ஹன்சிகாவுக்காக நான் காத்திருக்க வேண்டுமா? - அஞ்சலி


ஆர்யா நடிப்பில் டில்லி பெல்லி இந்தி படத்தின் ரீமேக்கில் தயாராகி வரும் படம் சேட்டை. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா, அஞ்சலி இருவரும் நடித்து வருகிறார்கள். 

முதலில் அஞ்சலிக்கே முதன்மை நாயகி அந்தஸ்தை கொடுத்தவர்கள், பின்னர் ஹன்சிகாவின் மார்க்கெட் எகிறியததைத் தொடர்ந்து இப்போது ஹன்சிகாவை முதன்மை நாயகியாக்கி விட்டனர். 

இந்த சேதியறிந்த அஞ்சலி ஆவேசமாகி விட்டாராம்.

என்றாலும் அதுசம்பந்தமாக நேரடியாக மோதினால் தனக்குத்தான் பாதிப்பு என்பதால், சில நாட்களில் ஹன்சிகாவுடன் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக, தான் ஸ்பாட்டுக்கு வரும்போது ஹன்சிகா அங்கு இல்லையென்றால் கடுப்பாகி விடுகிறாராம் அஞ்சலி. 

அதோடு அவர் வரும்வரை காட்சிகளை படமாக்காமல் தன்னை காக்க வைத்தால் இன்னும் அவருக்கு ப்ரஷ்ஷர் ஏறுகிறதாம். 

அதனால், இதோ ஒரு மணிநேரத்தில் வருகிறேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து எஸ் ஆகும் அஞ்சலி, அதன்பிறகு அன்றைக்கு முழுக்க ஸ்பாட்டில் தலைகாட்டுவதே இல்லையாம். 

இதனால் அதன்பிறகு ஸ்பாட்டுக்கு வந்து அஞ்சலியின் வருகைக்காக காத்திருந்து விட்டு வெறுப்போடு வெளியேறுகிறாராம் ஹன்சிகா.

அதிரடி பட வேட்டையில் இறங்கி விட்டார் சமந்தா


மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டாகி தோல் அலர்ஜி காரணமாக விலகியவர் சமந்தா. அதனால் அந்த நேரத்தில் கைக்கு எட்டிய அந்த வாய்ப்புகள் வாய்க்கு எட்டாமல் போனதை எண்ணி ரொம்பவே வேதனைப்பட்டார் சமந்தா. 

இருப்பினும் இப்போது சகஜநிலைக்கு மாறி விட்டார். மீண்டும் புதிய தெம்போடு சினிமா களத்தில் குதித்திருக்கிறார். 

இந்நிலையில் கெளதம்மேனன் இயக்கத்தில் நடித்துள்ள நீதானே என் பொன் வசந்தம் படமும் திரைக்கு வரத்தயாராகி வருவதால், இந்த வேகத்தோடு மீண்டும் தனது மார்க்கெட்டை பரபரப்பாக்கி விட வேண்டும் என்று நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் சமந்தா.

அதன் முதல்கட்டமாக சில முன்னணி இயக்குனர்களை சந்தித்து பட வேட்டை நடத்தும் சமந்தா, தனக்கு என்னவோ தீண்டத்தகாத நோய் வந்தது போல் தன்னை கழட்டி விட்ட சில மேல்தட்டு ஹீரோக்களுடனும் ரகசிய சந்திப்புகள் நடத்தி வருகிறார். 

அப்படி செல்லும்போது முன்பு மாதிரி உடம்பை முழுசாக கவர் பண்ணும் ஆடைகளை அணியாமல், படுகவர்ச்சியான உடையணிந்து செல்கிறாராம். 

சமந்தாவின் இந்த புதிய அணுகுமுறையில் சில மேல்தட்டு இளசுகள் கிறங்கிப்போவதோடு, சமந்தாவின் அழகு இப்போது இன்னும் மெருகேறியிருக்கிறது என்று படாதிபதிகளின் காதுகளில் ஓதி அவரை படங்களுக்கு கமிட் பண்ணுமாறு நச்சரித்து வருகிறார்களாம். 

சினிமா பற்றி ஹீரோயின்களுக்கு அக்கறை இல்லை


ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் அவரே ஹீரோயின்கள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

பல ஹீரோயின்கள் என் மனதை காயப்படுத்தியிருக்கிறார்கள். நான் இயக்கிய ஒரு படத்தில் ஹீரோயின் பண்ணிய அட்காசத்தை இப்போ நினைச்சாலும் கோபம் வருகிறது. என்னோட படங்களில் ஹீரோயின்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கும். 

கஜினி படத்தில் ஹீரோயின்தான் படத்தோட கீ ரோல், 7ம் அறிவு படத்துல கதையை கொண்டு போறதே ஹீரோயின்தான். என் படத்துல தேவையில்லாம ஒரு சீன்கூட இருக்காது. 

ஆனா ஒரு படத்துல நடிச்ச ஹீரோயின் எனக்கு ஒரு டூயட் பாட்டு வையுங்கன்னு சண்டை போட்டாங்க. கவர்ச்சியாத்தான் டிரஸ் போடுவேன்னு அடம்பிடிச்சாங்க. 

அந்த ஹீரோயினுக்கு தமிழ் தெரியும் என்பதால் அவரையே டப்பிங் பேசுங்கன்னு சொன்னேன் ஆனா அதுக்கு பத்து நாள் வேலை இருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு பேச மறுத்துட்டாங்க. 

ஒரு படத்துக்காக ஹீரோ சிக்ஸ் பேக்ஸ், மொட்டை, வெயிட்டை ஏத்துறது இறக்குறதுன்னு அம்புட்டு ஹார்ட் ஒர்க் பண்றாங்க. ஆனா ஹீரோயின்கள் எந்த மெனக்கெடலும் செய்றதில்ல. 

படத்த கெடுக்குறதுக்கு உண்டான வேலைகளத்தான் செய்றாங்க. ஒரு சில நடிகைங்க தவிர மற்ற யாருக்குமே சினிமா மேல அக்கறை இல்லை. தங்களோட கேரியர், சம்பளம் இதுமேலதான் அக்கறையா இருக்காங்க.

சசிக்குமார் இயக்கும் படத்தில் சூர்யா


டைரக்டரும் நடிகருமான சசிகுமார் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சசிகுமார் ஏற்கனவே சுப்பிரமணியபுரம் ஹிட் படத்தை இயக்கி பிரபலமானார். 

நாடோடிகள், சுந்தரபாண்டியன் போன்ற வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது சூர்யாவுக்காக கதை ஒன்றை தயார் செய்து இருப்பதாகவும் அவரும் நடிக்க சம்மதித்து விடடதாகவும் செய்தி பரவியுள்ளது.

இதுகுறித்து சூர்யா அளித்துள்ள பேட்டியில், சசிகுமாரும், நானும் சந்தித்து பேசினோம். கதை பற்றியும் விவாதித்தோம். ஆனால் சசிகுமார் இயக்கத்தில் நடிப்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை, என்று கூறியுள்ளார். 

சசிகுமார் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தால் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட அனுஷ்கா


சில நடிகைகளை, அவர்கள் நடித்த படங்கள் ஓடவில்லையென்றால்,  ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டுவர். ஆனால், அனுஷ்கா விஷயத்தில் எந்த சென்டிமென்டையும் பார்ப்பதில்லை இயக்குனர்கள்.  

காரணம், "ஸ்பாட்டுக்கு காலை 9:00 மணிக்கு வரவேண்டும் என்றால், முன்னதாகவே ஆஜராகி விடுவார். 

அதோடு, வந்தவுடனே டயலாக் பேப்பரை வாங்கி, தான் நடிக்க வேண்டிய காட்சியை முன் கூட்டியே ஒத்திகை பார்த்து விடுவார். 

இதனால், கேமரா முன்பு வரும்போது, நாம்  எதிர்பார்ப்பதை விட பல மடங்கு அதிகமாக நடிப்பார் என்று, அனுஷ்காவைப் பற்றி சொல்லும் இயக்குனர்கள்,  "ஒரு வேளை அவர் இடம்பெறும் படம்  தோல்வி என்றாலும், அதில் அவரது பங்களிப்பு சிறப்பாகவே இருந்திருக்கும். 

அதனால், வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட நடிகையாகவே அனுஷ்கா கருதப்படுகிறார் என, அனுஷ்கா பெருமையை பாடுகின்றனர். 

பிரேம்ஜிக்கு சூடு வைத்த கார்த்தி


தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் எல்லா படங்களிலுமே பிரேம்ஜியின் ஆதிக்கம் அளவுக்கதிகமாகவே இருந்து வருகிறது. 

குறிப்பாக, ஒவ்வொரு படங்களிலுமே தம்பியையும் ஒரு ஹீரோ போலவே சித்தரித்திருப்பார் வெங்கட்பிரபு. 

அதேசமயம் அஜீத் நடித்த மங்காத்தா படத்தில் மட்டும் அந்த பில்டப் கொஞ்சம் குறைவாக இருந்தது.

ஆனால் அடுத்து கார்த்தியை வைத்து வெங்கட்பிரபு இயக்கவுள்ள பிரியாணி படத்தில் கார்த்திக்கு இணையான வேடத்தில் தானும் நடித்து விடவேண்டும் என்று அண்ணனை டார்ச்சர் பண்ணி வந்திருக்கிறார் பிரேம்ஜி. 

அதன்காரணமாக, வழக்கம்போல அவரது கேரக்டருக்கும் கதையில் கூடுதல் முக்கியத்தும் கொடுத்து காட்சியமைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. 

ஆனால் இந்த தகவல் கார்த்தியின் காதுக்கு சென்றபோது டென்சனாகி விட்டாராம். 

பிரியாணி கார்த்தி படம். இங்கே யாரும் ஓவர் அலட்டல் செய்தா அப்புறம் ஒருசின்ன சீன்லகூட தலைகாட்ட முடியாது என்று சூடு காட்டி பேசியிருக்கிறார். 

இதனால் ஆடிப்போன வெங்கட்பிரபு, இப்போது பிரேம்ஜியின் கேரக்டருக்கு சென்சார் வைத்து துக்கடா கேரக்டராக்கி விட்டாராம்.

மீண்டும் பட தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர்


காதல், வெயில், கல்லூரி, அறை எண்-305ல் கடவுள், இம்சை அரசன் 23ம் புலிகேசி, ஈரம் போன்ற படங்களை தன், "எஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தவர் இயக்குனர் ஷங்கர். 

இதில் சில படங்கள் வெற்றி பெற்ற போதும், பல படங்கள் தோல்வியடைந்து பலத்த நஷ்டத்தை கொடுத்ததால், அதன் பிறகு படம் தயாரிப்பதையே அவர் நிறுத்தி விட்டார்.

ஆனால், இப்போது எழுத்தாளர் ஒருவர் கூறிய கதை, அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம். இதனால், மீண்டும் படம்  தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஷங்கர். 

இதையடுத்து, "எஸ் பிக்சர்சை நோக்கி வாய்ப்புக் கேட்டு,  இயக்குனர்கள் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.

நயன்தாராவுக்கு சகலமும் ஆர்யாதானாம்


பிரபுதேவாவிடமிருந்து முற்றிலுமாக விலகிவிட்ட நயன்தாராவுக்கு பலவிஷயங்களிலும் உதவிகரமாக செயல்பட்டு வருகிறார் ஆர்யா. 

அவருக்கு வீடு பார்த்து கொடுப்பது முதல், படம் வாங்கி கொடுப்பது, சம்பளம பேசுவது என்று சகலமுமாகி வருகிறார். 

இதெல்லாம் வெளிப்படையாகவே செய்து வருகிறார். ஆனால், நயன்தாரா மீது அவர் ஓவர் கரிசனம் காட்டி வருவது இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை.

அதாவது, தான் வேறு ஸ்பாட்டில் நடித்துக்கொண்டிருந்தாலும் அடிக்கடி நயன்தாராவுக்கு போன் போட்டு, சூழ்நிலைகளை விசாரிக்கிறாராம். குறிப்பாக, தான் சாப்பிடுவதற்கு முன்பு நயனுக்கு போன் போட்டு சாப்பிட்ட விவரத்தை கேட்டறிய மறப்பதே இல்லையாம். 

அவர்களுக்குள் அப்படியொரு அந்நியோன்யம் நிலவி வருகிறது. அதேபோல் நயன்தாராவும், தான் வீட்டில் ஓய்வாக இருக்கும் நாட்களில் கேரள பக்குவத்துடன் சமைத்து அதை படபபிடிப்பு தளத்தில் இருக்கும் ஆர்யாவுக்கு கொடுத்து அனுப்புகிறாராம். 

அதை நயனுடன் போனில் பேசிக்கொண்டே ருசிக்க ருசிக்க சாப்பிடுகிறாராம் ஆர்யா. அவர்களுக்கிடையேயான நட்பு இப்போது இந்த அளவுக்கு முத்திப்போய் விட்டதாம். 

அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பது - குழப்பத்தில் விஜய்


துப்பாக்கி படத்தில் விஜய் நடித்து வந்தபோது, அடுத்தபடியாக கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தார். 

ஆனால் அவர், படத்தின் கதையையே சொல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்ததால் அப்படத்திலிருந்து விலகினார் விஜய். 

அதனால் அதற்கடுத்தபடியாக விஜய்யை இயக்கயிருந்த ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்தார் நடிகர் விஜய். இதெல்லாம் தாண்டவம் படம் வெளியாவதற்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவுகள்.

ஆனால் இப்போது தாண்டவம் தோல்வியடைந்து விட்டதால் ஏ.எல்.விஜய் மீது விஜய் வட்டாரத்தில் அதிருப்தியான சூழல் நிலவுகிறது. அவரை நம்பி இறங்கலாமா?வேண்டாமா? என்ற குழப்பததில் இருக்கிறார்களாம். 

இந்த நிலையில், விஜய்யைக்கொண்டு பூவே உனக்காக, லவ்டுடே, துள்ளாத மனமும் துள்ளும போன்ற படங்களை தயாரித்த ஆர்.பி.செளத்ரிக்கு மீண்டும் விஜய் கால்சீட் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்த படத்தை நேசன் என்ற புதுமுக இயக்குனர்கள் இயக்குவதாகவும் கூறப்படுகிறது.

