இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய பாதை படத்தை டைரக்டர் கம் நடிகர் பார்த்திபன் இயக்கப் போகிறார். புதிய பாதை படத்தில் ரவுடியாக பார்த்திபனும், அவருடன் வாழ்கிற துணிச்சல் மிகுந்த பெண்ணாக சீதாவும் நடித்து இருந்தார்கள்.
படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, பார்த்திபனே இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிக்கும்போதுதான் பார்த்திபன் - சீதா இடையே காதல் மலர்ந்தது.
படம் முடிந்ததும் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய பாதை படம் தயாராகிறது.
பார்த்திபனே நடித்து, தயாரித்து, இயக்கவுள்ளார். படத்துக்கு, மீண்டும் புதிய பாதை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுபற்றி பார்த்திபன் அளித்துள்ள பேட்டியில், அந்தக்காலத்தில், பி.யு.சின்னப்பா நடித்த படங்கள் மீண்டும் தயாரானபோது எம்.ஜி.ஆர். நடித்தார். ரஜினிகாந்த் நடித்த படம் மீண்டும் தயாரானபோது அஜித், தனுஷ் போன்றவர்கள் நடித்தனர்.
ஆனால், 20 வருடங்களுக்கு முன்பு ஒரு நடிகர் நடித்த படம் மீண்டும் தயாராகிறபோது, அதே நடிகர் நடிப்பது, உலக சினிமா வரலாற்றில் இதுதான் முதல்முறை. அந்த வகையில், இது உலக சாதனை.
புதிய பாதை படத்தின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி மீண்டும் புதிய பாதை படத்தின் கதையை எழுதியிருக்கிறேன்.
கதாநாயகியாக நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
ஜூன் 15ம்தேதி, சென்னையில் சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளோம், என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment