இதுவரை தமிழ் மொழியை தவிர வேறு எந்த ஒரு மொழியின் நேரடி படத்திலும் நடிக்காத நடிகர் விஜய் முதன்முறையாக, பாலிவுட்டில் ஒரு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.
தமிழில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் ஹிட்டான படம் சிறுத்தை. இப்படம் இப்போது இந்தியில் ரவுடி ரத்தோர் என்ற பெயரில் உருவாகி வருகிறது.
அக்ஷ்ய் குமார் இரட்டை வேடத்திலும் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர்.
பிரபுதேவா இப்படத்தை இயக்குகிறார். சஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்ஷ்ய் இப்படத்தில் அதிரடி ஆக்ஷ்ன் காண்பிக்க உள்ளார்.
இதனிடையே இப்படத்திற்கு கூடுதலாக ஒரு சஸ்பென்ஷ் சேர்ந்து இருக்கிறது. விஜய்க்கு போக்கிரி மற்றும் வில்லு படங்களை கொடுத்த டைரக்டர் பிரபுதேவா, ரவுடி ரத்தோர் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடும்படி விஜய்யை கேட்டுள்ளார்.
பிரபுதேவா மீதுள்ள நட்பால் விஜய்யும் ஓ.கே., சொல்லிவிட்டார். இதையடுத்து விஜய்யின் ஆட்டத்தையும் இப்படத்தில் சேர்த்துள்ளனர்.
விஜய்யின் ஆட்டத்தை படமாக்கியபோது, செட்டில் படத்தின் நாயகன் அக்ஷ்ய் உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.
விஜய்யின் ஆட்டத்தை பார்த்து இந்தி படக்குழுவினர் பிரமித்து போய்விட்டனராம். இத்தகவலை பிரபுதேவாவே கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment