தப்புக்கணக்கான தளபதி கணக்கு


ரசிகர் மன்றம் தொடங்கி பின்னர், அதையே மக்கள் இயக்கமாக மாற்றிய அந்த தளபதி நடிகர், நடித்த படத்தை தியேட்டருக்கு கொண்டு வர முடியாததால் மனசுடைந்து போயிருக்கிறார். 

அவர் ஒரு பக்கம், தயாரிப்பாளர் ஒரு பக்கம் என்று மாறி மாறி அரசு தரப்பினரை தொடர்பு கொண்டு கருணை மனு கொடுத்தும், கருணை காட்ட மறுக்கிறார்களாம்.

இதனால் விஸ்வரூபம் போன்று தாமதமாக வெளியானால், பின்னர் படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று இத்தனை நாளும் நடிகர் தரப்பு கணக்குப்போட்டுக் கொண்டிருந்தது. 

ஆனால் இப்போது திருட்டு வி.சி.டிக்களிலேயே ரசிகர்கள் படத்தை பார்த்து விட்டால் அப்புறம் எப்படி தியேட்டருக்கு வருவார்கள். நாம் போட்டக்கணக்கு தப்புக்கணக்காகி விட்டதே என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மேற்படி தளபதி நடிகர் அந்த மூன்றெழுத்து படத்தையடுத்து நடித்து வந்த இன்னொரு மூன்றெழுத்து படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மதுரை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி விட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க நடிகரை அழைத்தபோது, இப்போதைக்கு நடிக்கிற மனநிலையில் இல்லை. 

நான் பெரிய அளவில் எதிர்பார்த்த படம் வெளியே வர முடியாமல் கிடக்கிறது. அப்படம் தியேட்டருக்கு வந்து ஓடினால்தான் அடுத்து கேமரா முன்பு வருகிற மனநிலைக்கு வருவேன் என்று சொல்லி விட்டாராம. 

இதனால் மதுரை மண்வாசனையில் உருவாகும் அபப்டத்தின் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...