இந்தி டி.வி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை சாஷி பரிக். இவர் நேற்று மும்பையில் உள்ள கண்டிவாலி பகுதியில் கார் ஓட்டிச்சென்றாராம்.
அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் கடும் வேகத்தில் அவர் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த ஒரு கார் மீது பலமாக மோதினாராம் சாஷி.
இதில் அந்த கார் நிலைதடுமாறி, அருகில் வந்து கொண்டிருந்த ரிக்ஷா மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாம். இதனால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தார்களாம். ஒருவர் அந்த ஸ்பாட்டிலேயே இறந்து விட்டாராம்.
இதையடுத்து சாஷி பரிக்கை கைது செய்து விசாரித்தபோது அவர் குடிபோதையில் காரோட்டியது தெரிய வந்திருக்கிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்களாம்.
0 comments:
Post a Comment