உண்மைக் கதையில் உருவான படம்

ஏ.வி.எம்., பட நிறுவன மக்கள் தொடர்பாளர், பெரு.துளசி பழனிவேல் வழங்க, லைம் லைட் சினிமா பட நிறுவனம் சார்பில் கிரண்குமார் தயாரிக்கும் படம், "சொல்லத்தான் நினைத்தேன்! 

இதில், ஷ்ரவன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, மோனல் கஜார் நடிக்கிறார். 

"இதுவொரு, இளமையான காதல் கதை. சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையப் புள்ளியாக வைத்து, காதல், மோதல், காமெடி, சென்டிமென்ட் என, ஜனரஞ்சகமாக திரைக்கதையை உருவாக்கி உள்ளோம். 

கல்லூரி மாணவியான, மோனல் கஜார், நாயகன் ஷ்ரவனை தீவிரமாக  காதலிக்கிறார்.  

அந்த காதலுக்கு எதிர்பாராமல் ஒரு சிக்கல் ஏற்பட, அதிலிருந்து காதலர்கள் எப்படி விடுபடுகின்றனர் என்பது தான் கதை,என்கிறார், இயக்குனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...