காமெடியர்கள் இடையே பனிப்போர்

காமெடியர்கள் சந்தனத்தாருக்கும், புரோட்டாக்காரருக்கும் பனிப்போர் நடக்கிறதாம். 

தன் மார்க்கெட்டை சரிக்கும் அளவுக்கு புரோட்டாக்காரர் வளர்வதே மோதலுக்கு காரணமாம். தேசிங்கர் படம் புரோட்டாக்காரரை இன்னொரு படி மேலே உயர்த்தி உள்ளதாம். 

சம்பளத்தையும் கூட்டியும் உள்ளாராம் அந்த புரோட்டாக்காரர்.காமெடியர்கள் சந்தனத்தாருக்கும், புரோட்டாக்காரருக்கும் பனிப்போர் நடக்கிறதாம். 

தன் மார்க்கெட்டை சரிக்கும் அளவுக்கு புரோட்டாக்காரர் வளர்வதே மோதலுக்கு காரணமாம். தேசிங்கர் படம் புரோட்டாக்காரரை இன்னொரு படி மேலே உயர்த்தி உள்ளதாம். சம்பளத்தையும் கூட்டியும் உள்ளாராம் அந்த புரோட்டாக்காரர்.

லீடரும், லயனும் மோதும் எலெக்ஷன்

தமிழ் படம் தயாரிக்கிறவங்க யூனியனுக்கு நடக்குற எலெக்ஷன் பப்ளிக் எலெக்ஷனை விட மும்முரமா இருக்குதாம். 

ஒரு ஓட்டுக்கு டுவெண்டி தவுசண்ட் முதல் பெரிய ஒரு ரூபா வரைக்கும் விளையாடுதாம். 

ஒரு அணி தன்னோட ஆதரவாளர்களுக்கு நட்சத்திர ஓட்டல்ல பார்ட்டி கொடுத்த வகையில் 15 லகரம் செலவாம். 

அதை பீட் பண்ற அளவுக்கு அடுத்த அணி பார்ட்டி வைக்க ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காம். 

லீடரு ஆதரவு அணிக்கு லீடரோட பாதரும், எதிர் அணிக்கு லயனோட சித்தி மகனும் பணத்தை அள்ளி இறைக்கிறாங்களாம். 

நிஜத்துல நடக்குறது லீடருக்கும், சிங்கத்துக்குமான போட்டிதானாம். 9ந் தேதி ராத்திரி தெரிஞ்சிடும் ஜெயிச்சது லீடரா, சிங்கமான்னு. அதுவரைக்கும் சின்ன சின்ன தயாரிப்புங்க காட்டுல மழைதான்.

தனுஷ் படத்தில் சிம்பு நடிக்கிறாராம்


எதிர்நீச்சல் படத்தை தனது வொண்டர்பார் பிலிம்சுக்காக தயாரித்த தனுஷ், இப்போது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தான் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி என்ற படத்தையும் தானே தயாரித்து வருகிறார். 

அதோடு, இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து புதுமுகங்கள் நடிக்கும்  காக்கா முட்டை என்றொரு படத்தையும் தயாரிக்கிறார்.

சேரி மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் உள்ளதாம். 

அதனால் அதில் ஒரு முன்னணி நடிகர் யாராவது நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று தனுசும், வெற்றிமாறனும் பேசிக்கொண்டார்களாம். 

இந்த விசயம் எப்படியோ சிம்புவின் காதுக்கு செல்ல, தானே தனுசை தொடர்பு கொண்டு அந்த படம் பற்றியும், அதில் உள்ள கதாபாத்திரம் பற்றியும் கேட்டறிந்தாராம்.

அப்போது, அந்த கேரக்டர் சிம்புவை வெகுவாக பாதித்து விட, நானே நடிக்கிறேன் என்று சொன்னாராம். 

அவரிடமிருந்து அப்படியொரு வார்த்தை வரும் என்று சற்றும் எதிர்பார்க்காத தனுஷ், இன்ப அதிர்ச்சியடைந்தாராம். உடனே சிம்புவே முன்வந்து இந்த விசயத்தை வெற்றிமாறனிடமும் சொல்லி, சிம்பு நடிப்பதை உறுதிபடுத்தி விட்டாராம்.

ஆக, இத்தனை நாளும் சிம்பு-தனுசுக்கிடையே தொழில் போட்டி இருந்து வருவதாக வெளியான செய்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதத்தில் நடந்திருக்கும் இந்த நிகழ்வு, அவர்களின் நட்பினை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.

மியூசிக் டைரக்டரை டென்சன் செய்த ரசிகர்கள்


இப்போதெல்லாம் ரசிகர்கள் ரொம்ப தெளிவானவர்களாக இருக்கிறார்கள். உலக அளவிலான சினிமாக்களை, இசையை கேட்பதால் அவர்களது ரசனையும் உலகதரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. 

ஆனால், அப்படி அவர்கள் உலக அளவிலான படைப்புகளை பார்ப்பது இங்குள்ள காப்பி கலைஞர்களுக்கு பெரிய தலைவலியாகி வருகிறது. 

குறிப்பாக, கம்போசிங் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு செல்லும் சில இசையமைப்பாளர்கள், அவர்கள் செல்லும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பிரபலமான ஆல்பங்களில் இருந்து நல்லதை சுட்டுக்கொண்டு வருகிறார்கள். 

ஆனால் அதை வெளியிடும்போது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று மோப்பம் பிடித்து விடும் ரசிகர்கள், சம்பந்தப்பட்ட பாடல்கள் எந்த இசையமைப்பாளர் மூலம், எந்த ஆல்பத்தில் இடம்பெற்றது என்பதை புடடு புட்டு வைத்து விடுகிறார்கள்.

அப்படி, மின்னலே படம் மூலம் என்ட்ரி கொடுத்த அந்த இசையமைப்பாளரை, நம்முடைய இளையதலைமுறை ரசிகர்கள் திட்டோ திட்டென்று திட்டி வருகிறார்கள். 

அதிலும் சிலர் பேஸ்புக்கில், அவர் எந்தெந்த படத்திற்கு எந்தெந்த ஆல்பத்தில் இருந்து பாடல்கள் சுட்டார் என்பதை பட்டியலிட்டு காட்டுகிறார்களாம். இதனால் செம டென்சனில் இருக்கிறார் மேற்படி இசைமைப்பாளர். 

இதற்கெல்லாம் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தாலோ அல்லது மறுப்பு சொல்லிக்கொண்டிருந்தாலோ நமக்குத்தான் நஷ்டம் என்பதால் கண்டும் காணாததும் போல் இருந்து வருகிறார். 

மேலும், இனி, அப்பட்டமாக காப்பியடிப்பதை குறைத்து விட்டு, தனது சொந்த கற்பனை மூலம் அடக்கிவாசிக்கவும் முடிவெடுத்திருக்கிறாராம் மேற்படி இசைக்கலைஞர்.

இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்

ஷாருக் கான் - தீபிகா படுகோனே நடித்து, சமீபத்தில் வெளியான, "சென்னை எக்ஸ்பிரஸ் படம், பெரும் வெற்றி பெற்றுள்ளதுடன், நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலையும் குவித்துள்ளது. 

இதனால், சந்தோஷத்தில் இருக்கும் ஷாருக் கான், தன் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக, புது சலுகையை அறிவித்துள்ளார். 

இதன்படி, "சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்காக, இரண்டு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசமாக கொடுக்கப்படும் என, அவர் அறிவித்துள்ளாராம். 

வட மாநிலங்களுக்கு தான், இந்த சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஷாருக் கூறுகையில், "ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு, இந்த திட்டத்தை அறிவித்தோம். 

