நடிகர்-நடிகைகளை கலாய்த்து எடுப்பதில் ஆர்யாவுக்கு நிகர் யாரும் கிடையாது. அதிலும், அவருடன் சந்தானமும் சேர்ந்துவிட்டால் வினையே வேண்டாம்.
அவர்களிடம் சிக்கும் நடிகைகள் தெறித்து ஓடுவார்கள். அந்த அளவுக்கு கலாய்த்து எடுத்து விடுவார்கள். அதனால் சில நடிகைகள் ஆர்யாவுக்கு கலாய்ப்பு மன்னன் என்றே பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள்.
அது அவருக்கு பொருத்தமான பெயர் என்பதால் ஆர்யாவை மாமன் மச்சான் என்று அழைக்கும் நடிகர்கள் இப்போதெல்லாம் கலாய்ப்பு மன்னன் வந்துட்டாரா என்றுதான் கேட்கிறார்களாம்.
ஆனால் அப்படி கோலிவுட்டையே நடுநடுங்க வைக்கும் ஒரு கலாய்ப்பு மன்னனை இன்னொரு நடிகர் மாதக்கணக்கில் நடுநடுங்க வைத்து விட்டாராம். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? இந்த அதிரடி கலாய்ப்பு மன்னன் வேறு யாருமல்ல நம்ம தல அஜீத்தான்.
பார்ப்பதற்குத்தான் பரமசாதுவாக இருப்பார். ஆனால், கோதாவில் இறங்கி விட்டால் துவம்சம் செய்து விடுவார். அப்படிப்பட்ட தல, ஆர்யாவின் கலாய்ப்பு பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறாராம்.
அதனால், ஆரம்பம் படத்தில் தன்னுடன் நடிப்பதற்காக ஆர்யா வந்த சில நாட்களாக அமைதியாக இருந்தவர் பின்னர், படிப்படியாக கலாய்க்கத் தொடங்கினாராம் அஜீத்.
அதிலும் சில நாட்களில் வசமாக சிக்கும்போது, உடன் நடிக்கும் நயன்தாரா,டாப்ஸி முன்னிலையில் ஆர்யாவை வறுத்து எடுத்திருக்கிறாராம். இதனால், மற்றவர்களை தெறித்து ஓட வைத்து வந்த ஆர்யா, முதன்முதலாக தலயின் கலாய்ப்பை தாங்க முடியாமல் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தாராம்.
இதை அப்படத்தில் நடித்து முடிக்கிறதுவரை பொறுத்துக்கொண்ட ஆர்யா, இப்போது தனது கோலிவுட் நண்பர்களிடம் சொல்லி, தல என் காதில இருந்தே ரத்தம் வழிய வச்சிட்டாரு என்று புலம்பிக்கொண்டு திரிகிறாராம்.
0 comments:
Post a Comment