சின்னத்திரையில் ஜேம்ஸ்பாண்ட்டாக காமெடியன் செந்தில்

வசந்த் டிவியில் ஞாயிறுதோறும் பிற்பகல் இரண்டரை மணிக்கு ஒளிபரப்பாகும் துப்பறியும் தொடர் ஜேம்ஸ்பாண்ட்-007. நடிகர் செந்தில் இந்த தொடரில் துப்பறியும் ஜேம்ஸ்பாண்டாக வந்து கலகலப்பூட்டுகிறார்.

சினிமாவில் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை கூட்டணியை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

இந்த கூட்டணியில் கவுண்டமணி நடிக்க ஆர்வம் காட்டாததால், செந்தில் மட்டும் நடிப்பை தொடர்ந்து வருகிறார்.

சின்னத்திரையில் முதன்முதலாக அவர் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் கலக்கப்போகிறார். வசந்த் டிவியில் அவருக்காக அமைந்த களமே இந்த ஜேம்ஸ்பாண்ட் தொடர்.

தொடரில் செந்தில் 15 வித கெட்டப்புகளில் தன்னை உருமாற்றிக்கொண்டு அதுவரை கண்டுபிடிக்க முடியாத சில கேஸ்களில் துப்பறிகிறார்.

இந்த கெட்டப்பில் நரிக்குறவர், கிளி ஜோசியக்காரர் போன்ற கேரக்டர்களும் அடங்கும் என்று தொடரை இயக்கும் டைரக்டர் ஜெயமணி கூறியுள்ளார்

சிவாஜி, கமல் அளவு எனக்கு நடிப்பாற்றல் இல்லை - ரஜினி

சிவாஜி, கமல்ஹாசன் அளவுக்கெல்லாம் எனக்கு நடிப்பாற்றல் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த், விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் பரபரப்பாக பேசினார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சென்னை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் ஒரு மாதமும், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் 2 மாதங்களும் சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பினார்.

அதன்பிறகு, ரஜினிகாந்த் யாரையும் சந்திக்கவில்லை, எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில் சினிமா துறையில் 75 திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய இயக்குனர் எஸ்பி.முத்துராமனுக்கு, சங்கர நேத்ராலயா சார்பில் `சங்கர ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு சங்கர ரத்னா விருது வழங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் நீ கலந்து கொள்ளாவிட்டாலும், உன் வாழ்த்து மடலையாவது அனுப்ப வேண்டும் என்றும், அதை மேடையில் மகிழ்ச்சியுடன் படிப்பேன் என்றும் கூறினார்.

அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன். பின்புதான் யோசித்தேன், உடல் நிலை சரியான பிறகு, ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சியில்தான் கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். அப்படி பார்த்தால், என்னை சினிமாவில் வளர்த்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை விட வேறு நல்ல நிகழ்ச்சி எதுவும் கிடையாது.

நான் முழுமையாக குணம் அடைய மக்களின் அன்பும், ரசிகர்களின் வேண்டுதலும்தான் காரணம். என்னை உருவாக்கிய ஜாம்பவான்கள் இருக்கிற இந்த மேடையில், நான் அதிகம் பேசினால், அது அதிக பிரசங்கித்தனம் ஆகிவிடும். எனக்கு வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பதால் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 25 படங்களில் நடிக்கவில்லை.

அவர் மீது கொண்ட அன்பினால் தான் 25 படங்களில் நடித்தேன். என்னை உருவாக்கியவர்கள் என்னிடம் பேசும்போது, நீ தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்க வேண்டும், தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நான் சிவாஜியோ, கமல்ஹாசனோ கிடையாது.

அவர்களை போல் நடிப்பாற்றல் எனக்கு கிடையாது. சினிமா துறையில் என் மூலதனம் என் உடலின் வேகம்தான். எனவே, என் உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன், என்றார்.

மேலும் எனது உடல்நிலை சரியாக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவருக்கும், எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை - விஜய்

நான் ‌‌ஒரே மாதிரியாக நடிப்பது என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.

இந்த தீபாவளிக்கு (ரா-1) இந்தியை தவிர்த்து வந்த படங்கள் மூன்று தான் என்றாலும், அதில் விஜய்யின் வேலாயுதம் படமும் ஒன்று.

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில், ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி, தீபாவளிக்கு வெளியாகி இருக்கும் இப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இப்படம் வெற்றியை பிரஸ்மீட்டில் பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தின் நாயகன் விஜய்.

அவர் பேசுகையில், நான் நடிச்ச 52 படங்களில் வேலாயுதம் படம் பெரிய ஹிட்டாகியுள்ளதாக கூறுகிறார்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியொரு வாய்ப்பை கொடுத்த டைரக்டர் ராஜாவுக்கு வெறும் நன்றி என்று ஒரு வார்த்தையில் சொன்னால் அது போதாது. இந்தபடத்துக்காக ராஜா மட்டுமின்றி அவரது அப்பாவில் இருந்து மொத்த குடும்பமே எனக்காக உழைத்து இருக்கிறார்கள்.

அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி படத்துக்கான தேவைகள், அனைத்தையும் செய்து கொடுத்து தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் நன்றி. அப்புறம் இந்தபடத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கைகாரர்களுக்கும் நன்றி.

பொதுவாக கமர்ஷியல் படங்கள் நிறைய வந்தாலும் அது அனைத்தும் வெற்றி பெறுவதில்லை. ஆனா இந்த படத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. படத்தின் ப்ளஸ் பாயிண்டே விஜய் ஆண்டனியின் இசை தான். ரொம்ப அருமையா பண்ணியிருக்கிறார்.