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, வெற்றிகளை பரிசளித்து வரும் ரசிகர்களுக்காக, இதை அறிவித்தோம் என, மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார், ஷாருக் கான்.

விஜய்க்கு ஜோடியாகிறார் சமந்தா


துப்பாக்கி படத்தில் முதன்முதலாக விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் கூட்டணி அமைத்தனர். அந்த முதல் படமே பெரிய அளவில் ஹிட்டாகியது. 

அதனால் ராசியான கூட்டணியாகிவிட்ட அவர்கள் இருவரும் மீண்டும் கைகோர்க்கிறார்கள். 

தற்போது இந்தியில் துப்பாக்கி படத்தை பிஸ்டல் என்ற பெயரில் இயக்கி வருகிறார் முருகதாஸ். 

விஜய் தமிழில் ஜில்லா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆக, இருவருமே இந்த படவேலைகள் முடிந்ததும் மீண்டும் அடுத்த படத்தில் இணையப்போவதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக அப்படத்துக்கு அதிரடி என்று அவர்கள் பெயர் வைத்திருப்பதாக கோலிவுட்டில் செய்தி பரவிக்கொண்டிருந்தது. 

ஆனால், இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ள செய்தியில், நானும், விஜய்யும் அடுத்து இணைவது உண்மைதான். 

ஆனால், அந்த படத்துக்கு எந்த தலைப்பு வைப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. சில தலைப்புகளை பரிசீலித்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடமும், இசையமைக்க அனிருத்திடமும் பேசிக்கொண்டிருக்கிறார்களாம். 

சினிமாவா... கல்யாணமா...? நடிகையின் தவிப்பு

கையில் படங்கள் எதுவும் இல்லாமல் சும்மா சுத்திக்கிட்டிருக்கும் நமீ நடிகையை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வீட்டுல கம்பல் பண்றாங்களாம். 

உதவியாளர் மாதிரி எப்போதும் கூடவே இருக்கும் அந்த உறவுக்கார மொளுமொளு இளைஞர்தான் மாப்பிள்ளையாம். 

ஆனா நான் எப்படியும் ஸ்லிம்மாகி அடுத்து ஒரு ரவுண்ட் சினிமால வந்துடுவேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு அம்மா அப்பாவையும், அந்த இளைஞரையும் சமாதானப்படுத்தினாராம் நடிகை. 

அந்தப் பையனோட உறவுக்காரங்களோ எத்தனை நாளைக்குத்தான் அவளுக்காக வெயிட் பண்ணி அவ பின்னாடி சுத்திக்கிட்டிருப்பேன்னு சொல்லி அந்தப் பையனுக்கு வேறு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களாம். 

பையனும் நடிகைகிட்டேருந்து பிரிஞ்சு சொந்த ஊருக்கே கிளம்பிட்டாராம். இதனால நமீ நடிகை கல்யாணமா? சினிமாவான்னு தவிச்சிக்கிட்டிருக்காராம்.

இயக்குனரை மூடுஅவுட் செய்த ஹீரோக்கள்


குண்டு பூ நடிகையை திருமணம் செய்து கொண்ட அந்த சு.சி இயக்குனர், கதாநாயகன் வேடத்துக்கு மார்க்கெட் இல்லாததால் மீண்டும் இயக்குனர் போஸ்ட்டுக்கு மாறினார். 

மார்க்கெட்டில் இருக்கிற மூன்று நடிகர்களை வைத்து மூன்று கமர்சியல் படங்களை இயக்கினார். 

ஆனால், இந்த நேரத்தில் மீண்டும் அவரது அடிமனதிற்குள் ஹீரோ ஆசை தலை தூக்கியதால், அடுத்து என் படங்களில் எந்த நடிகருக்கும் சான்ஸ் கொடுக்கப்போவதில்லை, என்னை நானே இயக்கிக்கொள்ளப்போகிறேன் என்று அறிவித்தார்.

ஆனால் களத்தில் குதிக்கிற நேரத்தில் சு.சிக்கு ஒரு சின்ன பயம். அதாவது, தனியாக குதிப்பதைகூட தனது சமீபத்திய படங்களில் நடித்த ஹீரோக்கள் யாரையாவது கூட சேர்த்துக்கொண்டு குதித்தால் ஒரு பாதுகாப்பாக இருக்குமே என்று மேற்படி நடிகர்களிடம், தனது படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்க அழைப்பு விடுத்தாராம். 

ஆனால், அந்த மூன்று நடிகர்களுமே, மறுபடியும் உங்களுக்கு ஹீரோ ஆசை வந்ததே தப்பு. 

இதுல எங்களை வேற கூட்டணி சேர்க்கிறீங்களா? அதுக்கெல்லாம் வேற ஆளை பாருங்க என்று டிமிக்கு கொடுத்து விட்டார்களாம்.

இதை சற்றும் எதிர்பார்க்காத சு.சி இயக்குனர், பயங்கர மூடுஅவுட்டில் இருக்கிறாராம்.

பிரபல உதவி இயக்குனரின் கதை திருட்டு


சமீபகாலமாக ஒருவரது கதையை இன்னொருவர் திருடி படமெடுப்பது என்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இதில் பெரும்பாலும் வாய்ப்புக்காக அலையும் உதவி இயக்குனர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். 

காரணம், தங்கள் கதைகளில் நடிப்பதற்காக நடிகர்களை அணுகி கதை சொல்கிறார்கள். ஆனால், அப்படி கதையை கேட்கும் சில நடிகர்கள் அந்த கதை தன்னை அதிகமாக பாதித்து விட்டால், பின்னர் அதே கதையில் சில திருத்தங்களை செய்து வேறு கதை போன்று உருவாக்கி தாங்களே இயக்குனராக களமிறங்கி விடுகிறார்கள்.

அப்படி ஏற்கனவே சில நடிகர்கள் இறங்கியிருக்கும் நிலையில், தற்போது ஒரு ஆக்சன் நடிகரும் ஒரு உதவி இயக்குனர் தன்னிடம் சொன்ன கதைக்கருவைக்கொண்டே ஒரு கதையை தயார் பண்ணி, ஒரு படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். 

அதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடித்த படத்தின் தலைப்பை வைத்து அதன் இரண்டாம் பாகம் என்று அறிவித்து படப்பிடிப்பையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், மேற்படி நான்கெழுத்து ஆக்சன் நடிகர் இயக்கி நடித்து வரும் கதை தன்னுடையது என்பதை அவர் கொடுத்த பேட்டிகளை வைத்து ஓரளவு புரிந்து கொண்ட உதவி இயக்குனர், அது ஒரு குழந்தையை மையப்படுத்திய கதை என்பதால் கண்டிப்பாக நான் அவரிடம சொன்னதுதான் என்று கொடி பிடிக்கத் தொடங்கியிருக்கிறார். 

இதற்கு உதவி இயக்குனர்களும் அவருக்கு பின் நிற்க தயாராகி வருகிறார்களாம். அதனால் மேற்படி படம் திரைக்கு வரும் நேரத்தில் போராட்டம் வெடிக்கும் என்று தெரிகிறது.

நாட்டாமைக்கு எதிராக யங் ஹீரோக்கள்

ஆக்டருங்க சங்கப் பிரச்னையில் நாட்டாமைக்கு எதிராக யங் ஹீரோக்கள் கொடிபிடிக்க ஆரம்பிச்சுட்டாங். சின்னத்திரை பெரிய திரை மோதலில் நடுவில் மாட்டிக் கொண்டிருக்கிறார் நாட்டாமை சம்சாரம், 

ஆக்டருங்க சங்க தலைவருங்ற முறையில லீடர் ஹீரோவுக்கு சப்போர்ட் பண்ணுவதா, பாலிட்டிக்ஸ் பார்ட்டி தலைவருங்ற முறையில அந்தப் பக்கம் நிற்பதாக என்ற தர்மசங்கடமான நிலைமை. 