சந்தானம் கட்டுப்பாட்டில் டி.வி நடிகை


இயக்குனர்களின் கட்டுப்பாட்டில்தான் நடிகைகள் இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு காமெடி நடிகரின் கட்டுப்பாட்டில் ஒரு நடிகை இருக்கிறார் என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். 

அந்த காமெடி நடிகர் வேறாருமில்லை சந்தானம்தான். இவரது கட்டுப்பாட்டில்தான் பிரபல சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து, இப்போது அழகி என்ற சீரியலில் நடித்து வரும் நிஷா என்ற நடிகை இருக்கிறாராம்.

இவரை தொடர்பு கொண்டு யாராவது நடிப்பதற்கு அழைத்தால், என்னை எதுவும் கேட்காதீர்கள். எதுவாக இருந்தாலும் சந்தானத்திடம் கேளுங்கள் என்கிறாராம். 

சீரியல்களில் நடிப்பதற்கு நடிகைக்கு பச்சைக்கொடி காட்டியிருககும் சந்தானம், எக்காரணம் கொண்டும் சினிமாவில் முகம் காட்டக்கூடாது என்று அதிரடி கண்டிசன் போட்டு வைத்திருககிறாராம். 

அதனால் சினிமாக்காரர்கள் தொடர்பு கொண்டால் போனை அட்டன் பண்ணுவதே இல்லை நடிகை. 

வாய்ப்பைத் தட்டிப்பறித்த நயன்தாரா - ஆத்திரத்தில் அஞ்சலி


ஏ.ஆர்.முருகதாஸ் தனது சொந்த பேனரில் தயாரித்த எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த அஞ்சலி, இப்போது அவரது தம்பி சரவணன் நடிக்கும் வத்திக்குச்சி படத்திலும் நடித்து வருகிறார். 

முருகதாசின் தம்பி புதுமுக நடிகர் என்றபோதும், தனக்கு எங்கேயும் எப்போதும் படத்தில் நல்ல வேடம் கொடுத்த நன்றிக்கடனுக்காக நடிக்க சம்மதித்துள்ளார் அஞ்சலி. 

அதுமட்டுமின்றி அடுத்து ஆர்யா-ஜெய்யை நாயகர்களாக வைத்து தான் தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க வைப்பதாக அஞ்சலிக்கு வாக்குறுதி அளித்திருந்தாராம்.

ஆனால் அப்படத்திற்கான வேலைகள் நடைபெற்றது, அஞ்சலியைதான் நாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஜெய் பிடிவாதமாக சொன்னபோதும், ஆர்யா தலையிட்டு, நயன்தாராவைதான் நடிக்க வைக்க வேண்டும் என்று ஒத்தக்காலில் நின்றாராம். 

இல்லையேல் என் கால்சீட் கிடைக்காது என்றும் மறைமுகமாக மிரட்டல் விடுத்தாராம். 

இதனால் குழம்பிப்போன முருகதாஸ், அஞ்சலியை ஓரங்கட்டிவிட்டு நயன்தாரா பக்கம் திரும்பியிருக்கிறார். 

இப்போது ராஜா ராணி என்று அப்படத்துக்கு பெயர் வைக்கப்பட்டு படப்பிடிப்பையும் தொடங்கி விட்டனர். 

இந்த சேதியறிந்து, எனக்கு வர வேண்டிய வாய்ப்பை ஆர்யா மூலம் தட்டிப்பறித்து விட்ட நயன்தாராவுக்கு சரியான பாடம் புகட்டுவேன் என்று ஆவேசமாக பேசிக்கொண்டிருக்கிறாராம் அஞ்சலி.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் 7 படங்கள்


தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 13-ந் தேதி எத்தனை படங்கள் ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக் கொண்டு உள்ளது. 

ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம்’ படங்கள் தள்ளிப்போகின்றன. 

பெரிய பட்ஜெட் படமான சூர்யாவின் ‘மாற்றான்’ தீபாவளி போட்டியில் பங்கேற்காமல் முன்கூட்டியே ரிலீசாகி விட்டது. 

தற்போதைய நிலவரப்படி ‘துப்பாக்கி‘, ‘கும்கி‘, ‘போடா போடி‘, ‘அம்மாவின் கைப்பேசி‘, ‘கள்ளத்துப்பாக்கி’, ‘அஜந்தா’, ‘லொள்ளு தாதா பராக்பராக்’ ஆகிய 7 படங்கள் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளது. 

‘துப்பாக்கி’யில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். மும்பை குண்டு வெடிப்பை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. 

‘போடா போடி’யில் சிம்பு நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். காதல் கதையாக தயாராகியுள்ளது. 

‘கும்கி’ படத்தில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். யானையை அடக்கும் இளைஞனை பற்றிய கதை. லிங்குசாமி இப்படத்தை தயாரித்துள்ளார். 

‘அம்மாவின் கைபேசி’ படம் தாய்க்கும், மகனுக்குமான பாச போராட்டத்தை விளக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். 

பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். ரவிதேவனின் ‘கள்ளத்துப்பாக்கி’ திரில்லர் படமாக தயாராகியுள்ளது. ‘லொள்ளு தாதா பராக் பராக்’ படத்தில் மன்சூர்அலிகான் நாயகனாக நடித்துள்ளார். 

கந்து வட்டியை மையமாக வைத்து காமெடி படமாக தயாராகியுள்ளது. ‘அஜந்தா’ படத்தை ராஜ்பா ரவிசங்கர் திருமால் இயக்கியுள்ளனர். காதல் கதையாக தயாராகியுள்ளது.

பழிவாங்கும் புதிய பேய் படம்


டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு குறைந்த செலவில் பயமுறுத்தும் பேய் படங்களின் தயாரிப்பு அதிகரித்து உள்ளது. அந்த வரிசையில் தயாராகும் படம் யாரது. 

சூர்யா விஷூவல் கம்யூனிகேஷன் சார்பில் ஏ.சுந்தர்ராஜ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஏ.சம்பத்குமார் இயக்குகிறார். வருண், உண்ணி கிருஷ்ணன் ஹீரோவா நடிக்கிறார்கள், சவுந்தர்யா, மீனா என்ற இரண்டு ஹீரோயின்கள்.

ஒரு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பெண் இமாச்சல பிரதேசத்தில் உள்ள பனிமலைக்கு சுற்றுலா செல்கிறார். அங்கு வேறு ஊரிலிருந்து சுற்றுலா வரும் சில இளைஞர்கள் சேர்ந்து அவளை கற்பழித்து கொன்று விடுகிறார்கள். 

அதன் பிறகு எதுமே நடக்காத மாதிரி தொடர்ந்து சுற்றுலா செல்கிறார்கள். இறந்தவர் ஆவியாக வந்து அவர்கள் செல்லும் இடங்களுக்கு தொடர்ந்து சென்று எப்படி பழிவாங்குகிறாள் என்பதுதான் கதை. 