படத்தில் நான் இவ்வளவு நல்ல நடிச்சுருக்கேன்னா, அதுக்கு டைரக்டர் ராஜா தான் காரணம். அவர் என்ன சொன்னாரோ, அதை அப்படியே செய்திருக்கிறேன். படத்தில் அண்ணன், தங்கை சென்டிமெண்ட்டோட காதல், ஆக்ஷ்ன் என அத்தனையும் வச்சிருந்தார் டைரக்டர். ஜெனிலியா, ஹன்சிகா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் கூட நடித்தது நல்ல அனுபவம்.

நான் ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. காவலன் படத்தில் என் பாணி இல்லை. சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்தார். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்வேன். அடுத்து நான் நடிச்ச நண்பன் படம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.

டைரக்டர் ஷங்கர் இப்படத்தை இந்தி பட ரேஞ்சுக்கு இயக்கி இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். அடுத்த வருடம் கவுதம் இயக்கத்தில் யோகஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கிறேன் என்றார்.

இயக்குநர் ராஜா பேசுகையில், வாழ்க்கையில் எனக்கு மிகப் பெரிய திருப்பம் தந்த படம் வேலாயுதம். அதற்கு காரணமான விஜய், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு நன்றி என்றார்.

பிரபல டைரக்டருடன் பால் நடிகை காதல்!

கிரீடத்தை பெயரில் சுமந்த பிரபல டைரக்டருடன் பால் நடிகைக்கு லவ்வோ லவ் என்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் கிசுகிசு.

மாமனாரை லவ்வும் கேரக்டரில் நடித்து சர்ச்சைக்குள்ளாகி, ஒருவழியாக அதிலிருந்து மீண்டு, அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வரும் பால் நடிகை, கிட்டத்தட்ட முன்னணி நடிகையாகவே மாறி விட்டார்.

அதேபோல அந்த டைரக்டரும் மதராசபட்டனதுக்கு வந்து வெற்றி இயக்குனராகி விட்டார். அவர் இயக்கிய படத்தில் அம்மணி நடித்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு இப்போது காதலில் போய் நிற்கிறதாம்.

தற்போது கற்பனையான படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பால் நடிகைக்கு, தினமும் டைரக்டரின் வீட்டில் இருந்துதான் மதிய உணவு வருகிறதாம்.

அம்மணிக்கென்றே பிரத்யேகமாக வரும் இந்த விருந்து உபசாரம் அதோடு நின்றால் பரவாயில்லை. அதையும் தாண்டி போவதுதான் ஆங்காங்கே சிலுசிலுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பி.எம்.டபுள்.யூ கார் வாங்க திட்டமிட்டாராம் இயக்குனர். இதற்காக டெஸ்ட் டிரைவ் செய்ய காரை வரவழைத்திருந்தார்.

காரும் வந்து காத்திருந்ததாம். கெஸ்ட் வரணும். காத்திருங்க என்று கூறிய டைரக்டர், பால் வந்ததும், அவரை முன் சீட்டில் ஏற்றிக் கொண்டு டிரெய்ல் பார்த்தாராம்.

இப்படி அடுக்காடுக்காக ஆதாரங்களை தரும் கோடம்பாக்கத்துக்காரர்கள், ரெண்டு பேருக்கும் சீக்கிரம் கல்யாணம் வரப்போகிறது என்கிறார்கள்.

ஒ‌ரே நாளில் 22கோடி ரூபாய் வசூல்

ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி இருக்கும் ரா-ஒன் படம், முதல் நாளிலேயே 22 ‌கோடி ரூபாய் வசூலாகி சாதனை படைத்திருக்கிறது.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் நடிப்பில் அவரது மனைவி ‌கவுரி கான் தயாரிப்பில், அனுபவ் சின்ஹாவின் கதை இயக்கத்தில் உலகம் முழுவதும் ரிலீசாகி இருக்கும் படம் ரா-1.

மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீசாகியுள்ளது.

சுமார் 3000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகியுள்ள ரா-1, முதல் நாளிலேயே ரூ.22 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இந்தியில் ரூ.20கோடியும், தமிழ் மற்றும் தெலுங்கில் தலா ரூ.1 கோடியும் ஈட்டியுள்ளன.

இதற்கு முன்னர் சல்மான் கானின் பாடிகார்ட் படம், நாடு முழுவதும் 2,700 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு, ஒரே நாளில் ரூ. 21 கோடியை வசூலித்தது.

இது தான் இதுவரை இந்திப் படத்தின் சாதனையாக இருந்தது. அ‌தனை "ரா-ஒன்" படம் முறியடித்திருக்கிறது. மேலும் ஒரு வாரத்திற்குள் ரா-ஒன் படம் ரூ.100 கோடி வசூலை எட்டும் என்றும் கூறப்படுகிறது.

ஒஸ்தியில் யுவன் இசையமைக்காதது ஏன்...?

ஒஸ்தி படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்காதது ஏன்... என்பதற்கு சிம்பு பதிலளித்துள்ளார். யுவன்-சிம்பு காம்பினேஷன் என்றாலே அந்தபடத்தின் பாடல்கள் அனைத்தும் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்பதற்கு இதற்கு முன் வந்த படங்க‌ள் அனைத்தையும் கூறலாம்.

உதாரணமாக மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம், வானம் என்று வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.

அதுமட்டுமல்ல இருவரும் ரொம்ப நெருங்கிய நண்பர்களும் கூட. அப்படி இருக்கையில் சிம்பு நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ஒஸ்தி படத்தில் யுவனுக்கு பதிலாக, தமன் இசையமைத்துள்ளார்.

இருவருக்கும் ஏதோ பிரச்சனை போல, அதனால் தான் யுவன் இசையமைக்கவில்லை என்று கூட கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்

சிம்பு, மேலும் இதற்கு என்ன காரணம் குறித்து சிம்புவிடம் கேட்டால், எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.

தொடர்ந்து பணியாற்றும் போது ஒரு சின்ன மாறுதல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யுவனிடம் கேட்டேன்.