இப்படி திசைக்கு ஒரு பிரச்னை சுற்றி வளைத்திருப்பதால் எதையும் சமாளிக்க முடியாத நாட்டாமை புதுப் படத்துக்கு லொக்கேசன் பார்க்க போறேன்னு அமெரிக்காவுக்கு பறந்துட்டாராம். ஆக்டருங்க சங்கத்தோட செயலாளர் இளைவேள் வீட்டைவிட்டு வெளியிலேயே வர்றதில்லையாம். 

தலைவாவின் திடீர் வருகையால் விலகி ஓடும் படங்கள்


தலைவா படம் இன்று முதல் தமிழ்நாட்டில் ரிலீசாகியுள்ளது. இதனால் வருகிற வெள்ளிக்கிழமை (23ந் தேதி) வெளிவருவதாக அறிவித்திருந்த படங்கள் இந்த மாத கடைசிக்கும், அடுத்த மாதத்திற்கும் ஓடுகின்றன. 

தலைவா படம் திட்டமிட்டபடி 9ந் தேதி வெளியாகி 23ந் தேதிக்குள் ஓடிமுடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் தேசிங்குராஜா, நேற்று இன்று, மத்தாப்பூ, விடியும் வரை பேசு, மவுன மழை போன்ற படங்கள் 23ந் தேதி ரிலீசாகப்போவதாக அறிவித்திருந்தன. 

ஆனால் தலைவா இப்போது இந்தப் படங்களின் ரிலீசை ஒட்டி வெளியாவதால் எப்படியும் குறைந்த பட்சம் ஒரு வாரத்துக்காவது தலைவா அலைதான் அடிக்கும் என்பதால் இந்தப் படங்கள் இந்த மாத இறுதிக்கு தங்கள் ரிலீசை தள்ளி வைத்திருக்கிறது. 

இதில் தேசிங்குராஜா மட்டும் ஏற்கனவே தியேட்டர்கள் புக் ஆகிவிட்டதால் ரிலீசாகிறது. 

இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால். ஆகஸ்ட் 30 அன்று ஆர்யா சூர்யா, சும்மா நச்சுன்னு இருக்கு, அஞ்சல்துறை, ரெட்டவாலு, பொன்மாலை பொழுது, தங்க மீன்கள் போன்ற படங்கள் வெளிவருகிறது. 

இப்போது இந்தப் படங்களும் ஆகஸ்ட் 30க்கு செல்லுமானால் 30ந் தேதி தியேட்டருக்கு கடும் நெருக்கடி ஏற்படும். இதனால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.

யுவனுக்கு அதிர்ச்சி தந்த 100வது படம்


இசைஞானி இளையராஜாவின் வாரிசு எனும் அடையாளத்தோடு அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. 

தொடர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார். தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில், கார்த்தி நடித்து வரும் பிரியாணி படம் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு 100வது படம். 

இதனால் பிரியாணி படத்தின் பாடலை ரொம்ப ஸ்பெஷலாக உருவாக்கி இருந்தார். வரும் ஆகஸ்ட் 31ம் தேதி யுவனுக்கு பிறந்தநாள், அன்றைய தினத்தில் பிரியாணி படத்தின் பாடலை மிகப்பெரிய விழாவாக யுவனுக்கு கொடுக்க ஏற்பாடுகள் செய்து இருந்தனர் பிரியாணி படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். 

இந்நிலையில் பாடல் வெளியீட்டு விழாவுக்கு முன்னரே கடந்த வெள்ளியன்று பிரியாணி படத்தின் அனைத்து பாடல்களும் இணையதளங்களில் வெளியானது. இந்த தகவல் சனிக்கிழமை தான் படக்குழுவுக்கு தெரியவந்தது. 

இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர் படக்குழுவினர். உடனடியாக போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. 

இதனையடுத்து இன்று திருட்டு வி.சி.டி. தடுப்பு சிறப்பு போலீஸ் ஏ.டி.ஜி.பி., கரண் சின்ஹாவிடம் பிரியாணி படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, டைரக்டர் வெங்கட்பிரபு, ஹீரோ கார்த்தி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட படக்குழுவினர் நேரில் சந்தித்து புகார் அளித்தனர். ஏ.டி.ஜி.பி. கரண் சின்ஹாவும் புகாரை ஏற்று உரிய நடிவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

இதனிடையே இணையதளங்களில் பாடல் வெளியானதால் விழாவை பிரமாண்டமாக நடத்த இருந்த பிரியாணி படக்குழு, வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி ஸ்டுடியோ கிரீன் நிறுவன அலுவலகத்திலேயே சிறிய விழாவாக நடத்த முடிவு செய்துள்ளனர். இத்தகவலை பிரியாணி பட அலுவலகமே தெரிவித்துள்ளது. 

பிரியாணி தனது 100வது படம் என்பதால் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் எதிர்பார்த்து இருந்தார் யுவன், ஆனால் இப்போது இப்படியாகிவிட்டதால் ரொம்பவும் அப்செட்டாகியுள்ளார்.

ஒரு வழியாக தலைவா பிரச்னை தீர்ந்தது


தலைவா படத்திற்கு எழுந்த சிக்கல் ஒரு வழியாக தீர்ந்துள்ளது. இதனையடுத்து படம் வருகிற 20ம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது. 

நடிகர் விஜய், அமலா பால் நடித்த, "தலைவா படம் கடந்த, 9ம் தேதி வெளியாக வேண்டியது. ஆனால், தியேட்டர்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், "தலைவா பட வெளியீடு தள்ளிப்போனது. 

பிரச்னையை தீர்க்க, முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு, நடிகர் விஜய், தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் மற்றும் இயக்குனர் விஜய் உள்ளிட்டோர், காத்திருந்தனர். 


உண்ணாவிரதம் இருக்க முடிவு

தமிழகத்தில் மட்டும், "தலைவா படம் வெளியாகாத நிலையில், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் படம் வெளியானதுடன், அதன் திருட்டு, "சிடியும் வெளியாகிவிட்டது. 

தமிழகத்தில், "தலைவா படம் வெளியாகாததால் படத் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது; தமிழகத்தில் படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்; 

அதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி, அனுமதி தரும் இடத்தில், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க, "தலைவா பட குழுவினர், சென்னை போலீஸ் கமிஷனரிடம், நேற்று முன்தினம், கோரிக்கை மனு அளித்தனர். 

ஆனால், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த, ஐந்து நாட்களுக்கு முன்பே, போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் தர வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளதால், உண்ணாவிரதம் இருக்க, போலீசார் அனுமதி தரவில்லை.


தயாரிப்பாளருக்கு நெஞ்சு வலி

"தலைவா பட பிரச்னையில், முதல்வர் சந்திப்பு தாமதம், உண்ணாவிரத அனுமதிக்கு சிக்கல், கடனாளி ஆகும் சூழ்நிலையால், நேற்று அப்படத் தயாரிப்பாளர், சந்திர பிரகாஷ் ஜெயினுக்கு, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 

மன உளைச்சல் மற்றும் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட ஜெயின், சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

கருப்பு நடிகருடன் ஜோடி சேர மறுத்த நடிகைகள்

கருப்பு காமெடி நடிகர் தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. 

அந்த படத்தில் அவர் நடிக்கவும் செய்கிறார். இந்நிலையில், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முகலாய மன்னர் ஷாஜகானின் மனைவி பெயரை வைத்துள்ள நடிகை, ஸ்ரேயமான நடிகை அல்லது மச்சான் நடிகையை நடிக்க வைக்க இயக்குனர் திட்டமிட்டாராம். 

