தலைவா படம் இன்று முதல் தமிழ்நாட்டில் ரிலீசாகியுள்ளது. இதனால் வருகிற வெள்ளிக்கிழமை (23ந் தேதி) வெளிவருவதாக அறிவித்திருந்த படங்கள் இந்த மாத கடைசிக்கும், அடுத்த மாதத்திற்கும் ஓடுகின்றன.
தலைவா படம் திட்டமிட்டபடி 9ந் தேதி வெளியாகி 23ந் தேதிக்குள் ஓடிமுடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் தேசிங்குராஜா, நேற்று இன்று, மத்தாப்பூ, விடியும் வரை பேசு, மவுன மழை போன்ற படங்கள் 23ந் தேதி ரிலீசாகப்போவதாக அறிவித்திருந்தன.
ஆனால் தலைவா இப்போது இந்தப் படங்களின் ரிலீசை ஒட்டி வெளியாவதால் எப்படியும் குறைந்த பட்சம் ஒரு வாரத்துக்காவது தலைவா அலைதான் அடிக்கும் என்பதால் இந்தப் படங்கள் இந்த மாத இறுதிக்கு தங்கள் ரிலீசை தள்ளி வைத்திருக்கிறது.
இதில் தேசிங்குராஜா மட்டும் ஏற்கனவே தியேட்டர்கள் புக் ஆகிவிட்டதால் ரிலீசாகிறது.
இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால். ஆகஸ்ட் 30 அன்று ஆர்யா சூர்யா, சும்மா நச்சுன்னு இருக்கு, அஞ்சல்துறை, ரெட்டவாலு, பொன்மாலை பொழுது, தங்க மீன்கள் போன்ற படங்கள் வெளிவருகிறது.
இப்போது இந்தப் படங்களும் ஆகஸ்ட் 30க்கு செல்லுமானால் 30ந் தேதி தியேட்டருக்கு கடும் நெருக்கடி ஏற்படும். இதனால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.
0 comments:
Post a Comment