அவர்தான் தமன் பற்றி சொன்னார். அதனால் தான் தமனை இசையமைக்க வைத்தேன் என்கிறார்.

தீபாவளி படங்கள் ஒரு பார்வை...

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருட தீபாவளிக்கும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆன காலம்போய் அரைடஜன், கால்டஜன் என தீபாவளி திரைப்படங்கள் எண்ணிக்கை குறைந்து, தற்போது வருகின்ற தீபாவளிக்கு ஒரு சில திரைப்படங்களே ரிலீஸ் ஆகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கு யார் காரணம்...? என்ன காரணம்...? என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்பொழுது இந்த தீபாவளிக்கு வெளியாகும் ஒரு பிரம்மாண்ட தமிழ்படம், தமிழ் பேசி வெளியாக இருக்கும் ஒரு மெகா பட்ஜெட் இந்திபடம் ஆகியவற்றின் டிரையிலரையும், நிறைய தமிழ்படங்கள் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளாமல் போன காரணத்தையும் பார்ப்போமா...?!


வேலாயுதம்

பிரம்மாண்ட பட அதிபர் ஆஸ்கர் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில், "ஜெயம்" ராஜா முதன்முதலாக நடிகர் விஜய் நடிக்க பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் திரைப்படம் தான் "வேலாயுதம்".

விஜய் படங்களிலேயே அதிக நாட்கள் படப்பிடிப்பு நடந்தபடம் எனும் சாதனையை பெற்றிருக்கும் இப்படத்தில் ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி இருவரும் நாயகியர். இதில் ஜெனி., பெண் பத்திரிக்கை நிருபராக, விஜய்யை விட ஒருபடி தாண்டி பேசப்படும் பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், ஹன்சிகா மோத்வானி முதன்முதலில் கிராமத்து பெண் கேரக்டரில் நடித்து கலக்கியிருப்பதாகவும் கூறுகிறார் இயக்குநர் ராஜா.

சரண்யா மோகன் விஜய்யின் தங்கை பாத்திரம் ஏற்றிருக்கிறார்.

படத்தில் கிராமத்து பால்காரன் வேலுவாக வரும் விஜய் கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் ஜொலிக்கிறார். மக்களில் ஒருவனாக இருக்கும் ஓர் இளைஞன், மனித நேயப் பண்பால் மக்களுக்கே தலைவன் என்கிற நிலைக்கு உயருவது தான் படத்தின் கதை.

சுருக்கமாக சொன்னால் அகரம் ஒன்று சிகரமாய் மாறும் கதை. கிராமமும், நகரமுமாக மாறி, மாறி பயணக்கிறது வேலாயுதம் படத்தின் கதை. கிராமத்துக் கிளர்ச்சியையும், நகரத்து கவர்ச்சியையும் தரிசிக்க வைக்க காட்சி அமைப்புகள் படத்தில் உள்ளன.

ப்ரியனின் ஒளிப்பதிவு, விஜய் ஆண்டனியின் இசை இரண்டும் ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் வேலாயுதம் படத்தை பக்கா கமர்ஷியல் படமாக தீபாவளி கோதாவில் இறக்கி விட இருக்கின்றனர் என்பது ஹைலைட்!


ரா-1

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான் நடிப்பில் அவரது மனைவி ‌கவுரி கான் தயாரிப்பில், அனுபவ் சின்ஹாவின் கதை இயக்கத்தில் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மொகா பட்ஜெட் படம் தான் "ரா-1".

லண்டனில் செட்டில் ஆன தென் இந்திய சாஃப்ட்வேர் இன்ஜினியரான ஷாரூக், தன் குழந்தைக்காக ஹீரோவால் ஜெயிக்க முடியாத ரா-1 எனும் வில்லனை, சாஃப்ட்வேரில் பொம்மையாக உருவாக்குகிறார்.

அது சாஃப்ட்வேர் கம்யூட்டரை எல்லாம் கடந்து வெளியே வந்து, உலகை அழிக்க முயல்கிறது. அதை அழிக்க மென்மையான உள்ளம் கொண்ட ஹீரோ ஷாரூக் ஜி-1 அவதாரம் எடுக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது "ரா-1" படத்தின் மொத்த கதையும்.

இந்தி மாதிரியே தமிழிலும் 3டி படமாக ரிலீஸ் ஆகும் "ரா-1" படத்தில் ராவணன், இராமாயணம் போன்ற விஷயங்களையும் கலந்து கட்டி பாத்திரமாக்கியிருக்கும் அனுபவ் சின்ஹாவுக்கு, விடியல் சேகர், நிகோலா, ரசூல் பூக்குட்டி, சாபுசிரில் உள்ளிட்ட தென் மற்றும் வடஇந்திய பிரபலங்கள் டெக்னிக்கலாகவும், கிரியேட்டிவ்வாகவும், பக்கபலமாக இருந்து "ரா-1" படத்தை தமிழிலும் ஹிட் ஆக்க உறுதி பூண்டிருக்கின்றனர். ரா-1 படத்தை தமிழகம் முழுவதும் அபிராமி ராமநாதன் ரிலீஸ் செய்ய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வேலாயுதம், ரா-1 படங்களை தவிர ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் "ஏழாம் அறிவு" படமும் ரிலீசாக இருக்கிறது.

வேலாயுதம், ரா-1, ஏழாம் அறிவு தவிர சிம்புவின் ஒஸ்தி, தனுஷின் மயக்கம் என்ன, புகழேந்தி தங்கராஜின் உச்சிதனை முகர்ந்தால் உள்ளிட்ட படங்களும் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ள இருந்து கடைசி நேரத்தில் கழண்று கொண்டுவிட்டன.