ஆகையால் மூவருக்கும் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து நடிக்க வைத்துவிடலாம் என எண்ணினார். ஆனால், மூவரும் காமெடி நடிகருக்கு ஜோடியாக முடியாது என மறுத்துவிட்டனராம். 

இதனால் என்ன செய்வதென்று முழித்த இயக்குனர் ரகசியமான குத்தாட்ட நடிகையிடம் பேசி, நடிக்க சம்மதம் வாங்கிவிட்டாராம். 

ஆனால், கருப்பு நடிகரோ எவ்வளவு பணம் இருந்தாலும், முன்னணி நடிகைகளுடன் நடிக்க முடியவில்லையே என புலம்பி வருகிறாராம்.

ஆதலால் காதல் செய்வீர் - சினிமா விமர்சனம்விளையாட்டு காதல், கருவாகி சாதியால், அரசியலால் சித்ரவதைப்பட்டு எப்படி அனாதைகளை உருவாக்குகிறது என்பதை தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் சாதீய காதலோடு யதார்த்தமாக சொல்ல வரும் படம்தான் ‘ஆதலால் காதல் செய்வீர்’. 

நாயகி மனிஷாவிடம் நண்பனாக பழகிவரும் நாயகன் சந்தோஷ், மனிஷாவை ஒருதலையாய் காதலிக்கிறார். ஒருகட்டத்தில் தன் காதலை மனிஷாவிடம் நாயகன் சொல்ல, முதலில் மறுக்கும் மனிஷா, பிறகு அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். 

இவர்களுடைய காதல் இருவர் வீட்டுக்கும் தெரியாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது. மாமல்லபுரம் சென்று ஒருநாள் இருவரும் தனிமையில் இருக்கிறார்கள். இதனால், மனிஷா கர்ப்பமாகிறாள். 

இந்த விஷயம் வீட்டுக்குத் தெரியாமல் நண்பர்கள் உதவியுடன் அந்த கருவை கலைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், அது முடியாமல் போகவே, இருவருடைய பெற்றோர்களுக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது. 

இவர்கள் ஒன்று சேர முதலில் சந்தோஷின் சாதியும், அவனுடைய சாதியைச் சேர்ந்தவர்களும் தடையாக வருகிறார்கள். சந்தோஷின் அப்பா அரசியலில் பெரும் செல்வாக்குடன் இருப்பதால் மனிஷாவின் பெற்றோர்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். 

இதிலிருந்து தப்பித்து, இவர்களின் காதல் வெற்றி பெற்றதா? இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? மனிஷாவின் வயிற்றில் உருவான கரு என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை. 

சந்தோஷ், இன்றைய சூழலில் வாழும் யதார்த்தமான வாலிபனுக்குரிய தோற்றத்தில் அழகாக இருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். மனிஷா அட்டகாசமாக நடித்துள்ளார். இவரது நளினமான காதல் மிளிர்ச்சியும், ஆவேசமான பார்வையும் ரசிக்க வைக்கிறது. 

மனிஷாவின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் மகள் களங்கப்பட்டு நிற்கும் போது கண்கலங்கி நம்மையும் கண்கலங்கச் செய்கிறார். 

சந்தோஷின் அம்மாவாக வரும் பூர்ணிமா பாக்கியராஜ் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவே. அதேநேரத்தில் மனிஷாவின் அம்மாவாக நடித்துள்ள துளசி  அன்பு, ஆவேசம் என இரண்டும் கலந்த கலவையாக நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார். 

முதல்பாதியில் கல்லூரி காதல், நகைச்சுவை என படம் ஆரம்பித்து, படிப்படியாக தமிழகத்தின் சாதீய காதலை கையில் எடுத்து, படம் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ஆனால், கிளைமாக்ஸில் நாம் நினைத்ததைவிட வேறுவிதமாய் முடித்திருப்பதில் சிகரம் தொடுகிறார் இயக்குனர். 

படத்தின் தலைப்பை வைத்து இயக்குனரை எடைபோட முடியாது. சமூக அவலங்களை நையாண்டியுடன் குண்டூசியால் குத்திக் காட்டி, இன்றைய கால சூழலில் வாழும் காதலர்களுக்கு பாடம் புகட்டுகிறார். 

யுவன் சங்கர் ராஜா இசையில், பாடல்களும், பின்னணி இசையும் தாலாட்ட வைக்கிறது. மறைந்த கவிஞர் வாலி எழுதிய ‘தப்புத்தாண்டா’ பாடல் வரிகள் துள்ளல் போட வைக்கிறது. சூர்யாவின் ஒளிப்பதிவு, படத்துக்கு மேலும் வலுசேர்த்திருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் இவருடைய ஒளிப்பதிவில் மெருகு ஏறியிருக்கிறது.

மொத்தத்தில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படம் அல்ல பாடம்.

ஆர்யாவும், நயன்தாராவும் புகுந்து விளையாடிட்டாங்க


திருமணம் எனும் நிக்கா, ராஜா ராணி ஆகிய இரண்டு படங்களிலுமே ஜெய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நஸ்ரியா நசீம். 

இந்த படங்களில் ராஜா ராணியில் அவர்களுக்கிடையிலான நெருக்கமான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. 

ஆனால்,. இதுகுறிதது ஜெய்யிடம் கேட்டால், அதெல்லாம் எதுவும இல்லை சார். நஸ்ரியாவுக்கும், எனக்கும் காதல் ட்ராக்தான் என்றாலும், ஊறுகாயை தொட்டுக்கொள்வது போல்தான் எங்களுக்கிடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று சலித்துக்கொள்கிறார்.

அதேசமயம், ராஜாராணியில் ஆர்யா-நயன்தாராவின் ரொமான்ஸ் பற்றி சொல்லும்போது அவரது விழி விரிந்து போகிறது. 

அடேங்கப்பா, அவங்களுக்கிடையே என்னவொரு கெமிஸ்ட்ரி. அதுவும் புதுசா கல்யாணமான தம்பதிகளாக படத்துல நடிச்சிருக்காங்க. 

அதனால் அவங்க ட்ராக்குல கிளுகிளுப்புக்கு பஞ்சமே இல்லை. ரெண்டு பேருமே புகுந்து விளையாடியிருக்காங்க.

ஆர்யா, நயன்தாரா ரெண்டு பேரும் ரொம்ப நல்லா ஒத்துழைச்சிருக்காங்க. அதனால் அவங்களுக்குத்தான் இந்த படத்துல அதிக நெருக்கமான காட்சிகள் இருக்கு. 

அதனால் ஆர்யா-நயனோட அட்டகாசத்தை பார்க்கிறவங்க நானும், நஸ்ரியாவும் நடிச்சதையெல்லாம் நெருக்கம்னு சொல்லவே மாட்டாங்க என்கிறார் ஜெய்.

தப்புக்கணக்கான தளபதி கணக்கு


ரசிகர் மன்றம் தொடங்கி பின்னர், அதையே மக்கள் இயக்கமாக மாற்றிய அந்த தளபதி நடிகர், நடித்த படத்தை தியேட்டருக்கு கொண்டு வர முடியாததால் மனசுடைந்து போயிருக்கிறார். 

அவர் ஒரு பக்கம், தயாரிப்பாளர் ஒரு பக்கம் என்று மாறி மாறி அரசு தரப்பினரை தொடர்பு கொண்டு கருணை மனு கொடுத்தும், கருணை காட்ட மறுக்கிறார்களாம்.

இதனால் விஸ்வரூபம் போன்று தாமதமாக வெளியானால், பின்னர் படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று இத்தனை நாளும் நடிகர் தரப்பு கணக்குப்போட்டுக் கொண்டிருந்தது. 