கேரளா, ஆந்திரா, அசாம், மனாலி, இமாச்சல பிரதேசம் என்று இந்தியாவின் அழகான பிரதேசங்களில் படம் பிடித்திருக்கிறார்கள்.

இப்படி பமுறுத்தி பயமுறுத்தியே ரணகளமாக்குறாங்களே...

மாற்றான் செகண்ட் பார்ட் வருமா?


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா இரட்டையராக நடித்த படம் மாற்றான். 

இப்படத்தில் சூர்யா இரட்டையராக நடித்ததை படம் முடியும் தருவாயில் வரை சஸ்பென்சாக வைத்திருந்த கே.வி.ஆனந்த், பின்னர் முதலில் தமிழ் மீடியாக்களுக்கு சொல்லாமல், ஆந்திராவில் பிரஸ்மீட் வைதது அங்குள்ள மீடியாக்களுக்குத்தான் சொன்னார். 

அதோடு, இப்படம் இதுவரை சூர்யா படங்கள் வசூலித்ததைவிட பெரிய அளவில் வசூல் சாதனை புரியும் என்றெல்லாம் பில்டப் கொடுத்தார்.

ஆனால் இப்போது படம் தமிழ், தெலுங்கு இரண்டு ஏரியா ரசிகர்களாலும் புறக்கணிக்கப்பட்டு விட்டது. .

ஆனால், குப்புற விழுந்து மீசையில் மண் ஒட்டியபோதும் படம் ஹிட் என்றபடியே காலறை தூக்கி விட்டபடிதான் நடிக்கிறார்கள். 

இந்த சமயத்தில் சூர்யாவை சந்தித்த சில அபிமானிகள், மாற்றான் படத்தின் அடுத்த பார்ட் வருமா? என்றொரு கேள்வியை எதேச்சையாக கேட்க, அதிர்ச்சியடைந்தவர், சமாளித்துக்கொண்டு, இது எனக்கான கேள்வி இல்லை. சம்பந்தப்பட்ட டைரக்டர்கிட்டதான் கேட்கனும் என்று சொலலி எஸ்கேப் ஆகி விட்டாராம்.

டைரக்டர் ஏ.எல்.விஜய்க்கு செக் வைத்த நடிகர் விஜய்


விக்ரம் நடிப்பில் உருவாகி வெளியான தாண்டவம் படம் எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை என்பதால், அதற்கு முன்பு வரை, டைரக்டர் ஏ.எல்.விஜய் சொல்லியிருந்த கதை மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த நடிகர் விஜய்க்கு இப்போது அந்த கதை மீதிருந்த நம்பிக்கை போய் விட்டதாம். 

இதற்கிடையே தாண்டவம் படத்தின் கதை எனக்கு சொந்தமானது என்று ஒரு உதவி இயக்குனரும் போர்க்கொடி பிடித்ததால், கதை விஷயத்தில் ஏ.எல். விஜய் கொஞ்சம் வீக்தான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

அதனால் அவர் கதையை நம்பியிறங்கி நாமும் காலியாக வேண்டாம் என்று உஷாராகி விட்டார் விஜய். 

அதன்காரணமாக, தெலுங்கு, இந்தியில் வெற்றி பெற்ற நல்ல கதைகளை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று கூறியிருக்கிறாராம். 

இதனால் மாதக்கணககில் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த ஏ.எல்.விஜய், தன் மீது விஜய் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருப்பதை புரிந்து கொண்டு, ஆந்திரா, மும்பையில் சமீபத்தில் வெற்றி பெற்ற அத்தனை படங்களின் சி.டிக்களையும் கொண்டு வந்து உதவி இயக்குனர்கள் படைசூழ கொட்ட கொட்ட பார்த்துக்கொண்டிருக்கிறார். 

ரஜினியை இயக்குவது விளையாட்டல்ல

மாற்றான் படத்தைத் தொடர்ந்து, ரஜினிக்கு நீங்கள் கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறதே? என்று இயக்குனர் கே.வி.ஆனந்தைக் கேட்டால், அது வெறும் வதந்தி என்கிறார். 

மேலும், "ரஜினிக்கு கதை பண்ணுவது, சாதாரணமும் அல்ல; அவரை இயக்குவது விளையாட்டான விஷயமும் அல்ல; ரொம்ப பெரிய விஷயம் என்று சொல்லும் கே.வி.ஆனந்த், "ரஜினி படத்தை இயக்குவது குறித்து, நான் இன்னும் யோசித்து கூட பார்க்கவில்லை என்கிறார். 

"அதே சமயம், விஜய், அஜீத்தை வைத்து விரைவில் படம் இயக்குவேன். அவர்களுக்கேற்ற கதை உருவாக்கும் பணி நடக்கிறது என்கிறார் ஆனந்த்.

சிம்புவுக்கு மிரட்டல் விட்ட படாதிபதி


சிம்பு நாயகனாக நடித்துள்ள போடா போடி, வாலு ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்கு வேகமாக தயாராகி வருகின்றன. 

இந்த படங்களை வெற்றி படமாக கொடுத்து விட வேண்டும் என்பதில் படுதீவிரமாக இருக்கிறார் சிம்பு. 

ஆனால் இந்த படங்கள் எப்படி ரிலீஸ் ஆகிறது என்று பார்த்து விடுகிறேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார் தயாரிப்பாளர் ஒருவர்.

அதாகப்பட்டது, சிம்பு ஏற்கனவே நடித்த ஒஸ்தி படத்தை தயாரித்தவர் டி.ரமேஷ். 

அந்த படத்தை இவரிடமிருந்து ரூ. 8 கோடிக்கு வாங்கி ரிலீஸ் பண்ணினார் சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர். 

ஆனால் அந்த 8 கோடியை இன்றுவரை ரமேசுக்கு தரவில்லையாம். அதனால் கடும் கோபத்தில் இருக்கும் அவர், எனக்குததர வேண்டிய மொத்த பணத்தையும் எண்ணி வைக்க வேண்டும். 

ல்லையேல் படங்களை வெளியிட தடை உத்தரவு வாங்கி விடுவேன் என்று மிரட்டல் விட்டிருக்கிறார். இதனால் மிரண்டு போயிருக்கிறார் சிம்பு.

ரஜினிக்கு பிறகு விஜய்யிடம் அந்த மனப்பாங்கு உள்ளது
பிரமாண்டங்களுக்கு முதலில் பேசப்படும் பெயர் தயாரிப்பாளர் எஸ்.தாணு. விளம்பரங்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் இன்று வரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. 

யார் படத்தில் தொடங்கி இப்போது வெளிவர இருக்கும் துப்பாக்கி படம் வரை அவரது பிரமாண்டம் தொடர்கிறது. ஆனால் இவருக்கும் இடையில் சில சறுக்கல்கள் வந்தன. 

இருந்தும் அதை எல்லாம் முறியடித்து இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு துப்பாக்கி படம் மூலம் களம் இறங்கி இருக்கிறார். துப்பாக்கி படத்தை பற்றி பல செய்திகள் வந்தாலும், அதில் நடித்த விஜய் பற்றியும், அவர் செய்த உதவியை பற்றி தான் இன்றைய கோடம்பாக்கம் முழுவதும் ஒலித்து கொண்டு இருக்கிறது. அப்படி என்ன செய்தார் விஜய் என்று கேட்கிறீர்களா...? 

துப்பாக்கி படம் துவங்கிய பிறகு தாணு அவர்களுக்கு நிதி நெருக்கடி வந்ததாம். எங்கே தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் பணப்பிரச்னையில் சிக்கி ஷூட்டிங் நின்றுபோய்விடுமோ என்று நினைத்த விஜய், தாணுவின் நிலையை புரிந்து கொண்டு அவரை வரவழைத்து ரூபாய் எதுவும் நிரப்பப்படாத காசோலை ஒன்றை கொடுத்து எவ்வளவு வேண்டுமோ எடுத்து கொள்ளுங்கள் என்றாராம். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லையாம் தாணு. 

இதுப்பற்றி தாணுவிடம் கேட்டபோது, சிவாஜி படத்தில் ரஜினி நடித்த போது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வாங்கி கொண்டு நடித்தார். 

படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகுதான் தனக்குரிய சம்பளத்தை பெற்றுக்கொண்டார். 

அந்தளவுக்கு ஒரு தயாரிப்பாளரின் கஷ்டத்தை உணர்ந்தவர் ரஜினி. அவருக்கு பிறகு விஜய்யிடம் அந்த மனப்பாங்கு இருக்கிறது. ரஜினி ரூபத்தில் விஜய்யை பார்க்கிறேன் என்று நெகிழ்கிறார். 

ரஜினிக்கு 240 கோடி சம்பளமா?சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சாக்ஸ் பிக்சர்ஸ் சக்ஸேனா படம் தயாரிக்கப்போவதாகவும். அந்தப் படத்துக்கு அவருக்கு 240 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் பரபரப்பாக செய்திகள் வெளியானது. 

ஆனால் இதனை சக்ஸ்சேனா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எந்திரன் படம் தயாரிப்பில் இருந்தபோது இந்தப் படத்தை 210 கோடிக்கு வியாபாரம் செய்வேன் என்று ரஜினியிடம் சொன்னேன். 

அது முடியுமா ஏன்று ஆச்சர்யத்தோடும், சந்தேகத்தோடும் கேட்டார். செய்து காட்டினேன். சமீபத்தில் அவரை சந்தித்து பேசினேன். 

அப்போது நீங்க மட்டும் எனக்கு ஒரு படம் நடிச்சு தாருங்கள், 40 நாள் கால்ஷீட் போதும். உங்களோடு இன்னொரு ஹீரோ நடிப்பார். 

அந்தப் பபடத்தை 240 கோடிக்கு விற்று காட்டுகிறேன் என்று சொன்னேன். மீண்டும் ஆச்சர்யமாக முடியுமா என்று கேட்டார். 

நீங்கதான் இந்தியாவில் நம்பர் ஒன் கலெக்ஷன் மன்னன் நிச்சயம் முடியும் என்று சொன்னேன். சரி பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார். 

அவ்வளவுதான். அவரது படத்தின் வியாபாரம்தான் 240 கோடியே தவிர அவருக்கான சம்பளம் அல்ல. என்கிறார் சாக்ஸ்.

விஜய் படத்துக்கு தலைப்பை மாற்றிய விஜய்


விக்ரம் நடிப்பில் தாண்டவம் படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் அடுத்து விஜய்யை நாயகனாகக்கொண்டு தனது அடுத்த படத்தை இயக்குகிறார். 

தற்போது விஜய் துப்பாக்கி படத்தின் வேலைகளில் தீவிரமாக இருக்க, ஏ.எல்.விஜய்யோ, விஜய் நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம், பாடல் கம்போசிங் என்று களத்தில் இறங்கியுள்ளார். 

இந்தநிலையில், ஏற்கனவே விஜய்க்காக நீங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் தலைவன் என்ற பெயரில் ஒரு படம் தற்போது தயாராகி வருகிறதே? 

நீங்கள் அதே தலைப்பைத்தான் விஜய் படத்துக்கு வைக்கப்போகிறீர்களா? இல்லை வேறு தலைப்பு யோசிக்கிறீர்களா? என்று கேட்டபோது, தலைவன் என்ற தலைப்புதான் எனது கதைக்கு பொருத்தமாக இருக்கும். 

அதனால் அந்த தலைப்பை சேம்பரில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஆனால் தற்போது இன்னொரு படமும் அதே தலைப்பில் உருவாகி வருகிறது. 

அதனால் எதற்கு பிரச்சினை என்று நான் வேறு தலைப்பை வைக்க முடிவு செய்திருக்கிறேன் என்கிறார் 

ஏ.எல்.விஜய். ஏற்கனவே தெய்வத்திருமகன் படத்தின் தலைபபு பிரச்சினை. அடுத்து தாண்டவம் கதை பிரச்சினை என்று பல சர்ச்சைகளுக்கு உள்ளானதால், மீண்டும் இன்னொரு சர்ச்சை வேண்டாமே என்று அவர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

சீதையாக நடித்த நயன்தாராவுக்கு நந்தி விருது


நடிகை நயன்தாரா சீதையாக நடித்த ராமராஜ்ஜியம் படம் ஆந்திர மாநில அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருதான நந்தி விருதைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டுக்கான நந்தி விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. 

அதில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான நந்தி விருது கிடைத்துள்ளது. இந்த படம் ராமாயணத்தில் லவ - குசா கதையை அடிப்படையாக கொண்டு நவீன தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டது. 

இந்தப் படத்தில் ராமனாக என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாவும், சீதையாக நயன்தாராவும் நடித்தனர். சீதையாக சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு நந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தெலுங்கில் சிறந்த படமாகவும் ஸ்ரீராமராஜ்ஜியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிறப்பாக இசை அமைத்ததற்காக இளையராஜாவுக்கும் நந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி நயன்தாரா அளித்துள்ள பேட்டியில், எனக்கு ஆந்திர அரசின் மிக உயர்ந்த நந்தி விருது கிடைத்து இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 

ராமராஜ்ஜியம் படத்தில் கஷ்டப்பட்டு அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து நடித்தேன். கடவுள் அருளால் எனக்கு விருது கிடைத்து இருக்கிறது. 

இந்தப் படத்தில் சீதையாக நடிக்க என்னை தேர்வு செய்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

அவர் மட்டும் எனக்கு இந்த சந்தர்ப்பம் கொடுக்காவிட்டால் சீதையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்காது. 

இது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். நான் நடித்த படங்களில் ஸ்ரீராமராஜ்ஜியம் எப்போதும் என் நினைவில் இருக்கும், என்று கூறியுள்ளார்.

ரஜினியின் கோச்சடையான் பொங்கலுக்கு ரிலீஸ்


ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கும் படம் கோச்சடையான். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

ரூ.100 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தயராகியுள்ளதாக கூறப்படுகிறது. '3டி'யில் உருவாகியுள்ளது. பெரும் பகுதி படப்பிடிப்பு வெளி நாடுகளில் நடந்துள்ளது.

