துப்பாக்கி படத்தில் முதன்முதலாக விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் கூட்டணி அமைத்தனர். அந்த முதல் படமே பெரிய அளவில் ஹிட்டாகியது.
அதனால் ராசியான கூட்டணியாகிவிட்ட அவர்கள் இருவரும் மீண்டும் கைகோர்க்கிறார்கள்.
தற்போது இந்தியில் துப்பாக்கி படத்தை பிஸ்டல் என்ற பெயரில் இயக்கி வருகிறார் முருகதாஸ்.
விஜய் தமிழில் ஜில்லா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆக, இருவருமே இந்த படவேலைகள் முடிந்ததும் மீண்டும் அடுத்த படத்தில் இணையப்போவதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக அப்படத்துக்கு அதிரடி என்று அவர்கள் பெயர் வைத்திருப்பதாக கோலிவுட்டில் செய்தி பரவிக்கொண்டிருந்தது.
ஆனால், இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ள செய்தியில், நானும், விஜய்யும் அடுத்து இணைவது உண்மைதான்.
ஆனால், அந்த படத்துக்கு எந்த தலைப்பு வைப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. சில தலைப்புகளை பரிசீலித்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடமும், இசையமைக்க அனிருத்திடமும் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.
0 comments:
Post a Comment