ஆனால் இப்போது திருட்டு வி.சி.டிக்களிலேயே ரசிகர்கள் படத்தை பார்த்து விட்டால் அப்புறம் எப்படி தியேட்டருக்கு வருவார்கள். நாம் போட்டக்கணக்கு தப்புக்கணக்காகி விட்டதே என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மேற்படி தளபதி நடிகர் அந்த மூன்றெழுத்து படத்தையடுத்து நடித்து வந்த இன்னொரு மூன்றெழுத்து படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மதுரை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி விட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க நடிகரை அழைத்தபோது, இப்போதைக்கு நடிக்கிற மனநிலையில் இல்லை. 

நான் பெரிய அளவில் எதிர்பார்த்த படம் வெளியே வர முடியாமல் கிடக்கிறது. அப்படம் தியேட்டருக்கு வந்து ஓடினால்தான் அடுத்து கேமரா முன்பு வருகிற மனநிலைக்கு வருவேன் என்று சொல்லி விட்டாராம. 

இதனால் மதுரை மண்வாசனையில் உருவாகும் அபப்டத்தின் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

வம்பை விலை கொடுத்து வாங்கிய நடிகர்


தளபதி நடிகரின் மூன்றெழுத்து படம் குறித்த நாளில் திரைக்கு வர சில தடைகள் ஏற்பட்டதால், சில நடிகர்கள் தங்களது கருத்தை வெளியிட்டனர். 

அதில் அந்த சுள்ளான் நடிகர், தனது டுவிட்டரில், இப்படி படங்களை தடை பண்ணுவதில் செலவு செய்யும் நேரத்தை நாட்டை முன்னேற்றுவதில் செலவு செய்திருந்தால் நாடு எவ்வளவோ முன்னேறியிருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

ஆனால், அந்த செய்தியை படித்த அவரது அபிமானிகள், அரசுக்கு எதிராக பேச பெரிய பெரிய நடிகர்கள் அலறிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு இத்தனை தைரியம் எங்கே இருந்து வந்தது என்று நடிகரிடம சொன்னார்களாம். 

அதன்பிறகுதான், ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லி இப்படி அரசுக்கு எதிரான கருத்தை வெளியிட்டு விட்டோமே என்பதை உணர்ந்து அதிர்ச்சியில் உறைந்து போனாராம் நடிகர்.

அதனால்தான், அதையடுத்து நான் அரசுக்கு எதிரானவன் அல்ல, நான் வெளிநாட்டிலிருந்து வெளியிட்ட கருத்தை வேறு மாதிரியாக ஊடகங்கள் திருத்தி வெளியிட்டு விட்டன என்று ஊடகங்களின் மேல் பழியை போட்டு, எஸ்கேப்பாகி உள்ளார். 

இருப்பினும், சுற்றியிருப்பவர்களின் அச்சுறுத்தலில் இருந்து இன்னமும் மீளவில்லையாம் நடிகர். 

இந்த மனநிலையில், நமக்கு தேவையில்லாத விசயத்தில் தலையிட்டு, வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டோமே என்று புலம்பிக்கொண்டிருக்கிறாராம் ஒல்லிகுச்சி நடிகர்.

லண்டன் சர்வதேச திரைப்பட விழா - பரதேசி படம் 8 விருதுக்கு பரிந்துரை


பாலா இயக்கத்தில் வெளியான ‘‘பரதேசி‘‘ படம் லண்டனில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் அதிகபட்சமாக 8 விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

மேலும் லண்டனில் நடக்கும் திரைப்பட விழாக்களில் அதிகளவு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படமும் இதுதான்.

சேது, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலா கடந்தாண்டு இயக்கிய படம் பரதேசி. பி ஸ்டுடியோஸ் சார்பில் பாலாவே இயக்கி, தயாரித்தார். முரளி மகன், அதர்வா ஹீரோவாக நடித்தார். 

இவருக்கு ஜோடியாக வேதிகா நடித்தார். இவர்களுடன் தன்ஷிகா, இயக்குநர் ஜெர்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர் ஆங்கிலேயர் நம்மை ஆட்சி செய்தபோது தேயிலை தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. 

குறிப்பாக ரெட் டீ எனும் நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. அனைவராலும் பாராட்டு பெற்ற இப்படம் சிறந்த ஆடை வடிமைப்பாளருக்கான தேசிய விருதும் பெற்றது.


8 விருதுக்கு பரிந்துரை

இந்நிலையில் லண்டனில் அக்டோபர் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, தென் கொரியா, சிலி மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகளில் இருந்தும் பல நாட்டு படங்கள் பங்கேற்று உள்ளன. 

இந்தியா சார்பில் நிறைய படங்கள் பங்கேற்கிறது. இதில் தமிழில் பாலா இயக்கிய பரதேசி படமும் பங்கேற்றுள்ளது. இதில் பரதேசி படம், சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த வெளிநாட்டு இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 


பாலா நான்கு விருதுக்கு பரிந்துரை

பரதேசி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவரே என்பதால் சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த வெளிநாட்டு இயக்குநர் என நான்கு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

லண்டன் திரைப்பட விழாவில் இந்திய படம் ஒன்று இவ்வளவு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல்முறை, மேலும் இங்கு திரையிடப்படும் வெளிநாட்டு படங்களிலேயே அதிகளவு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படமும் இதுதான், அதுவும் தமிழ்படம் என்பது கூடுதல் சிறப்பு. இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் பரதேசி படம் இத்தனை விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது மிகப் பெரிய கவுரவமாக கருதப்படுகிறது.

காதலனின் கோபத்துக்கு ஆளான நடிகை

கல் நடிகையும், விரல் வித்தை நடிகரும் தங்களுக்குள் காதல் உள்ளதை வெளிப்படையாக தெரிவித்து உள்ளனர். 

இந்நிலையில், இருவரும் கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படம் இன்டர்நெட்டில் பரவியதை அடுத்த நடிகையின் ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனராம். 

இதுவெல்லாம் அவருடைய காதலர் விரல்வித்தை நடிகர் செய்யும் வேலைதான். 

ஆகையால், அவரை காதலிக்காதீங்க என பேஸ்புக்கில் கதறுகிறார்களாம். 

விரல்வித்தை நடிகருக்கு எதிரான கருத்துக்களை கல் நடிகையும் அழிக்காமல் அப்படியே விட்டுவிட்டாராம். 

இதனால், நடிகர் தன்னுடைய காதலி மீது சற்று கோபத்தில் உள்ளாராம்.

ஐந்து ஐந்து ஐந்து (555) - சினிமா விமர்சனம்ஒரு கார் விபத்தில் சிக்கி கொடூரமாய் அடிபடும் பரத், என பரபரப்பாய் துவங்குகிறது படம். ஆஸ்பத்திரியில் கோமா நிலைக்கு சென்று சிகிச்சை பெற்று குணமாகி வரும் பரத், தன் காதலி மிருத்திகாவை நினைத்து, அவள் நினைவாலேயே வாடிக் கொண்டிருக்கிறார். 

மிருத்திகாவை பார்த்து, பழகிய ஞாபகங்களுக்கு ஆதாரமாக இவர் நினைத்திருந்த அனைத்துமே காணாமல் போய்விடுகிறது. இது எல்லாமே பிரம்மை. மிருத்திகா என்ற ஒரு பொண்ணே இல்லை. 

விபத்துக்கு பிறகு உன்னுடைய மூளையில் ஏற்பட்ட சில மாற்றங்கள்தான் இப்படி கற்பனையான சில விஷயங்களை உருவாக்கியிருக்கிறது என பரத்துக்கு சிகிச்சை அளிக்கும டாக்டரும், பரத்தின் அண்ணன் சந்தானமும் சொல்ல, அதை பரத்தால் நம்ப முடியவில்லை. 

