சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பட்டிதொட்டியெங்கும் கலகலப்புடன் பிரசாரம் செய்த காமேடி நடிகர் வடிவேலு, உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக களமிறங்குவாரா? என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்து வந்த நிலையில், புதிய படமொன்றில் கமிட் கியிருக்கிறார் வைகைப்புயல்.
தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து சினிமாவை விட்டு விலகியிருந்த வடிவேலு, நானாகத்தான் சினிமாவை விலகியிருக்கிறேன்; என்னை யாரும் விலக்கவில்லை என்று கூறிவந்தார்.
இந்த நிலையில், சுந்தர் சி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் வடிவேலு.
இந்த இருவரும் இணைந்த வின்னர், கிரி, தலைநகரம், நகரம் என அத்தனைப் படங்களுமே நகைச்சுவையில் தனி முத்திரைப் பதித்தவை.
ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு முழு வீச்சோடு நடிக்க வரும் வடிவேலுவும், மீண்டும் இயக்கத்தை கையிலெடுத்துள்ள சுந்தர் சியும் மீண்டும் தனி முத்திரை பதிப்பார்கள் என்பதால், இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனத்தெரிகிறது.
0 comments:
Post a Comment