படத் தலைப்பு தொடர்பாக நடிகர் சி்த்தார்த்துக்கும், பவர் ஸ்டார் என்று சொல்லும் டாக்டர் சீனிவாசனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. டைரக்டர் வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த மணிகண்டன் என்பவர் சித்தார்த்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு தேசிய நெடுஞ்சாலை என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இது என்னுடைய படத்தலைப்பு என்று போர்கொடி தூக்கியுள்ளார் டாக்டர் சீனிவாசன்.
இதுகுறித்து புதுமுகம் மணிகண்டன் கூறுகையில், நான் சித்தார்த்தை வைத்து தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தை பெங்களூரில் வைத்து சூட்டிங் நடத்தி வருகிறேன்.
கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து, முழுநீள பொழுதுபோக்கு படமாக இப்படத்தை இயக்கி வருகிறேன்.
இதுஒரு ரோடு சப்ஜெக்ட் என்பதால் படத்துக்கு தேசிய நெடுஞ்சாலை என்று பெயர் வைத்துள்ளோம்.
ஆனால் இது என்னுடைய படத்தலைப்பு என்று சீனிவாசன் கூறி வருகிறார். நாங்கள் அவரை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் ஆனால் அவர் முடியாது என்று மறுத்து வருகிறார்.
இதனால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். படத்திற்கு வேறு ஒரு நல்ல தலைப்பை தேடி வருகிறோம் என்று கூறியுள்ளார்.
பவர் ஸ்டார் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை படத்தில் நானும், சங்கவியும் நடித்து வருகிறோம். இப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
விரைவில் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளேன். ஆனால் இப்போது சித்தார்த் படத்துக்கு இதே தலைப்பை வைத்துள்ளனர். நான் என் படத்தின் தலைப்பை மாற்ற மாட்டேன். இது என் பட டைட்டில் என்று கூறியுள்ளார்.
சமீபகாலமாக படத்தலைப்பு பஞ்சாய்த்து பெரும் பிரச்னையாக உள்ளது. கடந்த வாரம் விஷாலின் சமர் படமும் இதே பிரச்னையால் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment