தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் எல்லா படங்களிலுமே பிரேம்ஜியின் ஆதிக்கம் அளவுக்கதிகமாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக, ஒவ்வொரு படங்களிலுமே தம்பியையும் ஒரு ஹீரோ போலவே சித்தரித்திருப்பார் வெங்கட்பிரபு.
அதேசமயம் அஜீத் நடித்த மங்காத்தா படத்தில் மட்டும் அந்த பில்டப் கொஞ்சம் குறைவாக இருந்தது.
ஆனால் அடுத்து கார்த்தியை வைத்து வெங்கட்பிரபு இயக்கவுள்ள பிரியாணி படத்தில் கார்த்திக்கு இணையான வேடத்தில் தானும் நடித்து விடவேண்டும் என்று அண்ணனை டார்ச்சர் பண்ணி வந்திருக்கிறார் பிரேம்ஜி.
அதன்காரணமாக, வழக்கம்போல அவரது கேரக்டருக்கும் கதையில் கூடுதல் முக்கியத்தும் கொடுத்து காட்சியமைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
ஆனால் இந்த தகவல் கார்த்தியின் காதுக்கு சென்றபோது டென்சனாகி விட்டாராம்.
பிரியாணி கார்த்தி படம். இங்கே யாரும் ஓவர் அலட்டல் செய்தா அப்புறம் ஒருசின்ன சீன்லகூட தலைகாட்ட முடியாது என்று சூடு காட்டி பேசியிருக்கிறார்.
இதனால் ஆடிப்போன வெங்கட்பிரபு, இப்போது பிரேம்ஜியின் கேரக்டருக்கு சென்சார் வைத்து துக்கடா கேரக்டராக்கி விட்டாராம்.
0 comments:
Post a Comment