இந்தப் படம் தெலுங்கில் விக்ரமசிங்கா என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. 

இந்தி, மலையாள மொழிகளிலும் இது வெளியாகிறது. 

கோச்சடையான் படத்தை அடுத்த மாதம் 12-ந்தேதி ரஜினி பிறந்த நாளையொட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது. 

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாற்றான் - சினிமா விமர்சனம்


சூர்யாவின் அப்பா ஒரு ஆராய்ச்சியாளர். அவர் தனது மனைவிக்கு டெஸ்ட் டியூப் குழந்தை பிறக்கச் செய்கிறார். அது இரட்டைக் குழந்தையாக ஒட்டிப்பிறக்கிறது. 

ஒரு குழந்தை இதயத்துடனும், மற்றொரு குழந்தை இதயம் இல்லாமலும் இருக்கிறது. இதயத்துடன் இருக்கும் குழந்தை விமலன். மற்றொரு குழந்தை அகிலன். இதில் ஒரு குழந்தையை பிரித்து எடுத்து விடுங்கள் என்று டாக்டர்கள் சொல்ல, அவரது மனைவி மறுக்கிறார். இதனால் இருவரும் ஒட்டியே வளர்கிறார்கள்.

ஒருகாலக்கட்டத்தில் கஷ்டத்தில் இருந்த சூர்யாவின் தந்தை பால் பவுடர் ஒன்றை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து பெரிய கோடீஸ்வரரர் ஆகிறார். 

இவர் தயாரிக்கும் பால் பவுடரில் ஊக்க மருந்து கலக்கப்படுவதாக அறிந்த இக்வேனியா பெண்மணி ஆராய்ச்சி செய்ய சூர்யாவின் தந்தை நிறுவனத்திற்கு வருகிறார். இவருக்கு தமிழ் மொழி பெயர்ப்பாளராக காஜல் அகர்வால் வருகிறார். இங்கு சூர்யாவை சந்திக்கும் இவர் காதல் வயப்படுகிறார்.

சூர்யாவின் தந்தையின் நிறுவனத்தில் இக்வேனியா பெண்மணி சில படங்களை எடுத்து பென்டிரைவில் பதிவு செய்து வைக்கிறார். இதையறிந்த சூர்யாவின் தந்தை அந்த பெண்ணை கொலை செய்து விடுகிறார். இறப்பதற்கு முன்பு அந்த பென்டிரைவை விழுங்கி விடுகிறார்.

இதனை கைப்பற்ற சூர்யாவின் தந்தை முயற்சிக்கிறார். ஆனால் பென்டிரைவ் சூர்யாவின் கைக்கு கிடைக்கிறது. சூர்யாவிடம் இருக்கும் பென்டிரைவை கைப்பற்ற ஒரு கும்பல் இரட்டையரான சூர்யாவை தாக்குகிறது. இதில் விமலன் இறக்க நேரிடுகிறது.

உயிரோடு இருக்கும் அகிலன் பென்டிரைவரை வைத்து அதன் பின்னணி என்ன? ஏன் அந்த பெண் கொல்லப்பட்டார் என்பதை கண்டுபிடிப்பதே மீதிக்கதை.

சூர்யாவின் நடிப்பில் இன்னொரு பரிமாணம். அகிலன், விமலன் என ஒட்டி பிறந்த இரட்டையர் வேடத்தில் அசத்தியிருக்கிறார். வெளிநாட்டு பெண்மணிக்கு மொழி பெயர்ப்பாளராக வரும் காஜல் அகர்வால் நன்றாக நடித்திருக்கிறார். சூர்யாவின் அப்பாவாக வரும் சச்சின் கடேகர் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.

சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டம். பாடல் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ஒரு பாடல் அருமை. மற்ற பாடல்கள் பரவாயில்லை.

சண்டைக்காட்சிகளை பீட்டர் ஹெய்ன் பிரம்மாதமாக செய்திருக்கிறார். ஒட்டிப் பிறந்த சூர்யாவின் சண்டைக்காட்சிகள் அருமை.

கே.வி.ஆனந்த் சூர்யா கூட்டணியில் மற்றொரு வெற்றிப்படம். முதல் பாதி படத்தை அருமையாக கொண்டு சென்ற கே.வி. இரண்டாவது பாதி நீளமாகச் செல்வதை தடுத்திருக்கலாம்.

இங்கிலிஷ் விங்கிலிஷ் - சினிமா விமர்சனம்


கணவர், இரண்டு குழந்தைகளுடன் ஸ்ரீதேவி. அதிகம் படிக்காத இவர் லட்டு செய்வதில் கைதேர்ந்தவர். இரண்டு குழந்தைகளும் நன்கு இங்கிலீஷ் பேசக்கூடியவர்கள். 

ஸ்ரீதேவியின் மூத்த மகள், அம்மாவுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்பதால் மிகவும் அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார். இது ஸ்ரீதேவியின் மனதை மிகவும் புண்படுத்துகிறது. 

இந்நிலையில் ஸ்ரீதேவியின் அக்கா மகளுக்கு அமெரிக்காவில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எனவே ஸ்ரீதேவி திருமணத்திற்காக தனியாக அமெரிக்கா செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இங்கிலீஷ் தெரியாததால் விமானத்தில் தண்ணீர் கேட்பதற்குக்கூட முடியாத நிலையில் தவிக்கிறார். பக்கத்து சீட்டில் பயணிக்கும் அஜீத் அவருக்கு உதவுகிறார். விமானத்தில் இருந்து வெளியே வரும்வரை உதவுகிறார்.

பிறகு தனது சகோதரி வீட்டில் தங்கும் ஸ்ரீதேவி தனியாக கடைக்குச் செல்கிறார். அங்கு தனக்கு வேண்டிய உணவை வாங்க முயல்கிறார். ஆங்கிலம் தெரியாததால் அவமானப்படுகிறார். 

மனம் நொந்துபோன இவர் அமெரிக்காவில் 4 வாரங்களில் ஆங்கிலம் கற்றுத்தரும் பயிற்சி பள்ளியில் சேர்ந்து தன் கணவர் மற்றும் குழந்தைகள் அமெரிக்காவிற்கு வருவதற்குள் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார்.

அவர் ஆங்கிலம் கற்றுக்கொண்டாரா, தன் மரியாதையை மகளிடம் இருந்து பெற்றுக்கொண்டாரா? என்பதே கதை.

15 வருடங்களுக்குப் பிறகு வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் ஸ்ரீதேவி நடிப்பில் பளிச்சிடுகிறார். குடும்பப்பெண் கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக பொருந்தியிருக்கிறார்.

ஆங்கிலம் தெரியாமல் மற்றவர்கள் சொல்வதை புரிந்துகொள்ள முயற்சிப்பதும், தனக்கு வேண்டியதை சொல்ல முடியாமல் தவிப்பதும் என கை தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதேவி.

5 நிமிடங்கள் மட்டுமே வரும் அஜீத், அவரின் கதாபாத்திரத்தை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக அவர் பேசும் வசனங்கள் நம்பிக்கையூட்டும் வகையில் இருக்கிறது.