உருத்தலுடன் மிருத்திகா இருந்த இடத்திற்கு சென்று பார்க்கிறார். அங்கு அவள் இருந்ததற்கான ஆதாரங்கள் பரத்திற்கு கிடைக்கிறது. கூடவே, ஒரு கொலைகார கும்பலும் பரத்தை துரத்துகிறது. அவர்களிடம் பரத் சண்டை போடுகிறார். இந்த சண்டையில் சந்தானம் கொல்லப்படுகிறார். 

இறுதியில், பரத் தன்னை துரத்தும் கொலைகார கும்பல் யார் என்பதை கண்டுபிடித்தாரா? தன்னுடைய காதலியாக நினைத்துக் கொண்டிருக்கும் மிருத்திகா இறந்தாளா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இந்த படத்தின் ஒட்டுமொத்த விளம்பரத்திற்கும் அடிப்படை பரத்தின் சிக்ஸ் பேக் உடற்கட்டுதான். இவரது உடலில் புடைத்துக் கொண்டு நிற்கும் நரம்புகளும், செதில் செதிலாய் திரண்டு நிற்கும் சதைகளும், இதுவரை நாம் தமிழ் சினிமாவில் பார்த்த சிக்ஸ் பேக் உடற்கட்டுகளையெல்லாம் ரொம்ப சாதாரணமாக்கிவிட்டது. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷத்தையும், காதல் காட்சிகளில் ரம்மியத்தையும் கொடுத்திருக்கிறார். 

கதாநாயகி மிருத்திகா, இன்னொரு கேரள வரவு. இவருடய சுவாரஸ்யமான முகமும், முகபாவங்களும் ரசிக்க வைக்கிறது. இன்னொரு நாயகி எரிக்கா பெர்னாண்டஸ். ஒரு பாடலுக்கு நடனமாடிவிட்டு, அப்படியே சில காட்சிகளில் நடித்துவிட்டு இரண்டாவது நாயகிகளுக்கே உரித்தான இலக்கணத்தில் இறந்து போகிறார். 

இயக்குனர் சசி, கஜினி மாதிரியான ஒரு படத்தை எடுக்க நினைத்திருப்பார் போல... அதனால்தானோ கஜினியைப் போலவே ஷார்ட் டைம் மெமரி லாஸில் கதைக்கு தேவையான பல விஷயங்களை மறந்துவிட்டார். 
ஆங்காங்கே டிவிஸ்ட் வைத்தால் படத்தை ரசிக்க வைத்துவிடலாம் என்று நினைத்துவிட்டார் போலும். 

படத்தில் சில காட்சிகள் ரசிக்கும்படியாய் இருந்தாலும், அதையே இழுத்தடித்து கடுப்பேத்தியிருக்கிறார்கள். சசி, பரத்திற்கு 6 பேக் ரெடி பண்ணுவதிலேயே குறிக்கோளாய் இருந்திருக்கிறார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. பரத்தின் சிக்ஸ் பேக்குக்காக எடுத்திருக்கும் அசாதாரண முயற்சியில் ஒரு பங்காவது கதை, திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு வேளை நல்ல ஆக்சன் படமாய் வந்திருக்கலாம். 

அறிமுக இசையமைப்பாளர் சைமன் இசையில் ‘எழவு’ என்ற பாடல் மட்டும் கவனத்தை ஈர்க்கிறது. ‘முதல் மழைக் காலம்’ பாடல் ரம்மியமாய் இருக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் படத்தின் ட்ரைலரே இவரது திறமையை காட்டிவிட்டது. இருப்பினும், படத்தின் ஆரம்பம் முதல் விபத்து காட்சியிலிருந்து, படம் முழுக்க ஆங்காங்கே தன் தனித்திறமையை பதித்திருக்கிறார். 

மொத்தத்தில் ‘555’ புகைச்சல்.

தலைவா - 30 ஆயிரம் திருட்டு வி.சி.டி.க்கள் பறிமுதல்


சேலத்தில் இருந்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு, தலைவா படத்தின் "சிடிக்கள் சப்ளை செய்யப்பட்டதை, விஜய் ரசிகர்கள் கண்டுபிடித்து, போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். 

அதை அடுத்து, 30 ஆயிரம் தலைவா பட "சிடிக்களை, போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய் நடித்த "தலைவா படம் ஆகஸ்ட், 9ம் தேதி தியேட்டர்களில் திரையிடுவதாக இருந்தது. அந்த படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், "தலைவா படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டது. 

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பையில் "தலைவா படம் வெளியானது. தமிழகத்தில் திரையிடப்படததால், அந்த படத்தின் திருட்டு "சிடிக்கள், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள அத்வைத ஆஸ்ரம ரோட்டில் இயங்கும், "சிடி கடை அருகில் உள்ள வீட்டில் வைத்து, பதிவு செய்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டது. இதை அறிந்த நடிகர் விஜய் ரசிகர்கள், அந்த வீட்டுக்கு சென்று, அங்குள்ளவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த, சேலம் மேற்கு சட்டம்- ஒழுங்கு உதவி கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் கமலேசன், எஸ்.ஐ.,க்கள், போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, விஜய் ரசிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அனுப்பி வைத்தனர்.

அதன் பின், அங்கு சோதனை செய்த போது, "தலைவா படம் பதிவு செய்த, 30 ஆயிரம் திருட்டு "சிடிக்கள் கைப்பற்றப்பட்டது. அது மட்டுமின்றி சிங்கம்- 2 உட்பட பல புதிய படங்கள் மற்றும் ஆபாச பட "சிடிக்களையும் போலீஸார் கைப்பற்றினர். மேலும், "சிடிக்கள் பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட, எட்டு சர்வர், 80 ரைட்டர்களையும் போலீஸார் கைப்பற்றினர்.

புதிய படங்களை, சி.டி.,க்களில் பதிவு செய்து, வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வந்த தர்மபுரி மாவட்டம், முத்துப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் முரளி, 28. மரியம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குமார், 27. சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அருள்பிரபு, 36. ஆகியோரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு "சிடி தயாரிப்பு கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட, சேலத்தை சேர்ந்த ராஜாவை, போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

போலீஸார் மேற்கொண்ட சோதனையில், சேலத்தில் இருந்து, திருட்டு "சிடிக்கள் தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டதற்கான விபரங்கள் அடங்கிய டைரியை கைப்பற்றி உள்ளனர். அதில், உள்ள கடைகளிலும் சோதனை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

சிரிப்பு நடிகருடன் ஜோடி - தவிக்கும் நடிகை

சந்தன காமெடியருடன் ஜோடி போட்ட ‘லவ்’ பட நடிகைக்கு தற்போது மார்க்கெட் சரிந்துள்ளதாம். சிரிப்பு நடிகருடன் நடிப்பதை சக நடிகர், நடிகைகள் ஏளனம் பேசுகிறார்களாம். 

இதனால், முன்னணி ஹீரோக்களும் தங்கள் படங்களில் அவர் வேண்டாம் என்கின்றனராம். இதனால் தவிப்பில் இருக்கிறார் நடிகை.

ரகசிய பார்ட்டி கொடுக்கும் அகர்வால் நடிகை


தற்போது தளபதி நடிகரின் மூன்றெழுத்து படத்தில் நடித்து வரும் அந்த அகர்வால் நடிகைக்கு அடுத்தபடியாக புதிய படங்கள் எதுவுமே இல்லை. அதனால் எதிர்கால சினிமாவைப்பற்றி புலம்பிக்கொண்டிருந்தார் நடிகை. 

