நடிக்கும் விஸ்வரூபம். ரூ 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

ஆனால் தியேட்டர் ரிலீஸ் இன்னும் தள்ளிப் போகிறது.

படத்தின் விளம்பரம், வர்த்தகம் தொடர்பான வேலைகளை இனிமேல்தான் கமல் துவங்கவிருப்பதால், படம் வெளியாவது தாமதமாகிறது.

இதே போல் அஜித்தின் பில்லா 2. இம்மாதம் வெளியாகவிருந்த இந்தப் படம், பெப்சி தொழிலாளர் பிரச்சினை காரணமாக, ஜூன் அல்லது ஜூலைக்கு தள்ளிப் போயுள்ளது.

கார்த்தி நடிக்கும் சகுனி ஏப்ரலில் வரவிருந்தது. இந்த மாதம் வெளியாகிவிடும் எனத் தெரிகிறது.

இது ஒரு புறம் இருக்க பெரிய படங்கள் வராதது, வழக்கு எண் 18/9 போன்ற சிறிய, ஆனால் நல்ல படங்கள் பக்கம் ரசிகர்களை அதிகம் போக வைத்துள்ளது.

அந்த வகையில் இந்த தாமதத்திலும் ஒரு நல்லது நடந்துள்ளது.

துப்பாக்கியில் விஜய் புகைபிடிக்கும் காட்சி நீக்கம்

துப்பாக்கி படத்தில் விஜய் புகைபிடிக்கும் காட்சியை நீக்கிவிட்டதாக அப்படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்து இருக்கிறார். நண்பன் படத்திற்கு அடுத்து விஜய் நடித்து வரும் படம் துப்பாக்கி.

இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மே 1ம் தேதி இப்படத்தின் டிஸ்லகள் வெளியானது. அதில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற ஸ்டில்கள் வெளியாகின. இதற்கு பசுமை தாயகம் அமைப்பு கடும் ‌எதிர்ப்பு தெரிவித்தது.

இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதுடன், படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கவும் பசுமை தாயகம் இயக்கத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில் அக்காட்சியை நீக்கிவிட்டதாக முருகதாஸ் அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, படத்தின் விளம்பரத்திற்காக மட்டுமே விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் கிடையாது.

ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் அந்தக்காட்சி இருக்கும். இப்போது அதையும் நீக்கிவிட்டோம். இனி படத்தின் விளம்பரங்களிலும் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறாது என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸின் இந்த அறிவிப்பால் துப்பாக்கி படத்திற்கு இருந்து வந்த புகை பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு எதிர்ப்பு

நடிகர் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்திற்கு பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `வீ கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் `துப்பாக்கி எனும் திரைப்படத்தின் விளம்பரம் சுவரொட்டிகள் மூலம் கடந்த 1-ம்தேதி சென்னை நகரில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

`துப்பாக்கி திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளது இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

மத்திய அரசு, தமிழக அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படி குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், `துப்பாக்கி திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குனரும், நடிகரும், `துப்பாக்கி திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைப்பிடிக்கும் காட்சியினை இடம் பெறச்செய்து சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளனர்.

எனவே இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை மீறி, குற்றமிழைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசை பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதன்முறையாக பாலிவுட் படத்தில் விஜய் ஆட்டம்

இதுவரை தமிழ் மொழியை தவிர வேறு எந்த ஒரு மொழியின் நேரடி படத்திலும் நடிக்காத நடிகர் விஜய் முதன்முறையாக, பாலிவுட்டில் ஒரு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

தமிழில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் ஹிட்டான படம் சிறுத்தை. இப்படம் இப்போது இந்தியில் ரவுடி ரத்தோர் என்ற பெயரில் உருவாகி வருகிறது.

அக்ஷ்ய் குமார் இரட்டை வேடத்திலும் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர்.

பிரபுதேவா இப்படத்தை இயக்குகிறார். சஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்ஷ்ய் இப்படத்தில் அதிரடி ஆக்ஷ்ன் காண்பிக்க உள்ளார்.