இதற்கு முக்கிய காரணம் மேற்படி ரிலீசாக இருக்கும் மெகா பட்ஜெட் படங்கள் மற்றும் தியேட்டர் பற்றாக்குறை போன்றவை தான்.

இருந்தாலும் துணிச்சலாக முமைத்கானின் கவர்ச்சியை நம்பி "அவளுக்கு அது புதுசு" எனும் அந்தமாதிரி படமும், புதுமுகங்களின் "காதல் கொண்ட மனசு" எனும் சின்ன பட்ஜெட் படமும் கிடைத்த தியேட்டர்களில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதுதான் இப்போதைய நிலவரம்!

சர்ச்சையில் சிக்கிய ரா-ஒன்

படம் வெளியாகும் முன்பே காப்பிரைட் சர்ச்சையில் மாட்டிக் கொண்டுள்ளது ஷாரூக்கானின் ரா- ஒன். ஷாரூக்கான் தயாரித்து நடித்துள்ள விஞ்ஞானப்படம்.

தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படம் காப்பிரைட் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ரா- ஒன் படத்தின் கதை தங்களுடையது என யாஷ் பட்நாயக் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மொகித் ஷா மற்றும் நீதிபதி ரோஷன் தால்வி, இந்தப் படத்தை வெளியிடும் முன், நீதிமன்றத்தில் ரூ. 1 கோடியை ஷாரூக்கான் செலுத்த வேண்டும்.

அதன் பிறகே வெளியிட வேண்டும். தவறினார் இடைக்காலத் தடை விதிக்க வேண்டி வரும் என்று தீர்ப்பளித்தனர்.

மேலும் தங்கள் தீர்ப்பில், "திரையுலகில் அடுத்தவர் கதையை காப்பியடிப்பது தொடர் கதையாகி வருவது வேதனைக்குரியது," என குறிப்பிட்டுள்ளனர்.

ஆயிரம் அறிவு - ரா-100 வந்தாலும் வேலாயுதம் வெற்றிபெறும்

வடநாட்டிலிருந்து ரா-1 என்ன ரா-100 வந்தாலும் சரி, எத்தனை அறிவு வந்தாலும் சரி, விஜய்யின் வேலாயுதம் படம் தனித்து நின்று வெற்றி பெறும் என்று படத்தின் டைரக்டர் ஜெயம் ராஜா கூறியுள்ளார்.

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி, தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் "வேலாயுதம்". இப்படம் பற்றி ஜெயம் ராஜாவின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.

அப்போது பேசிய ராஜா, வேலாயுதம் படத்தை பற்றி நிறையவே பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் ஜெனிலியா, பத்திரிக்கையாளராக வருகிறார். கூடவே விஜய்யும் லவ் பண்ணுகிறார்.

படத்தில் விஜய்க்கு சமமான கேரக்டர் ஜெனிலியாவின் கேரக்டர். அதேபோல் மற்றொரு நாயகியான ஹன்சிகா கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இவர்கள் இரண்டு பேரை தவிர மூன்றாவது ஹீரோயினாக, விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடித்துள்ளார்.

வேலாயுதம் படக்குழுவிலேயே நான் பார்த்து, வியந்த நபர் சரண்யா மோகன் தான். படத்தின் காட்சியை பற்றி லேசாக சொன்னாலே போதும், அதை உடனே கேட்டு அற்புதமாக நடித்து கொடுத்துவிடுவார்.

அப்படியொரு ஈடுபாடு நடிப்பில் அவருக்கு என்று பேசிய ராஜாவிடம், சரி... "காவலன்" படத்தை தவிர விஜய்யின் சமீபத்திய படங்கள் அனைத்தும் தோல்வியாகி உள்ளன, இந்தபடம் எப்படி என்று நிருபர் ஒருவர் கேட்க...

உடனே ராஜா, விஜய் மார்க் போடுகிற ஸ்டேஜையெல்லாம் கடந்துவிட்டார். இன்றைக்கு அவர் பெரிய மாஸ் ஹீரோ. படம் வெளியாகிற நாளில் தியேட்டருக்கு திரண்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

நீங்கள் சொல்வது போல தோல்வி என்பதையெல்லாம் தாண்டிய மாஸ் ஹீரோ அவர். விஜய் நடித்த படங்களிலேயே பெஸ்ட் படமாக வேலாயுதம் இருக்கும்.

வடநாட்டில் இருந்து ரா-1 என்ன ரா-100 இருந்தாலும் சரி, எத்தனை அறிவு வந்தாலும் சரி, அதை எல்லாத்தையும் கடந்து நிச்சயம் இந்தபடம் வெற்றிபடமாக இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கு நிறை‌யவே இருக்கிறது என்றார்.

எப்பவும் தன் அப்பா மோகன் அல்லது தம்பி ஜெயம் ரவியுடன் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ராஜா, இம்முறை தனது மகள் வர்ணிகா, மனைவி ப்ருந்தா உட்பட குடும்ப சகிகதமாக கலந்து கொண்டார்.

அதுமட்டுமின்றி எப்பவும் தன்னுடைய படங்களை பற்றி மட்டுமே பேசும் ராஜா, இம்முறை தீபாவளிக்கு வர இருக்கும் மற்ற படங்களையும் சவாலுக்கு அழைப்பது போல பேசியது பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

சின்ன தீவுக்கு சொந்தக்காரியான நயன்தாரா

நடிகை நயன்தாரா கொச்சி அருகே சின்ன தீவு ஒன்றை வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகை நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்துகொள்ளப் போகின்றனர் என்பது அனைவரும் தெரிந்ததே.

அவர்கள் திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டில் ஆக திட்டமிட்டுள்ளனர். அதற்காக ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார் நயன்.

எப்பொழுது ஷாப்பிங் சென்றாலும் தனக்கு டிரெஸ் எடுக்கிறாரோ இல்லையோ, தவறாமல் பிரபுதேவாவுக்கு டிரஸ் எடுத்துவிடுவார்.

