பாலிவுட் ஹீரோ ஷாரூக்கான் நடித்து உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் ரா-ஒன் படத்தின் தமிழ் ஆக்க டிரையிலர் மற்றும் ஆடியோ வெளியீட்டிற்காக சென்னை வந்துள்ளார் ஷாரூக்கான்.
சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த இவ்விழாவில் ஷாரூக்கானின் ஆஸ்தான இயக்குநர் மணிரத்னம் டிரையிலரை வெளியிட, திரையில் டிரையிலரின் இந்தியிலும், தமிழிலும் ஷாரூக்கான் மாறி மாறி ஆக்ஷ்னில் அடித்து தூள் பரத்தினார்.
அதன்பின் பாடல் சி.டி.யை ஷாரூக்கான் வெளியிட மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், செளந்தர்யா ரஜினிகாந்த், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் சி.டி.யை பெற்றுக் கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து பேசிய மணிரத்னமும், சுஹாசினியும், ஷாரூக்கானுக்கு தமிழும் நன்றாகவே வரும் எனக்கூற, தமிழில் தனக்கு சரளமாக தெரிந்த வார்த்தையே இல்ல, இல்ல, இல்ல... என்பது தான். அதுதவிர வணக்கம், நன்றி, நல்லாயிருக்கீங்களா போன்ற வார்த்தைகளும் தெரியும் என்றார் ஷாரூக்.
அதனைத்தொடர்ந்து மீடியாக்களின் கேள்விக்கு பதிலளித்த ஷாரூக், ரா-ஒன் படத்தில் சேது சுப்ரமணியம் எனும் லண்டன் வாழ் கம்ப்யூட்டர் இன்ஜினியராக, தென் இந்திய தமிழராக நடித்திருப்பதாக கூறினார்.
மேலும் தீபாவளிக்கு திரைக்கு வரும் ரா-ஒன், படத்தை இந்தி தவிர தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்து ரிலீஸ் செய்வதாகவும், தமிழில் 250க்கும் மேற்பட்ட பிரிண்ட்டுகள் போடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இதற்குமுன் தில்சே(உயிரே), ஹேராம் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் தனக்கு தந்த ஆதரவை, தமிழ்ரசிகர்கள் இப்படத்தின் மூலமும் தனக்கு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட ஷாரூக், யாரும் கேட்காமலேயே மேடையில் ரா-ஒன் சி.டி.யை ரிலீஸ் செய்துவிட்டு புகைப்பட கலைஞர்களுக்காக போஸ் கொடுத்ததோடு, அப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றிற்கும் ஸ்டைலாக ஆட்டம் போட்டது தான் விழாவின் ஹைலைட்!
நம்மூர் ஹீரோக்களைக்காட்டிலும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஷாரூக், சிம்பிளாக மேடையில் டான்ஸ் ஆடியது தமிழ் ரசிகர்களை போன்றே மீடியாக்களையும் மூக்கின்மேல் விரல் வைக்கத்தூண்டியது என்றால் மிகையல்ல...!
நம்மூர் ஹீரோக்களைக்காட்டிலும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஷாரூக், சிம்பிளாக மேடையில் டான்ஸ் ஆடியது தமிழ் ரசிகர்களை போன்றே மீடியாக்களையும் மூக்கின்மேல் விரல் வைக்கத்தூண்டியது என்றால் மிகையல்ல...!
0 comments:
Post a Comment