வெள்ளைக்காரர்களை பார்த்து நாம் பயப்படக்கூடாது, அவர்கள் நம்மைப் பார்த்து கவலைப்படக்கூடிய காலம் வந்து விட்டது என்பது போன்ற வசனங்கள் சிறப்புக்குரியவை.

ஸ்ரீதேவியின் அக்காவின் இளைய மகளாக வரும் ப்ரியா ஆனந்த் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவராக வரும் அதில்ஹூஸைன், நண்பராக வரும் மேதி, இங்கிலீஷ் டியூஷன் டேவிட், பாகிஸ்தானிய இளைஞன் என அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார்கள்.

இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர்கள் படிக்கவில்லை என்றாலும் தனது பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும்; நாகரீக உலகத்தில் அவர்களும் பளிச்சிட வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள்.

அவர்களை, பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு ஏற்றாற்போல் பெற்றோர்களும் மாறவேண்டும் என்பதை மிகவும் யதார்த்தமான கதையில் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் பெண் இயக்குனர் கௌரி ஷிண்டேவை பாராட்டியே ஆகவேண்டும்.

இசை, ஒளிப்பதிவு இரண்டும் பாராட்டும் வகையில் உள்ளது. இங்கிலிஷ் விங்கிலிஷ்- ஸ்ரீதேவியின் வெற்றிப்பட வரிசையில் இடம்பிடிக்கும்.

மீண்டும் யுவன்- செல்வராகவன் கூட்டணி


இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், டைரக்டர் செல்வராகவனும் மீண்டும் கூட்டணி சேரவுள்ளனர். 

துள்ளுவதோ இளமையில் தொடங்கி, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் தொடர்ந்து யுவனின் இசையை தொடர்ந்து வந்தார் செல்வராகவன். 

இவர்களது கூட்டணியில் வெளிவந்த பாடல்களும் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது.  பின்னர் திடீரென இருவரும் பிரிந்தனர். 

கடைசியாக செல்வாவின் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்த்தார். 

ஆனால் இந்த இரு படங்களுமே பெரிதாக பேசப்படாமல் போயின. அடுத்து விரைவில் வெளிவர இருக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்துள்ளார் செல்வராகவன்.

இந்த நிலையில் தற்போது யுவனும், செல்வாவும் மீண்டும் இணைந்துள்ளனர். 

இரண்டாம் உலகம் படத்தினைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குகிறார் செல்வராகவன். 

இப்படத்திற்கு யுவன் இசையமைக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

ரஜினியை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்


ரஜினியை, கே.வி.ஆனந்த் சந்தித்தாகவும், அடுத்து அவரை வைத்து படம் இயக்குவதற்காக கதை சொல்லிவிட்டதாகவும் ஏற்கனவே செய்திகள் கசிந்தன. 

ஆனால் பின்னர் ரஜினி கோச்சடையானிலும், கே.வி.ஆனந்த் மாற்றானிலும் பிசியாகி விட்டதால் அந்த பேச்சு அத்தோடு அடங்கிப்போனது. இதனால் அதுவும் வழக்கமான வதந்திதான் என்று நினைத்தவர்களும் உண்டு.

ஆனால் அது வதந்தி இல்லை என்றும், மாற்றான் படப்பிடிப்பை முடித்து விட்டு வந்த கையோடு, ரஜினி, கே.வி.ஆனந்த் இணையும் படம் சம்பந்தமான ஒப்பந்தங்கள் நடந்து விட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதனால் கோ படத்தில் ஜீவாவுக்கும், மாற்றானில் சூர்யாவுக்கும் சான்ஸ் கொடுத்த கே.வி.ஆனந்த் அடுத்து தங்களை வைத்தும் பண்ணுவார் என்று நினைத்திருந்த சில ஹீரோக்களுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

பரதேசி பட நடிகர், நடிகைகளுக்கு பாலா போட்ட வாய்ப்பூட்டு


டைரக்டர் மணிரத்னம் பாணியில் தான் இயக்கும் படங்களைப்பற்றிய எந்தவொரு செய்தியும் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருப்பார் டைரக்டர் பாலா. 

அதனால் அவர் இயக்கும் ஒவ்வொரு படங்களும் திரைக்கு வரும் வரை சஸ்பென்சாகவே இருந்து வருகிறது. 

ஆனால் பரதேசி படத்தில் நாயகனாக நடிக்கும் அதர்வா, சாமியார் கோலத்தில் தெருவில் பிச்சை எடுப்பது போல் அவர் படமாக்கிய காட்சி வெளியில் கசிந்து விட்டதையடுத்து உஷாராகி விட்டார் பாலா.

அதைத் தொடர்ந்து படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை மலைப்பகுதிகளுக்கு மாற்றிய அவர், படத்தின் கதை மற்றும் படத்தில் நடிப்பவர்கள் எந்தமாதிரியான கேரக்டர்களில் நடிக்கிறார்கள் என்பது உள்ளிட்ட எந்தவொரு செய்தியையும் வெளியில் மூச் விடக்கூடாது என்று பரதேசி படத்தில் பணியாற்றிய மொத்த கலைஞர்களுக்கும் ஆணை பிறப்பித்திருக்கிறார் பாலா. 

இதன்காரணமாக படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள அதர்வா, வேதிகா, தன்சிகா உள்ளிட்டோர் பரதேசி படம் பற்றி யாராவது வாயை கிளற ஆரம்பித்தாலே, பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட்டம் பிடிக்கிறார்கள்.

தலைவன் ஆகிறார் விஜய்கிரீடம், தெய்வத்திருமகள், தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய், அடுத்து, நடிகர் விஜய்யை வைத்து, "தலைவன் என்ற படத்தை இயக்குகிறார். 

படம் பற்றி இயக்குனர் விஜய் கூறுகையில், "நான் இதுவரை, ஐந்து படங்களை இயக்கி உள்ளேன். 

"தாண்டவம் படத்திற்கு பல தடைகள் இருந்தன. அதையெல்லாம் உடைத்து, படம் வெற்றி பெற்றுள்ளது. 

தற்போது, அடுத்த பட வேலையில், "பிசி ஆகி விட்டேன். விஜய்யை வைத்து, அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றை இயக்குகிறேன். 

படத்திற்கு, "தலைவன் என, தலைப்பு வைத்துள்ளேன். பிரபல தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின், படத்தை தயாரிக்கிறார். 

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடல் உருவாக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. 

விஜய்யின்,  "இமேஜ்க்கு ஏற்ற தலைப்பு என்பதால், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்கிறார், இயக்குனர் விஜய்.

விஜய் ஆண்டனியை நையாண்டி செய்யும் கோலிவுட்


சமீபகாலமாக மேல்தட்டு ஹீரோக்கள் நடித்த படங்கள் இரண்டு வாரங்கள் ஹவுஸ்புல்லாக ஓடுவது என்பதே பெரிய சாதனையாகி விட்டது. அந்த அளவுக்கு படங்கள் ஓடும் நாட்கள் குறைந்து வருகிறது. 

என்றாலும், சில ஹீரோக்கள் தங்கள் படங்கள் 50 நாள் ஓடியது, 100 நாள் ஓடியது என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். 