இந்நிலையில் கொச்சியில் இயற்கை எழில் கொஞ்சும் சின்ன தீவு ஒன்றை வாங்கியுள்ளாராம் நயன்தாரா.

இது தவிர திருவல்லா, எர்ணாகுளம், தேவரா ஆகிய இடங்களிலும் வீடு வாங்கியிருப்பதாக கேரள பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

தனுஷின் ஆஸ்தான இயக்குனர் படத்தில் சிம்பு

தனுஷின் ஆஸ்தான இயக்குனர் என்று கூறப்படும் டைரக்டர் வெற்றிமாறனுடன் இணைகிறார் நடிகர் சிம்பு. வெற்றிமாறன் அடுத்து இயக்கப் போவது சிம்புவைத்தானாம்.

இந்தப் படத்தை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் தயாரிக்கிறது.

பெரும் அரசியல் நெருக்கடிகள், கடைசி நேர இழுபறிகளுக்கிடையிலும் மங்காத்தா பெற்ற வெற்றியால் உற்சாகமடைந்துள்ள தயாநிதி அழகிரி இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

படத்தின் பட்ஜெட் ரூ 25 கோடி என கூறப்படுகிறது. சிம்பு படம் ஒன்று இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் தயாராவது இதுதான் முதல்முறை.

படத்தின் கதை சரித்திரப் பின்னணி கொண்டதாம்.

இந்தக் கதையை தனுஷுக்காகத்தான் வெற்றிமாறன் முதலில் தயார் செய்திருந்தாராம்.

சிலபல காரணங்களால் சிம்புவை கமிட் செய்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரகாஷ்ராஜின் தோனியில் தோனி

பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தோனி படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியும் கவுரவ வேடத்தில் நடிக்கப்போகவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வில்லனாக அவதரித்து, தயாரிப்பாளராக உருவெடுத்து, இப்போது இயக்குநராக மாறியிருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் பெயரை வைத்து "தோனி" என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இயக்கி வருகிறார்.

குழந்தைகளின் மனநிலையை மையப்படுத்தி, குழந்தைகளை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது எனும் மையக்கருத்தை இந்த சமூகத்துக்கு சொல்லும் விதமாக இப்படம் உருவாக்கி வருகிறார்.

படத்தில் பிரகாஷ்ராஜ் உடன், ஆகாஷ், தலைவாசல் விஜய், நாசர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். கே.பி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தோனியின் பெயரை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் ‌தோனியும் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தோனியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஒருவேளை தோனி ஒப்புக்கொண்டால் அவர் நடிக்கும் முதல் படம் தோனியாகத்தான் இருக்கும்.

கமலுக்கு வில்லனானார் ராகுல் போஸ்

கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கப்போகிறார் நடிகர் ராகுல் போஸ். கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் விஸ்வரூபம், ஹாலிவுட் பாணியில் தயாராகிறது.

இந்த படம் கமலுக்கு இன்னொரு மைல் கல்லாக இருக்கும் என கூறப்படும் இப்படத்தின் முதல் கட்ட சூட்டிங் மாமல்லபுரம் பகுதியில் நடந்து முடிந்துள்ளது.

படத்தில் நாயகனுக்கு இணையான பவர்ஃபுல் வேடம் வில்லனுக்கு. அதற்கு சரியான ஆள் வேண்டுமே என யோசித்த கமல், கடைசியில் ராகுல் போஸ் என்பவரை முடிவு செய்திருக்கிறார்.

இவர் "மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிப்பது பற்றி கருத்து தெரிவித்திருக்கும் ராகுல் போஸ், கமல் சாரே என்னை தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாத அளவுக்கு விஸ்வரூபத்தின் வெற்றிக்கு பாடுபடுவேன், என்று கூறியுள்ளார்.

பிரபுதேவாவுடனான காதலை முறித்தார் நயன்தாரா... திருமணமும் ரத்து

நயன்தாரா மீது கொண்ட காதலால், முதல்மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த பிரபுதேவா, விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில், இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, காதல் முறிந்துவிட்டதாகவும், இதனால் திருமணமே நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின்னர் தனிமையில் இருந்த நயன்தாராவுக்கு, "வில்லு" படத்தில் நடித்தபோது டைரக்டர் பிரபுதேவாவுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர்.

ஆனால் இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். இருந்தும் தங்களது கள்ளக்காதலில் உறுதியாக இருந்தனர் நயன்-பிரபுதேவா ஜோடி. தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத்.

இறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த பிரபுதேவா, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.

இதனையடுத்து நயன்-பிரபுதேவா காத‌லுக்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதனிடையே தன்மீது கொண்ட காதலுக்காக முதல் மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா.

மும்பையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், இவர்கள் காதலில் திடீர் விரிசல் ‌ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திருமணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி விசாரித்த போது, முதல் மனைவியை பிரிந்தாலும் தனது குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளாராம் பிரபுதேவா. நயன்தாராவுடனான காதலுக்கு முன்னரும் சரி, இப்போதும் சரி குழந்தைகளுடன் அதிக நேரம் செலவளிப்பது, அவர்களுடன் ஷாப்பிங்க போவது என்று ரொம்ப ப்ரியமாக இருக்கிறார் பிரபுதேவா.

சென்னை வரும்போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறாராம். ஆனால் இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க நயன்தாரா தடை போட்டதாக தெரிகிறது. இருந்தும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்து வருகிறார் பிரபுதேவா.

சமீபத்தில் கேரளா சென்ற பிரபுதேவா, நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த விஷயம் நயன்தாரா காதுக்கு எட்ட ஆத்திரமானார். பிரபுதேவாவுக்காக சினிமா, குடும்பம் என எல்லாத்தையும் விட்டு வந்த எனக்கு, அவர் துரோகம் செய்துவிட்டார் என்று ஆத்திரப்பட்டுள்ளார்.