இதனிடையே இப்படத்திற்கு கூடுதலாக ஒரு சஸ்பென்ஷ் ‌சேர்ந்து இருக்கிறது. விஜய்க்கு போக்கிரி மற்றும் வில்லு படங்களை கொடுத்த டைரக்டர் பிரபுதேவா, ரவுடி ரத்தோர் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடும்படி விஜய்யை கேட்டுள்ளார்.

பிரபுதேவா மீதுள்ள நட்பால் விஜய்யும் ஓ.கே., சொல்லிவிட்டார். இதையடுத்து விஜய்யின் ஆட்டத்தையும் இப்படத்தில் சேர்த்துள்ளனர்.

விஜய்யின் ஆட்டத்தை படமாக்கியபோது, செட்டில் படத்தின் நாயகன் அக்ஷ்ய் உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.

விஜய்யின் ஆட்டத்தை பார்த்து இந்தி படக்குழுவினர் பிரமித்து போய்விட்டனராம். இத்தகவலை பிரபுதேவாவே கூறியுள்ளார்.

அஜித்தின் அடுத்தடுத்த படங்கள்

பில்லா-2 படத்திற்கு பிறகு அஜித் நடிக்க இருக்கும் படங்கள் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை அஜித்தே தெரிவித்து இருக்கிறார். நடிகர் அஜித் இப்போது பில்லா-2 படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

தற்போது அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்தப்படம் குறித்து அஜித் கூறியுள்ளதாவது, பில்லா படத்திற்கு பிறகு அடுத்து விஷ்ணுவர்தன் டைரக்ஷ்னில் நடிக்கிறேன்.

இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இப்படத்தில் என்னுடன் நடிகர் ஆர்யாவும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.

படத்தில் நான் என் வயதுக்கு ஏற்ற கேரக்டரில் நடிக்கிறேன். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் உள்ளோம்.

ஏற்கனவே விஷ்ணுவர்தன் உடன் பில்லா படத்தில் பணியாற்றி இருப்பதால் அவருடைய டைரக்ஷ்னில் மீண்டும் நடிக்க ஆர்வமாய் உள்ளேன்.

விஷ்ணுவர்தன் படத்திற்கு அடுத்து விஜயா பிலிம்ஸ் தயாரிப்பில், சிறுத்தை பட புகழ் சிவா டைரக்ஷ்னில் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய பில்லா-2 படம் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்றும், எனது ரசிகர்களை போல நானும் என்னுடை படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கிறேன் என்றார்.

அஜித் ஸ்டைலில் விஜய்.

மே 1 உழைப்பாளர் தினத்தில் முக்கிய நடிகர்களின் படங்களின் ஸ்டில்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்து வரும் விஸ்வரூபம் படத்தின் ஸ்டில்கள் மற்றும் டிரைலர் வெளியாகி உள்ளன.

இதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் துப்பாக்கி படத்தின் ஸ்டில்களும் வெளியாகி உள்ளன.

இதில் விஜய்யின் துப்பாக்கி படத்தின் ஸ்டில்லை பார்க்கும் போது ஏற்கனவே அஜித் நடித்த அசல் படத்தின் ஸ்டில்கள் போன்று இருப்பதாக ‌பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது அசல் படத்தில் சிவா கேரக்டரில் வரும் அஜித், கூலிங் க்ளாஸ் போட்டு கொண்டு வாயில் சுருட்டை ஊதிக்கொண்டு வருவது போல, இப்போது வெளியாகி இருக்கும் துப்பாக்கி படத்தில் விஜய்யும் கூலிங் க்ளாஸ், வாயில் சுருட்டு என சகலமும் அப்படியே இருக்கிறார்.

என்ன ஒரு சிறுவித்தியாசம் அசல் படத்தில் அஜித்திற்கு தாடியும்-கிருதாவும் சேர்ந்து இருக்கும், விஜய்க்கு அப்படி இல்லை.

மற்றபடி அஜித் ஸ்டைல்தான் விஜய் என்கிறார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...