டைட்டில் விசயத்தில் டைரக்டரை, தலை சுற்ற வைத்த நடிகர்


இப்போதெல்லாம் டைரக்டர்களும், ஹீரோக்களும் கதையை விட படத்திற்கான தலைப்பு வைக்கிற விசயத்துக்குத்தான் ரொம்பவே மெனக்கெடுகிறார்கள். 

கேட்சிங்கான தலைப்பாக இருந்தால் ரசிகர்களை எளிதில் தியேட்டர்களுக்கு இழுத்து விடலாம் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் ஏற்படும் குழப்பம் காரணமாக சில படங்களுக்கு டைட்டில் வைக்காமலேயே படப்பிடிப்பை தொடங்கியும் விடுகிறார்கள்.

அப்படி டைட்டில் வைக்காமலேயே தொடங்கப்பட்ட பில்லா படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனரின் புதிய படத்திற்கு தலைப்பு வைக்க ஒரு பெரும் போராட்டமே நடந்து முடிந்திருக்கிறது. 

அந்த வகையில் படப்பிடிப்பு தளங்களில் டயலாக் எழுதிக்கொடுத்த பேப்பர்களை விட படத்திற்கான தலைப்பினை எழுதி பட நாயகனிடம் ஓ.கே வாங்க டைரக்டர் பட்டபாடுதான் பெரும்பாடாம். 

அப்படி பக்கம் பக்கமாக அவர் எழுதிக்கொடுத்தபோதும், எந்த தலைப்பும அவருக்கு பிடிக்கவில்லையாம். முதலில் வாய் வார்த்தையில் சரியில்லை என்று சொன்னவர், பின்னர் இவர் சொல்லும் டைட்டில்களை கேட்டு முகத்தை வெறுப்பாக வைத்துக்கொண்டு கை சைகையால் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தாராம் நடிகர்.

இதனால் படத்தையே எடுத்து முடிச்சிட்டோம். ஆனா ஒரு தலைப்பை ஓ.கே வாங்குவதற்குள் பெண்டு கழந்திடும் போலிருக்கே என்று புலம்பிய இயக்குனர், கடைசியாக சில டைட்டில்களை நடிகரிடம் சொல்லியிருக்கிறார். 

இதுவும் அவருக்கு எங்கே பிடிக்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டே சொன்னாராம். ஆனால், அதில் ஆ...ரம்பம் என்று அவர் சொன்ன டைட்டிலை கேட்டதும் மேற்படி நடிகரின் முகத்தில் திடீர் பிரைட்னஸ் வெளிப்பட்டதாம். 

இதுதான் கதைக்கு பொருத்தமாக இருக்கும். இதையே வச்சிருங்க என்று சொல்லிவிட்டு சென்று விட்டாராம்.

பிடிக்குமின்னு சொன்ன எந்த டைட்டிலும் அவருக்கு பிடிக்கல, ஆனா பிடிக்கவே பிடிக்காதுன்னு சொன்ன டைட்டில ஓ.கே சொல்லிட்டு போறாரே. இவரை புரிஞ்சுக்கவே முடியலையே என்று சந்தோசத்திலும புலம்பிக்கொண்டு நின்றாராம் பில்லா டைரக்டர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...