மேலும் குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபுதேவாவும் உறுதியாக கூறிவிட்டாராம். இதையடுத்து பிரபுதேவா - நயன்தாரா காதல் முறிந்து, திருமணம் நின்றுபோனதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சித்தார்த் - ஸ்ருதி காதல் முறிந்தது

நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை ஸ்ருதி ஹாசனுக்கும் இடையேயான காதல் முறிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு நடிகர் சித்தார்த்தும், ஸ்ருதி ஹாசனும் ஒரு படத்தில் இணைந்து நடித்தனர்.

அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணமாகாமலேயே இணைந்து வாழ்வதாக கடந்த சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்த கிசுகிசுவை மறுக்காத ஸ்ருதி, அது எனது தனிப்பட்ட விவகாரம் என்றே கூறி வந்தார். சித்தார்த்தும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வந்தார்.

இந்நிலையில் இருவரும் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக தெலுங்கு திரையுலகில் பரபரப்பு செய்தி பரவியுள்ளது.

உறவு குறித்து மவுனம் காத்தது போலவே, இந்தப் பிரிவு குறித்தும் ஸ்ருதி - சித்தார்த் இருவருமே எதுவும் கூற மறுத்துவிட்டனர் என்றும் அந்த செய்தி கூறுகிறது.

படம் ஓடாதததால் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த விமல்

வாகை சூடவா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால் தனது சம்பளத் தொகையான ரூ.50 லட்சத்தையும் மொத்தமாக திருப்பிக் கொடுத்து சினிமா துறையிலேயே புரட்சி செய்திருக்கிறார் நடிகர் விமல்.

பொதுவாக தான் நடிக்கும் படங்கள் ஓடாவிட்டால் அந்த படத்தின் தயாரிப்பாளரை சந்திக்கவே அஞ்சுவார்கள் பெரும்பாலான ஹீரோக்கள். படம் நல்லா ஓடுனா நமக்கா கொடுக்க போறாரு? என்றொரு கேள்வியையும் கேட்பார்கள் அந்த ஹீரோக்கள்.

அப்படிப்பட்ட ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ ஹீரோவாக மாறி விமல் செய்திருக்கும் காரியம் சினி இன்டஸ்ட்ரியையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. வாகை சூடவா படத் தயாரிப்பாளர் முருகானந்தம் அப்படத்தின் தோல்விக்கு பின்பு படு சிக்கலுக்குள்ளாகியிருக்கிறார்.

இதுபற்றி கேள்விப்பட்ட விமல், அவருக்கு உதவும் விதத்தில், தான் வாங்கிய ஐம்பது லட்ச ரூபாய் சம்பளத்தையும் மொத்தமாக திருப்பிக் கொடுத்துவிட்டாராம்.

தன் கையில் பணமில்லாத நிலையிலும், இரண்டு படங்களை ஒப்புக் கொண்டு அதில் கிடைத்த அட்வான்சுடன், மீதி தொகையை புரட்டிக் கொடுத்திருகிறார் விமல்.

இதோடு நிறுத்தியிருந்தால் கூட ஆச்சர்யமில்லை. ஒரு படத்தில் இலவசமாகவே நடிச்சு தர்றேன். கவலைப்படாதீங்க என்றும் கூறியிருக்கிறாராம்.

உண்மையிலேயே விமல் ரியல் ஹீரோ தான்...!

ரா-ஒன் தமிழ்! ஷாரூக் சிம்பிள்!!

பாலிவுட் ஹீரோ ஷாரூக்கான் நடித்து உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் ரா-ஒன் படத்தின் தமிழ் ஆக்க டிரையிலர் மற்றும் ஆடியோ வெளியீட்டிற்காக சென்னை வந்துள்ளார் ஷாரூக்கான்.

சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த இவ்விழாவில் ஷாரூக்கானின் ஆஸ்தான இயக்குநர் மணிரத்னம் டிரையிலரை வெளியிட, திரையில் டிரையிலரின் இந்தியிலும், தமிழிலும் ஷாரூக்கான் மாறி மாறி ஆக்ஷ்னில் அடித்து தூள் பரத்தினார்.

அதன்பின் பாடல் சி.டி.யை ஷாரூக்கான் வெளியிட மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், செளந்தர்யா ரஜினிகாந்த், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் சி.டி.யை பெற்றுக் கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து பேசிய மணிரத்னமும், சுஹாசினியும், ஷாரூக்கானுக்கு தமிழும் நன்றாகவே வரும் எனக்கூற, தமிழில் தனக்கு சரளமாக தெரிந்த வார்த்தை‌யே இல்ல, இல்ல, இல்ல... என்பது தான். அதுதவிர வணக்கம், நன்றி, நல்லாயிருக்கீங்களா போன்ற வார்த்தைகளும் தெரியும் என்றார் ஷாரூக்.

அதனைத்தொடர்ந்து மீடியாக்களின் கேள்விக்கு பதிலளித்த ஷாரூக், ரா-ஒன் படத்தில் சேது சுப்ரமணியம் எனும் லண்டன் வாழ் கம்ப்யூட்டர் இன்ஜினியராக, தென் இந்திய தமிழராக நடித்திருப்பதாக கூறினார்.

