யுவனுக்கு அதிர்ச்சி தந்த 100வது படம்


இசைஞானி இளையராஜாவின் வாரிசு எனும் அடையாளத்தோடு அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. 

தொடர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார். தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில், கார்த்தி நடித்து வரும் பிரியாணி படம் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு 100வது படம். 

இதனால் பிரியாணி படத்தின் பாடலை ரொம்ப ஸ்பெஷலாக உருவாக்கி இருந்தார். வரும் ஆகஸ்ட் 31ம் தேதி யுவனுக்கு பிறந்தநாள், அன்றைய தினத்தில் பிரியாணி படத்தின் பாடலை மிகப்பெரிய விழாவாக யுவனுக்கு கொடுக்க ஏற்பாடுகள் செய்து இருந்தனர் பிரியாணி படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். 

இந்நிலையில் பாடல் வெளியீட்டு விழாவுக்கு முன்னரே கடந்த வெள்ளியன்று பிரியாணி படத்தின் அனைத்து பாடல்களும் இணையதளங்களில் வெளியானது. இந்த தகவல் சனிக்கிழமை தான் படக்குழுவுக்கு தெரியவந்தது. 

இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர் படக்குழுவினர். உடனடியாக போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. 

இதனையடுத்து இன்று திருட்டு வி.சி.டி. தடுப்பு சிறப்பு போலீஸ் ஏ.டி.ஜி.பி., கரண் சின்ஹாவிடம் பிரியாணி படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, டைரக்டர் வெங்கட்பிரபு, ஹீரோ கார்த்தி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட படக்குழுவினர் நேரில் சந்தித்து புகார் அளித்தனர். ஏ.டி.ஜி.பி. கரண் சின்ஹாவும் புகாரை ஏற்று உரிய நடிவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

இதனிடையே இணையதளங்களில் பாடல் வெளியானதால் விழாவை பிரமாண்டமாக நடத்த இருந்த பிரியாணி படக்குழு, வருகிற ஆகஸ்ட் 21ம் தேதி ஸ்டுடியோ கிரீன் நிறுவன அலுவலகத்திலேயே சிறிய விழாவாக நடத்த முடிவு செய்துள்ளனர். இத்தகவலை பிரியாணி பட அலுவலகமே தெரிவித்துள்ளது. 

பிரியாணி தனது 100வது படம் என்பதால் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் எதிர்பார்த்து இருந்தார் யுவன், ஆனால் இப்போது இப்படியாகிவிட்டதால் ரொம்பவும் அப்செட்டாகியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...