இதற்கு காரணம், சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியது மட்டுமின்றி, நரை முடி நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று தான் வெளிப்படையாக சொன்னதுதான் என்பதை புரிந்து கொண்ட நடிகை, இப்போது தான் அதை வாபஸ் பெற்று விட்டதாக சிலரிடம் கூறி வருகிறார். 

இருப்பினும், அந்த சமயத்தில் அம்மணியின் பேச்சு அதிரடியாக இருந்ததால், அதை மனதில் வைத்துக்கொண்டு யாரும் அவரை நெருங்கவே தயங்குகிறார்களாம்.

தற்போது இந்தி, தெலுங்கு போன்ற மொழியிலும் புதிய படங்கள் கிடைப்பதற்கான அறிகுறிகள் இல்லாததால், சென்னையிலுள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் முகாமிட்டுள்ள அகர்வால் நடிகை, சில மேல்தட்டு ஹீரோக்களை ஹோட்டலுக்கு வரவைத்து ரகசிய பார்ட்டி கொடுப்பதாக கூறப்படுகிறது. 

இப்படி சென்ற சில ஹீரோக்கள் அம்மணியின் அன்புச்சிறைக்குள்ளும் சிக்கியிருப்பதோடு, கூடிய சீக்கிரமே படத்தோடு வருகிறோம் என்று நடிகைக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்களாம். 

அப்படி சொன்னவர்கள் அனைவருமே மார்க்கெட்டில் மூச்சு விடகூட நேரமில்லாமல் பிசியாக இருக்கும் நடிகர்கள் என்பதால், மேற்படி நடிகர்கள் மீண்டும் அகர்வாலையும் பிசியாக்கி விடுவார்கள் என்று தெரிகிறது.

மீண்டும் காமெடியில் கலக்க வருகிறார் கவுண்டமணி1980-90களில் காமெடியில் தமிழ் சினிமா ரசிகர்களை கலகலப்பாக்கியவர் கவுண்டமணி. இவருடன் சேர்ந்து செந்திலும் நடித்து அப்போது வெளிவந்த படங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றன. 

இவருடைய காமெடிக்காகவே அப்படங்கள் அனைத்தும் ஹிட்டாகின என்றால் அது மிகையல்ல. பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து இவர் செய்யும் காமெடி இன்றளவும் தமிழ் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை.

அதன்பிறகு, வடிவேலு, விவேக் ஆகிய காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் நுழையவே, இவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனது. 

இவர் கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த ‘ஜக்குபாய்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு, வாய்ப்புகள் ஏதுமின்றி வீட்டிலேயே முடங்கிவிட்டார். 

இருந்தாலும், தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தை தேடிக் கொண்டிருந்த இவருக்கு தற்போது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

நடிகர் சாந்தனு நடிக்கும் ‘வாய்மை’ படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் கவுண்டமணி. இப்படத்தில் டாக்டர் பென்னி என்ற கதாபாத்திரத்தில் வருகிறாராம். 

டாக்டர் பணியை ஒழுங்காக செய்து கொண்டிருக்கும் இவரை சினிமாவில் நடிக்கச் சொல்லி சிலர் வற்புறுத்துவார்களாம். அதற்கு இவர் அடிக்கும் கவுண்டர் வசனங்கள் முழுநேர காமெடியாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக ‘தாமிரபரணி’ பானு நடிக்கிறார். அ.செந்தில்குமார் இயக்குகிறார்.

ஷாருக்கானை குஷி படுத்திய ரஜினிஆண்கள் லுங்கி அணியும் கலாசாரம் சமீபகாலமாக குறைந்து வருகிறது. அதேபோல் சினிமாக்களிலும் லுங்கி அணியும் கேரக்டர்கள் அதிகமாக இடம்பெறுவதில்லை. 

ஆனால் இந்த நிலையில், தற்போது ஷாரூக்கான்-தீபிகா படுகோனே நடிப்பில் தமிழ்-இந்தியில் தயாராகியுள்ள சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு லுங்கி டான்ஸ் உள்ளது.

ஷாரூக்கான், தீபிகா இருவருமே லுஙகி அணிந்தே அந்த பாடலில் நடனமாடியுள்ளனர். இது பாலிவுட்டில் பிரபலமாகி விட்டது. 

அதனால், இப்போது இந்தியில் உருவாகி வரும் சில புதிய படங்களில் லுங்கி நடனத்தை இணைத்து வருகிறார்களாம். 

மிக்கி வைரஸ் என்ற படத்தில் எல்லி அவ்ராம் என்ற புதுமுக நடிகை ஒருவரும் ஒரு பாடல் முழுக்க லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு செம குத்தாட்டம் போட்டுள்ளாராம்.

மாடர்ன் காஸ்டியூமை விட இந்த லுங்கி கெட்டப் புதுமையான கிளாமரை வெளிப்படுத்துவதால் பாலிவுட் ரசிகர்கள் இப்போது லுங்கி மோகத்தில் திரிகிறார்களாம். 

இந்த கலாசாரம் விரைவில் கோலிவுட்டிலும் பரவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மேலும், இந்த பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு டெடிகேட் செய்துள்ளார் ஷாரூக்கான். இதையடுத்து அந்த பாடலை யு டியூப்பில் பார்த்து ரசித்த ரஜினி, உடனடியாக அவருக்கு போன் போட்டு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். 

அதோடு, நடனம் குறும்புத்தனமாக அற்புதமாக இருந்தது என்றும் சொல்லி ஷாரூக்கை குஷிபடுத்தியிருக்கிறார் ரஜினி.

டைட்டில் விசயத்தில் டைரக்டரை, தலை சுற்ற வைத்த நடிகர்


இப்போதெல்லாம் டைரக்டர்களும், ஹீரோக்களும் கதையை விட படத்திற்கான தலைப்பு வைக்கிற விசயத்துக்குத்தான் ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். 

கேட்சிங்கான தலைப்பாக இருந்தால் ரசிகர்களை எளிதில் தியேட்டர்களுக்கு இழுத்து விடலாம் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் ஏற்படும் குழப்பம் காரணமாக சில படங்களுக்கு டைட்டில் வைக்காமலேயே படப்பிடிப்பை தொடங்கியும் விடுகிறார்கள்.

அப்படி டைட்டில் வைக்காமலேயே தொடங்கப்பட்ட பில்லா படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனரின் புதிய படத்திற்கு தலைப்பு வைக்க ஒரு பெரும் போராட்டமே நடந்து முடிந்திருக்கிறது. 

அந்த வகையில் படப்பிடிப்பு தளங்களில் டயலாக் எழுதிக்கொடுத்த பேப்பர்களை விட படத்திற்கான தலைப்பினை எழுதி பட நாயகனிடம் ஓ.கே வாங்க டைரக்டர் பட்டபாடுதான் பெரும்பாடாம். 

அப்படி பக்கம் பக்கமாக அவர் எழுதிக்கொடுத்தபோதும், எந்த தலைப்பும அவருக்கு பிடிக்கவில்லையாம். முதலில் வாய் வார்த்தையில் சரியில்லை என்று சொன்னவர், பின்னர் இவர் சொல்லும் டைட்டில்களை கேட்டு முகத்தை வெறுப்பாக வைத்துக்கொண்டு கை சைகையால் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தாராம் நடிகர்.

இதனால் படத்தையே எடுத்து முடிச்சிட்டோம். ஆனா ஒரு தலைப்பை ஓ.கே வாங்குவதற்குள் பெண்டு கழந்திடும் போலிருக்கே என்று புலம்பிய இயக்குனர், கடைசியாக சில டைட்டில்களை நடிகரிடம் சொல்லியிருக்கிறார். 