மேலும் தீபாவளிக்கு திரைக்கு வரும் ரா-ஒன், படத்தை இந்தி தவிர தமிழ், தெலுங்கு ‌உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்து ரிலீஸ் செய்வதாகவும், தமிழில் 250க்கும் மேற்பட்ட பிரிண்ட்டுகள் போடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இதற்குமுன் தில்சே(உயிரே), ஹேராம் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் தனக்கு தந்த ஆதரவை, தமிழ்ரசிகர்கள் இப்படத்தின் மூலமும் தனக்கு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட ஷாரூக், யாரும் கேட்காமலேயே மேடையில் ரா-ஒன் சி.டி.யை ரிலீஸ் செய்துவிட்டு புகைப்பட கலைஞர்களுக்காக போஸ் கொடுத்ததோடு, அப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றிற்கும் ஸ்டைலாக ‌ஆட்டம் போட்டது தான் விழாவின் ஹைலைட்!

நம்மூர் ஹீரோக்களைக்காட்டிலும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஷாரூக், சிம்பிளாக மேடையில் டான்ஸ் ஆடியது தமிழ் ரசிகர்களை போன்றே மீடியாக்களையும் மூக்கின்மேல் விரல் வைக்கத்தூண்டியது என்றால் மிகையல்ல...!

ரித்தேஷ் தேஷ்முக் உடன் ஜெனிலியாவுக்கு நிச்சயதார்த்தம்

நடிகை ஜெனிலியாவுக்கும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வரின் மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.

சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், விரைவில் வெளிவர இருக்கும் ‌வேலாயுதம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களிலும், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

இந்தியில் "துங்கே மேரி கஸம்" என்ற படத்தில் நடித்தபோது, ஜெனிலியாவுக்கு, நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார்.

ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த ஜெனிலியாவும், ரித்தேஷ் தேஷ்முக்கும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். முதலில் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஒரு நடிகை தனக்கு மருமகளாக வரக்கூடாது என்று ரித்தேஷின் தாயார் கூறிவந்தார்.

இருந்தும் தங்களது காதலில் உறுதியோக இருந்த இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்தித்து வந்தனர். ஆரம்பத்தில் இவர்களது காதலை எதிர்த்த ரித்தேஷின் பெற்றோர், பின்னர் சம்மதம் தெரிவித்தனர். பெற்றோரின் சம்மதத்தையடுத்து விரைவில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இருவாரங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் வீட்டில், ஜெனிலியாவுக்கும், ரித்தேஷ்க்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். விரைவில் திருமண தேதி வெளியாகும் என்றும், திருமணத்திற்கு பிறகு ஜெனிலியா நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

விக்ரமுடன் ஜோடி சேர்ந்த மித்ரா குரியன்

காவலன் படத்தில் விஜய்க்கு 2வது ஜோடியாக நடித்த நடிகை மித்ரா குரியன், சீயான் விக்ரம் படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட் ஆகியிருக்கிறார். முதன் முதலில் கந்தா படத்தில் நடித்திருந்தாலும், 2வது படமான காவலன் முதலில் திரைக்கு வந்தது.

படத்தில் அசின் தோழியாக நடித்த மித்ரா, அசின் காதலித்துக் கொண்டிருக்கும் விஜய்யை க்ளைமாக்ஸில் தட்டிக் கொண்டு போய் விடுவார்.

படத்தின் திருப்புமுனை காட்சியில் நடித்திருப்பதால், அசினைவிட எனக்குத்தான் இந்த படத்த்தில் முக்கியத்துவம் என்று பேட்டி கொடுக்கும் அளவு முன்னேற்றம் ஏற்பட்டது மித்ராவின் பேச்சில்!

ஆனால் புதிய படங்கள் எதிலும் அம்மணி கமிட் ஆகவில்லை. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் என்று வழக்கமாக சினிமா நட்சத்திரங்கள் சொல்வதையே இவரும் சொல்லி வந்தார்.

அவரது காத்திருப்பிற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. ஆம்! சீயான் விக்ரம், தான் நடித்துக் கொண்டிருக்கும் கரிகாலன் படத்தில் மித்ராவையே ஹீரோயினாக போட சம்மதித்துவிட்டார்.

இருவர் தொடர்பான காட்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார் கேரளத்து வரவு மித்ரா!

நடிகர்களை பற்றி புட்டு புட்டு வைக்கும் த்ரிஷா

அஜித், விஜய், விக்ரம் என்று தன்னுடன் நடித்த நடிகர்களின் குணாதிசயங்களை புட்டு புட்டு வைக்கிறார் நடிகை த்ரிஷா. தமிழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டவர் த்ரிஷா.

தற்போது தமிழில் அந்தளவிற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், இப்போதும் தனக்கு மவுசு குறையவில்லை என்று கூறிவரும் த்ரிஷா, கடைசியாக அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்தார்.

த்ரிஷா ரொம்பவே சிம்பிளான கேரக்டரில் வந்து போனாலும், அதில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்று பெருமையாக கூறி வருகிறார்.

இந்நிலையில் அஜித்துடன் கிரீடம், மங்காத்தா போன்ற படங்களில் நடிச்சிருக்கீங்க, அஜித்தை பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்ட‌போது அஜித் சார், ஸ்ட்ரெய்ட் பார்வர்ட். எதையும் முகத்துக்கு நின்று தைரியமாக ‌பேசக்கூடியவர் என்கிறார்.

சரி விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என்று நான்கு படங்கள் நடித்துள்ளீர்கள். அவரை பற்றி சொல்லுங்கள் ‌என்றால் சட்டென்று விஜய் ரொம்ப ஸ்டைலான நடிகர் என்கிறார்.

அஜித் ஸ்ட்ரெய்ட் பார்வர்ட், விஜய் ஸ்டைல் அப்போ சீயான் விக்ரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றால், அவர் திறமைகளின் மொத்த உருவம் என்று பளிச்சென்று கூறுகிறார் த்ரிஷா.

மணிரத்னம் படத்தில் என் மகள் இல்லை - ராதா

மணிரத்னம் அடுத்து இயக்கபோகும் படத்தில் எனது 2வது மகள் நடிக்கவில்லை என்று நடிகை ராதா கூறியுள்ளார்.