அதற்காக தியேட்டரில் கூட்டமே இல்லாதபோதும் சொந்த காசில் தியேட்டருக்கு வாடகை கொடுத்து படத்தை ஓட வைக்கிறார்கள். இதுதான் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தான் நடித்த நான் படம் 50 நாட்கள் ஓடிவிட்டதாக மார்தட்டுகிறார். 

நான் நடித்த முதல் படமே ரசிகர்களின் அமோக ஆதரவோடு 50 நாட்கள் ஓடி வசூல் சாதனை புரிந்து விட்டதாக சொல்கிறார். 

அதோடு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக அடுத்து திருடன், சலீம் என இரண்டு படங்களில் கமிட்டாகியிருப்பவர், இனி வருடத்துக்கு குறைந்தது 3 படங்களிலாவது நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார். 

மேலும், வசூல் ரீதியாக நான் படத்தை மாதிரி எனது ஒவ்வொரு படங்களையும் சாதனை புரிய வைப்பேன் என்கிறார்.

ஆனால் இதைக்கேட்டு, இவர் நடித்த நான் படம் பல தியேட்டர்களில் ஈ ஆடிக்கொண்டிருந்த கதை இவருக்கு தெரியாது போலும் என்று சில கோலிவுட் நபர்கள் நையாண்டி செய்கிறார்கள்.

50 ஆண்டுகளுக்கு பிறகு தான் பாடிய பாடலை மீண்டும் பாடிய ஜேசுதாஸ்
சிம்பு தேவனின் உதவியாளர் நவீன் இயக்கி வரும் படம் "மூடர்கூடம்". ரஜாஜ், ஓவியா நடிக்கிறார்கள். வாழ்க்கை சந்தோஷங்களால் நிறைந்தது. அதை கண்டுபிடிக்கும்போது சந்தோஷப்படுகிறோம். 

கண்டுபிடிக்க தவறும்போது வருந்துகிறோம் என்ற கருவை மையமாக வைத்து காமெடி படமாக தயாராகி வருகிறது. 

நடராஜன் சங்கரன் என்ற புதுமுகம் இசை அமைத்து வருகிறார். 

இந்தப் படத்தின் கிளைமாக்சில் "நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்து பார்த்தால் எல்லாம் பொம்மை..." என்ற பழைய பாடலை ரீமிக் செய்து சேர்க்கிறார்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்பு கே.பாலச்சந்தார் இயக்கிய பொம்பை என்ற திகில் படத்தில் இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருந்தார். 

அவரை மீண்டும் அழைத்து வந்து அதே பாடலின் ரீமிக்சை பாட வைத்திருக்கிறார்கள். 

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜேசுதாஸ் பாடியிருக்கிறார் என்பதும். அவர் பாடிய முதல் ரீமிக்ஸ் பாடல் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் தலைமுறை பிளாக் பாண்டி

அங்காடித் தெரு படத்தில், நாயகன் மகேஷுக்கு நண்பனாக நடித்த, "பிளாக் பாண்டி, சமீபத்தில் நடித்த, "பாகன் படத்துக்கு பிறகு, "பிசி ஆன நடிகராகி  விட்டார். 

"பாக்கணும் போல இருக்கு, நீர்ப்பறவை உட்பட பல படங்களில்,  தற்போது நடித்து வருகிறார். "என் தாத்தா, "பபூன் சொக்கலிங்கம், பெரிய  நாடக நடிகர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள் போன்றோருடன் நடித்தவர். 

அதேபோல், என் தந்தை  பாரதி சேகரும், மேடை நடிகர். அதனால், நடிப்பு, என் ரத்தத்ததில் ஊறிப் போயிருக்கிறது. 

மூன்றாம் தலைமுறை நடிகரான நான், சினிமாவில் பெரிய அளவில் சாதிக்காமல், ஓய மாட்டேன் என்கிறார் பாண்டி. 

தனக்கு பொருத்தமான கதைகள் கிடைத்தால், எதிர்காலத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும், பாண்டிக்கு உள்ளது.

மணிரத்னம் போட்ட அதிரடி கண்டிஷன்

தன், "கடல் படத்தில் அறிமுகம் செய்துள்ள, கார்த்திக் மகன் கவுதம், ராதாவின் மகள் துளசி இருவரின் புகைப் படங்களையும், படம் திரைக்கு வரும் வரை, வெளியிடக் கூடாது என, நிபந்தனை போட்டுள்ளார் மணிரத்னம். 

அதோடு, வெளி இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, யாரும் அவர்களை, மொபைல் போனில் படம் பிடித்து விடக் கூடாது என்பதற்காக, தனி "செக்யூரிட்டி போட்டு வைத்திருக்கிறார் இயக்குனர். 

இதன் காரணமாக, "கடல் படப்பிடிப்பு நடக்கும் போதே, தங்கள் வாரிசுகளின் புகைப்படம், பேட்டிகளை ஊடகங்களில் வெளியிட்டு, "பப்ளிசிட்டி செய்ய நினைத்திருந்த, கார்த்திக் - ராதா இருவரும், அடக்கி வாசித்து வருகின்றனர்.

மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த விஜய் ஆண்டனி


25 படங்களுக்கு இசை அமைத்திருக்கும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் நடிகரானார். தற்போது திருடன் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

விஜய் ஆண்டனிக்கு மணிரத்னம் இயக்கி வரும் கடல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. 

ஆனால் அது நேரம்கூடி வராததால் கைநழுவிப் போனது. நான் படத்தின் டிரைய்லரைப் பார்த்த மணிரத்னம். 

அதில் விஜய் ஆண்டனியின் மேனரிசங்களை பார்த்துவிட்டு தான் இயக்கி வரும் கடல் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிக்க வைக்க விரும்பினார். 

இதுகுறித்து தன் உதவியாளரிடம் சொல்லி வெளிநாட்டில் நடக்க விருக்கும் பாடல் காட்சிக்கு அவரை அழைத்து விமான டிக்கெட் எடுக்குமாறு கூறியிருக்கிறார். 

உதவியாளரும் விஜய் ஆண்டனியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

முதல் படம் வெளிவரும் முன்பே இப்படி ஒரு வாய்ப்பா என்று வியந்த விஜய் ஆண்டனி உடனே சம்மதித்திருக்கிறார். மீண்டும் மணிரத்னம் உதவியாளர் தொடர்பு கொண்டு ஒரு தேதியை சொல்லி அந்த தேதிக்கு டிக்கெட் எடுக்கட்டுமா என்று கேட்டிருக்கிறார். 

அந்த தேதி நான் ரிலீஸ் தேதி. நான் பட புரமோஷன் வேலைகளில் பிசியாக இருந்த விஜய் ஆண்டனி தன் நிலைமையை கூறி மன்னிப்பு கேட்டிருக்கிறார். 

இதனால் விஜய் ஆண்டனி இல்லாமலே மணிரத்னம் குழு படப்பிடிப்புக்கு சென்றது. நல்ல வாய்ப்பை இழந்த வருத்தத்தில் இன்னமும் இருக்கிறார் விஜய் ஆண்டனி.
Related Posts Plugin for WordPress, Blogger...