அக்கா கலைக் கூடம் பட நிறுவனம் சார்பில் வெளிவந்துள்ள, "அம்மான்னா சும்மா இல்லடா என்ற படம், பெரிய போராட்டத்துக்குப் பிறகு நூறாவது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து, தயாரிப்பாளர் ஜெய கோவிந்தன் கூறுகையில், "நான், "அம்மாவின் விசுவாசி. அதனாலயே, போளுர் கோவிந்தனா இருந்த நான், ஜெய கோவிந்தனா மாறினேன். தலைமை கழக பேச்சாளராக இருந்து கொண்டே, சினிமாவிலும் நடித்து வருகிறேன்.
நடிகனா இருந்த நான், இப்போது படத் தயாரிப்பாளராக மாறி இருக்கேன். ஒரு சமூக சேவகிக்கும், கிராமத்துப்பண்ணையாருக்கும் நடுவே நடக்கும் மோதல் தான் கதை. படத்தின் டைட்டிலுக்காகவே, படத்தை வெளியிட விடாமல், சிலர் குடைச்சல் கொடுத்தனர்.
படம் எடுக்கறதுக்காக, என்னோட நான்கு பிளாட்டுகளையும், மனைவியோட நகைகளையும் விற்றேன். ஆறு வருஷமா போராடினேன். ஆட்சி மாறிய பிறகு, படம் ரிலீசாகி, நூறாவது நாளை தொடப் போகுது என, தான் போராடி ஜெயித்த கதையைச் சொல்கிறார் ஜெயகோவிந்தன்.
0 comments:
Post a Comment