ராவணன் படத்தை தொடர்ந்து, பொன்னியின் செல்வன் படத்தை கையில் எடுத்த டைரக்டர் மணிரத்னம், பல்வேறு பிரச்சனைகளால் எடுத்த எடுப்பிலேயே அதனை கைவிட்டார். தற்போது மீனவர் பிரச்சனையை மையமாக வைத்து ஒரு கதையை உருவாக்கி வருகிறார்.

இதில் படத்தின் நாயகனாக மாஜி கதாநாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் நடிக்க போவதாகவும், கவுதமிற்கு ஜோடியாக மாஜி நாயகி ராதாவின் 2வது மகள் துளசி நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை ராதா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய 2வது மகள் துளசி மணிரத்னம் படத்தில் நடிப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை.

அப்படி இருந்தால் நாங்கள் அதை மறைக்க மாட்டோம். மேலும் மணிரத்னம் படத்தில் நடிக்க யாருக்குத்தான் கசக்கும்.

எனக்கும் கூட, மணிரத்னம் படத்தில் எனது மகள் நடிக்க ஆசையாகத்தான் உள்ளது. ஆனால் அப்படி எதுவும் இதுவரை வரவில்லை. வந்தால் நிச்சயம் சொல்கிறேன் என்றார்.

மீண்டும் சுந்தர்.சி கூட்டணியில் வடிவேலு

சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பட்டிதொட்டியெங்கும் கலகலப்புடன் பிரசாரம் செய்த காமேடி நடிகர் வடிவேலு, உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக களமிறங்குவாரா? என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்து வந்த நிலையில், புதிய படமொன்றில் கமிட் கியிருக்கிறார் வைகைப்புயல்.

தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து சினிமாவை விட்டு விலகியிருந்த வடிவேலு, நானாகத்தான் சினிமாவை விலகியிருக்கிறேன்; என்னை யாரும் விலக்கவில்லை என்று கூறிவந்தார்.

இந்த நிலையில், சுந்தர் சி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் வடிவேலு.

இந்த இருவரும் இணைந்த வின்னர், கிரி, தலைநகரம், நகரம் என அத்தனைப் படங்களுமே நகைச்சுவையில் தனி முத்திரைப் பதித்தவை.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு முழு வீச்சோடு நடிக்க வரும் வடிவேலுவும், மீண்டும் இயக்கத்தை கையிலெடுத்துள்ள சுந்தர் சியும் மீண்டும் தனி முத்திரை பதிப்பார்கள் என்பதால், இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனத்தெரிகிறது.

நடிகர் கார்த்திக்கிடமும் தயாரிப்பாளர் சங்கத்தினர் கைவரிசை

நடிகர் கார்த்திக்கிடமும் தயாரிப்பாளர் சங்கத்தினர், சிலர் மோசடி செய்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் புகார் கூறியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் பதவி விகித்த ராமநாரயணன் உள்ளிட்ட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து புதிய தற்காலிக தலைவராக, நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பொறுப்பேற்றார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு உடனடியாக தேர்தல் வைக்க வேண்டும் என்று பல தயாரிப்பாளர் குரல் கொடுத்தனர்.

இதனையடுத்து வருகிற அக்.9ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு, தற்போது தேர்தலுக்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடந்து வருகிறது.

இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான ஒரு அணியினரும், கேயார் தலைமையிலான ஒரு அணியினரும் தேர்தலில் மோத உள்ளனர்.

எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியில் துணைத்தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோரும், செயலாளர் பதவிக்கு கே.ஆர்.ஜி., பி.எல்.தேனப்பன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு கலைப்புலி தாணுவும் போட்டியிடுகின்றனர். இவர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் தியாகராயநகரில் நடந்தது.

இதில் பங்கேற்று பேசிய எஸ்.ஏ. சந்திரசேகரன், "தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. குறிப்பாக கேபிள் டி.வி. உரிமை வழங்கியதில் ரூ.2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் அணி வெற்றி பெற்றால் நிச்சயம் அந்த தொகை‌ மீட்கப்படும். டி.வி. நிகழ்ச்சிகளில் விளம்பர கட்டுபாடுகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

தயாரிப்பாளர் சங்கத்தில் எவ்வளவோ முறைகேடுகள் நடந்துள்ளன. அதிலும் சினிமாவில் உள்ள சக நடிகரிடம் கூட மோசடி செய்துள்ளனர். சினிமாவில் பிஸியாக இருந்த காலகட்டத்தில், நடிகர் கார்த்திக் பல்வேறு படங்களில் நடிப்பதாக கூறி பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் தொகை வாங்கியிருக்கிறார். ஆனால் அவர்களின் படங்களில் நடிக்கவில்லை.

இதுதொடர்பான புகார் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளது. இதுகுறித்து கார்த்தியிடம் பேசி, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் பணத்தை கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடைசியாக கார்த்தி நடித்த மூன்று படங்களில் இருந்து தலா ரூ.5லட்சம் வீதம் ரூ.15லட்சம் வசூல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கொடுக்க முடிவுசெய்யப்பட்டது.

ஆனால் இதில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு ரூ.8 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி, ரூ.7லட்சத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர் சங்கத்தினர். முன்னணி நடிகராக இருந்த ஒருவரிடமே இப்படி மோசடி செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி சங்கம் சார்பில் வெளிவரும் இதழுக்கு விளம்பர கட்டணம் என்ற பெயரில் 400 தயாரிப்பாளர்களிடம் டி.டி. வாங்கி 4 ஆண்டாக வங்கியில் போடப்படவில்லை. இதுபோன்று இன்னும் எண்ணிலடங்கா குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளோம். எங்கள் அணி வென்றால் சேவை மையமாக சங்கம் செயல்படும்.

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.
Related Posts Plugin for WordPress, Blogger...