காதலனுக்காக சொந்த நாடு திரும்பிய இரண்டெழுத்து நாயகி

ஜேஜேவாக அறிமுகமான இரண்டெழுத்து நாயகி, குருடியாக நடித்தபிறகு அவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக அமையவில்லை. 

இதையடுத்து சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். 

இலங்கை வரவான நடிகை தன்னுடைய தாய்மொழியில் நடிப்பதற்காக இலங்கை சென்று ஒரு படத்தில் நடித்துவிட்டு இந்தியா திரும்பினார். 

திரும்பியவர், தனியாக வராமல் காதலுடன் வந்து சேர்ந்திருக்கிறார். 

அங்குள்ள சிங்கள நடிகருக்கும் இவருக்கும் காதல் தொற்றிக் கொண்டதாம். பெங்களூரில் சில மாத காலம் தங்கியிருந்த நடிகை, காதலரை பிரிய மனமில்லாததால், இனி இந்தியாவே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு பெட்டி, படுக்கையுடன் இலங்கைக்கே புறப்பட்டு, காதலரோடு கலந்து விட்டாராம் நடிகை.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...