ஆண்கள் லுங்கி அணியும் கலாசாரம் சமீபகாலமாக குறைந்து வருகிறது. அதேபோல் சினிமாக்களிலும் லுங்கி அணியும் கேரக்டர்கள் அதிகமாக இடம்பெறுவதில்லை.
ஆனால் இந்த நிலையில், தற்போது ஷாரூக்கான்-தீபிகா படுகோனே நடிப்பில் தமிழ்-இந்தியில் தயாராகியுள்ள சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு லுங்கி டான்ஸ் உள்ளது.
ஷாரூக்கான், தீபிகா இருவருமே லுஙகி அணிந்தே அந்த பாடலில் நடனமாடியுள்ளனர். இது பாலிவுட்டில் பிரபலமாகி விட்டது.
அதனால், இப்போது இந்தியில் உருவாகி வரும் சில புதிய படங்களில் லுங்கி நடனத்தை இணைத்து வருகிறார்களாம்.
மிக்கி வைரஸ் என்ற படத்தில் எல்லி அவ்ராம் என்ற புதுமுக நடிகை ஒருவரும் ஒரு பாடல் முழுக்க லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு செம குத்தாட்டம் போட்டுள்ளாராம்.
மாடர்ன் காஸ்டியூமை விட இந்த லுங்கி கெட்டப் புதுமையான கிளாமரை வெளிப்படுத்துவதால் பாலிவுட் ரசிகர்கள் இப்போது லுங்கி மோகத்தில் திரிகிறார்களாம்.
இந்த கலாசாரம் விரைவில் கோலிவுட்டிலும் பரவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மேலும், இந்த பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு டெடிகேட் செய்துள்ளார் ஷாரூக்கான். இதையடுத்து அந்த பாடலை யு டியூப்பில் பார்த்து ரசித்த ரஜினி, உடனடியாக அவருக்கு போன் போட்டு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
அதோடு, நடனம் குறும்புத்தனமாக அற்புதமாக இருந்தது என்றும் சொல்லி ஷாரூக்கை குஷிபடுத்தியிருக்கிறார் ரஜினி.
0 comments:
Post a Comment