இதுவும் அவருக்கு எங்கே பிடிக்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டே சொன்னாராம். ஆனால், அதில் ஆ...ரம்பம் என்று அவர் சொன்ன டைட்டிலை கேட்டதும் மேற்படி நடிகரின் முகத்தில் திடீர் பிரைட்னஸ் வெளிப்பட்டதாம். 

இதுதான் கதைக்கு பொருத்தமாக இருக்கும். இதையே வச்சிருங்க என்று சொல்லிவிட்டு சென்று விட்டாராம்.

பிடிக்குமின்னு சொன்ன எந்த டைட்டிலும் அவருக்கு பிடிக்கல, ஆனா பிடிக்கவே பிடிக்காதுன்னு சொன்ன டைட்டில ஓ.கே சொல்லிட்டு போறாரே. இவரை புரிஞ்சுக்கவே முடியலையே என்று சந்தோசத்திலும புலம்பிக்கொண்டு நின்றாராம் பில்லா டைரக்டர்.

காதலுக்கு தூது போகும் நடிகை

சுந்தரமான இயக்குனரை திருமணம் செய்துகொண்ட மூன்றெழுத்து நடிகை ஒருபுறம் அரசியலில் பிசியாக இருந்தாலும், கோடம்பாக்க நண்பர்களுக்காக தினமும் ஒருமுறையாவது ஹாய் சொல்லிவிடுகிறாராம். 

இந்நிலையில், கல் நடிகைக்கும், விரல் வித்தை நடிகருக்கும் இடையேயான காதல் செய்தியை கேள்விட்ட மூன்றெழுத்து நடிகை கல் நடிகையை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து அவருக்கு ஆசி வழங்கினாராம். 

இதனை அறிந்த விரல் வித்தை நடிகரும், மூன்றெழுத்து நடிகையின் வீட்டுக்கு சென்று, தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று இருக்கும் கல் நடிகையை விரைவில் திருமணம் செய்துகொள்ளக் கூறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம். 

இதனால் விரல் வித்தை நடிகருக்காக கல் நடிகையிடம் தூது போக தயாராக இருக்கிறாராம். 

விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட பிரபுதேவா

இந்திய சினிமாவில் சிறப்பாக நடனம் ஆடக்கூடிய நடிகர்கள் யார்? என்று பிரபுதேவாவிடம், ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, சிரஞ்சீவி, ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், சிம்பு, ஜெயம் ரவி, தனுஷ் என்று பல பெயர்களை பட்டியலிட்டுள்ளார். 

ஆனால், அக்ஷய் குமாரால், "சூப்பர் டான்சர் என்று பாராட்டப்பட்ட விஜய்யை, அவர் சொல்லவில்லை. இதனால், விஜய் ரசிகர்கள் மத்தியில், இந்த விஷயம் புயலை கிளப்பியது. 

இதையடுத்து, விஜய்க்கு போன் போட்டு, "எப்படியோ உங்கள் பெயர் விடுபட்டுவிட்டது. நீங்களும் நல்ல டான்சர் தான்... என்று கூறி, மன்னிப்பு கேட்டாராம் பிரபுதேவா.

சேரனின் பாசப்போராட்டம் வெல்லுமா?டைரக்டர் சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சூளைமேட்டை சேர்ந்த சினிமா டான்சர் சந்துருவுடன் தாமினிக்கு ஏற்பட்ட காதலை ஆரம்பத்தில் சேரன் ஆதரித்தார். 

பின்னர் சந்துருவின் நடத்தை சரியில்லை என்று கூறி காதலக்கு சேரன் தடை போட்டார். இதனால் தாமினி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து தனது தந்தை சேரன் மீது புகார் அளித்ததுடன் பரபரப்பான குற்றச்சாட்டுகளையும் கூறினார். 

காதலன் சந்துருவை கொலை செய்ய எனது தந்தை ரவுடிகளை ஏவி விடுகிறார் என்றும் தாமினி கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சேரன் போலீசில் அளித்த புகாரில், ‘‘தனது மகள் தாமினி, காதலன் சந்துருவின் நடத்தை சரியில்லை என்று கூறி அவனை பிரிந்து விட்டதாகவும், பின்னர் தாமினியின் மனதை மாற்றி எனக்கு எதிராக சந்துருவின் குடும்பத்தினர் திருப்பி விட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். 

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சேரன் மீதும், சந்துரு மீதும் தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியில் இருந்து இரவு 12 மணி வரை தாமினி மற்றும் அவரது காதலன் சந்துரு ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது தாமினி சந்த்ருவை எந்த சூழ்நிலையிலும் நான் பிரிய மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் அவரை போலீசார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். சந்துரு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு வரை போலீஸ் நிலையத்தில் காத்துக் கிடந்த சேரன் மற்றும் அவரது திரையுலக நண்பர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

இந்த காதல் விவகாரத்தில் சேரன் தரப்பில் எடுத்து வைக்கப்படும் வாதங்கள் நியாயமானவையாகவே உள்ளன. ஒரு தந்தையாக, தனது மகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு, அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

பெற்று வளர்த்து ஆளாக்கிய மகள் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை என்று எந்த தந்தையும் நினைக்க மாட்டார். அப்படி ஒரு தந்தையாக கடந்த 3 நாட்களாக சேரன் பாசப் போராட்டத்தையே நடத்தி வருகிறார். மயிலாப்பூரில் காப்பகத்தில் இருக்கும் தாமினியிடம் இன்று 2–வது முறையாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து இருந்தனர். 

அப்போது மீண்டும் அவருக்கு கவுன்சிலிங் அளிக்க திட்டமிடப்பட்டது. இதற்கிடையே சந்துரு குடும்பத்தினர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து சந்துரு கவுன்சிலிங்குக்கு வர வில்லை. சேரன் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அவரும் வர வில்லை. அவரை எதிர்பார்த்து நடிகர் சந்திரசேகர், பொற்காலம் பட தயாரிப்பாளர் ஞானவேல் ஆகியோர் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் திரும்பி சென்று விட்டனர். இதனால் இன்று நடைபெற இருந்த கவுன்சிலிங் ரத்தானது. 

காதலன் சந்துருவிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. அப்போது இந்த காதல் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும். அதே நேரத்தில் தனது மகள் தாமினி மனம் மாறி நம்மிடம் திரும்பி வந்துவிட மாட்டாளா? என்கிற ஏக்கத்துடன் கண்ணீரும் கம்பலையுமாக சேரன் காத்துக் கிடக்கிறார். 

மகளின் காதல் விவகாரம் தொடர்பாக 2 முறை பேட்டி அளித்துள்ள அவர் துக்கம் தாங்காமல் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சேரனின் பாசப் போராட்டம் வெல்லுமா? அவரது கண்ணீருக்கு விடை கிடைக்குமா? முடிவு... மகள் தாமினியின் கையில்.

அஜீத் சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் நிறைவு

அஜீத் சினிமாவுக்கு வந்து இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பேஸ் புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிகிறது. 

அஜீத் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகரானார். 

கதாநாயகனாக அறிமுகமான முதல் தமிழ் படம் அமராவதி. 1993–ல் இப்படம் வந்தது. வெறும் 32 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் இது எடுக்கப்பட்டது. ஆசை, காதல் கோட்டை படங்கள் பிரபலபடுத்தியது. 

அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிட்டிசன், வில்லன், வரலாறு, என பல ஹிட் படங்களில் நடித்தார். 

பில்லா, மங்காத்தா படங்கள் வசூல் சாதனை படைத்தன. தற்போது விஷ்ணு வர்த்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவருக்கு 53–வது படம் அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
Related Posts Plugin for WordPress, Blogger...