தனுஷ்-ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதி காரணம் அல்ல

இயக்குனராக ரஜினி மகள் ஐஸ்வர்யா அவதாரம் எடுத்தது அவரது குடும்பத்திற்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அந்த படத்தில் தனது கணவர் தனுஷ் ஜோடியாக ஸ்ருதி நடித்ததால் ஏற்பட்ட விவகாரம் இன்னும் ஓய்ந்த பாடில்லை.

இருவருக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியிருப்பதாகவும், இதனால் தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதாக ஒருபுறமும், மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் தனுஷ் தென் ஆப்ரிக்காவுக்குப் போயிருப்பதாக மற்றொருபுறமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரிராஜா அளித்துள்ள பேட்டியில், தனுஷ்- ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான்.

ஆனால் அது சாதாரணமாக கணவன் - மனைவி போட்டுக் கொள்ளும் சண்டைதான்.

தனுஷ்,- ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதியைக் காரணம் காட்டுவது சரியல்ல. ஸ்ருதியுடன் தனுஷ் ரொம்ப நெருக்கமாக நடிப்பதைப் பார்த்து மருமகள் கடும் கோபமடைந்தது உண்மைதான்.

எந்தப் பெண்தான் இது சரி என்று சொல்வார்? ஒரு டைரக்டராக அந்த சீன் சரியாக வந்தாலும், மனைவியாக அவங்க நெருக்கத்தைப் பார்த்து ஐஸ்வர்யா ரொம்ப கோபமானது உண்மைதான்.

காரணம், ஐஸ்வர்யாவின் அன்பு அப்படி. மருமகளுக்கும், மகனுக்கும் அவ்வப்போது இப்படி சிறுசிறு சண்டை வரும். ஆனா அவங்க பிரிந்து வாழ்கிறார்கள் என்று சொல்வது தவறு.

தனுஷ் இருக்கும் வீட்டில் அவரோடு ஐஸ்வர்யாவும் அவர்களது குழந்தைகள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் இருக்கிறார்கள். நாங்கள் எல்லோரும் அன்பான குடும்பமாகத்தான் இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...